என் மலர்
ஆன்மிகம்

துறையூர் அருகே புனித சவேரியார் ஆலய பெருவிழா
துறையூர் அருகே புனித சவேரியார் ஆலய பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர்பாளையம் கிராமத்தில் புனித சவேரியார் ஆலய பெருவிழா 9 நாட்களாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு குடந்தை மறைமாவட்ட ஆயர்அந்தோணிசாமி ஆலயத்தை புனிதப்படுத்தி, ஆலய வளாகத்திலுள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றி பெரு விழாவினை தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் ஆயர் தலைமையில் கூட்டுபாடல் திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணிக்கு திருப்பலி மறையுரையினை பங்குத்தந்தையர்கள் புள்ளம்பாடி ஹென்றிபுஷ்பராஜ், கல்கத்தா உயர் மறைமாவட்டம் எ.சேசுராஜ், கொன்னைக்குடி ஜெயராஜ், குடந்தை ஜெயா, மேலவாளாடி ஏனோக்ராஜன், ஜெயங்கொண்டம் கோஸ்மான் ஆரோக்கியராஜ், பெரம்பலூர் சமூக சேவை சங்க இயக்குனர் டி.திவ்யநாதன் ஆகியோர் நடத்தினார்கள். 8-வது நாள் மாலை 6.30 மணிக்கு திருப்பலி மறையுரையினை தாத்தையங்கார்பேட்டை பங்குத்தந்தை செபஸ்தியான் நடத்தினார்.
அன்று இரவு 9 மணிக்கு மலர்அலங்காரம், மின்விளக்கு அலங்காரத்துடன் வாணவேடிக்கை இன்னிசை கச்சேரியுடன் தேர் பவனி நடைபெற்றது. 9-ம் நாள் விழாவான நேற்று முன்தினம் காலை 8.30 மணிஅளவில் பெருவிழா கூட்டு பாடற்திருப்பலியினை பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குரு அடைக்கலசாமி நடத்தி மறையுரை வழங்கினார்.
அன்று மாலை 4 மணிக்கு தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ப.ஆரோக்கியராஜா, கிராம நிர்வாகக்குழுவினர், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

Next Story