என் மலர்
ஆன்மிகம்

பாளையங்கோட்டை சவேரியார் பேராலய சப்பர பவனி நடந்த போது எடுத்த படம்.
பாளையங்கோட்டையில் சவேரியார் பேராலய திருவிழா சப்பர பவனி
பாளையங்கோட்டையில் சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி சப்பர பவனி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தின் 249-வது ஆண்டு திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
நேற்று மாலை நவநாள் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. லூர்துராஜ் அடிகளார் திருப்பலியை நடத்தினார். லெரின் டி ரோஸ் மறையுரை வழங்கினார்.
இதை தொடர்ந்து ஆலயம் முன்பிருந்து சவேரியார் திருஉருவப் பவனி நடைபெற்றது. அலங்காரம் செய்யப்பட்ட சப்பரத்தில் சவேரியார் எழுந்தருளி பவனி வந்தார். தெற்கு பஜார் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை சப்பர பவனி வந்தடைந்தது.
முடிவில் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை சேவியர், உதவி பங்குத்தந்தைகள் அருள்லூர்து எட்வின், மைக்கேல் ஜார்ஜ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாதுகாவலரின் பெருவிழா இன்று (சனிக் கிழமை) காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது. பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் ஜூடு பால்ராஜ் திருப்பலியை நடத்துகிறார்.
சிறுவர்-சிறுமியருக்கு நற்கருணை வழங்கும் விழாவும் நடைபெறுகிறது.

Next Story