என் மலர்
ஆன்மிகம்

உண்மையை பேசி வாழ்பவர்கள் கடவுளின் மக்கள்
உண்மையை பேசுவதும் உண்மையாக வாழ்வதிலும் கஷ்டங்களும் நஷ்டங்களும் உண்டு. ஏசு உண்மையை பேசி வாழ்ந்தால் தான் சிலுவைக்கு சொந்தக்காரர் ஆனார்.
உண்மையா அதுவென்ன? ரோம் ஆளுநன் பிலாத்து ஏசுவிடம் கேட்ட கேள்விதான் இது. பதவி மோகத்திலே மூழ்கியிருந்த அவனுக்கு உண்மை என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மைதான். இக்கேள்வி ஒரு வகையில் ஏசுவை கேலி செய்வதாக இருக்கிறது. உண்மை பேசாதவர்களுக்கு உண்மை என்னவென்று தெரிந்துகொள்வதில் நியாயமில்லை. உண்மைதான். உண்மையைச் சட்டைப்பன்னாதோர்க்கு உண்மை என்னவென்றே தெரியாது. உண்மைதான்.
கடவுளுக்கு இன்னொரு பெயர் அன்பு. அவருக்கு இன்னொரு பெயர் இரக்கம். இதேபோன்று அவருக்கு இன்னொரு பெயர் உண்மை. வழியும், உண்மையும், வாழ்வும் நானே (யோவான் 14:6) என்றார் ஏசு. இந்தக்கடவுள் ஏசுதான் பிலாத்துமுன் செதுக்கப்பட்ட மலைபோல நின்று கொண்டிருந்தார். பிலாத்து அந்த உண்மையை பார்க்கவோ, ஏற்கவோ மறுத்துவிட்டான்.

சில நேரங்களில் நாமும் பிலாத்துவைபோல் உண்மையை பார்க்க, உண்மையை ஏற்க மறுக்கிறோம். நம்முடைய பொருள், பதவி, புகழ், சிற்றின்ப மோகங்கள் கடவுளிடமிருந்து நம்முடைய பார்வையை திருப்பி விடுகின்றன. உண்மை எப்போதும் அழகுடன் இருக்காது. ஒன்று மட்டும் உண்மை. அது எப்போதும் பாவ அழுக்குடன் இருக்காது.
நம்முடைய வார்த்தைக்கும் வாழ்வுக்கும் உறுதியான உறவு இருக்க வேண்டும். நம் சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் வலுவான பாலம் இருக்கவேண்டும். பேசுவது ஒன்று செய்வது வேறொன்றாக இருந்தால் துர்நாற்றம் வீசும். பார்ப்பது ஒன்று பேசுவது வேறு ஒன்றாக இருந்தால் நாடே நாறிப்போகும். நம் வார்த்தைகளிலும் வாழ்வு முறைகளிலும் எதார்த்தம் தொடர வேண்டும்.
அதுதான் உண்மை. உண்மையை பேசுவதும் உண்மையாக வாழ்வதிலும் கஷ்டங்களும் நஷ்டங்களும் உண்டு. உண்மையை பேசி வாழ்பவர்கள் கடவுளின் மக்கள். ஏசு உண்மையை பேசி வாழ்ந்தால் தான் சிலுவைக்கு சொந்தக்காரர் ஆனார்.
- அருட்தந்தை சி.குழந்தை, காணியிருப்பு.

Next Story