என் மலர்
ஆன்மிகம்

இயேசுவின் போதனைகளில் மிகவும் முக்கியமானது
இயேசுவின் போதனைகளில் மிகவும் முக்கியமானது மலைப் பிரசங்கம். மிகவும் தெளிவான, மக்களைக் குழப்பாத எட்டு புதிய விதிகளை இயேசு சொன்னார்.
எளிய மனதோர் பேறுபெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர் களுக்கு உரியது. ‘எளிய மனம்’ என்ற சொல்லில் இயேசு மனித நேயத்தையும், கர்வத்தின் பக்கம் தலை சாய்க்காத பண்பையும், புகழின் மீது நாட்டம் கொள்ளாத மனநிலையையும் புரிய வைக்கிறார்.
துயருறுவோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். எளிய மனதோராய் வாழ்வதற்குரிய முயற்சியில் வருகின்ற துயரை, மனிதநேயப் பணிகளில் நடக்கையில் வரும் துயரை இயேசு இப்படிக் குறிப்பிடுகிறார்.
கனிவுடையோர் பேறுபெற்றோர்: அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். சட்டங்களைப் பேசித் திரிபவர்கள் அல்ல, மனதளவில் மனித நேயம் கொண்டவர்களே உயர்ந்தவர்கள் என்பதை இயேசுவின் மூன்றாவது மொழி விளக்குகிறது.
நீதியை நிலை நாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இயேசுவின் இந்த விதி இறைமகனின் நீதியைப் பேசுகிறது. மனிதர்களுடனான போராட்டமல்ல, பாவத்துடனான போராட்டமே இயேசுவின் பார்வையில் முதன்மையானது.
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். சக மனிதனோடு இரக்கம் கொள்பவர்கள் இரக்கத்தை இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். யூத சட்டங்கள் இரக்கத்தைப் பற்றிப் போதிக்காமல் பலி செலுத்துவதைப் பற்றியும், கண்ணுக்குக் கண் என்னும் போதனைகளைச் சுற்றியுமே இருந்ததால் இயேசுவின் விதிகளில் இரக்கம் இடம் பிடித்தது.
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். மனமானது களவு, விபசாரம், வன்மம் போன்ற எந்தவிதமான சிந்தனைகளும் இல்லாமல் தூய்மையாக இருந்தால் விண்ணகம் செல்லலாம் என்கிறார் இயேசு.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் எனப் படுவர். மக்களிடம் வீண் குழப்பங்களை ஏற்படுத்தும் மக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக இயேசுவின் ஏழாவது போதனை அமை கிறது.
நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. ஆன்மிக நீதி சார்ந்த போதனைகளை, யூத சமுதாயத்தின் வீதிகளில் விளம்பி நடக்கும் போது நிச்சயமாக துன்பங்கள் வரும். அந்த துன்பங்களைத் தாங்கும் வலிமை வேண்டும் என்கிறார் இயேசு.
இயேசுவின் போதனைகள் மக்களை சிலிர்க்க வைத்தன. ஆலயத்துக்கு பத்தில் ஒரு பங்கு காணிக்கை கொடுப்பதும், பலியிடுவதும், எருசலேம் தேவாலயத்துக்குப் புனிதப் பயணம் செய்வதும் தான் விண்ணரசுக்கு உரியவை, சுவர்க்கத்தில் நம்மைச் சேர்ப்பவை என்று நம்பிக் கொண்டிருந்த மக்களுக்கு இயேசுவின் இந்த புதிய போதனைகள் வியப்பையும் ஊட்டின.
‘திருச்சட்ட நூலிலுள்ள சட்டங்களை நான் அழிக்க வந்தேன் என்று எண்ண வேண்டாம். அழிப்பதற்கு அல்ல நிறைவேற்றவே வந்தேன். பத்துக் கட்டளை, ‘கொலை செய்யாதே’ என்கிறது. நான் சொல்கிறேன், தன்னுடைய சகோதரன் ஒருவனிடம் கோபம் கொள்வதே பாவம். கொலையல்ல, கொலை செய்யும் எண்ணமே பாவம். கொலைக்கு உன்னைத் தயாராக்கும் கோபமே பாவம்’.
‘நீ ஆலயத்தில் காணிக்கை செலுத்த வரும்போது யாரிடமாவது கோபம் கொண்டிருந்தால் காணிக்கைப் பொருளை அப்படியே விட்டு விட்டு நேராக அவனிடம் சென்று மன்னிப்பு கேள். அதன் பின் வந்து காணிக்கையைச் செலுத்து’.
‘விபசாரம் செய்யாதே’ என்று பத்து கட்டளைகள் சொல்கிறது. நான் உங்களிடம் சொல்கிறேன். இச்சைக் கண்களோடு நீங்கள் ஒரு பெண்ணைப் பார்த்தாலே நீங்கள் மனதில் அவளோடு விபசாரம் செய்கிறீர்கள். செயல் மட்டுமல்ல, செயலுக்கான சிந்தனையே பாவம்.
இயேசுவின் இந்த போதனைகள் மக்களை நேரடியாகச் சென்று தாக்கின.
போதனைகளை முடித்த இயேசு பின்னர் நயீன் எனும் ஊரை நோக்கிச் சென்றார். மக்கள் கூட்டம் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றது.
நயீன் ஊர் வாசலில் ஒரு மரண ஊர்வலம் அவர்களை எதிர்கொண்டது. அழுகையும், ஒப்பாரியுமாய் அவர்களை நெருங்கியது அந்த ஊர்வலம்.
இறந்து போனவன் ஒரு இளைஞன். அவனுடைய தாய்க்கு அவன் ஒரே மகன். அவள் ஒரு கைம்பெண். ஊர்வலம் இயேசுவின் அருகே வந்தது.
இயேசு நின்றார். அந்தத் தாயைப்பார்த்தார். ஆதரவற்ற நிலையில், அனாதைபோல அழுது புலம்பிக் கொண்டிருந்த அவளுடைய நிலை அவருடைய மனதைத் தொட்டது.
‘அழாதீர்கள் அம்மா...’
‘ஐயா... எனக்கு இருந்த ஒரே ஆதரவும் இப்படிப் போய்விட்டதே’ அந்தத் தாய் கதறினாள்.
இயேசு பாடையைத் தொட்டார், ‘இளைஞனே நான் உனக்குச் சொல்கிறேன் எழுந்திரு’ என்றார்.
இறந்து கிடந்த அந்த இளைஞன் எழுந்திருந்தான்.
தனது மகன் உயிர்பெற்றதைக் கண்ட தாய் ஆனந்த அதிர்ச்சியடைந்தாள். இயேசுவின் பாதத்தில் விழுந்தாள்.
‘இவர் மிகப்பெரிய இறைவாக்கினர்’ என மக்கள் அழுத்தமாய்ப் பேசத்தொடங்கினார்கள்.

Next Story