என் மலர்
கிறித்தவம்
புனிதமான வாழ்க்கை வாழ்வது எப்படி? என வாழ்ந்து காட்டுவது. பாவமான வாழ்க்கை வாழ்ந்த மக்களுடைய பாவத்தை ஏற்று மரிப்பது.
ஆதாம் முதல் இயேசுவின் பிறப்பு வரையிலான காலம் கி.மு. என அழைக்கப்படுகிறது. ஆதியிலேயே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி எனும் திரித்துவ நிலையில் இருந்தார். ஆதாமை கடவுள் படைத்தது முதல், இயேசுவின் பிறப்பு வரையிலான நிகழ்வுகள் பழைய ஏற்பாட்டில் இடம் பெற்றிருக்கின்றன.
முதல் மனிதர்கள் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து கடவுளின் வழியை விட்டு விலகினர். இறைவன் மனம் வருந்தினார், தனது மக்களை நல் வழிப்படுத்த இறைவாக்கினர்களை ஏற்படுத்தினார். அவர்கள் கடவுளின் குரலாக இருந்தார்கள். இருந்தாலும் மனுக்குலம் பாவத்தில் ஆழமாய் பயணித்துக் கொண்டே இருந்தது.
கடைசியாகக் கடவுள் தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். அவர் குரலாக மட்டும் இல்லாமல் செயலாகவும் இருந்தார். கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை என்பது எது?, எந்த வாழ்க்கை கடவுளுக்குப் பிரியமானது என்பதை அவர் ஒவ்வொரு நாளும் தனது செயலால் நடத்திக் காட்டினார். இப்படி அவர் நமக்கு முன் செல்லும் ஒரு முன் மாதிரியானார்.
மோசேயின் வழியாகக் கடவுள் கொடுத்த பத்துக் கட்டளைகள் பழைய ஏற்பாட்டு மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன. பழைய ஏற்பாட்டில் மொத்தம் 613 கட்டளைகள் உள்ளன. காலப்போக்கில் அந்தக் கட்டளைகளில் பெரும்பாலானவை வெறும் சடங்குகளாகவும், ஏழைகளை ஏய்ப்பதற்கு வலியவர்கள் பயன்படுத்தும் ஆயுதமாகவும் மாறிப் போயின.
இயேசுவின் வருகையானது, ‘தூய்மை என்பது என்ன?’ என்பதை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக இருந்தது. அதுவரை இருந்த சட்டங்கள் கட்டளைகள் எல்லாமே செயல்களின் அடிப்படையிலேயே இருந்தன. தவறான செயல்களைச் செய்யக் கூடாது, தீமை செய்யக் கூடாது, நன்மை செய்யவேண்டும் என்பவையே கட்டளைகளாக இருந்தன.
இயேசு போதனைகளை உள்நோக்கித் திருப்பினார். ‘சிந்தனைகளைச் சீர்செய்யவேண்டும். அகத்தை அழகுபடுத்தாமல் வெளியே அழகுபடுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை’ என்றார். அகத்தூய்மை இல்லாதவர்களை, ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ என்றழைத்தார்.
கொலை செய்வது பாவம் என்று சட்டங்கள் போதித்த காலத்தில், கோபம் கொள்வதும் பாவம் என்றார். கொலை எனும் செயலைத் தடுப்பது கிளைகளை வெட்டுவது போல, கோபத்தை அழிப்பது அதன் வேர்களை அழிப்பது போல என்று கூறி... பாவ செயல்களுக்கு மட்டுமின்றி பாவ சிந்தனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். ‘விபசாரம்’ செய்வது பாவம் என்று சட்டங்கள் சொன்னபோது, ‘கண்களினால் ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பது பாவம்’ என்றார் இயேசு. இப்படி அங்கும், இங்குமாக சிதறிக்கிடந்த 613 கட்டளைகளை சுருக்கி இரண்டு கட்டளைகளாக கொடுத்தார். அவை....
‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து’.
‘உன் மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ என்று முத்தாய்ப்பாய்ச் சொன்னார்.
இயேசு தனது முதல் முப்பது ஆண்டுகளில் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடப்பவராக இருந்தார். அதன் பின் மூன்றரை ஆண்டுகள் அவருடைய பணி விண்ணக வாழ்வையும், பாவத்தை விட்டு மனம் திரும்புவதையும் போதிப்பதாய் இருந்தது.
ஏழைகளையும், பாவிகளையும் நேசித்த அவர், மதத்தின் பெயரால் ஏழைகளை ஏய்ப்பவர்களை சாடினார். விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை மன்னித்த இயேசு, தலைமைக் குருக் களையோ கடிந்து பேசினார். சுருக்கமாகச் சொல்ல வேண்டு மெனில் பலவீனர்களின் பக்கம் நின்றார் இயேசு.
இயேசுவின் போதனைகள் மதத் தலைவர்களுக்கு பெரும் தலைவலியாகிப் போனது. அவர்களுடைய வருமானம் குறைந்தது. அவர்கள் மீது மக்களுக்கு இருந்த பயம் விலகியது. இயேசுவின் பின்னால் மக்கள் கூட்டம் பெருக ஆரம்பித்தது. அவருடைய நிழல் பட்டாலே நோய்கள் நீங்கின. அவருடைய குரல் கேட்டாலே பேய்கள் பதறி ஓடின. அவருடைய வார்த்தைகள் எளிமையின் உச்சமாகவும், கூர்மையின் உச்சமாகவும் இருந்தன.
எனவே மதத் தலைவர்கள் இயேசுவை அழிக்க முடிவு செய்தனர். அதற்காக பொய் சாட்சிகளை தயாரித்தனர். நள்ளிரவில் கைது செய்து விடியும் முன் அவரை குற்றவாளியாக்கி, என்ன நடக்கிறது என மக்கள் குழம்பி தீர்வதற்குள் அவரை சிலுவையில் அறைந்தனர்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கம் அது தான். புனிதமான வாழ்க்கை வாழ்வது எப்படி? என வாழ்ந்து காட்டுவது. பாவமான வாழ்க்கை வாழ்ந்த மக்களுடைய பாவத்தை ஏற்று மரிப்பது.
பழைய ஏற்பாட்டில் ஆடுகளைப் பலி செலுத்தி பாவங்களை தீர்ப்பார்கள். ஒட்டு மொத்த மனுக்குலப் பாவத்தைத் தீர்க்க ஒரே வழி கடவுளே அதை ஏற்பது தான். அதைத் தான் இயேசு செய்தார். இந்த வருடமும், நம்மிடையே இயேசு கிறிஸ்து பிறந்திருக்கிறார். அவரது இறை வாழ்க்கையை பின்பற்றி வாழும்பட்சத்தில், நம்முடைய பாவங்களுக்கான பழியில் இருந்து அவரை காப்பாற்ற முடியும். தவறுகளை செய்ய மாமனிதரை எத்தனை முறைதான் பலியிடுவது.
-சகாயராஜ், சென்னை.

நற்செய்தி நூல்களில் எந்த ஓர் இடத்திலும் இயேசு இறையாட்சி என்றால் இதுதான் என்று வரையறுத்துக் கூறவில்லை.
