என் மலர்
கிறித்தவம்
காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலய திருவிழாவில் காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு புனித அருளானந்தரின் அருளாசியைப் பெற்றுச் சென்றனர்.
காளையார்கோவிலில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் திருவிழா நேற்று முன் தினம் சிறப்பாக நடைபெற்றது. வருடந்தோறும் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 25-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் மாலை நவநாள் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றன.
விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை மாலை பங்குத்தந்தை சூசை ஆரோக்கியசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட குருக்கள் இணைந்து ஆடம்பர திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றினர். பின்பு புனித அருளானந்தரின் உருவம் தாங்கிய சப்பர பவனி தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்து இறுதியாக ஆலயத்தை அடைந்தது.
விழாவில் காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு புனித அருளானந்தரின் அருளாசியைப் பெற்றுச் சென்றனர். ஏற்பாடுகளை உதவி பங்குத்தந்தை பிரிட்டோ, விழா குழுவினர், கிராம நிர்வாகத்தினர், பங்கு பேரவையினர் ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் சிவகங்கை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் கபூர் உள்பட 3 போலீஸ் சூப்பிரண்டுகள், காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் உட்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். காளையார்கோவில் தாசில்தார் பாலகுரு தலைமையில் வருவாய்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

மதுரை புதூர் லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். 9-ந்தேதி அன்னையின் தேர்பவனி நடைபெறுகிறது.
மதுரை புதூர் தூய லூர்து அன்னை ஆலயத்தில் 99-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கொடியேற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து ‘மரியாள் காட்டிய புனிதம்‘ என்ற தலைப்பில் மறையுரை நிகழ்த்தினார். தினமும் காலையிலும் மாலையிலும் நவநாள் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. ஏராளமானவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
முக்கிய நிகழ்ச்சியாக 8-ந்தேதி நற்கருணை பவனியும், 9-ந்தேதி தக்கலை மறை மாவட்ட ஆயர் ராஜேந்திரன் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்று, அன்னையின் தேர்பவனி நடைபெறும். 10-ந்தேதி மாதாவிற்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை தாஸ்கென்னடி, உதவி பங்கு தந்தையர்கள் மார்சல் லிங்கன், பிரவின், சூசைஅடிமை, அமலஆஸ்வின் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.

புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
தென்னகத்து பதுவை, கோடி அற்புதர் என மக்களால் அழைக்கப்படும் புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இறுதியில் தொடங்கும். இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் கொடி மந்திரிக்கப்பட்டு பின்னர் பவனியாக கொண்டு வந்து கொடியேற்றப்பட்டது. நேற்று மாலையில் நடந்த கொடியேற்றத்தை தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடந்தது.
திருவிழா நாட்களில் தினமும் காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நற்கருனை ஆசீர் நடக்கிறது. திருவிழா சிறப்பு நிகழ்வாக வருகிற 11-ந் தேதி மாலையில் திருப்பலியும், புனித அந்தோணியார் உருவம் தாங்கிய சப்பர பவனியும் நடக்கிறது. 12-ந் தேதி காலை 4.30 மணி முதல் திருப்பலி, 11.30 மணிக்கு பெருவிழா திருப்பலியும் பாளையங்கோட்டை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருத்தல பங்குதந்தை மரிய பிரான்சிஸ், உதவி அருட்தந்தைகள் எட்வின் ஆரோக்கியநாதன், சதீஷ்செல்வதயாளன் உள்ளிட்டவர்கள் செய்து வருகிறார்கள்.
கொடியேற்ற நிகழ்ச்சியில், குருமட அதிபர் சேவியர் டெரன்ஸ், பாளையங்கோட்டை மறைமாவட்ட பொருளாளர் மோயீசன், தாளார்குளம் பங்குத்தந்தை சந்தியாகு, உடையார்பட்டி பங்குத்தந்தை ஜோமிக்ஸ், மேல மெஞ்ஞானபுரம் பங்குத்தந்தை குழந்தைராஜ், சிதம்பராபுரம் பங்குத்தந்தை பீட்டர், சங்கர்நகர் பங்குத்தந்தை ஜோசப்ராஜ், காமநாயக்கன்பட்டி அருள்ராஜ், பாளையஞ்செட்டிகுளம் பங்குத்தந்தை அந்தோணிராஜ், சங்கரன்கோவில் பங்குத்தந்தை வர்க்கீஸ், இளையரசனேந்தல் பங்குத்தந்தை வினோத்பால்ராஜ், வெங்கடாசலபுரம் பங்குத்தந்தை வில்சன் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில் மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

