என் மலர்
கிறித்தவம்
இறைவனின் மன்னிப்பை பெற்று நம் சிந்தனை, சொல், செயல்களால் நலம் பயக்கும் நல்லவர்களாக வளமான வாழ்வு வாழ்வோம்.
வாழ்வு என்பது ஒரு புதையல். அதில் ஏராளமான ரகசியங்கள் நம் கண் முன்னே நமக்குள்ளே புதைத்து வைக்கப்படுகின்றன. அந்த புதையலில் மறைந்திருக்கும் ஆற்றலின் மதிப்பு தெரியாமலே நாம் வாழ்ந்து மடிந்து விடுகின்றோம். வாழ்வில் மகிழ்ச்சியை எங்கோ தேடுகின்றோம். ஆனால் அக வாழ்வில் மகிழ்ச்சியை தேட மறந்து விட்டோம்.
இந்த அகத்தேடல் தான் ஆன்மிக தேடல் ஆகும். வாழ்வில் வளமாக வாழ்வதற்கு அவசியமான ஞானமும், தேர்ந்து தெளிகின்ற தன்மையும் தேவை. இந்த இரண்டும் வாழ்வை சரியான கண்ணோட்டத்துடன் அணுக நமக்கு உதவுகிறது. இதை பெறுவதற்கான காலம் தான் தவக்காலம்.
நாம் பலவீனமானவர்கள். பாவம் செய்கின்றோம். பயிர் விளையும் நிலத்தில் களைகள் இருந்தால் பயிரின் வளர்ச்சி தடைபடும். அதுபோல நம் வாழ்வில் பாவக்கறை இருந்தால் நல்வாழ்வின் வளர்ச்சி தடைபடும். களைகளை எடுப்பதும், பாவக்கறைகளை நீக்குவதும் நம்மை வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும். இறைவன் நம்மிடம் மனமாற்றத்தையே விரும்புகிறார். அதை அவர் மகிழ்ந்து கொண்டாடுகின்றார்.

குற்றம் புரிந்தவன் தண்டனை பெறுவது சட்டத்தின் நீதியாக கருதப்படுகின்றது. ஆனால் இறைவனின் பேரன்போ இரக்கப்பெருக்காகி ஆழிப்பேரலையாக மனதில் பாய்ந்து மன்னிக்கிறது. பாவத்திற்கு கிடைக்கும் கூலி சாவு. மாறாக கடவுள் கொடுக்கும் அருட்கொடை நம் ஆண்டவர் இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு (உரோமையர் 6:23)
எனவே, உங்கள் பாவங்கள் போக்கப்படும் பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள் (தி.ப 3:19) ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்கின்றோம். உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து குற்றம் அனைத்திலிருந்தும் நம்மை தூய்மைப்படுத்துவார். (1 யோ 1:8-9)
நாமும் உண்மை நிலை உணர்ந்து இறைவனிடம் சரணடைந்து மனமாற்றம் அடைவோம். இறைவனின் மன்னிப்பை பெற்று நம் சிந்தனை, சொல், செயல்களால் நலம் பயக்கும் நல்லவர்களாக வளமான வாழ்வு வாழ்வோம்.
அருட்திரு. லூர்து ஜெயராஜ், சலேசியன் சபை, உதவிப்பங்குத்தந்தை, சவேரியார் பாளையம்.

உண்மையை பேசுவதும் உண்மையாக வாழ்வதிலும் கஷ்டங்களும் நஷ்டங்களும் உண்டு. ஏசு உண்மையை பேசி வாழ்ந்தால் தான் சிலுவைக்கு சொந்தக்காரர் ஆனார்.
உண்மையா அதுவென்ன? ரோம் ஆளுநன் பிலாத்து ஏசுவிடம் கேட்ட கேள்விதான் இது. பதவி மோகத்திலே மூழ்கியிருந்த அவனுக்கு உண்மை என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மைதான். இக்கேள்வி ஒரு வகையில் ஏசுவை கேலி செய்வதாக இருக்கிறது. உண்மை பேசாதவர்களுக்கு உண்மை என்னவென்று தெரிந்துகொள்வதில் நியாயமில்லை. உண்மைதான். உண்மையைச் சட்டைப்பன்னாதோர்க்கு உண்மை என்னவென்றே தெரியாது. உண்மைதான்.
கடவுளுக்கு இன்னொரு பெயர் அன்பு. அவருக்கு இன்னொரு பெயர் இரக்கம். இதேபோன்று அவருக்கு இன்னொரு பெயர் உண்மை. வழியும், உண்மையும், வாழ்வும் நானே (யோவான் 14:6) என்றார் ஏசு. இந்தக்கடவுள் ஏசுதான் பிலாத்துமுன் செதுக்கப்பட்ட மலைபோல நின்று கொண்டிருந்தார். பிலாத்து அந்த உண்மையை பார்க்கவோ, ஏற்கவோ மறுத்துவிட்டான்.

சில நேரங்களில் நாமும் பிலாத்துவைபோல் உண்மையை பார்க்க, உண்மையை ஏற்க மறுக்கிறோம். நம்முடைய பொருள், பதவி, புகழ், சிற்றின்ப மோகங்கள் கடவுளிடமிருந்து நம்முடைய பார்வையை திருப்பி விடுகின்றன. உண்மை எப்போதும் அழகுடன் இருக்காது. ஒன்று மட்டும் உண்மை. அது எப்போதும் பாவ அழுக்குடன் இருக்காது.
நம்முடைய வார்த்தைக்கும் வாழ்வுக்கும் உறுதியான உறவு இருக்க வேண்டும். நம் சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் வலுவான பாலம் இருக்கவேண்டும். பேசுவது ஒன்று செய்வது வேறொன்றாக இருந்தால் துர்நாற்றம் வீசும். பார்ப்பது ஒன்று பேசுவது வேறு ஒன்றாக இருந்தால் நாடே நாறிப்போகும். நம் வார்த்தைகளிலும் வாழ்வு முறைகளிலும் எதார்த்தம் தொடர வேண்டும்.
அதுதான் உண்மை. உண்மையை பேசுவதும் உண்மையாக வாழ்வதிலும் கஷ்டங்களும் நஷ்டங்களும் உண்டு. உண்மையை பேசி வாழ்பவர்கள் கடவுளின் மக்கள். ஏசு உண்மையை பேசி வாழ்ந்தால் தான் சிலுவைக்கு சொந்தக்காரர் ஆனார்.
- அருட்தந்தை சி.குழந்தை, காணியிருப்பு.