நற்செய்தி நூல்கள்படி, இயேசு மக்களுக்கு அறிவித்த மையச் செய்தி இறையாட்சி அல்லது விண்ணரசு என்பதாகும். நற்செய்தி நூல்களில் எந்த ஓர் இடத்திலும் இயேசு இறையாட்சி என்றால் இதுதான் என்று வரையறுத்துக் கூறவில்லை. ஆனால், இறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது என்பதை அவர் பல சிறு கதைகள் அல்லது உவமைகள் வழியாக எடுத்துக் கூறினார்.
இறையாட்சியில் பங்கேற்க விரும்புவோர் எவ்வழியில் நடக்க வேண்டும் என்பதைக் கற்பித்தார். கண்பார்வை இழந்தோருக்குப் பார்வை அளித்தும், முடக்குவாதமுற்றவருக்கு நடக்கும் திறமளித்தும், தொழுநோயாளருக்கும் தீய ஆவியால் அவதியுற்றோருக்கும் நலமளித்தும் இயேசு பல புதுமைகள் மற்றும் அரும்செயல்களைப் புரிந்தார். இவ்வாறு மக்களுக்கு நலமளித்த இயேசு அவர்களின் பசியைப் போக்க அற்புதமான விதத்தில் உணவளித்தார் என்னும் செய்தி நான்கு நற்செய்தி நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது (காண்க: மத்தேயு 14:13-21; மாற்கு 6:30-44; லூக்கா 9:10-17; யோவான் 6:1-14).
இயேசு இறந்தோருக்கு மீண்டும் உயிரளித்த நிகழ்ச்சிகளும் நற்செய்தி நூல்களில் உள்ளன (காண்க: மத்தேயு 9:18-26; மாற்கு 5:21-43; லூக்கா 8:40-56; யோவான் 11:1-44). இயேசு தாமே ஒருநாள் சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுவார் என்பதற்கு இந்நிகழ்ச்சிகள் முன்னோடிபோல் அமைந்தன.
இறையாட்சி என்பது கடவுளின் ஆளுகை இவ்வுலகில் வருவதைக் குறிக்கும். பழைய ஏற்பாட்டில் இசுரயேல் மக்கள் நடுவே கடவுளை அரசராகக் காணும் வழக்கம் நிலவியது. தாவீது, சாலமோன் போன்ற அரசர்கள் இசுரயேல் மக்கள்மீது ஆட்சி செலுத்திய காலத்தில் கூட, அம்மக்கள் கடவுளைத் தங்கள் அரசராக ஏற்று வழிபட்டனர். இயேசு கடவுளின் ஆட்சி இவ்வுலக மக்கள் அனைவரும் கடவுளின் விருப்பத்துக்கு ஏற்ப நடப்பதில் அடங்கியிருக்கிறது என்று விளக்கம் தந்தார். கடவுள் எந்த மதிப்பீடுகளை உயர்ந்தனவாகக் கருதுகிறாரோ அம்மதிப்பீடுகளை மனிதர் தம் வாழ்வில் கடைப்பிடிக்கும்போது அங்கே கடவுளின் ஆட்சி நிலவுகிறது எனலாம். இந்த ஆட்சி இயேசுவின் வழியாக இவ்வுலகில் செயல்படலாயிற்று என்று நற்செய்தி நூல்கள் விளக்குகின்றன. இயேசு அறிவித்த இறையாட்சி என்னும் கருத்து வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அக்கருத்து கிறித்தவ சமய வரலாற்றிலும் பிற சமய மரபுகளிலும் அறிஞர் சிந்தனையிலும் வெவ்வேறு அழுத்தங்களை ஏற்றது.
இறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது, அதன் பண்புகள் என்ன என்பதையெல்லாம் இயேசு தம் போதனை வழியாகவும் செயல் வழியாகவும் காட்டினார். நல்ல சமாரியர் என்னும் கதை வழியாக உண்மையான அன்பு எதில் அடங்கியிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினார் (காண்க: லூக்கா 10:25-37). கள்வர் கையில் அகப்பட்டு, குற்றுயிராய்க் கிடந்த மனிதருக்கு இரக்கம் காட்டி, அவர் நலம் பெறுவதற்கு அனைத்தையும் செய்துகொடுத்தார் அந்த சமாரியர். யூதர் பார்வையில் சமாரியர் என்றால் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்; மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்.
ஆனால் அந்த தாழ்ந்த மனிதரே கடவுளின் பார்வையில் உயர்ந்தவரானார். அவர் உண்மையிலேயே இறையாட்சியின் மதிப்பீட்டைத் தம் வாழ்வில் செயல்படுத்திக் காட்டினார். அதற்கு நேர்மாறாக, யூத சமயத் தலைவர்கள் அன்பும் இரக்கமும் காட்ட முன்வரவில்லை; தங்கள் சமயச் சடங்குகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்தார்கள். இத்தகைய போக்கை இயேசு பல இடங்களில் கண்டித்துரைத்தார் (காண்க: மத்தேயு 23:1-36; மாற்கு 12:38-40; லூக் 11:37-52).
இயேசுவின் பொதுப்பணிக் காலத்தில் அவர் மூன்று முறை எருசலேம் நகருக்குச் சென்று பாஸ்கா விழாவில் பங்கேற்றதாக யோவான் நற்செய்தி குறிப்பிடுகிறது. இதிலிருந்து இயேசுவின் பணி வாழ்வு மூன்று ஆண்டுகள் நீடித்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகள் இயேசு தம் பணிக்காலத்தில் ஒருமுறை மட்டுமே எருசலேமுக்குச் சென்றதாகக் காட்டுகின்றன. இந்த முரண்பாடான செய்திகளை எவ்வாறு இணைப்பது என்று அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை.
இயேசு பொதுமக்களுக்கு போதித்தார் எனினும் தம்மோடு நெருங்கிய உறவுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் திருத்தூதர்களுக்கும் தம் போதனையின் உள்கிடக்கையை விளக்கிக் கூறினார் (காண்க: விதைப்பவர் உவமை - மத்தேயு 13:1-9; அந்த உவமைக்கு இயேசு விளக்கம் தருதல் - மத்தேயு 13:18-24) இயேசு கூடுதலாகப் போதனை செய்த இடங்கள் கலிலேயா (இன்றைய வட இசுரேல்) மற்றும் பெரேயா (இன்றைய மேற்கு யோர்தான்) என்பனவாகும்.

எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கிய போதனை மலைப்பொழிவில் உள்ளது.
இயேசு வழங்கிய முக்கியமான போதனைகளில் ஒன்று மலைப்பொழிவு ஆகும். எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கிய போதனை மலைப்பொழிவில் உள்ளது. இயேசுவின் இப்போதனை தம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார்.[14]
இயேசு வழங்கிய மலைப்பொழிவு மத்தேயு நற்செய்தியில் உள்ளது (காண்க: மத்தேயு - அதிகாரங்கள் 5 முதல் 7 முடிய). இப்பொழிவைப் பெரிதும் ஒத்த இன்னொரு பொழிவு சமவெளிப் பொழிவு என்று அழைக்கப்படுகிறது. அது லூக்கா நற்செய்தியில் உள்ளது (காண்க: லூக்கா 6:20-49).
