என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மணலி புதுநகர் அற்புத குழந்தை ஏசு ஆலய ஆண்டு விழா
    X

    மணலி புதுநகர் அற்புத குழந்தை ஏசு ஆலய ஆண்டு விழா

    மணலி புதுநகர் அற்புத குழந்தை ஏசு ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது.
    மணலி புதுநகர் அற்புத குழந்தை ஏசு ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. பங்கு தந்தை பெலவேந்திரம் தலைமையில் மயிலை பேராயர் அந்தோணிசாமி கொடியேற்றி விழாவை தொடங்கிவைத்தார். வருகிற 8-ந்தேதி வரை விழா நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அற்புத குழந்தை ஏசுவின் தேர்த்திருவிழா வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொள்வார்கள். விழா ஏற்பாடுகளை அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.
    Next Story
    ×