என் மலர்
கிறித்தவம்
இதனைத் தொடர்ந்து மாலையில், தூய செபஸ்தியார் சப்பரத்தில் வீதி உலா வந்தார். இந்த சப்பரமானது தாமஸ்காலனி, எஸ்.எஸ்.காலனி, அன்சாரிநகர், வைத்தியநாதபுரம் வழியாக பவனி வந்தது.
விழாவின் தொடர்ச்சியாக, இன்று காலை 10 மணிக்கு கூழ் பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலையில் வேட்டி- சேலை வழங்கும் விழாவும், நோட்டு புத்தகம் வழங்கும் விழாவும் நடக்கிறது.
உடன்குடி அருகே உள்ள மெய்யூர் தூய யோவான் ஆலயத்தின் 59-வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன விருந்து விழா கடந்த கர்த்தரின் பாதம் ஊழியர் ராபர்ட் ஜெபசிங் கன்வென்சன் கூட்டத்துடன் தொடங்கியது. கடந்த 20-ம் தேதி மாலை 7 மணிக்கு விளாத்திகுளம் தூய பவுல் பஜனை துதி ஆராதனையில் நவமணி டைட்டஸ் சிறப்பு கிறிஸ்தவ செய்தி கொடுத்தார்.
21-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 59-வது பிரதிஷ்டை ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது. இதில் சபை மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். அன்று மாலை 4 மணிக்கு வேதாகம தேர்வு, 5 மணிக்கு விளையாட்டு விழா, இரவு 7 மணிக்கு ஜாபிக் ஐசக் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது.
22-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) அதிகாலை 3 மணிக்கு ஞாயிறு ஆராதனை, தொடாந்து பிள்ளையான்மனை சேகரகுரு ஜேஸ்பர் சிறப்பு கிறிஸ்தவ நற்செய்தி கொடுத்தார்.பின்னர் அன்று மாலை 5 மணிக்கு ஆயிரக்கணக்கான மக்களுக்கு அசன விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவு 9 மணிக்கு கலைநிகழ்ச்சி ஸ்தோத்திர ஆராதனையும் நடந்தது
பிரதிஷ்டை விழாவிற்கான ஏற்பாடுகளை சேகர குருவானவர் ஜெயசிங்,சபை ஊழியர் ஜெபத்துரை மற்றும் மெய்யூர் சபை மக்கள் செய்திருந்தனர்.
இன்று மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு இறை இரக்கத் திருப்பலி நடக்கிறது. தினமும் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ் மாலையும், 6.30 மணிக்கு திருப்பலியும் நடக்கிறது. 29-ந்தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி அருட்பணியாளர் ஆன்டனி அல்காந்தர் தலைமையில் நடக்கிறது. அருட்பணியாளர் நெல்சன் அருளுரை வழங்குகிறார். 30-ந்தேதி இரவு 8 மணிக்கு அன்பிய ஒருங்கிணைய பொதுகூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
4-2-17 அன்று மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலையும், இரவு 7 மணிக்கு மாலை ஆராதனையும் நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் ஜான் போஸ்கோ தலைமை தாங்குகிறார். கன்னியாகுமரி வட்டார முதன்மை பணியாளர் நசரேன் அருளுரை வழங்குகிறார். இரவு 9 மணிக்கு புனிதரின் திருவுருவ சப்பரப்பவனி நடக்கிறது.
5-ந்தேதி காலை 5.30 மணிக்கு தேர் திருப்பலிக்கு அருட்பணியாளர் தனிஸ்லாஸ் தலைமை தாங்கி அருளுரை வழங்குகிறார். 8 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி முட்டம் வட்டார முதன்மை பணியாளர் பஸ்காலிஸ் தலைமையில் நடக்கிறது. கேசவன் புத்தன்துறை பங்கு தந்தை சாம் எப்.மேத்யூ அருளுரை வழங்குகிறார். 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கமும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் சகாய ஆனந்த் தலைமை தாங்கி, அருளுரை வழங்குகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், வளர்ச்சிக்குழு, பங்கு அருட்பணி பேரவை, பங்கு தந்தை நிக்சன் ஆகியோர் இணைந்து செய்து வருகிறார்கள்.
இதன் அருகில் சமீபத்தில் இலங்கை அரசு புதிதாக ஒரு அந்தோணியார் ஆலயத்தை கட்டி முடித்து, அதை கடந்த மாதம் திறந்து வைத்தது. இந்தியா, இலங்கை நாட்டை சேர்ந்த பக்தர்கள் சேர்ந்து கொண்டாடும் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டு தோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான விழா மார்ச் மாதம் 11-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு நெடுந்தீவு பங்குதந்தை மூலம் ராமேசுவரம் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் நாள் (11-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு ஆலயத்தின் முன் பகுதியில் உள்ள கொடி கம்பத்தில் அந்தோணியாரின் திரு உருவம் பதித்த கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து ஆலயத்தை சுற்றி பெரிய சிலுவையை இருநாட்டு பக்தர்களும் சுமந்து வர, சிலுவைப்பாதை, சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெறுகின்றன.