இயேசு பிரான் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு, வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் என்று சீடர்கள் வழியாக சமூகத்திற்கு எடுத்துரைக்கிறார்.
இயேசு பிரான் இவ்வுலகில் வாழ்ந்தபோது அவருடைய சீடரை நோக்கி இவ்வாறு கூறினார்: ‘யாரும் இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய இயலாது. ஏனென்றால் ஒருவரை வெறுத்து விட்டு, மற்றவரிடம் அன்பு கொள்வார். அல்லது ஒருவர் பக்கம் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக் கணித்து விடுவார்’.
‘அதைப்போல நீங்களும் கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது. நான் உங்களுக்குச் சொல்கிறேன்’.
‘உயிர் வாழ்வதற்கு எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உணவை விட உயிரும், உடையை விட உடம்பும் உயர்ந்தவை அல்லவா?’
‘வானத்திலே பறக்கும் பறவைகளை உற்றுப் பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை. அறுப்பதும் இல்லை. களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை. விண்ணகத்தில் இருக்கும் தந்தையானவர், அவைகளுக்கும் உணவை அளிக்கிறார். அவைகளை விட நீங்கள் மேலானவர்கள். கவலைப்படுவதால், தமது உயரத்தை எவரும் ஒரு முழம் கூட்ட முடியுமா? ஆடைக்காக ஏன் கவலைப்படுகிறீர்கள். காட்டில் உள்ள மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன? கவனித்துப் பாருங்கள். அவைகள் உழைப்பதும் கிடையாது. நூற்பதும் கிடையாது’.
‘சாலமோன் கூட தன்னுடைய உயர்வில் எல்லாம், அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்தது கிடையாது, என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்’.
‘நம்பிக்கை குறைந்திருப்பவர்களே! இன்றைக்கு இருந்து, நாளைக்கு அடுப்பில் எறியப்படும், காட்டுப்புல்லுக்கு, கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால், உங்களுக்கு இன்னும் மிகுதியாகச் செய்ய மாட்டாரா?’
‘ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிந்து கொள்வோம்? என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். ஏனென்றால் பிற இனத்தைச் சார்ந்தவரே இவைகளை நாடுவர். இவைகளெல்லாம் உங்களுக்குத் தேவை என்பதை உங்களின் வானகத் தந்தை நன்கு அறிவார்’.
‘எல்லாவற்றுக்கும் மேலாக, அவருடைய ஆட்சியையும், அவருக்கு உகந்ததையும் நாடுங்கள். அச்சமயத்தில் இவைகள் அனைத்தும், உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். ஆகையால் நாளைய தினத்திற்காகக் கவலைப்படாதீர்கள். நாளைய கவலை தீர, நாளைக்கு ஒரு வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு, அன்றன்று உள்ள தொல்லையே போதும்’ என்று உரைத்தார்.
நீண்ட இந்த நற்செய்தியைக் கவனியுங்கள். இந்த நற்செய்தியில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

எவரும் இரண்டு எஜமானர்களுக்குக் கீழே வேலை செய்ய முடியாது என்ற கருத்து உரைக்கப்படுகிறது. உண்மைதான். இயல்பான ஒன்றை எடுத்துரைக்கிறார், நம் இயேசு பிரான். எப்படியும் ஒருவரைப் பகைத்துக் கொள்ளத்தானே இயலும். ஒருவரைப் பகைத்து, மற்றொருவரை நேசித்தால்தான், பணி விடையைத் திறம்படச் செய்ய முடியும். மேலும் செல்வத்துக்குப் பணிவிடை செய்வது, இவ்வுலகத்தை மட்டும் சார்ந்தது. கடவுளுக்குப் பணிவிடை செய்வது, இவ்வுலகையும் மறுவுலகையும் சார்ந்தது. இது தூய்மையானது. உண்மையானது. நம்மை மேலும் நலம் பெறச்செய்வது. இந்நிலையை எடுத்துரைத்து, தம் சீடர்களுக்கு இயேசு பிரான் போதிக்கிறார்.
ஆகவே கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்ய உங்களால் முடியாது என்ற கருத்தை ஆழமாக வேரூன்றச் செய்கிறார். ‘ஒன்று, கடவுளுக்குப் பணிவிடை செய். அல்லது செல்வத்துக்குப் பணிவிடை செய்’ என்ற கருத்து பெறப்படுகிறது.
எதற்கும் கவலைப்படக்கூடாது என்பதை எடுத்துக் கூறும் பொழுது, உயிர் வாழ்வதற்காக எதை உண்பது? எதைக் குடிப்பது? எதை உடுத்துவது? என்று கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி விட்டு, ஓர் அற்புதமான கருத்தைக் கூறுகிறார்.
‘உணவை விட உயிர் மேலானது’ என் கிறார். ‘உடையை விட உடம்பு மேலானது’ என்கிறார். உயிரும் உடம்பும் தூய்மை உடையதாக இருக்க வேண்டும் என்ற நற்கருத்துதான் இங்கே வெளிப்படுகிறது. வெறும் உணவினாலும், ஆடம்பர உடையினாலும் தூய்மை வெளிப்படப் போவதில்லை.
வானத்திலே பறந்து வட்டமிட்டுக் கொண்டிருக்கும் பறவைகளைக் காட்டுகிறார். அவைகள் விதைக்கிறதா? அறுவடை செய்கிறதா? களஞ்சியங்களில் நாளைக்கு வேண்டுமென்று சேகரிக்கிறதா? என்றெல்லாம் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார். பறவைகளுக்கு உணவளிக்கும் தந்தையானவர், உங்களுக்கு அளிக்க மாட்டாரா? என்று மீண்டும் அவர்களை தன் கேள்விகளால் சிந்திக்க வைக்கிறார்.
அதுமட்டுமல்ல! அடுத்த ஒரு கேள்வியைக் கேட்டு, நம்பிக்கையை மேலும் வளர்த்து ஊக்கப்படுத்துகிறார். வானத்துப் பறவைகளை விட, மேலானவர்களாக இருக்கும் நீங்கள், நினைத்தால்கூட, உங்கள் உயரத்தை ஒரு முழம் கூட்டி விட முடியுமா? என்ற கேள்வியால் சிந்தனையைத் தூண்டி விடுகிறார்.
ஆடைக்காகக் கவலைப்படு கிறீர்களே, காட்டு மலர்ச் செடிகளைக் கவனித்தீர்களா? இல்லையென்றால் கவனித்துப் பாருங்கள். அவைகள் உழைக்கிறதா? அல்லது நூற்கிறதா? இல்லையே.
நற்செய்தியில் கூறப்படும் சாலமோன் பற்றிக் கூறுகிறார். அவர்கூட இப்படியெல்லாம் அணிந்தது கிடையாது என்றுரைக்கிறார். இவற்றையெல்லாம் கூறி விட்டு, சீடர்களைப் பார்த்து அவர் மேலும் கூறுகிறார், ‘நம்பிக்கை குறைந்தவர்களே!’ என்று விளிக்கிறார். ஆம்! நம்பிக்கை குறைவாக இருப்பவர்கள்தான், இப்படியெல்லாம் எண்ணுவார்கள். இதை உணர்ந்ததால்தான் இப்படி அழைக்கிறார், இயேசு பிரான்.
ஆழமான அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும் என்பதைத்தான் இந்த நற்செய்திப் பாடம் நமக்கு அறிவுறுத்துகிறது.
கவலைப்படுவதால், எதுவும் நடந்து விடப்போவதில்லை. நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு, வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் என்று சீடர்கள் வழியாக சமூகத்திற்கு எடுத்துரைக்கிறார். இந்த நற்செய்தியைப் படிப்போர் நன்கு சிந்திக்க வேண்டும். நற்செய்தியின் வழியே நடக்க முயற்சிக்க வேண்டும்.
- செம்பை சேவியர்.

