என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற 26-ந் தேதி(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலய திருவிழா வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் திருப்பலி நடத்துகிறார். விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி வரை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, நவநாள் ஜெபம், சிறப்பு மறையுரையை தொடர்ந்து நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது.

    பிப்ரவரி 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனியும், 6-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு புனித அந்தோணியார் தேர்ப்பவனியும் நடக்கிறது. 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருத்தல பெருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை 4.30, காலை 6 மணி, 7.30 மணி, மாலை 6.30 மணி ஆகிய நேரங்களில் திருப்பலி நடக்கிறது.

    காலை 10 மணிக்கு குணமளிக்கும் வழிபாட்டை தொடர்ந்து 11.30 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட முதன்மைக்குரு சேவியர் டெரன்ஸ் திருவிழா சிறப்பு திருப்பலியை நடத்துகிறார். 8-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை புளியம்பட்டி பங்குத்தந்தை குழந்தைராஜ் செய்து வருகிறார்.
    Next Story
    ×