இயேசு வழங்கிய மலைப்பொழிவின் தொடக்கப்பகுதி கீழே தரப்படுகிறது:
மத்தேயு 5:1-12
"1 . இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
2 . அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
3 . ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
4 . துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
5 . கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
6 . நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.
7 . இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
8 . தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
9 . அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
10 . நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
11 . என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!
12 . மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்."

சாத்தானை இயேசு இறைவார்த்தையின் மூலம் வாயடைக்கச் செய்திருந்ததால், சாத்தானே இறைவார்த்தையைச் சொல்லி இயேசுவை சோதனைக்குள் இழுத்தான்.
தனது முப்பதாவது வயதில் இயேசு திருமுழுக்கு பெற்றார். அப்போது வானம் திறக்க தூய ஆவியானவர் புறா வடிவில் இயேசுவின் மீது இறங்கினார். ‘இவரே என் அன்மார்ந்த மகன்’ என தந்தையாம் கடவுளின் வார்த்தை விண்ணிலிருந்து ஒலித்தது.
அதன் பின் இயேசு தந்தையை நோக்கி செபம் செய்வதற்காக பாலை நிலத்திற்குச் சென்றார். அங்கே நாற்பது நாட்கள் உண்ணா நோன்பிருந்து செபித்தார்.
அப்போது இயேசுவின் முன்னால் வந்து நின்றது பாலை நிலச் சாத்தான். இயேசு நாற்பது நாட்கள் உணவருந்தாததால் உடலளவில் சோர்வடைந்திருந்தார். உள்ளத்திலோ அவர் உச்சபட்ச ஆற்றலோடும், உற்சாகத்தோடும் இருந்தார்.
‘இயேசுவே... நான் வியக்கிறேன். நீண்ட நெடிய நாற்பது நாட்கள் நோன்பிருந்து செபித்து விட்டீர்கள். இறை வல்லமையையும் நிறைவாகப் பெற்றிருப்பீர்கள்’.
‘ஆம்’
‘அப்படியானால் இன்னும் ஏன் பசியால் வாடிக் கொண்டிருக்கிறீர்? ஏதேனும் உண்ண வேண்டியது தானே?’
‘உண்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை’
‘அதிசயங்களைச் செய்யும் வல்லமை உம்மிடம் உண்டு. நீர் நினைத்தால் இந்த வெண் கற்களைக் கூட அப்பமாக மாற்றி உண்ணலாமே?’
‘அற்புதங்களை சுய விருப்பத்துக்காக வீணடிப்பதில்லை. சோதனைகளைத் தாங்கும் வல்லமை எனக்கு இருக் கிறது’.
‘உடம்பில் வலு இருந்தால் தானே உம்மால் பணி செய்ய முடியும்? இப்போதைக்கு இந்த கற்களை அப்பமாக்கி உண்ணுங்கள். அதன் பின் மற்றதைப் பற்றிப் பார்த்துக் கொள்ளலாம்’.
‘மனிதன் உயிர் வாழ்வது அப்பத்தினால் மட்டுமல்ல. கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றினாலும் உயிர் வாழ்வான். என்று மறை நூல் சொல்லியிருக்கிறதே’, இயேசு பேயை அடக்கினார்.
அதன்பின் சாத்தான் இயேசுவை எருசலேம் தேவாலயத்தின் உயர்ந்த பகுதியில் கொண்டு போய் நிறுத்தினான். இயேசு சுற்றிலும் பார்த்தார். தான் பணி செய்யவேண்டிய பகுதிகளை அவருடைய கண்கள் பார்த்தன.
‘நீர் கடவுளின் மகன் தானே. இங்கிருந்து கீழே குதித்தால் கூட உமக்கு ஒன்றும் நேராதே, குதிக்க வேண்டியது தானே?’
‘நான் ஏன் குதிக்க வேண்டும்? அதன் அவசியம் என்ன?’.
‘நீர் கடவுளின் மகன். நீர் குதித்தால் தேவ தூதர்கள் வந்து உமது கால் தரையில் படும் முன் தங்கள் கைகளினால் தாங்கிக் கொள்வார்கள். இது மறை நூலில் கூட எழுதப்பட்டிருக்கிறது. உமக்குத் தெரியாமல் இருக்காதே’, சாத்தான் சொன்னான்.
முதல் சோதனையின் போது சாத்தானை இயேசு இறைவார்த்தையின் மூலம் வாயடைக்கச் செய்திருந்ததால், இப்போது சாத்தானே இறைவார்த்தையைச் சொல்லி இயேசுவை சோதனைக்குள் இழுத்தான்.
‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதியாதே என்று கூட எழுதியிருக்கிறதே’ இயேசு இரண்டாவது சோதனையையும் இறைவார்த்தையைக் கொண்டே கடந்தார்.
அதன்பிறகு இயேசுவை மலை உச்சிக்குக் கொண்டு சென்றது சாத்தான். உலகம் அழகாய் இருந்தது. உலக செல்வங்கள் பிரமிப்பாய் தெரிந்தன.
‘பார்த்தாயா? எவ்வளவு அழகு. எவ்வளவு இனிமை. பேசாமல் இந்த வளங்களை எல்லாம் அனுபவிக்கும் ஒரு பெரிய தலைவனாக மாறிவிடலாமே, கடவுள் பணி எதற்கு?’.
‘கடவுளின் பணியே சிறந்தது’.
‘எப்படி சொல்கிறாய்? எத்தனையோ இறைவாக்கினர்கள் வந்தும் திருந்தாத மக்களா நீ சொல்லித் திருந்தப் போகிறார்கள். என்னை வணங்கு, இவையெல்லாம் நான் உனக்குக் கொடுப்பேன்’ சாத்தான் சொன்னான்.
‘போ.. அப்பாலே சாத்தானே. என்னைச் சோதிக்காதே. கடவுளை மட்டுமே வணங்கி அவரை மட்டுமே பணிந்திரு என்று சொல்லியிருக்கும் இறைவார்த்தைப் படியே வாழப்போகிறேன்’.
இயேசு மூன்றாவது சோதனையையும் இறை வார்த்தையால் உறுதியாய் இருந்தார்.
இந்த நிகழ்வு சில முக்கியமான படிப்பினைகளைத் தருகிறது.
1. தொடர்ந்த செபம் சோதனைகளைத் தாங்கும் வலிமையைத் தரும்.
2. இறைவார்த்தை குறித்த ஆழமான அறிவு சாத்தானின் சூழ்ச்சிகளை வெல்லும் வலிமையைத் தரும்.
3. நமது பலத்தினால் அல்ல, இறைவனின் துணையினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
4. செபத்தை சாத்தான் விரும்புவதில்லை, செபிக்கும் போது அவன் சோதனைகளைக் கொண்டு வந்து நம் முன்னால் நீட்டுவான்.