மற்றவர்களின் துன்பத்தை கண்டு கண்ணீர் வடிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த துன்பத்தை துடைக்க தானே ஒரு கருவியாக மாறவேண்டும். இதுதான் ஏசு விரும்பும் மரச்சிலுவை.
சிங்கம் என சீறி வாரீர்! புயல் என புறப்பட்டு வாரீர்! அலை கடலென திரண்டு வாரீர்! இமயமாய் எழுந்து வாரீர்! என்று ஆங்காங்கே குரல் ஒலிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஆண்டவர் ஏசு சத்தமில்லாமல் “சிலுவையை சுமந்து வாரீர்“ என்று தவக்கால அழைப்பு விடுக்கிறார். எப்படிப்பட்ட சிலுவையை நாம் சுமக்க அழைக்கப்படுகிறோம் என்பதை நாம் சிந்திப்போம்.
அடுத்த வேளை உண்ண உணவு இல்லை என்ற போதும் தன்னிடம் இருந்த நெல் விதையை எடுத்துக் கொண்டு விதைக்க செல்லுகின்ற விவசாயிக்கு அன்றாட “உணவு” ஓர் சிலுவை. மீன் பிடித்து எப்படியும் மீள முடியும் என்று இரவு நேரத்தில் கடலை நோக்கி பயணம் செய்யும் மீனவர்களுக்கு தன் “வாழ்வு” ஒரு சிலுவை. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இருந்தும் இரவில் உறக்கம் வராமல் படுத்து புரளும் பணக்காரர்களுக்கு “இரவு” ஓர் சிலுவை.
ஆயிரம், லட்சம் என்று பணம் சேர்த்தும் தன் பிள்ளைகளுக்கு நல்லதொரு வாழ்வு கிடைக்க வேண்டும் என்று தவிக்கும் பெற்றோர் களுக்கு பிள்ளைகளின் “எதிர்காலம்” ஓர் சிலுவை. புதுமண தம்பதிகளுக்கு “வயதான பெற்றோர்கள்” ஓர் சிலுவை. அறிவியல் மேதைகளுக்கு இன்று “ஆன்மிகவாதிகள்” ஓர் சிலுவை. உனக்கு நான் சிலுவை. எனக்கு நீ சிலுவை என்று, இன்று நாம் சிலுவைக்கு அர்த்தம் கொடுத்து வருகிறோம். இதுவா ஏசு நம்மை சுமந்து கொண்டு தன்னை பின் தொடரச் சொன்ன சிலுவை? இல்லை, இல்லவே இல்லை.

உண்மையை உறக்கத்தில் வைத்துவிட்டு, அநீதியால் அக்கிரம ஆட்சி நடத்தி கொண்டிருப்பவர்களிடம், உண்மை எடுத்துரைப்பதும், அதற்காக சாட்சிய வாழ்வு வாழ்வதுமே உண்மையான சிலுவை ஆகும். இப்படி வாழ்கின்ற போது நமக்கு தோல்வி என்பது நிரந்தரம் ஆகலாம். இன்பம் என்பது இல்லாமல் போகலாம். துன்பம் மட்டுமே துணையாகலாம். சொத்துக்கள் பறிபோகலாம். சொந்த பந்தங்கள் விலகி போகலாம், இழப்பு ஏற்படலாம். ஏன் இறப்பும் ஏற்படலாம். இத்தகைய சிலுவைகளை தான் ஏற்றுக் கொண்டு ஏசுவை பின்தொடர வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றார். இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை தான் ஏசுவும் வாழ்ந்து காட்டினார்.
மற்றவர்களின் துன்பத்தை கண்டு கண்ணீர் வடிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த துன்பத்தை துடைக்க தானே ஒரு கருவியாக மாறவேண்டும். இதுதான் ஏசு விரும்பும் மரச்சிலுவை. ஏழை மக்களின் நலனுக்காக அரசிடமும், அவர்களை அடிமைப்படுத்தி வாழும் பணக்கார முதலைகளிடம் போராட வேண்டும். கொத்தடிமை, லஞ்சம், ஊழல், வரதட்சணை, குழந்தை தொழிலாளர்கள் போன்றவைகளை அன்றாட வாழ்வில் பார்த்து, ஐயோ பாவம் என்று நினைத்துவிடாமல், அதை எதிர்த்து போர்க்கொடி தூக்கவும் நாம் முயலுகின்ற போது ஏசுவைப் போல் நாமும் சிலுவையை சுமக்க முடியும். இதைத்தான் ஏசு சுமக்க அழைக்கிறார்.
எனவே துன்பம் என்றதும் துவண்டு போகின்ற நிலையிலிருந்து விலகி, சிலுவை என்றதும் சினுங்குகிற மனதினை மாற்றி, பிறருக்காக படும் வேதனைகளை துன்பங்களை நம் தோளில் வைத்துக் கொண்டு, கல்வாரி நோக்கி வீர நடைபோடுவோம். எத்தனையோ மரத்தை கொண்டு சிலுவைகைளை செய்த நாம் எத்தனையோ மனிதர்கள் இருந்தும் ஒரு ஏசுவை உருவாக்க முடியவில்லையே? ஏசு சொன்ன சிலுவையை சுமந்து நாளைய வரலாற்றை உருவாக்கி நமது பெயரை வாழ்த்த செய்வோம்.
- அருட்தந்தை. ஆரோக்கியதாஸ், முத்துப்பிள்ளை மண்டபம் கும்பகோணம்.