யாராவது தீமை செய்துவிட்டால், மிகப் பொறுமையாக நடந்துகொண்டு, பதிலுக்கு தீமை செய்யாமல், நன்மையைச் செய்யும் முடிவோடு காத்திருந்தால், மற்றொரு கட்டத்தில் மிகப்பல நன்மைகளுக்கு பக்தன் சொந்தக்காரன் ஆகலாம்.
உலக வாழ்க்கையில் நீந்தும் ஒவ்வொரு வருக்குமே தடைகள், இன்னல்கள், இழப்புகள் வருகின்றன. ஒவ்வொன்றில் இருந்தும் நன்மை, தீமைகளை அறிவதோடு, வாழ்க்கையை இறைப்பாதையை நோக்கி திருப்பிக் கொள்வதற்கான அழைப்பாகவும் அந்த சம்பவங்கள் அமைகின்றன.
எந்தவித நன்மை - தீமை என்றாலும் அது இறைவனின் கவனத்துக்கு வராமல் மனிதனை அணுகுவதில்லை என்று வேதம் கூறுகிறது.
மனதை கசக்கிப்பிழியும் ஒவ்வொரு துயர சம்பவங்களில் இருந்தும் புதிய பாடங்களை இறைவன் நமக்குக் கற்றுத் தருகிறார். நமது மன எண்ணங்களில் அதற்கான சிந்தனைகளை இறைவன் ஏற்படுத்துகிறார். ஆனால் அவற்றை பெரும்பாலானோர் பிற்காலங்களில் மறந்துவிடுவதுண்டு. அதை ஆராய்ந்து பின்பற்றுவதில்லை. ஏதோ வினைப்பயனாக அந்த சம்பவம் நடந்து முடிந்துவிட்டதாக நினைக்கின்றனரே தவிர, அது தந்த படிப்பினைகளின்படி வாழ்க்கையை சீர்படுத்திக்கொள்வதில்லை.
கிறிஸ்தவ பாதையை பின்பற்றிச் செல்வோருக்கு இயேசு அளித்துள்ள கட்டளைகள், பெரும்பாலும் இயல்பு நிலைக்கு ஒத்துப்போவதாக இருப்பதில்லை. ‘அடித்தவனை திருப்பி அடிக்காமல் பொறுத்துக்கொள்; எதையாவது பறித்துக்கொள்ள நினைத்தால் அதை அவனிடமே விட்டுக்கொடுத்துவிடு; துன்புறுத்துவோர் மீது புகார், வழக்கு கொடுக்காதே; துரோகியையும் மன்னித்துவிடு’ என்று இயல்பு வாழ்க்கைக்குப் பொருந்தாத கட்டளைகளை இயேசு பிறப்பித்துள்ளார்.
இதை வாழ்க்கை நடைமுறையில் பின்பற்று வதற்கு மலைப்பாகவே பலருக்கும் தோன்றும். ஆனால் இயேசு நடந்துகாட்டியுள்ள இந்தப் பாதையில் செல்ல ஒருவன் முழுமனதோடு முடிவு செய்துவிட்டான் என்றால், அந்த கட்டளைகளை வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய பலத்தையும் அவரே அளிக்கிறார்.
எனவேதான் மரணத்துக்கு உட்படுத்துபவனையும் உண்மைக் கிறிஸ்தவன் தனது இறுதி நிமிடங்களில்கூட மன்னிக்கிறான். பல்வேறு கொள்கைக்காக சாவுக்கும் அஞ்சாமல், நெஞ்சை நிமிர்த்தி நின்றவர்கள் உலகத்தில் பலர் இருக்கலாம். ஆனால் கொலை செய்பவனையும் மன்னிப்பதற்காக நெஞ்சை நிமிர்த்துபவன் உண்மைக் கிறிஸ்தவன் மட்டுமே.
இயேசுவின் கட்டளைகளை இறுதிவரை பின்பற்றுகிறானா என்பதற்கான சோதனைகளை பக்தன் கடந்து செல்ல வேண்டியதுள்ளது. அந்த வகையில் அலறவைக்கக் கூடிய சில சம்பவங்கள், அவனது வாழ்க்கையில் அனுமதிக்கப்படுகின்றன. அதன்படி, உண்மைக் கிறிஸ்தவனுக்கு திடீரென்ற இழப்புகள், சோதனைகள், உபத்திரவங்கள் வந்து சேருவதை தவிர்க்க இயலாது.
அதுபோன்ற உபத்திரவங்கள், உறவினர்களாலோ, நண்பர்களாலோ, உடன் பணியாளர்களாலோ, அருகில் வசிப்பவர்களாலோ நேரிடலாம். அந்த நேரங்களில் பக்தியை காப்பாற்றிக்கொள்வதற்காக எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதை இறைவன் தெளிவுபடுத்தியுள்ளார். அதை ரோமர் 12:19,20,21-ம் வசனங்களில் காணலாம்.
அந்த வசனங்களில், “யாரையும் பழிவாங்கக்கூடாது. உன்னை எதிரியாக கருதுபவன் பசி, தாகத்தில் இருந்தால் அவனுக்கு தேவையான போஜனம், பானங்களைக் கொடு. அப்படிப்பட்ட நன்மைகளைச் செய்தால், தீமையினால் வெல்லப்படாமல், தீமையை வென்றுவிடலாம்” என்ற கருத்துகளை வகுத்தளித்துள்ளார்.
இந்த வசனங்கள் பல கேள்விகளை உருவாக்கும் (ரோமர் 10:17). யாராவது நமக்கு ஏதாவது தீமையைச் செய்துவிட்டால், அவனை பதிலுக்கு எதிர்த்தால்தானே மீண்டும் அவனால் ஏற்படும் இழப்புகள், தீமைக்குள் சிக்காமல் இருக்கலாம் என்ற எண்ணங்கள் தோன்றும்.
