என் மலர்
ஆன்மிகம்

பைபிள் மாந்தர்கள் - சேவியர்
சாத்தானை இயேசு இறைவார்த்தையின் மூலம் வாயடைக்கச் செய்திருந்ததால், சாத்தானே இறைவார்த்தையைச் சொல்லி இயேசுவை சோதனைக்குள் இழுத்தான்.
தனது முப்பதாவது வயதில் இயேசு திருமுழுக்கு பெற்றார். அப்போது வானம் திறக்க தூய ஆவியானவர் புறா வடிவில் இயேசுவின் மீது இறங்கினார். ‘இவரே என் அன்மார்ந்த மகன்’ என தந்தையாம் கடவுளின் வார்த்தை விண்ணிலிருந்து ஒலித்தது.
அதன் பின் இயேசு தந்தையை நோக்கி செபம் செய்வதற்காக பாலை நிலத்திற்குச் சென்றார். அங்கே நாற்பது நாட்கள் உண்ணா நோன்பிருந்து செபித்தார்.
அப்போது இயேசுவின் முன்னால் வந்து நின்றது பாலை நிலச் சாத்தான். இயேசு நாற்பது நாட்கள் உணவருந்தாததால் உடலளவில் சோர்வடைந்திருந்தார். உள்ளத்திலோ அவர் உச்சபட்ச ஆற்றலோடும், உற்சாகத்தோடும் இருந்தார்.
‘இயேசுவே... நான் வியக்கிறேன். நீண்ட நெடிய நாற்பது நாட்கள் நோன்பிருந்து செபித்து விட்டீர்கள். இறை வல்லமையையும் நிறைவாகப் பெற்றிருப்பீர்கள்’.
‘ஆம்’
‘அப்படியானால் இன்னும் ஏன் பசியால் வாடிக் கொண்டிருக்கிறீர்? ஏதேனும் உண்ண வேண்டியது தானே?’
‘உண்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை’
‘அதிசயங்களைச் செய்யும் வல்லமை உம்மிடம் உண்டு. நீர் நினைத்தால் இந்த வெண் கற்களைக் கூட அப்பமாக மாற்றி உண்ணலாமே?’
‘அற்புதங்களை சுய விருப்பத்துக்காக வீணடிப்பதில்லை. சோதனைகளைத் தாங்கும் வல்லமை எனக்கு இருக் கிறது’.
‘உடம்பில் வலு இருந்தால் தானே உம்மால் பணி செய்ய முடியும்? இப்போதைக்கு இந்த கற்களை அப்பமாக்கி உண்ணுங்கள். அதன் பின் மற்றதைப் பற்றிப் பார்த்துக் கொள்ளலாம்’.
‘மனிதன் உயிர் வாழ்வது அப்பத்தினால் மட்டுமல்ல. கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றினாலும் உயிர் வாழ்வான். என்று மறை நூல் சொல்லியிருக்கிறதே’, இயேசு பேயை அடக்கினார்.
அதன்பின் சாத்தான் இயேசுவை எருசலேம் தேவாலயத்தின் உயர்ந்த பகுதியில் கொண்டு போய் நிறுத்தினான். இயேசு சுற்றிலும் பார்த்தார். தான் பணி செய்யவேண்டிய பகுதிகளை அவருடைய கண்கள் பார்த்தன.
‘நீர் கடவுளின் மகன் தானே. இங்கிருந்து கீழே குதித்தால் கூட உமக்கு ஒன்றும் நேராதே, குதிக்க வேண்டியது தானே?’
‘நான் ஏன் குதிக்க வேண்டும்? அதன் அவசியம் என்ன?’.
‘நீர் கடவுளின் மகன். நீர் குதித்தால் தேவ தூதர்கள் வந்து உமது கால் தரையில் படும் முன் தங்கள் கைகளினால் தாங்கிக் கொள்வார்கள். இது மறை நூலில் கூட எழுதப்பட்டிருக்கிறது. உமக்குத் தெரியாமல் இருக்காதே’, சாத்தான் சொன்னான்.
முதல் சோதனையின் போது சாத்தானை இயேசு இறைவார்த்தையின் மூலம் வாயடைக்கச் செய்திருந்ததால், இப்போது சாத்தானே இறைவார்த்தையைச் சொல்லி இயேசுவை சோதனைக்குள் இழுத்தான்.
‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதியாதே என்று கூட எழுதியிருக்கிறதே’ இயேசு இரண்டாவது சோதனையையும் இறைவார்த்தையைக் கொண்டே கடந்தார்.
அதன்பிறகு இயேசுவை மலை உச்சிக்குக் கொண்டு சென்றது சாத்தான். உலகம் அழகாய் இருந்தது. உலக செல்வங்கள் பிரமிப்பாய் தெரிந்தன.
‘பார்த்தாயா? எவ்வளவு அழகு. எவ்வளவு இனிமை. பேசாமல் இந்த வளங்களை எல்லாம் அனுபவிக்கும் ஒரு பெரிய தலைவனாக மாறிவிடலாமே, கடவுள் பணி எதற்கு?’.
‘கடவுளின் பணியே சிறந்தது’.
‘எப்படி சொல்கிறாய்? எத்தனையோ இறைவாக்கினர்கள் வந்தும் திருந்தாத மக்களா நீ சொல்லித் திருந்தப் போகிறார்கள். என்னை வணங்கு, இவையெல்லாம் நான் உனக்குக் கொடுப்பேன்’ சாத்தான் சொன்னான்.
‘போ.. அப்பாலே சாத்தானே. என்னைச் சோதிக்காதே. கடவுளை மட்டுமே வணங்கி அவரை மட்டுமே பணிந்திரு என்று சொல்லியிருக்கும் இறைவார்த்தைப் படியே வாழப்போகிறேன்’.
இயேசு மூன்றாவது சோதனையையும் இறை வார்த்தையால் உறுதியாய் இருந்தார்.
இந்த நிகழ்வு சில முக்கியமான படிப்பினைகளைத் தருகிறது.
1. தொடர்ந்த செபம் சோதனைகளைத் தாங்கும் வலிமையைத் தரும்.
2. இறைவார்த்தை குறித்த ஆழமான அறிவு சாத்தானின் சூழ்ச்சிகளை வெல்லும் வலிமையைத் தரும்.
3. நமது பலத்தினால் அல்ல, இறைவனின் துணையினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
4. செபத்தை சாத்தான் விரும்புவதில்லை, செபிக்கும் போது அவன் சோதனைகளைக் கொண்டு வந்து நம் முன்னால் நீட்டுவான்.
5. உலகமும் அதிலுள்ள செல்வங்களும் சாத்தானிடம் இருக்கின்றன. அவனை வணங்குபவர்கள் அதைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
6. எந்த ஒரு பணியின் முன்பும் ஆழமான செபம் அவசியம்.
7. இறைவார்த்தைகளை சாத்தானும் பயன்படுத்துவான். போலிகளை இறைவனின் அருளால் கண்டறிய வேண்டும்.
8. இயேசுவுக்கே சோதனைகள் வருமெனில் நமக்கு சோதனைகள் வருவது சர்வ நிச்சயம்.
9. சோதனைகளை நாம் வெல்லும் போது, நமக்கும் இறைவனுக்கும் இடையே இருக்கும் உறவின் ஆழம் வெளிப் படும்.
10. உணவு, உலகச் செல்வம், பெருமை எனும் மூன்று விஷயங்களும் சாத்தான் நம்மை எளிதில் அணுகும் சோதனைத் தளங்கள்.

Next Story