ஆர்.சி.செட்டிபட்டி புனித ராயப்பர் சின்னப்பர் ஆலயத்தில் வேண்டுதல் தேர் திருப்பலியும், தேரோட்டமும் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
ஓமலூரை அடுத்த ஆர்.சி.செட்டிபட்டியில் புனித ராயப்பர் சின்னப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து நவநாள் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் வேண்டுதல் தேர் திருப்பலியும், தேரோட்டமும் நடைபெற்றது. தேரோட்டத்தை அருட்தந்தையர்கள் ஜான் ஜோசப், மரியான் ஆஸ்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
மனிதனுக்கு நம்பிக்கை, அதிலும் கடவுள் மீது நம்பிக்கை மிக அவசியம் என்பதை உணர்ந்து நாமும் நம்பிக்கையோடு வாழ்வோம். ஒளி பெற்று புது வாழ்வு பெறுவோம்.
யோவான் 9:5-ல், “நானே உலகின் ஒளி“ என்று கூறி, நம்பிக்கையை வழங்கும் ஒளியாக இயேசுவே நிற்கின்றார். ஒரு மனிதன் வாழ்வில் முன்னேற நம்பிக்கை மிக அவசியம். ஆகவேதான் யோவான் 11;25-ல் “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னில் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்“ என்றும், நம்பிக்கை முதன்மையானது என்கிறார் இயேசு கிறிஸ்து.
இந்த நற்செய்தியில் பிறவிக்குருடன் வழியாக முதலில் சீடர்கள் பார்வை பெறுகிறார்கள். சீடர்கள் மனதில் பார்வையற்று இருப்பது பாவத்தினால் தான். ஆனால் இயேசு, அது பாவத்தினால் அல்ல, கடவுளின் செயல் திட்டத்தை வெளிப்படுத்தவே என்கிறார்.
யோவான் 9:6-ல் பிறவிக்குருடனின் கண்களில் உமிழ்நீரால் சேறு உண்டாக்கி அதை பூசுகிறார். அதை அவன் ஏற்றுக்கொள்கின்றான். இதுதான் நம்பிக்கையின் தொடக்கம். யோவான் 9:7-ல் சீலோவாம் குளத்தில் கண்ணை கழுவு என்கிறார் இயேசு. அவனும் கழுவுகிறான். பார்வை பெறுகிறான்.

இதையே யோவான் 9:11-ல் “நான் போனேன், கழுவினேன், பார்வை பெற்றேன்“ என்று கூறி பரிசேயர்களிடம் தெளிவு படுத்துகிறான். பார்வை பெற்றவர் தம் நம்பிக்கையை வெளிக்காட்டுகிறார். பரிசேயர்கள் பார்வை பெற்றிருந்தும், அனைத்தையும் பார்த்த பிறகும், இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்கள் இறுதிவரை இருளின் மக்களாகவே வாழ்வதைக்கண்ட இயேசு வருத்தப்படுகிறார்.
அதனாலேயே யோவான் 11:25-ல் “தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன். பார்வையற்றோர் பார்வை பெறவும், பார்வையுடையோர் பார்வை அற்றவராகவும் வந்தேன்“ என்றும் நம்பிக்கை உள்ளவர்கள் பார்வை இழந்திருந்தாலும் கிறிஸ்துவை அறிவதில் படிப்படியாக முன்னேறி, இறுதியில் அவரிடம் சரணடைகிறார்கள். கிறிஸ்துவால் ஒளி பெற்று கிறிஸ்துவுக்கு சாட்சியம் பகர்கின்றார்கள்.
மத் 5:4-11-ல் சீடர்கள் இயேசுவின் அறிவுரைப்படி படகை ஆழத்திற்கு கொண்டு சென்றார்கள். அதிகமான மீன்களை பெற்றார்கள். நம்பிக்கையினால் தான் சீடர்கள் இயேசுவின் போதனைகளை பின்பற்றி அதனை மனிதர்களுக்கு எடுத்துரைப்பவர்களாக மாறினார்கள். ஆகவே மனிதனுக்கு நம்பிக்கை, அதிலும் கடவுள் மீது நம்பிக்கை மிக அவசியம் என்பதை உணர்ந்து இந்த தவக்காலத்தில் நாமும் நம்பிக்கையோடு வாழ்வோம். ஒளி பெற்று புது வாழ்வு பெறுவோம்.
அருட்திரு. வி.மரியஅற்புதம், அதிபர், மலைமாதா திருத்தலம், திண்டுக்கல்.

தொழிலை விரிவாக்க, கடனை அடைக்க, கடன் இல்லாமல் வாழ என்ன செய்ய வேண்டும் என தேவனிடத்தில் கேட்பது மட்டுமல்ல, அவர் உங்களை நடத்தும் வரைக்கும் சற்று நிதானத்தைக் காத்துக் கொள்ளுங்கள்.
பொருளாதார நெருக்கடி, நாளுக்குநாள் அதிகரித்து வரும் விலைவாசி, அன்றாட தேவைகளை சந்திக்க முடியாத சூழ்நிலை மற்றும் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலைமை இப்படி பலதரப்பட்ட தேவைகள், நெருக்கடியோடு அநேக மக்கள் கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள்.
நம்முடைய அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவரால் கூடாதது ஒன்றுமில்லை. உங்கள் தேவைகளை அவரால் சந்திக்க முடியும். ஆகவே விசுவாசத்தோடு கர்த்தருடைய வார்த்தையை ஜெபத்தோடு வாசியுங்கள்.
நூறு மடங்கு ஆசீர்வதிக்கும் தேவன்
“ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான், கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறு மடங்கு பலன் அடைந்தான்” (ஆதி 26:12).
பழைய ஏற்பாட்டில் நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கை தேவன் ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறு மடங்கு ஆசீர்வாதத்தை அவர் பெற்றார். ஈசாக்கு தேசத்தில் விதை விதைத்த காலம் செழிப்பின் காலமல்ல, அது பஞ்சத்தின் காலம். தேசமெங்கிலும் மகா வறுமை காணப்பட்ட ஒரு காலம். அந்நாட்களில் ஈசாக்கு பட்ட பிரயாசத்தை நம் ஆண்டவர் ஆசீர்வதித்தார். அதற்கு என்ன காரணம்?
ஈசாக்கின் ஜெப வாழ்வு
“மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டு தல் செய்தான். கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபேக்காள் கர்ப்பந்தரித்தாள்” (ஆதி 25:21).
மிகுந்த கடன் பாரத்தினாலும், பணக்கஷ்டத்தினாலும் மனமடிந்து போனீர் களோ? இனிநான் எழும்ப முடியாது, நொடிந்துபோய் விடுவோம் என முடிவு கட்டிவிட்டீர்களோ? கவலைப்படாதீர்கள். யாரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும் என்று மனுஷர்களை நோக்கிப் பார்ப்பதை சற்று அப்புறப்படுத்திவிட்டு, தேவனை நோக்கி மன்றாடி ஜெபம் பண்ணுங்கள்.
அன்றைக்கு சீடர்கள் கடல் பயணத்தில் புயலினால் தாக்கப்பட்டபோது நித்திரையாயிருந்த இயேசுவை எழுப்பினார்கள். அப்போது இயேசு எழுந்து காற்றையும், கடலையும் அதட்டினார்கள். அதைப் போலவே தேவனை நோக்கி நீங்கள் கூப்பிடுகையில் ஏற்ற வேளையில் உங்களுக்கு அவர் செவி கொடுத்து உங்கள் மனவிருப்பத்தை நிறைவேற்றுவார். உங்கள் தேவைகளை சந்திப்பார்.
ஈசாக்கின் தியான வாழ்வு
“ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்த போது, ஒட்டகங்கள் வரக்கண்டான்” (ஆதி 24:63).
கடன் பிரச்சினையினாலும், கஷ்டத்தினாலும் மனம் சோர்ந்து போனீர்களோ? இந்த சூழ்நிலையில் உங்களுக்குத் தேவை தேவனுடைய வார்த்தை. கர்த்தருடைய வார்த்தை ஒருநாளும் வெறுமையாய்த் திரும்பாது. தான் செய்ய நினைத்த காரியத்தை செய்து முடித்துதான் திரும்பும். மேலும், கர்த்தருடைய வார்த்தை கால்களுக்குத் தீபமும், பாதைக்கெல்லாம் வெளிச்சமுமானவைகள். மட்டுமல்ல கர்த்தருடைய வார்த்தை பேதைகளை ஞானியாக மாற்றும், எளிய வனைக் குப்பையிலிருந்து உயர்த்தும். அத்தனை வல்லமையுள்ளது கர்த்தருடைய வார்த்தை.