5. உலகமும் அதிலுள்ள செல்வங்களும் சாத்தானிடம் இருக்கின்றன. அவனை வணங்குபவர்கள் அதைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
6. எந்த ஒரு பணியின் முன்பும் ஆழமான செபம் அவசியம்.
7. இறைவார்த்தைகளை சாத்தானும் பயன்படுத்துவான். போலிகளை இறைவனின் அருளால் கண்டறிய வேண்டும்.
8. இயேசுவுக்கே சோதனைகள் வருமெனில் நமக்கு சோதனைகள் வருவது சர்வ நிச்சயம்.
9. சோதனைகளை நாம் வெல்லும் போது, நமக்கும் இறைவனுக்கும் இடையே இருக்கும் உறவின் ஆழம் வெளிப் படும்.
10. உணவு, உலகச் செல்வம், பெருமை எனும் மூன்று விஷயங்களும் சாத்தான் நம்மை எளிதில் அணுகும் சோதனைத் தளங்கள்.

"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார் (மத்தேயு 9:12-13).
அக்கால யூத சமுதாயத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு நிலவியது. சமயச் சடங்குகளில் யார் பங்கேற்கலாம், யாரோடு உணவு அருந்தலாம், யாருடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து தீட்டு பற்றிய சட்டங்கள் பல இருந்தன. அச்சட்டங்களை இயேசு வேண்டுமென்றே மீறினார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் பல இடங்களில் வருகிறது.
அவரைப் பொறுத்தமட்டில் மக்களிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு கிடையாது. எல்லா மனிதரும் ஒரே கடவுளின் பிள்ளைகளே. எனவேதான் அன்றைய சமுதாயம் பாவிகள் என்றும் ஒதுக்கப்பட்டவர் என்றும் தீட்டுப்பட்டவர் என்றும் கருதிய மக்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டார். அன்றைய தூய்மைச் சட்டங்களை மீறினார். இதைக் கண்ட இயேசுவின் எதிரிகள் அவர் "வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" (மத்தேயு 11:19) என்று இழித்துரைத்தார்கள்.
ஏழைகளோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் இயேசு நெருங்கிப் பழகியது அம்மக்களது வாழ்க்கையில் அதிசயமான மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. ஆனால் இயேசுவின் எதிரிகள் அவரிடம் குற்றம் கண்டனர். தாழ்ந்த தொழிலாகக் கருதப்பட்ட வரிதண்டும் தொழிலைச் செய்தவர் மத்தேயு.
அவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்ட இயேசு அவரைப் பார்த்து, "என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு மத்தேயு வீட்டில் இயேசு விருந்து அருந்தினார். பரிசேயர்கள் இதைக் கண்டனர். உடனே அவர்கள் இயேசுவின் சீடரிடம், "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" (மத்தேயு 9:11) என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு இயேசு அளித்த பதில் அவர் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இயேசு கூறியது: "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார் (மத்தேயு 9:12-13).

ஒரு திருமணம் கலிலேயாவில் உள்ள கானா என்னும் கிராமத்தில் இருந்தது. இந்த திருமணத்தில் இயேசு செய்த புதுமையை கீழே விரிவாக பார்க்கலாம்.
ஒரு திருமணம் கலிலேயாவில் உள்ள கானா என்னும் கிராமத்தில் இருந்தது. இயேசுவின் தாய்க்கு அழைப்பு இருந்தது. அவர் இயேசுவையும், சீடர்களையும் அழைத்துக் கொண்டு நாசரேத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருந்த கானாவை நோக்கி நடந்தார்கள்.
திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்கள் ஆடலும் பாடலுமாக திருமண அரங்கையே விழா மேடையாக்கிக் கொண்டிருந்தார்கள்.
அன்றைய நாட்களில் திருமண விழாக்களில் முக்கிய இடம் பிடிப்பது திராட்சை ரசம். இந்த திருமண விழாவிலும் சுவையான திராட்சை ரசம் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது.
திருமண மேற்பார்வையாளர் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். திருமண விழாவில் ஏதேனும் குறை ஏற்பட்டால் அவருடைய தலை தான் உருளும் என்பதால் அவர் அனைத்தையும் பரபரப்புடன் கவனித்துக் கொண்டிருந்தார்.
திடீரென திருமண அரங்கில் சிறு சலசலப்பு.
‘இங்கே.. கொஞ்சம் திராட்சை ரசம் கொண்டு வாருங்கள்...’
‘திராட்சை ரசம் கேட்டேனே கிடைக்கவில்லையே’
ஆங்காங்கே குரல்கள் மெலிதாக எழ ஆரம்பித்தன. வீட்டின் பின் புறத்திலோ பணியாளர்கள் திகைத்துப் போய் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தார்கள்.
பணியாளர்கள் நிற்கும் நிலைமையைப் பார்த்த இயேசுவின் தாய்க்கு ஏதோ பிரச்சினை என்பது புரிந்தது. எனவே அவர் களிடம் சென்று ‘என்ன பிரச்சினை? மக்கள் திராட்சை ரசம் கேட்கிறார்கள். நீங்கள் பரிமாறவில்லையே! செல்லுங்கள்’ என்றார்.
‘அம்மா, திராட்சை ரசம் தீர்ந்து விட்டது!’
‘என்ன ரசம் தீர்ந்து விட்டதா?’ மரியா மெலிதான அதிர்ச்சியுடன் கேட்டார்.
‘ஆம் அம்மா, திடீரென சென்று ரசம் வாங்கி வரவும் முடியாது. நாங்கள் வாங்கி வரும் முன் விழா முடிந்து விடும்’ பணியாளனின் கண்களில் கண்ணீர்.
இவர்களுக்கு எப்படியாவது உதவவேண்டும் என்று மரியா முடிவெடுத்தார். தன் மகன் கடவுளின் வல்லமை பெற்றவர், அவர் நினைத்தால் எது வேண்டுமானாலும் நடக்கும் என அவர் நம்பினார். எனவே இயேசுவை அழைத்தார்.
‘அம்மா அழைத்தீர்களா?’
‘ஆம்.. மகனே. திருமண விழாவில் ஒரு குறை’ இயேசு தாயின் முகத்தைப் பார்த்தார்.
‘திராட்சை ரசம் தீர்ந்து விட்டது’.
‘அம்மா, என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை’ இயேசு அன்னையின் காதுகளில் கிசுகிசுத்தார்.
மரியா வேலையாட்களை அழைத்தார்,
‘இதோ இவர் சொல்வதையெல்லாம் நீங்கள் செய்யுங்கள்’ இயேசுவைக் சுட்டிக் காட்டி சொன்னார்.
அவர்கள் இயேசுவை கேள்விப் பார்வை பார்த்தார்கள். இயேசுவின் கைகளில் ஒன்றும் இல்லை. விழாவில் திராட்சை ரசம் இல்லை. இவர்களுடைய வீடும் அருகில் இல்லை. இவர் எப்படி உதவ முடியும் என்ற கேள்வியே அனைவரின் பார்வையிலும்.
இயேசு சுற்றுமுற்றும் பார்த்தார். அங்கே ஆறு கற்சாடிகள் இருந்தன.
