என் மலர்
ஆன்மிகம்

பள்ளியாடி இயேசுவின் தூய இதய ஆலயப்பெருவிழா
பள்ளியாடி இயேசுவின் தூய இதய ஆலய ஆண்டுப் பெருவிழா அருட்தந்தை செல்வராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ந்தேதி வரை விழா நடக்கிறது.

திருவிழா நாட்களில் மானுட உயிர்காப்பு தினம், நலம் நாடுவோர் தினம், தாய்மை போற்று தினம், தாய்மொழி போற்று தினம், வாசிப்பு பழக்க தினம், ஜெப வாழ்வாக்க தினம், இயற்கைப் பேனல் தினம், பொதுநல கவன தினம், அருள் பகிர்வு தினம் எனக் கொண்டாடப்படுகிறது.
விழாவில் 8-ம் நாள் காலையில் சிறார் மற்றும் பெற்றோருக்குத் தியானம் முதல் ஒப்புறவும் நடத்தப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு குழித் துறை மறைமாவட்டக் குருகுல முதல்வர், திருப்பணி நிறைவேற்ற சேலம் இரும்பாலை பங்குத்தந்தை தேவகுமார் மறையுரை நிகழ்த்துகிறார். திருப்பலியின் நிறைவில் தேர்பவனியும், நற்கருனை ஆசீரும் நடைபெறுகிறது.
திருவிழாவின் 9-ம் நாள் காலை 8 மணிக்கு திருமுழுக்கு மற்றும் முதல் திருவிருந்து திருப்பலி பங்கு ஒருங்கிணைப்பாளர் பெனடிக்ட் ஆனலின் தலைமையில் நிறைவேற்றப் படுகிறது. குஜராத் இயேசு சபை மறைமாநில அருட்பணி ஆன்றனி மைக்கேல்ராஜ் மறையுரை நிகழ்த்துகின்றார். தொடர்ந்து திருமண முறைப்படுத்தல் வழிபாடு நடைபெறுகின்றது. அன்று மாலை 6 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் உறுதி பூசுதல் திருப்பலி நிறைவேற்றுகிறார். இதில் மண்டல குருக்கள் பங்கேற்கின்றனர்.
விழாவின் 10-ம் நாள் தூய இதயத்தின் நேய தீபங்களாய் என்ற சிந்தனையில் திருப்பலியை குழித்துறை மறை மாவட்டச் செயலர் அருள்பணி ரசல்ராஜ் நிறை வேற்றுகிறார். அருட்பணி தேவதாஸ் மறையுரை நிகழ்த்துகின்றார். அன்று மாலை 6 மணிக்கு பள்ளியாடி பாச தீபங்களின் கொண்டாட்டமும் காலை மாலையாக நடத்தப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ஆனலின் மற்றும் பங்கு அருட்பணிப் பேரவையினர், மறைமக்கள் இணைந்து செய்து உள்ளனர்.

Next Story