அன்றைக்கு யுத்தக்களத்தில் பயமுறுத்தின கோலியாத்தைப் பார்த்து விசுவாசத்தோடு கர்த்தருடைய வார்த்தைகளை தாவீது பேசினார். “அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி, நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய ராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்” (1.சாமு.17:45).
அந்த வார்த்தையின் வல்லமை அற்புதத்தையும் வெற்றியையும் தாவீதுக்குக் கொண்டு வந்தது. ஆம், உங்கள் பஞ்சகாலம் மாற நேரம் கிடைக்கும்போது வேத வசனத்தை வாசித்து, அவ்வசனங்களை விசுவாசத்தோடு தியானியுங்கள். வார்த்தையின் வல்லமை உங்களுக்கு அற்புதத்தைக் கொண்டு வரும்.
தேவனால் நடத்தப்பட்ட ஈசாக்கு
“ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று. அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான். கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு. நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்” (ஆதி.26:1-3)
பண நெருக்கடி அதிகரிக்கும்போது யாரிடத்தில் போய் கடன் வாங்கலாம் என்ற எண்ணம் உங்களுக்கு அநேக நேரங்களில் வருகிறது அல்லவா? கடன் வாங்குவது எளிதென்றாலும் அதனை திரும்ப அடைப்பது எத்தனை கடினமாக இருக்கிறது. எனவே கடன் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் சிந்தனையிலிருந்து எடுத்து விடுங்கள். நிச்சயம் ஒரு புது வழியை ஆண்டவர் காட்டுவார். அதற்கு அவருடைய நடத்துதல் உங்களுக்குத் தேவை.
ஆண்டவருடைய நடத்துதலை தேவனிடத்தில் கேளுங்கள். தொழிலை விரிவாக்க, கடனை அடைக்க, கடன் இல்லாமல் வாழ என்ன செய்ய வேண்டும் என தேவனிடத்தில் கேட்பது மட்டுமல்ல, அவர் உங்களை நடத்தும் வரைக்கும் சற்று நிதானத்தைக் காத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். அப்பொழுது உங்கள் பொருளாதாரத்தில் மாற்றங்களும், அற்புதங்களும் நடைபெறும். தேவனுடைய ஆசீர்வாதம் உங்கள் வீட்டில் தங்கும்.
தேவ கிருபை உங்களோடு இருப்பதாக!
சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,
‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54

இறைமகன் இயேசு இம்மண்ணுலகில் அவதரித்து, பாவச்சேற்றில் உழன்று கொண்டிருக்கும் மக்களைக் காப்பதற்காகவும், தன்னை யார் என்று அடையாளப்படுத்துவதற்காகவும், வியப்படையத்தக்க செயல்களை செய்தார்.
அந்தக் காலத்தில் இயேசு பிரான் படகில் ஏறி மறுகரைக்குச் சென்று, தன் சொந்த ஊரை அடைந்தார். அப்பொழுது சிலர், முடக்குவாதம் கொண்ட ஒருவரைக் கட்டிலில் வைத்து அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு பிரான் அவர்களிடம் இருந்த நம்பிக்கையை நன்கு உணர்ந்து கொண்டார். முடக்குவாதம் கொண்டவரை நோக்கினார். ‘மகனே! துணிவாக இரு. உன்னிடமுள்ள பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொன்னார்.
அப்பொழுது அங்கிருந்த மறைநூல் அறிஞர்களில் சிலர், ‘இவன் கடவுளைப் பழிக்கிறான்’ என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டனர். அவர்களுடைய எண்ணங்களை இயேசு பெருமான் உணர்ந்து கொண்டார். பிறகு அவர்களை நோக்கினார். ‘உங்கள் மனதில் தீமையானதைச் சிந்திப்பது ஏன்? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று சொல்வதா? எழுந்து நட என்பதா? எது எளிதானது? மண்ணுலகத்தில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.
எனவே முடக்குவாதத்தில் கிடந்தவரை நோக்கி, ‘நீ எழுந்து உன் கட்டிலைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குப் போ’ என்றார். அவரும் எழுந்து அவரது வீட்டிற்குச் சென்றார். இதை நேரில் கண்ட மக்கள் கூட்டம் அச்சம் அடைந்தது. இத்தகைய அதிகாரத்தை மனிதருக்குக் கொடுத்த கடவுளைப் போற்றினர்; புகழ்ந்தனர்.
மத்தேயு எழுதிய இந்த நற்செய்தியை ஒருகணம் சிந்திப்போம். முதலில் ஒருவருக்கு நம்பிக்கை வர வேண்டும் என்ற கருத்து வெளிப்படுகிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை உணர வேண்டும். இத்தகைய நம்பிக்கை, மனிதரை முன்னேற்றப்பாதையிலும், முயற்சியிலும் ஈடுபடுத்தும். நம்பிக்கையோடு ஒரு கூட்டம் இயேசு பிரானை நாடி வந்தது. அக்கூட்டத்தில் வந்த சிலர், எழுந்து நடக்க முடியாத, முடக்குவாதம் கொண்ட ஒருவரைக் கட்டிலில் கிடத்தி தூக்கி வந்தனர். அவர்களின் நம்பிக்கையை இயேசு பெருமான் உணர்ந்து கொண்டார்.
முடக்குவாதம் கொண்டவரை நோக்கி, அவர் முதன்முதலில் சொன்ன வார்த்தையைக் கவனிப்போம். ‘மகனே! துணிவாக இரு’ என்று அவருக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். துணிச்சல் தேவை என்பது, இவ்வார்த்தையின் மூலம் வெளிப்படுகிறது. அடுத்து அவர், ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்றார். மக்கள் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. மறைநூல் அறிஞர்களில் சிலர்தான், ‘கடவுளையே இவன் பழிக்கிறான்’ என்று வெளிப்படையாகச் சொல்லாமல், தங்களுக்குள்ளேயே சொல்லிக் கொண்டனர்.
இறைமகன் இயேசுதான், மனிதராக அவதரித்து இருக்கிறார் என்பதை உணரவில்லை. இதை உணர்ந்து கொண்ட இயேசு பிரான், அவர்களைப் பார்த்து, ‘தீமையானதைச் சிந்திப்பது ஏன்?’ என்ற வினாவைத் தொடுத்து விட்டு, ‘எது எளிது?’ என்ற கேள்வியைக் கேட்கிறார். ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று சொல்வது எளிதானதா? எழுந்து நட என்று சொல்வது எளிதானதா?’ என்ற ஒரு வினாவைத் தொடுத்துப் பேசுகிறார்.