இரவு 8 மணிக்கு புனித அந்தோணியாரின் உருவச்சிலை வைக்கப்பட்ட திருத்தேரை இரு நாட்டு பக்தர்களும் சேர்ந்து ஆலயத்தை சுற்றி தூக்கி வலம் வரும் தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா இரு நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாய் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு முதல் ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு பக்தர்கள் சென்று வர படகுகள் மற்றும் அனைத்து செலவுகளும் மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக மீனவர்களும், சமுக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் ராமேசுவரத்தில் இருந்து 3 ஆயிரத்து 252 பக்தர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி, அன்று காலை 7.30 மணிக்கு கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து, இரவு 9 மணி அளவில் பாரம்பரிய முறைப்படி ராஜா வேடம் அணிந்து பாலதண்டாயுதம் தலைமையில் ஊர் மக்கள் ஊர்வலமாக பெரியநாயகி அன்னை தேவாலயத்திற்கு வந்தனர். பின்னர், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியநாயகி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதையடுத்து, பாலதண்டாயுதம் ஆடம்பர தேர்பவனியை தொடங்கி வைத்தார்.
தேர் தேவாலயத்தை சுற்றி வந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தேர்பவனியை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பெரியநாயகி அன்னை ஆலய பங்குதந்தை அருள்தாஸ், உதவி பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
விழா நாட்களில் மாலை நேரங்களில் திருப்பலியும், மறையுரையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று மாலை நடந்தது. முன்னதாக காலை திருப்பலி நடந்தது.
பின்னர் மாலையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித வனத்தவசி அந்தோணியார் எழுந்தருள தேர்பவனி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
29-ந் தேதி காலை திருவிழா திருப்பலி, புதுநன்மை, தேர் பவனி மற்றும் மாலையில் கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியனவும், அதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. மாதத்தின் கடைசி சனிக்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு கெபியில் திருப்பலி லூர்து மாதாவின் நவநாள் மன்றாட்டு நிகழ்ச்சியும், அசன விருந்தும் நடக்கிறது.
இருவர் செபம் செய்ய ஆலயத்துக்குச் சென்றார்கள். ஒருவர் பரிசேயர். அவர் தம்மை நீதிமானாகக் கருதிக் கொண்டிருப்பவர். இன்னொருவர் வரி வசூலிப்பவர். ‘பாவி’ என அழைக்கப்படுபவர்.
பரிசேயர் ஆலயத்துக்குள் சென்றார். கடவுளின் சந்நிதி முன்னால் நிமிர்ந்து நின்று கொண்டு உரத்த குரலில் பேச ஆரம்பித்தார்.
‘கடவுளே... நான் கொள்ளையனாகவோ, வரி வசூலிக்கும் கேவலமான தொழில் செய்பவனாகவோ, விபசாரம் போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடும் மற்ற மக்களைப் போலவோ இல்லாததற்காய் உமக்கு நன்றி செலுத்து கிறேன். வருவாயில் பத்தில் ஒரு பங்கை நான் காணிக்கை செலுத்தத் தவறியதேயில்லை. வாரத்தில் இரண்டு முறை நோன்பு இருக்கிறேன்...’.
பரிசேயன் தன்னைப்பற்றி அடுக்கிக் கொண்டே போனான்.
வரிவசூலிப்பவனோ ஆலயத்துக்கு வெளியே நின்றான். வானத்தை ஏறிட்டுப் பார்க்கவும் தயங்கியவனாய் ‘கடவுளே நான் பாவி, என்னை மன்னியும்’ என்ற ஒற்றை வார்த்தையை உள்ளத்தின் ஆழத்திலிருந்து உச்சரித்தான்.
கதையைச் சொன்ன இயேசு, ‘பரிசேயன் அல்ல, அந்த வரிவசூலிப்பவன் தான் கடவுளுக்கு ஏற்புடையவனாய்த் திரும்பிச் சென்றான். ஏனென்று தெரியுமா?’ என்று கேட்டார்.
கூட்டத்தினர் அமைதி காத்தனர்.
‘ஏனென்றால், தன்னைத் தாழ்த்துபவன் உயர்த்தப்படுவான். தன்னை உயர்த்துபவன் தாழ்த்தப்படுவான்!’ இயேசு சொல்ல சீடர்கள் தலையாட்டினார்கள்.