‘இதென்ன சாடிகள்?’ இயேசு கேட்டார்.
‘தூய்மைச் சடங்குகளுக்காக இதை இங்கே வைத்திருக்கிறோம். இப்போது இவற்றில் ஒன்றும் இல்லை’
‘இதில் எத்தனை குடம் தண்ணீர் பிடிக்கும்?’
‘ஒவ்வொன்றிலும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும்’
‘சரி. இந்த ஆறு கற்சாடிகளிலும் தண்ணீர் நிறையுங்கள்’.
இயேசு சொல்ல, பணியாளர்களுக்கு மீண்டும் குழப்பம்.
ஆனாலும் ‘இவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்’ என்று மரியா சொல்லியிருந்தாரே. பணியாளர்கள் அவ்வாறே செய்தனர். மிக விரைவாக ஆறு கற்சாடிகளிலும் விளிம்பு வரை தண்ணீர் நிறைத்தார்கள்.
இயேசு சிறிது நேரம் கண்களை மூடி செபித்தார். பின் கைகளை நீட்டி அந்த சாடிகளை ஆசீர்வதித்தார்.
‘சரி.. இப்போது இதை மொண்டு பந்தி மேற்பார்வையாளனிடம் கொடுங்கள்’ இயேசு சொன்னார்.
‘என்ன சொல்கிறீர்கள்? எங்களுக்குத் தண்ணீருக்குத் தட்டுப்பாடு வரவில்லை. திராட்சை ரசம் தான் தீர்ந்து விட்டது’ பணியாளர்கள் மனதில் நினைத்தார்கள்.
ஆனாலும் இயேசு சொன்னபடியே தண்ணீரை அள்ளினார்கள், அதிர்ந்து போனார்கள். தண்ணீர் திராட்சை ரசமாய் மாறியிருந்தது.
பரபரப்புடன் பந்தி மேற்பார்வையாளரை நோக்கி ஓடினார் ஒரு பணியாளர்.
‘ஐயா... இ...இதோ திராட்சை ரசம்’
‘தி....திராட்சை ரசமா? அது தான் தீர்ந்து விட்டதே. எங்கிருந்து கிடைத்தது இது?’ ஆச்சரியத்துடன் கிசுகிசுப்பாய்க் கேட்டுக் கொண்டே பந்தி மேற்பார்வையாளன் அந்த திராட்சை ரசத்தைச் சுவைத்தான்.
‘ஆஹா... அருமையான ரசம்... அருமையான ரசம். எங்கே போய் வாங்கினீர்கள்? எங்கிருந்து கிடைத்தது?’
‘தண்ணீரிலிருந்து...’
‘தண்ணீரிலிருந்தா...? என்ன சொல்கிறாய்?’ மேற்பார்வையாளர் குழம்பினார்.
பணியாளர் நடந்ததை விளக்க அவர் வியந்து போய் நின்றார்.
‘எல்லோரும் நல்ல ரசத்தை முதலில் பரிமாறுவார்கள், இங்கே கடைசி வரை நல்ல ரசத்தை வைத்திருக்கிறார்கள் என எல்லோரும் பந்தி மேற்பார்வையாளரைப் பாராட்டினார்கள்.
இதுவே இயேசு செய்த முதல் புதுமை!

பள்ளியாடி இயேசுவின் தூய இதய ஆலய ஆண்டுப் பெருவிழா அருட்தந்தை செல்வராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ந்தேதி வரை விழா நடக்கிறது.

திருவிழா நாட்களில் மானுட உயிர்காப்பு தினம், நலம் நாடுவோர் தினம், தாய்மை போற்று தினம், தாய்மொழி போற்று தினம், வாசிப்பு பழக்க தினம், ஜெப வாழ்வாக்க தினம், இயற்கைப் பேனல் தினம், பொதுநல கவன தினம், அருள் பகிர்வு தினம் எனக் கொண்டாடப்படுகிறது.
விழாவில் 8-ம் நாள் காலையில் சிறார் மற்றும் பெற்றோருக்குத் தியானம் முதல் ஒப்புறவும் நடத்தப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு குழித் துறை மறைமாவட்டக் குருகுல முதல்வர், திருப்பணி நிறைவேற்ற சேலம் இரும்பாலை பங்குத்தந்தை தேவகுமார் மறையுரை நிகழ்த்துகிறார். திருப்பலியின் நிறைவில் தேர்பவனியும், நற்கருனை ஆசீரும் நடைபெறுகிறது.
திருவிழாவின் 9-ம் நாள் காலை 8 மணிக்கு திருமுழுக்கு மற்றும் முதல் திருவிருந்து திருப்பலி பங்கு ஒருங்கிணைப்பாளர் பெனடிக்ட் ஆனலின் தலைமையில் நிறைவேற்றப் படுகிறது. குஜராத் இயேசு சபை மறைமாநில அருட்பணி ஆன்றனி மைக்கேல்ராஜ் மறையுரை நிகழ்த்துகின்றார். தொடர்ந்து திருமண முறைப்படுத்தல் வழிபாடு நடைபெறுகின்றது. அன்று மாலை 6 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் உறுதி பூசுதல் திருப்பலி நிறைவேற்றுகிறார். இதில் மண்டல குருக்கள் பங்கேற்கின்றனர்.
விழாவின் 10-ம் நாள் தூய இதயத்தின் நேய தீபங்களாய் என்ற சிந்தனையில் திருப்பலியை குழித்துறை மறை மாவட்டச் செயலர் அருள்பணி ரசல்ராஜ் நிறை வேற்றுகிறார். அருட்பணி தேவதாஸ் மறையுரை நிகழ்த்துகின்றார். அன்று மாலை 6 மணிக்கு பள்ளியாடி பாச தீபங்களின் கொண்டாட்டமும் காலை மாலையாக நடத்தப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ஆனலின் மற்றும் பங்கு அருட்பணிப் பேரவையினர், மறைமக்கள் இணைந்து செய்து உள்ளனர்.

2017-ம் ஆண்டில் இறைவன் நமது கரத்தைப் பிடித்திருக்கிறார், நம்மை வழி நடத்துகிறார், நம்மை காப்பாற்றுகிறார், நம்மை கனப்படுத்துகிறார் என விசுவாசிப்போம்.
ஜப்பான் நாட்டில் மச்சிகோ என்றொரு பெண்மணி இருந்தார். அவருக்குத் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். கணவன் திடீரென இறந்து போக குடும்பம் வறுமையில் விழுந்தது. ஒரு நாள் ரெயிலில் ஹிரோஷிமா நோக்கி செல்கிறார். போகும் வழியில் ஒரு பாலம் வரும். பாலத்திலிருந்து குழந்தைகளோடு கீழே குதித்து இறந்து போக வேண்டும் என்பது அவளுடைய திட்டம்.
பாலம் நெருங்கியதும் கடவுளின் குரல் அவளது காதில் ஒலித்தது, ‘நான் உன்னைக் கரம் பிடித்திருக்கிறேன். நான் உன்னை வழிநடத்துவேன்’ என்று அந்த குரல் சொன்னது.
தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு ஹிரோஷிமாவில் ஒரு மருத்துவமனையில் சமையல் வேலையில் சேர்ந்தார். சில ஆண்டு களில் சமையலறை மேலதிகாரியானார்.
1945-ம் ஆண்டு ஒரு நாள், ‘வேலையை விட்டுப் போ, மலைநாட்டுக்குப் போ’ என அவளுடைய மனதுக்குள் இறைவனின் குரல் ஒலிக்கிறது. உடனே புறப்படுகிறார்.
மருத்துவமனையோ அவளுக்கு சம்பளத்தை இரட்டிப்பாய் கொடுக்கலாம் என அழைத்தது. அதை நிராகரித்து இறைவனின் குரலுக்குச் செவிகொடுத்து பிள்ளைகளோடு தொலைவில் இருந்த மலைநாட்டுக்குப் போனார்.
1945-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி காலை 8.20 மணிக்கு ஹிரோஷிமாவில் அணுகுண்டுகள் வீசப்பட்டது. ஒருவரும் பிழைக்கவில்லை. மச்சிகோ மலைநாட்டில் பாதுகாப்பானார். பெண்களை வளர்த்து ஆளாக்கி மூன்று பேரையும் இறை பணிக்காக அர்ப்பணித்தார். அவர்கள் மூன்று பேரும் கென்யா, ஜமைக்கா, இந்தியா என மூன்று இடங்களில் இறைபணியை வெற்றி கரமாக நடத்தினர்.
இது இறைவன் அவர்களுக்காய் வைத்திருந்த திட்டம்.
இதே போன்ற ஒரு திட்டத்தை இறைவன் நமக்காகவும் வைத்திருக்கிறார். நமது இறைவன் ஒரு இமைப்பொழுதுகூட மக்களை விட்டுத் தனது பார்வையை விலக்கிக் கொள்வதில்லை. தன்னை அடையாளப்படுத்தும்போது கூட ‘ஆபிரகாம், ஈசாக், யாக்கோபின் கடவுள்’ என தன்னை மனிதத் தலைமுறைகளோடு அடையாளப்படுத்துகிறார்.
கரம் பிடிக்கும் கடவுள்
பைபிள், யோசேப்பு எனும் இறைமனிதரின் வாழ்க்கையைப் பேசுகிறது. பதினேழு வயதில் அவருடைய கரத்தைப் பிடித்தார் கடவுள். நூற்றுப்பத்து வயது வரை கரம் விடாமல் வழிநடத்தி வந்தார். அதே கடவுள் தான் நமது கரங்களையும் பிடித்திருக்கிறார்.
ஆபிரகாமுக்கு 75 வயதாக இருக்கும் போது அவருக்கு கடவுளின் அழைப்பு வருகிறது. ஆபிரகாம் கிளம்புகிறார். கடவுள் ஆபிரகாமை வழிநடத்திச் செல்கின்றார்.
ஈசாக்கை பலியிடச் செல்லும்போது கடவுள் ஈசாக்கின் கரத்தைப் பிடிக்கிறார். ஈசாக் கடவுளின் வழிநடத்துதலுக்குள் வருகிறார்.
பெத்தேலில் யோசேப்பைக் கரம் பிடிக் கிறார் கடவுள். யோசேப்பு கனவு காண்கிறார். வானத்துக்கும் பூமிக்கும் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியில் வானதூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர். அந்த காட்சியின் ஊடே யோசேப்பின் கரம் பிடிக்கிறார் கடவுள்.
இப்படி முற்பிதாக்களைக் கரம்பிடித்து வழிநடத்திய இறைவன் தான் இன்று நம்மோடு இருக்கிறார். அவர் கரம் பிடிப்பதற்கு வயதைப் பார்ப்பதில்லை, நமது அறிவைப் பார்ப்பதில்லை, நமது ஞானத்தைக் கணக் கிடுவதில்லை. நமது கரத்தை அன்பினால் பற்றுகிறார்.
வழிநடத்தும் கடவுள்
கடவுள், கரம் பிடித்த கடவுள் மட்டுமல்ல, வழிநடத்திச் செல்லும் கடவுளாகவும் இருக்கிறார். கடவுள் நமது கரத்தைப் பிடித்திருக்கிறார் என்றால் நமக்கான வளமான ஒரு எதிர்காலத்தை அவர் ஆயத்தமாய் வைத்திருக்கிறார் என்பது தான் பொருள்.
ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு, யோசேப்பு என அவர் கரம் பிடித்து வழிநடத்திய இறைமனிதர்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
‘நைல் நதிக்குழந்தை மோசே’- அவர் இறைவனின் கரம் பற்றி நடந்த மாபெரும் விடுதலையாளர்.
‘கடவுளின் அருகாமையில் படுத்திருந்த குழந்தை சாமுவேல்’- அவர் மாபெரும் இறைவாக்கினரானார்.
‘சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை (1 சாமுவேல் 2:19) என்கிறது விவிலியம்.
இப்படி விவிலியம் முழுவதும் இறைவன் கரம்பிடித்த நபர்களின் பெயர்களும், அவர் வழிநடத்திய வரலாறுகளும் நிரம்பியிருக்கின்றன.
நாம் அறியாத நமது எதிர்காலம் அவருக்குத் தெரியும், ஏனெனில் நாம் கருவில் உருவாகும் முன்பே நமது எதிர்காலத்தை அவர் அறிந்திருக்கிறார்.
காக்கும் கடவுள்
நம்மைச் சுற்றி நடக்கின்ற விஷயங்கள் நமக்கு புரியாதவையாய் இருக்கலாம், நமது வாழ்க்கை அலைக்கழிக்கப்படுவதாய்த் தோன்றலாம். ஆனால் காக்கும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.
யோசேப்புக்கு வந்த சோதனைகளில் இருந்து கடவுள் உடனிருந்து அவரைக் காக்கிறார். ‘எந்தத் தடைகளையும் உடைக்கின்ற இறைவன் நம்மோடு இருக் கிறார்’ என்பது நமக்கு மிகப்பெரிய ஆறுதல்.
கரம்பிடித்து, வழிநடத்தும் கடவுள் நம்மைக் காக்கிறார். சோதனைகள் நம்மைப் புரட்டித் தள்ளும் போது நமக்கு ஒன்றும் தெரிவதில்லை. ஆனால் அவற்றைத் தாண்டும்போது தான் நமக்குப் புரியும், நம்மை இறைவன் அற்புதமாய்க் காப்பாற்றியிருக்கிறார் எனும் உண்மை.
ஒரு அடர்த்தியான காட்டில் மூங்கில் மரங்கள் வெட்டப்படுகின்றன. சில துண்டுகள் தனியே எடுத்து வைக்கப்பட்டன. மற்ற துண்டுகளெல்லாம் மகிழ்ந்தன. ‘அப்பாடா நாம் தப்பி விட்டோம்’ என சிரித்தன.
தனியே எடுத்து வைக்கப்பட்ட துண்டுகள் நெருப்பிலிடப்பட்டு, துளையிடப்பட்டு புல்லாங்குழல் ஆயின.