‘மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு’ என்கிறார். ‘நீ, உன் கட்டிலை எடுத்துக் கொண்டு நட’ என்றும் கூறுகிறார். முடக்குவாதக்காரர் எழுந்தார்; நடந்தார் என்ற நற்செய்தியை இதன் மூலம் அறிகிறோம்.
மக்கள் கூட்டம் இச்செயல்களைக் காண்கிறது. பயப்படுகிறது. ஏனென்றால் இச்செயல்களை இவர்கள் இதுவரைக் காணவில்லை. மறைநூல் அறிஞர்களை விட மக்கள் கூட்டம், இயேசு பிரானின் வார்த்தைகளை நம்புகிறது. விசுவாசம் கொள்கிறது. இப்படி எவ்வளவோ அற்புதங்களை இயேசு பிரான், தன் தந்தையின் திருவுளப்படி செய்கிறார் என்ற செய்தியை அறிய முடி கிறது.
ஒருவர் பிறரின் குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்பதை இயேசு பிரான் பல இடங்களில் சுட்டிக்காட்டுவதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இயேசு பிரான் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், படகில் ஏறி மக்களுக்குப் போதிப்பதும், மலையில் ஏறி நின்று பிரசங்கம் செய்வதுமாக இருந்தார் என்பதை நற்செய்தி வாயிலாக அறிகிறோம். மலையும், கடலும் அவருக்கு மக்களை நேரில் சந்தித்து உரையாடும் களமாக அக்காலத்தில் இருந்திருக்கிறது. வெளிப்படையாக ஒளிவுமறைவின்றி மக்களிடம் பேசுவதற்கு இவ்விடங்கள், இயேசு பிரானுக்குச் சிறந்த இடம் என்பதை அறிகிறோம். இயேசு பிரானின் எளிய தோற்றமும், அவரின் வார்த்தைகளில் இருந்து வெளிப்படும் ஆணித்தரமான சொல்லும், நம்பிக்கையூட்டும் செயல்பாடுகளும் மக்களை நல்வழிப்படுத்துவதற்கு ஏதுவாக இருந்தன.
அலங்கார வார்த்தைகளில் மயங்கி தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு, பாவச்சேற்றில் உழன்று கொண்டிராமல், நம்பிக்கை தரும் வார்த்தைகளைச் செவி மடுத்து நிறைவாழ்வு வாழ வேண்டும். நிறை வாழ்க்கையின் இறுதி நிலைதான் நித்திய வாழ்வு என்பது இயேசு பிரானின் போதனையின் வெளிப்பாடாக இருக்கிறது.
இந்த நற்செய்தியைப் படிப்போர், இயேசு பிரான் முடக்குவாதக்காரருக்குச் சொன்னதைப்போல், ‘துணிவாக இருங்கள். எதற்கும் அஞ்சாதீர்கள். நம்பிக்கையில் பலம் பெறுங்கள். துணிவும், நம்பிக்கையும் ஒரு கண்களாக ஒளிரட்டும். நற்சிந்தனை களால் விழித்து எழ வேண்டும்’. மறைநூல் அறிஞர்களில் சிலரைப்போல, முணுமுணுத்துக் கொண்டும், சந்தேகப்பட்டுக் கொண்டும் இருக்கக் கூடாது.
இறைமகன் இயேசு இம்மண்ணுலகில் அவதரித்து, பாவச்சேற்றில் உழன்று கொண்டிருக்கும் மக்களைக் காப்பதற்காகவும், தன்னை யார் என்று அடையாளப்படுத்துவதற்காகவும், வியப்படையத்தக்க செயல்களை செய்தார்.
ஆலமரமாய் வேரூன்றி நின்ற தேவ குமாரனுக்கு, விழுதுகளாய் நின்று போதிக்க சீடர்களைத் தயார்ப்படுத்தினார். அவர்களை விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் வேரூன்ற வைத்து விழுது களாய் ஆக்க, அவர்களுக்கு நற்செய்திகளை அருளினார். அவ்வளவு நெருக்கமாக இருந்தும், அவரின் அன்பையும், அற்புதத்தையும் நேரிலே கண்டறிந்தும், யூதாசு என்னும் சீடர், அவரைக் காட்டிக் கொடுத்தார் என்பதும் ஒரு வரலாறுதான். அதனால்தான் வேறோர் இடத்தில் இயேசு பெருமான், தன் சீடரான தோமையாரிடம், ‘கண்டும் விசுவாசிக்கிறவனை விட காணாமல் விசுவாசிப்பவன் பாக்கியவான்’ என்ற ஒரு கருத்தை எடுத்துரைக்கிறார்.
அன்பும், சமாதானமும் இவ்வுலகில் நிலைத்திருக்க வேண்டுமானால், நாமும், அன்பை வளர்ப்பவர்களாகவும், சமாதானத்தில் வாழ்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே, நற்செய்தி வாசகங்களில் இருந்து நம்மால் உணர முடிகிறது.