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதையே நீங்கள் பிறருக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டங்களும் இதைத் தான் சொல்கின்றன.
ஒருவனை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட வெளிகளெங்கும் சுற்றித் திரியும். பின் தான் வெளியேறிய இடத்துக்கே திரும்பி வரும். அந்த இடம் சுத்தமாக்கப்பட்டு யாருமின்றி இருக்கக் கண்டால் தன்னை விடப் பொல்லாத ஏழு ஆவிகளைக் கூட்டி வந்து மீண்டும் அவனிடம் குடியேறும். அவனுடைய பிந்தைய நிலைமை முந்தைய நிலமையை விட மோசமாகும்.
தீய ஆவி வெளியேறிய பின் மனதை நல்ல சிந்தனைகளாலும், இறைவனாலும் நிரப்ப வேண்டும். இல்லையேல் அழிவு மிகவும் மோசமானதாக இருக்கும்.
‘உயிர்ப்பும் உயிரும் நானே. என்னில் நிலைத்திருப்பவன் இறப்பினும் வாழ்வான். என் வழியாக அன்றி யாரும் தந்தையிடம் வர முடியாது’. ‘மானிட மகன் உங்கள் பாவங் களுக்காக தன்னுடைய உயிரையே கொடுப்பார். தன்னைப் பலியாகக் கொடுத்து உங்கள் பாவங்களை மீட்பார். நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு உலகில் இல்லை’
இயேசுவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மக்கள் வியந்தனர்.
போதனைகளை முடித்து விட்டு இயேசு ஓய்வாய் இருந்த வேளை ஒன்றில் இயேசுவை நெருங்கி வந்தார் ஒருவர். அவருடைய முகத்தில் கவலையின் ரேகைகள். அவர் இயேசுவின் முன்னால் வந்து மண்டியிட்டார்.
‘ஐயா.. என் மகனுக்கு இரங்கும். அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்பப்படுகிறான்’ என்றார்.
அந்த பையனைப் பிடித்திருப்பது நோய் அல்ல. பேய் என்பது இயேசுவுக்குப் புரிந்தது.
தந்தை தொடர்ந்தார்: ‘என் பையன் அடிக்கடி தண்ணீரில் போய் விழுகிறான். சில சமயம் தீயில் போய் விழுகிறான். அவனை உம்முடைய சீடர்களிடம் கூட்டிக் கொண்டு வந்தேன். ஆனால் அவர்களால் அவனைக் குணமாக்க முடியவில்லை’ தந்தை கலங்கினார்.
இயேசு தமது சீடர்களுடைய விசுவாசக் குறைவைக் கண்டு மனம் வருந்தினார். அந்த வருத்தத்தினால் சீடர்களைக் கடிந்து கொண்டார்.
‘நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக் கொள்ள இயலும்?’ என்று சொல்லி விட்டு தந்தையிடம் திரும்பினார்.
‘அந்தப் பையனை என்னிடம் கொண்டு வாருங்கள்...’ என்றார்.
தந்தை சென்று பையனை இயேசுவிடம் கொண்டு வந்தார். இயேசு வழக்கமாய்ப் பேய் ஓட்டுபவர்கள் செய்யும் எந்த விதமான அலட்டல்களையும் செய்யவில்லை. அந்தப் பேயை நேரடியாகக் கடிந்து கொண்டார். அந்தப் பையனை எதுவுமே செய்யவில்லை.
அவ்வளவு தான், அடுத்த வினாடியே அந்தப் பேய் அந்தப் பையனை விட்டு விட்டு ஓடியது.
இந்த நிகழ்ச்சி சீடர்களுக்கும் கவலையாய் மாறியது. இயேசு தனிமையாய் இருந்த பிறிதொரு பொழுதில் அவர்கள் இயேசுவிடம் வந்தனர்.
‘இயேசுவே, ஏன் எங்களால் இந்தப் பேயை ஓட்ட முடியவில்லை?’ அவர்களுடைய குரலில் கவலையும், இயலாமையும் இருந்தது.
இயேசு அவர்களிடம், ‘உங்களிடம் இன்னும் அதிக விசுவாசம் வேண்டும். நோன்பும், இறைவேண்டலும் அதிகம் வேண்டும். விசுவாசம் இருந்தால் இந்த மரத்தைப் பார்த்து நீ பெயர்ந்து போய் கடலில் விழு என்றால் கூட அது விழும்’ என்றார்.
சீடர்கள் விசுவாசத்தின் முக்கியத்துவத்தை இன்னும் ஆழமாய்ப் புரிந்து கொண்டார்கள்.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, நவநாள் ஜெபம், சிறப்பு மறையுரையை தொடர்ந்து நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது.