மற்ற துண்டுகளை எடுத்த மனிதர், அவற்றை ஊதாங்குழல் ஆக்கினார். கடவுள் நம்மைக் கரம்பிடிக்கிறார் எனில், புல்லாங்குழலைப் போல நமக்கு இனிமையான ஒரு வாழ்க்கையை வைத்திருக்கிறார் என்று பொருள்
கனப்படுத்தும் கடவுள்
நம்மைக் காக்கும் கடவுள் நமக்கு கனத்தைப் பெற்றுத் தரும் கடவுளாக இருக் கிறார். நம் வழியாக இன்னொருவரையும் ஆசீர்வதிக்க இறைவன் தயாராய் இருக் கிறார். யோசேப்பின் மூலம் அவரது எஜமானரை ஆசீர்வதித்தார் இறைவன்.
நம்மால் இன்னொருவர் இறை ஆசீரைப் பெறுவது இறைவன் நமக்கு தரும் மிகப் பெரிய கவுரவம்.
இந்த 2017-ம் ஆண்டில் இறைவன் நமது கரத்தைப் பிடித்திருக்கிறார், நம்மை வழி நடத்துகிறார், நம்மை காப்பாற்றுகிறார், நம்மை கனப்படுத்துகிறார் என விசுவாசிப்போம்.
இறையாசீர் உங்களை நிரப்பட்டும்.
ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம்,
வேளச்சேரி, சென்னை.

இயேசு இவ்வுலகிற்கு வந்த ஒரு முக்கிய காரணம் எனக்காகவும், உங்களுக்காகவும் (மதம், இனம், குலம் கடந்து அனைவருக்காகவும்) மரிப்பதற்காக.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக உலகமே கொண்டாடி மகிழ்கிறது. ஆனால் இயேசு கிறிஸ்து, பிறப்பின் மூலம் தோன்றியவர் அல்ல. கல்தோன்றி, மண்தோன்றா காலம் முதலே அவர் வாழ்கிறார். ஆம்! இயேசு உலகம் படைக்கப்படுவதற்கு முன்பாகவே பரலோகில் வாழ்ந்தவர். 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாக இவ்வுலகிற்கு வருவதற்கு முன்பே இருந்தார்.
அவர் இல்லாதிருந்த காலமே இருந்ததில்லை. அவர் இல்லாதிருக்கப்போகும் காலமும், இனி இருக்கப்போவதில்லை. அவர் நித்திய காலமாக வாழ்பவர். அவருக்குத் தொடக்கமும், முடிவும் இல்லை. அவரது மனு அவதாரத்திற்கு மட்டுமே தொடக்கமும், முடிவும் இருக்கிறது. அவர் நித்தியமானவர்.
இத்தகைய இறைத்தன்மையை நிரம்பப்பெற்ற இயேசு கிறிஸ்து, மாட்டுக்கொட்டகையில் ஏழையாகப் பிறந்தார். ஏழையின் மகனாகவே வளர்ந்தார். சிறுவயதிலேயே அகதியானார். இயேசு கிறிஸ்து சிறு குழந்தையாக இருக்கும் போது, அவரை கொலை செய்வதற்காக, எரோது அரசன் சின்னஞ்சிறிய பிள்ளைகளை எல்லாம் கொடூரமாக கொலை செய்தான். அப்போது இயேசுவின் வளர்ப்புத் தந்தையும், இவ்வுலகத் தாயும் அவரை எடுத்துக்கொண்டு, எகிப்து நாட்டிற்கு அகதிகளாகச் சென்றனர்; (மத்2:1317). அகதியாய் இருப்பதன் அவலத்தையும் அவர் அறிவார். அலகையின் சோதனையில் சிக்கி, 40 நாட்கள் உணவருந்தாமல் இருந்து, பசியின் கொடுமையை புரிந்துகொண்டார்.
நண்பர்களால் கைவிடப்படு வதன் வேதனையை அவர் அறிவார். அவரோடு ஒன்றாக இருந்து உண்டு குடித்த, அவரது சீடர்களில் ஒருவன் அவரைத் தெரியாதென மறுதலித்தான். இன்னொரு சீடன் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரைக் காட்டிக்கொடுத்தான். அவருக்கு ஆபத்து வந்த வேளையில் அவரிடம் நன்மை பெற்றவர்கள் பலர் அவரை கொலைசெய்யும்படி கூக்குரலிட்டனர். நன்றியற்றவர்களின் நன்றியற்ற தன்மையையும், நண்பர்களால் கைவிடப்படுவதன் வேதனையையும் இயேசு நன்கு அறிவார்.
மனக் காயங்கள் உள்ளங்களில் மாறாத வடுக்களை ஏற்படுத்தி விடுவதுண்டு. இயேசு கிறிஸ்துவும்; காயப்பட்டவர். எனவே மனக் காயத்தின் வேதனையும் அவர் அறிவார். அவர் காயப்பட்டவர் மட்டுமல்ல, காயங்களை குணமாக்குகிறவராகவும் இருக்கிறார்.
அவர் பொய் குற்றம் சாட்டப்பட்டார் (லூக் 23:4), (லூக் 23:1415) பொய் குற்றச்சாட்டுகளுக்கு, விமர்சனங்களுக்கு உட்படுவதன் வேதனையை அறிந்திருந்தார். பலவிதமான பொய் குற்றச்சாட்டுகளை அவர் மேல் சுமத்தி, அவரை சிறைப்பிடித்தனர். செய்யாத தவறுக்காக சிறையில் இருப்பதன் வேதனையையும் அவர் அறிந்திருக்கிறார்.
நம்மில் எவருமே அவமானப்பட விரும்புவதில்லை. நாம் ரகசியமாகச் செய்த தவறுகள் கூட, மற்றவர்களுக்குத் தெரிந்தால் அவமானப்பட வேண்டுமே என நாம் அவற்றை மூடி மறைக்கிறோம். இயேசு கிறிஸ்துவோ தவறு என்று ஒன்றைக்கூட செய்யவில்லை. ஆனாலும் அவரை அவமானப்படுத்தினார்கள்.
அவர் பிறந்த நோக்கம் தன்னிகரற்றது; தனித்துவமானது. இந்த உலகத்தில் அநேக மகான்களும், மதத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் பிறந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே வாழ்வதற்காகப் பிறந்தவர்கள். ஆனால் மரிப்பதற்காகவே பிறந்தவர் இயேசு கிறிஸ்து.
அந்த காலத்தில் பாலஸ்தீனாவில் பாவம் செய்தவர்கள், ஓர் ஆட்டுக்குட்டியை எடுத்து அதன் மேல் கைகளை வைத்து, தமது பாவங்களை அதன் மேல் சுமத்தி, பிறகு அந்த ஆட்டுக் குட்டியைக் கொலை செய்வதுண்டு. பாவத்தை சுமத்துகிற மனிதனுடைய பாவங்களை, அந்த ஆடு சுமந்து அந்த மனிதனுக்குப் பதிலாக மரிப்பதுண்டு. இயேசு கிறிஸ்து.. ஒரு மனிதனுடைய பாவத்தையல்ல, முழு உலக மனிதருடைய பாவத்தையும் சுமந்து முழு மனிதருக்காகவும், மரிப்பதற்காகவே மனிதனானார். எனவேதான் யோவான் ஸ்நானகன், இயேசுவைப் பார்த்து, ‘இதோ.. உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோவான் 1:29)’ என்றார்.