இயேசுவின் போதனைகளின் பால் ஈர்க்கப்பட்டவர்களும் உண்டு.அவர்களில் ஒருவரான பரிசேயரான நிக்கதேம் இயேசுவின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டிருந்தார்.
இயேசு வாழ்ந்த காலத்தில் பரிசேயர்கள் எனப்படும் குழுவினர் அவரை வெகுவாக எதிர்த்தனர். அவர்கள் சட்டங்களை மட்டுமே பிரதானமாகப் பார்த்தவர்கள். அவர்களுக்கு இயேசுவின் சட்டங்களைத் தாண்டிய அன்பின் போதனை பிடிப்பதில்லை. ஆனால் அவர்களில் இயேசுவின் போதனைகளின் பால் ஈர்க்கப்பட்டவர்களும் உண்டு.
அவர்களில் ஒருவர் நிக்கதேம். பரிசேயரான அவர் இயேசுவின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டிருந்தார். ஒரு நாள் இரவில் அவர் இயேசுவைத் தேடி வந்தார்.
‘‘ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாம் அறிவோம். கடவுளின் அருளின்றி இப்படிப்பட்ட செயல்களை யாரும் செய்ய முடியாது’’ என்றார்.
இயேசு அவருடைய புகழுரையில் மயங்கவில்லை. நேரடியாக நற்செய்தியை அவருக்கு வழங்கினார்.
‘‘இறையாட்சியைக் காண வேண்டுமானால், ஒருவன் மறுபடியும் பிறக்க வேண்டும்’’.
அந்த செய்தி நிக்கதேமுக்குப் புதுமையாய் இருந்தது. ‘‘மறுபடியும் பிறப்பதா? பிறந்தபின் எப்படி ஒருவன் மீண்டும் தாயின் வயிற்றுக்குள் போக முடியும்?’’ என்று நிக்கதேம் கேட்டார்.
‘‘மறுபடி பிறப்பது தாயின் வயிற்றிலிருந்து அல்ல. தண்ணீராலும், தூய ஆவியாலும் பிறக்க வேண்டும்’’ –இயேசு சொன்னார்.
நிக்கதேம் குழம்பினார். இயேசு தொடர்ந்தார், ‘‘மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர்’’ என்றார்.
நிக்கதேம் இயேசுவின் போதனையை உற்றுக் கவனிக்க, அவர் தனது வருகையின் மையக்கருத்தைச் சொன்னார்.
‘‘தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்’’ என்று மீட்பின் செய்தியைச் சொன்னார் இயேசு.
நிக்கதேம் குறித்த செய்திகளை யோவான் நற்செய்தியாளர் மட்டுமே தருகிறார். எனவே இந்த நிகழ்ச்சி யோவானின் வீட்டில் நடந்திருக்கலாம் என்பது விவிலிய அறிஞர்களின் கருத்து.
இயேசுவைச் சந்திக்கும் முன் நிக்கதேம் அவரை ஒரு இறைவாக்கினர் என்றே கருதியிருந்தார். ஆனால் இயேசு வுடனான உரையாடல் அவருக்கு இயேசுவை மீட்பராக அடையாளம் காட்டியது.
நாடெங்குமிருந்து தேர்வு செய்யப்பட்ட 70 பேரைக் கொண்ட ‘சனதரீம்’ எனும் அமைப்பின் உறுப்பினர் நிக்கதேம்.

இயேசுவை கைது செய்ய வேண்டும் என பரிசேயர் கூட்டம் கர்ஜித்தபோது ‘ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?’ என தைரியமாக அவர்களிடம் எதிர்த்துப் பேசினார் நிக்கதேம். இயேசுவின் மரணத்தின் பிறகு அடக்க நிகழ்விலும் வெளிப்படையாகவே அதில் பங்குகொண்டார்.
நிக்கதேம் துணிச்சல் மிக்கவர் என்பதையும், இயேசுவின் போதனைகளை உண்மையாகவே நேசித்தார் என்பதையும் இயேசு அறிந்திருந்தார். அதனால் தான் மற்ற பரிசேயர்களின் கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் இயேசு, நிக்கதேமின் சந்திப்பின் போது மிக முக்கியமான ‘‘மறு பிறப்பு’’ பற்றிய மறை உண்மைகளை விளக்கு கிறார்.
நிக்கதேம் இயேசுவுக்கு ஆதரவாய் இருந்ததால் அவர் பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளானார். மிகப்பெரிய செல்வந்தராய் இருந்த அவருடைய பொருட்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. வறுமை உந்தித் தள்ள, அவரது மகள் குதிரைக்கு வைக்கும் உணவுகளில் சிந்தியவற்றை பொறுக்கி உண்டு வாழ்ந்து வந்தார். நிக்கதேம், பேதுரு யோவான் ஆகியோரிடம் திருமுழுக்கு பெற்று சாட்சியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து, எளிமையாக மரித்தார் போன்ற செய்திகளெல்லாம் ‘‘நிக்கதேம் நற்செய்தி’’ எனும் விவிலியத்தில் இடம் பெறாத தள்ளுபடி நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிக்கதேமின் வாழ்க்கை பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. அவற்றுள் முக்கியமானவை...
1. அறியாமை இருளில் இருப்பவர்கள் ஆர்வத்தோடும், துணிச்சலோடும் இயேசுவிடம் வரும் போது வெளிச்சத்தின் விளக்கங்களைப் பெற்றுக் கொள்வார்கள்.
2. உலகமே எதிர்த்து நின்றாலும், தனிநபராக இயேசு விடம் வருபவர்களை இயேசு அன்புடன் வரவேற்கிறார். அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்க்கை ரகசியங்களை விளக்குகிறார்.
3. புறத்தூய்மை நீரால் அமையும், அகத் தூய்மை திரு முழுக்கினால் நிறைவேறும் என்பதே இயேசு சொல்லும் இரட்டை தூய்மையாதல்.
4. இயேசுவின் போதனைகளை உலக அனுபவங்களைக் கொண்டு புரிய முயல்வது அறிவீனம்.
5. தன்னை நம்பும் எவரும் அழியாமல் காப்பதற்காகவே இயேசு சிலுவையில் உயிர் விட்டார்.
6. நிக்கதேம் மிகுந்த செல்வந்தராய் இருந்தார். அவருடைய சுயநல சிந்தனைகளை இயேசு விடுவித்திருந்தார்.
7. சமய ஞானம் அதிகம் கொண்டவராய் இருந்த நிக்கதேம் தன்னைத் தாழ்த்திக் கொண்டு இயேசுவிடம் போதனை பெற வந்தார்.
8. நிக்கதேமின் கேள்விகள் விமர்சன நோக்கில் இல்லாமல், ஆன்மிக வளர்ச்சிக்காகவே கேட்கப்பட்டன.
9. உண்மையான போதனையைக் கேட்டதும், தனது பழைய மரபுகளை விட்டு விட நிக்கதேம் தயங்கவில்லை.
10. அச்சம், தயக்கம், சூழ்நிலை அழுத்தம் என பல இடர் களுக்கு மத்தியிலும் இதயத்தில் கொழுந்துவிட்டெரியும் ஆன்மிக தாகம் கொண்டிருந்தார்.