பிப்ரவரி 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனியும், 6-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு புனித அந்தோணியார் தேர்ப்பவனியும் நடக்கிறது. 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருத்தல பெருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை 4.30, காலை 6 மணி, 7.30 மணி, மாலை 6.30 மணி ஆகிய நேரங்களில் திருப்பலி நடக்கிறது.
காலை 10 மணிக்கு குணமளிக்கும் வழிபாட்டை தொடர்ந்து 11.30 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட முதன்மைக்குரு சேவியர் டெரன்ஸ் திருவிழா சிறப்பு திருப்பலியை நடத்துகிறார். 8-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை புளியம்பட்டி பங்குத்தந்தை குழந்தைராஜ் செய்து வருகிறார்.
மாலையில் மறை மாவட்ட செயலாளர் பெலிக்ஸ் தலைமையில் செபமாலை, திருப்பலி போன்றவை நடந்தன. இதில் அருட்பணியாளர் மரியசூசை மறையுரையாற்றினார். தொடர்ந்து சமபந்தி விருந்து நடந்தது.
திருவிழா இறுதிநாளில் காலையில் அருட்பணியாளர் சாலமோன் தலைமையில் நடந்த திருப்பலியில் அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரையாற்றினார். மாலையில் செபமாலை, நற்கருணை ஆசீர், மறைக்கல்வி மன்ற பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜாண் பீட்டர், பங்கு அருட்பணி பேரவை, பங்குமக்கள் செய்திருந்தனர்.
இதையொட்டி நேற்று பங்கு இறைமக்கள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இன்று (செவ்வாய்க்கிழமை) மாதா சபை இளம்பெண்கள், இளைஞர்கள் சார்பிலும், நாளை முக்கூடல் ஆர்.சி. தொடக்கப்பள்ளி சார்பிலும் அன்பிய கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. 19-ந் தேதி சிங்கம்பாறை ஆர்.சி. தொடக்கப்பள்ளி சார்பிலும், 20-ந் தேதி தூய சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி சார்பிலும், 21-ந் தேதி அன்பிய கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தொடர்ந்து 22-ந் தேதி உணவு ஒன்றிப்பு பெருவிழாவும், 23-ந் தேதி நற்கருணை பெருவிழாவும், 24-ந் தேதி கூட்டு திருப்பலி சப்பர பவனியும் நடக்கிறது. 10-ம் திருநாளான 25-ந் தேதி காலை 8 மணிக்கு ஜூடு பால்ராஜ் மறை மாவட்ட ஆயர் தலைமையில், இறைவனை காணுதல் கருத்துரையும், 10.30 மணிக்கு லியோ ஜெரால்டு மறைவுரை கருத்துரையும் நடக்கிறது.
கொடியேற்று விழாவில் முக்கூடல், சடையப்புரம், அரிராம் நகர், மைலப்புரம் இலந்தைகுளம், தாளார்குளம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சிங்கம்பாறை பங்கு பேரவை ஊர் நிர்வாகிகள், இறைமக்கள் மற்றும் பங்கு தந்தை ம.செல்வராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.
நற்செய்திகளின்படி, இயேசு அலகையினால் சோதிக்கப்பட்டு அச்சோதனைகளை வென்றார். "அலகை இயேசுவை விட்டு அகன்றது"; "உடனே வானதூதர் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தனர்" (மத். 4:11). லூக்கா கூற்றுப்படி, "அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும் வரை இயேசுவை விட்டு அகன்றது" (லூக் 4:13). எனவே, அலகை மீண்டும் திரும்பிவரும் என்ற கருத்து தொக்கிநிற்கின்றது.
மாற்கும் மத்தேயுவும் "வானதூதர் இயேசுவுக்குப் பணிவிடை செய்ததை" குறிப்பிடுகின்றனர். லூக்கா அக்குறிப்பைத் தரவில்லை. மத்தேயு நற்செய்தியின்படி, இங்கு மீண்டும் ஒருமுறை இயேசு எலியாவோடு ஒப்பிடப்படுவது தெரிகிறது (காண்க: 1 அரசர்கள் 19:4-9). எலியாவுக்குக் காகங்கள் உணவு கொண்டுவந்தன.
இயேசு தாம் சோதிக்கப்பட்ட நாள்களில் கடவுளிடத்தில் கொண்ட நம்பிக்கையை இழந்துவிடவில்லை. மாறாக, சோதனைகளின் நடுவிலும் நிலைத்து நின்றார். எனவே, கடவுள் அச்சோதனைகளின் முடிவில் இயேசுவுக்கு வானதூதர் வழியாக உணவளித்தார். சிலர் வானதூதர் செய்த பணிவிடை அவர்கள் அலகையைத் துரத்தியதைக் குறிக்கிறது என்று விளக்குகின்றனர்.






