என் மலர்
ஆன்மிகம்

கோட்டார் புனித சவேரியார் பேராலய தேர்ப்பவனி
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 8-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று இரவு தேர்ப்பவனி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சையை நிறைவேற்றினர்.
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் திருப்பலி மற்றும் ஆடம்பரத்திருப்பலி ஆகியவையும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
8-ம் நாள் திருவிழாவான நேற்று காலை 5.30 மணி, 6.30 மணி, 8 மணி, 9 மணி, 10 மணி, 11.30 மணி ஆகிய நேரங்களில் திருப்பலிகள் நடைபெற்றன. 8 மணி மற்றும் 10 மணி திருப்பலிகளில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். மாலை 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. இந்த திருப்பலியில் கோட்டார் வட்டார முதல்வர் அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ், பங்குத்தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்குத்தந்தை குருசு கார்மல் உள்பட 25 பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி தொடங்கியது. மேளதாளங்கள் முழங்கவும், பேண்டு வாத்தியங்கள் இசைக்கவும் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் முதலில் காவல் சம்மனசானவர், அதையடுத்து செபஸ்தியார், அதன்பிறகு புனித சவேரியார் சொரூபங்கள் தாங்கிய தேர் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் உப்பு, நல்லமிளகு, மெழுகுவர்த்தி, மலர் மாலைகள் போன்றவற்றை காணிக்கையாக வழங்கி தேர்களில் இருந்த புனிதர்களை வணங்கி வழிபட்டனர். தேர்களுக்கு பின்னால் ஏராளமான சிறுவர்- சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என வரிசையாக நின்று தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து, எழுந்து கும்பிடு நமஸ்காரமும், தரையில் உருண்டு வேண்டியும் தங்களது நேர்ச்சையை நிறைவேற்றினர்.
இன்று (வெள்ளிக்கிழமை) 9-ம் நாள் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற உள்ளது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறுகிறது.
10-ம் நாள் திருவிழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு புனித சவேரியார் பேராலய பெருவிழா திருப்பலி ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 10 மணிக்கு தமிழில் திருப்பலியும், 11 மணிக்கு தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் திருப்பலியும் நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி சவேரியார் பேராலயம் வண்ண வண்ண மின்விளக்குகள் மற்றும் சீரியல் விளக்குளால் ஜொலிக்கிறது. 10-ம் நாள் திருவிழாவான நாளை குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Next Story