புதுவை ரெயில் நிலையம் அருகே பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
புதுவை ரெயில் நிலையம் அருகே பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 16-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய நாள் முதல் தினமும் திருப்பலிகள் நடைபெற்று வந்தன.
பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று மாலை நடந்தது. இதையொட்டி நேற்று பிற்பகலில் புதுவை - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து மாலையில் நடந்த தேர்பவனியை கோவை ரெக்டர் தன்சுராஜ் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. ஆண்டு பெருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

சேலம் சூரமங்கலம் திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி தேர்பவனி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சேலம் சூரமங்கலம் திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா கடந்த 18-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து தினமும் மாலை திருப்பலி நடந்தது. நேற்று காலை திருப்பலி மற்றும் உறுதி பூசுதல் விழா சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் நடந்தது.
மாலையில் வேண்டுதல் திருப்பலி பங்குதந்தை இருதய செல்வம் தலைமையில் நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடந்தது. மலர்கள், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் திருஇருதய ஆண்டவர் சொரூபம் பவனியாக கொண்டு செல்லப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு’ என்பது இயேசுவின் போதனைகளில் மிகவும் பிரபலமானது. அதே போல தான் ‘எதிரியையும் நேசி’ எனும் போதனையும்.
இயேசு கிறிஸ்து என்று நினைத்தவுடன் எப்படிப்பட்ட பிம்பம் நினைவுக்கு வருகிறது?. தொழுவத்தில் சிரிக்கும் பாலகனா?, கருணை வழியும் கண்களுடன் சாந்தமாய் நிற்கும் இளைஞனா?, சிலுவையில் தொங்கும் மனிதரா? இவற்றில் ஒன்று தான் பொதுவாகவே நமது சிந்தனையில் வரும்.
எப்போதேனும் கோபத்தில் முறைக்கும் இயேசுவின் முகம் நினைவுக்கு வருமா? சாட்டையைப் பின்னி மக்களை ஓட ஓட விரட்டியடிக்கும் வன்முறை காட்சி நினைவுக்கு வருமா? ரொம்ப சந்தேகம் தான். காரணம் நாம் உருவாக்கி வைத்திருக்கும் இயேசுவின் பிம்பம் அப்படி!
‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு’ என்பது இயேசுவின் போதனைகளில் மிகவும் பிரபலமானது. அதே போல தான் ‘எதிரியையும் நேசி’ எனும் போதனையும்.
அடிக்கடி தனது போதனைகளில் ‘கோபம் கொள்ளாதீர்கள்’ என இயேசு எச்சரிக்கவும் செய்தார். கோபம் கொள்ளாதீர்கள் என மக்களுக்கு போதனை வழங்கிய இயேசு கோபம் கொண்டார் என்பது முரணாகத் தோன்றும். ஆனால் அவருடைய கோபத்தின் நிகழ்வுகளை சிந்திக்கும் போது எந்தெந்த இடங்களில் நாமும் கோபப்பட வேண்டும் என்பது நமக்குப் புரியும்.
‘சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்’ என்கிறது பைபிள். சினம் பாவத்துக்கு நம்மை அழைத்துச் செல்லக் கூடாது. எது சரியான கோபம், எது தவறான கோபம் என்பதை இயேசுவின் வாழ்க்கை நமக்கு விளக்குகிறது.
சரியான கோபம்
1. ஏழைகளை வாட்டி வதைப்பவர்கள் மீது இயேசு கோபம் கொண்டார். அவர்களை நோக்கி தனது கோபப்பார்வையை வீசி எச்சரித்தார். ஏழைகளின் நலனுக்காக எழுகின்ற கோபம் நியாயமானது!
2. இரக்கமற்ற கடின மனங்களைக் கண்டபோது இயேசு கோபம் கொண்டார். பிறருடைய நலனுக்கும், வாழ்வுக்கும் இடைஞ்சலாக இருக்கும் இரக்கமற்ற மனநிலையின் மீது கோபம் கொள்வது நியாயமானது!
3. மனிதநேயத்தை விட, மத சட்டங்களே முக்கியம் என முரண்டுபிடிப்பவர்கள் மீதும், வெளிவேட மதவாதப் போக்கின் மீதும் இயேசு கோபம் கொண்டார். மனிதநேயத்தை மறுதலிக்கும் இடங்களில் கோபம் கொள்வது நியாயமானது!
4. கர்வம் கொண்டு நடந்தவர்கள் மீது இயேசு கோபம் கொண்டார். அத்தகைய மக்களைப் பின்பற்ற வேண்டாம் என இயேசு போதித்தார். தாழ்மைக்கு எதிராய் இருக்குமிடத்தில் எழுகின்ற கோபம் நியாயமானது.
5. இறைவனின் ஆலயத்துக்கோ, மகிமைக்கோ களங்கம் விளைவிக்கும் இடங்களில் எழுகின்ற கோபம் நியாயமானது! ஆலயத்தை விற்பனைக் கூடமாக்கிய மக்களை இயேசு அடித்து விரட்டினார்.

தவறான கோபம்
1. நம் மீது வைக்கப்படுகின்ற விமர்சனங்கள், கேலிகள், வன்முறைகளுக்காக கோபம் கொள்வது தவறானது. இயேசு தன்னை கிண்டல் செய்து, அடித்து, கொலை செய்தவர்கள் மீதும் கோபம் கொள்ளவில்லை.
2. தன்னைப் பிறர் புரிந்து கொள்ளவில்லையே என்பதனால் இயேசு கோபம் கொள்ளவில்லை. மனம் வருந்தினார். தன் தரப்பு நியாயம் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதற்காக கோபம் எழுவது தவறானது.
3. பிறர் என்னதான் தூண்டினாலும் கோபம் கொள்வது தவறு. இயேசுவின் பொறுமையை பரிசேயர்கள் எவ்வளவோ சோதித்தனர். எனினும் இயேசு கோபம் கொள்ளவேயில்லை.
4. இயேசுவின் கோபம் மக்களுடைய மனநிலையை மாற்றுவதற்காக மட்டுமே இருந்தது. மக்கள் மீது அவர் எப்போதும் கோபம் கொண்டிருக்கவில்லை. அவர்களை நேசித்தார். தனி மனித விரோத சிந்தனைகளோடு எழுகின்ற எந்த கோபமுமே தவறானது.
5. பாவச்செயல்களை செய்யத்தூண்டுகின்ற எந்த கோபமும் தவறானது. அது குழந்தைகளை எரிச்சலில் அடிப்பதானாலும் சரி, செல்வந்தனிடம் கொள்ளையடிப்பதானாலும் சரி!
இயேசு கோபம் கொண்டார்! ஆனால் தன் மீதான எந்த ஒரு தாக்குதலுக்கும் அவர் கோபம் கொள்ளவில்லை. ஏழைகள் ஏமாற்றப்பட்ட போதும், போலித்தனம் தலைதூக்கியபோதும், இறைவனின் தூய்மை கேள்விக்குள்ளான போதும் அவர் கோபமடைந்தார்.
நாம் கோபம் கொள்ளும் சூழல்களை சிந்தித்துப் பார்ப்போம். பெரும்பாலானவை நம்மையோ, நம் குடும்பத்தையோ, நமது நட்பு வட்டாரத்தையோ பாதிக்கும் விஷயங்களுக்காகவே இருக்கும்! ஏழைகளுக்காகவோ, மனிதநேயத்துக்காகவோ எழுந்ததாய் இருக்காது! அடுத்த முறை நம் கோபத்தை பரிசீலிப்போம்.
சேவியர், நல் மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.