இயேசு இவ்வுலகிற்கு வந்த ஒரு முக்கிய காரணம் எனக்காகவும், உங்களுக்காகவும் (மதம், இனம், குலம் கடந்து அனைவருக்காகவும்) மரிப்பதற்காக.
‘நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார் (ரோமர் 5:8)’ உங்களுக்காக உயிரையே கொடுக்கும் அளவிற்கு உங்களை நேசிக்கிறார். உங்கள் பாவங்களைத் தன்மேல் ஏற்று அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தார். ஒருவர் செய்யும் தவறுக்கு, இன்னொருவர் அதற்கான தண்டனையை ஏற்று சிறைக்குச் செல்வது போல, நானும் நீங்களும் செய்த பாவங்களுக்கான தண்டனையை ஏற்று, இயேசு சிலுவையில் மரித்தார். எனவே தான் பைபிள் ‘மெய்யாகவே அவர் (இயேசு) நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களை சுமந்தார். நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் (பாவங்கள்) அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா 53:45)’ கூறுகிறது.
கிறிஸ்துவின் பிறப்பு.. மானிட மக்கள் பாவத்தில் இருந்து விடுதலை பெறுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டது. அதைத்தான் இந்த பைபிள் வசம் உணர்த்துகிறது. இதனைப் புரிந்து ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக, நாம் அனைவரும் உண்மையான சமாதானத்துடன் வாழ்வோம்.

நாகர்கோவில் குருசடி தூய அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற 6-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
நாகர்கோவில் குருசடியில் கோடி அற்புதர் என அழைக்கப்படும் தூய அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா வருகிற 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
திருவிழா முதல் நாளில் மாலை கோட்டாறு மறைமாவட்ட நீதித்துறை ஆயர் பதிலாள் அருட்பணியாளர் தார்சியுஸ் ராஜ் தலைமையில் கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடைபெறும். நிகழ்ச்சியில், அருட்பணியாளர் ஜான்சன் மறையுரை நிகழ்த்துகிறார். 7-ந் தேதி அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமையில் நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் மரிய சூசை வின்சென்ட் மறையுரை நிகழ்த்துகிறார்.
8-ந் தேதி காலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் தாமஸ் ஜோன்ஸ் தலைமையில் திருப்பலியும், மாலை 6 மணிக்கு நற்கருணைப்பவனியும் நடைபெறும். தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் திருப்பலி, மறையுரை, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.
திருவிழா சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 14-ந் தேதி காலை 7 மணிக்கு அருட்பணியாளர் ஜான்குழந்தை தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் செலஸ்டின் மறையுரை நிகழ்த்துகிறார். அன்று காலை 10.30 மணிக்கு குழந்தைகளுக்கு திருமுழுக்கு, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மறையுரை போன்றவை நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும்.
திருவிழா இறுதி நாளான 15-ந் தேதி அதிகாலை 4.45 மணிக்கு முதல்திருப்பலி நடைபெறும். காலை 6.15 மணிக்கு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். இரவு 8 மணிக்கு கொடிஇறக்கம், நற்கருணை ஆசீர், பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.

காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலய நிறைவு நாளில் புனித முடியப்பர் பெருவிழா, உறுதி பூசுதல் மற்றும் நற்கருணை அருட்சாதனங்கள் வழங்கும் விழா ஆகியவை நடந்தன.
காயல்பட்டினம் கொம்புத்துறையில் புனித சவேரியாரால் கட்டப்பட்ட புனித முடியப்பர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது.
விழா நாட்களில் திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை ஆகியவை நடந்தன. 2-வது நாளில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவும், 9-வது நாளான புத்தாண்டு தினத்தில் இறைவனின் தாய் மரியாளின் பெருவிழாவும் கொண்டாடப்பட்டது. நிறைவு நாளில் புனித முடியப்பர் பெருவிழா, உறுதி பூசுதல் மற்றும் நற்கருணை அருட்சாதனங்கள் வழங்கும் விழா ஆகியவை நடந்தன.
இந்நிகழ்ச்சிகளில் பாளை மறை மாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ்பங்கேற்று ஆசி வழங்கினார். பின்னர் ஆறுமுகநேரி, ஆலந்தலை அமலிநகர், வீரபாண்டியன்பட்டினம், புன்னக்காயல், பழையகாயல், குரும்பூர், ஏரல், தூத்துக்குடி, ஜீவாநகர், சிங்கித்துறை ஆகிய பகுதி மக்கள் பங்கேற்க திருப்பலி நிகழ்ச்சிகள் தனித்தனியாக நடந்தன. இவற்றை பங்கு தந்தையர்களான ஸ்டார்வின், சேவியர் ஜார்ஜ், அமல்ராஜ், உபர்ட்டஸ், சகாய ராயன், கிஷோக், சந்தியாகு, ஆண்ட்ரூ டிரோஸ், சில்வெஸ்டர், வில்சன், ஜெகதீஷ், சகேஸ் ஆகியோர் நடத்தினர்.
விழாவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கொம்புத்துறை பங்கு தந்தை மரிய ஜாண் கோஸ்தா மற்றும் ஊர் நலக்கமிட்டியினர் செய்திருந்தனர்.

நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழாவில் தேர்ப்பவனி நடந்தது. இது குறித்த செய்தியை விரிவாக கீழே பார்க்கலாம்.
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் கொடியேற்றி வைத்தார்.
தொடர்ந்து, வந்த திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் திருப்பலி, ஜெபமாலை போன்றவை நடந்தன. திருவிழாவின் இறுதி நாளான 10-ம் திருவிழாவையொட்டி காலையில் சிறப்பு ஆடம்பர திருப்பலி நடந்தது. இதில் கோட்டார் மறைமாவட்ட முதன்மைபணியாளர் சாலமோன் கலந்து கொண்டு மறையுரை வழங்கினார்.
பிற்பகல் ஆலய வளாகத்தில் இருந்து பிரமாண்ட தேர்ப்பவனி தொடங்கியது. பவனியானது முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இரவு ஆலய வளாகத்தை சென்றடைந்தது. முன்னதாக தேர் ராமன்புதூர் சந்திப்பு வந்த போது, பரிசுத்த திருக்குடும்ப ஆலய டிரஸ்ட் ஊர் தலைவர் ஸ்டீபன் செல்வராஜ், செயலாளர் ராஜேஷ்வரன், பொருளாளர் தாமஸ் ஆகியோருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். தேர் ஆலயம் சென்றடைந்ததும் திருப்பலி நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை பரிசுத்த திருக்குடும்ப ஆலய டிரஸ்ட் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பங்குமக்கள் செய்திருந்தனர்.