உலக இயல்பு வாழ்க்கையில் நடப்போருக்கு அப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுவதும், தீமைக்குத் தீமை செய்வது இயல்பானதுதான்.
அதன்படி, தீமை செய்தவர்கள் மீது அவர்கள் புகார் அளிக்கலாம்; வழக்கு தாக்கல் செய்யலாம்; மற்றவர்களை அழைத்து நியாயம் பேசலாம்.
இயல்பு வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அவர்களின் மனச்சாட்சிப்படி அந்த நடவடிக்கைகள் தவறல்ல. உலகமும் அதற்கேற்ற நடைமுறைகளை வகுத்தளித்துள்ளது. (குற்ற ரீதியான நடவடிக்கைகள் தான் தவறு)
ஆனால் இறைப்பாதையில் இருப்பவர்களுக்கான நடைமுறை அதுவல்ல. தீமை செய்தவருக்கு எதிராக, உலக ரீதியிலான (புகார், வழக்கு போன்ற) நடவடிக்கைகளை மேற்கொண்டாலே அது தீமையாக ஆகிவிடும். பிறர் செய்த தீமையால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டத்தான் புகார், வழக்கு தாக்கல் செய்கிறேன் என்று அதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கிவிட்டால், ஒரு கட்டத்தில் பொய், பகை, பழிவாங்குதல் போன்ற நிலைக்கு பக்தனை அவை இழுத்துச் சென்றுவிடும்.
அப்படி சென்றுவிட்டால், “பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில் செய்வேன்” என்ற இறைவார்த்தையில் இருந்து விலக வேண்டியதாகிவிடும். அது பக்தனுக்கு எதிரான பாவமாக அமைவதோடு, அவன் மேலும் பல பிரச்சினை களுக்குள் மீளமுடியாமல் சிக்கும் நிலைக்கு ஆளாக நேரிடும். அவற்றில் இறைவனின் உதவி கிடைக்காது. அந்த நிலையைத்தான், ‘பக்தனை தீமை வென்றுவிடும்’ என்று வேதம் குறிப்பிடுகிறது.
தீமை செய்தவனுக்கு நன்மையையும் தீமையையும் செய்யும் வாய்ப்புகளை இறைவன் உருவாக்கித் தருகிறார். இவற்றில் நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பது, அவர் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தின் அளவைக்காட்டும். இதுபோன்ற சம்பவங்களின் மூலமாகத்தான், “வசனத்தினால் கேள்வி எழும், கேள்வியினால் விசுவாசம் வரும்’’ என்ற வசனத்தின் ஆழ, அகலத்தை உணரமுடியும்.
தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்வது என்பது, இயல்பு வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இயலாத காரியம். ஆனால் இறைபக்தர்களுக்கோ, ‘தீமை செய்தவருக்கும் நன்மை செய் என்ற இறைக்கட்டளையை பின்பற்ற முழுமனதோடு விரும்புகிறேன்’ என்று முன்வந்தால், நன்மைகளை செய்ய ஆவியில் பலம் அளிக்கப்படுகிறது. அந்த பலத்துடன் அவன் நன்மையை மட்டுமே செய்கிறான். அந்த வகையில், தீமை மேற்கொண்டுவிடாதபடி அதை நன்மை செய்வதன் மூலம் பக்தன் வெல்கிறான்.
இப்படி தீமை செய்தோருக்கும் நன்மை செய்வது மற்றொரு வகையான பிரதிபலனை தருகிறது. அதாவது, பக்தனுக்கு செய்யப்பட்ட இழப்பு நீக்கப்பட்டு ஒரு காலகட்டத்தில் அதே நன்மைகளோ அல்லது கூடுதல் நன்மைகளோ வந்து கிடைத்துவிடுகிறது. எனவே யாராவது தீமை செய்துவிட்டால், மிகப் பொறுமையாக நடந்துகொண்டு, பதிலுக்கு தீமை செய்யாமல், நன்மையைச் செய்யும் முடிவோடு காத்திருந்தால், மற்றொரு கட்டத்தில் மிகப்பல நன்மைகளுக்கு பக்தன் சொந்தக்காரன் ஆகலாம்.
-ஜெனட், சென்னை.

விவிலியத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது நூல் ‘எண்ணிக்கை’. எபிரேய மொழியில் இந்த நூலின் பெயர் ‘பெமிபார்’ என்பதாகும். இதற்கு ‘பாலை நிலத்தில்’ என்பது பொருள்.

இஸ்ரயேல் மக்களின் பாலை நில வாழ்க்கையைச் சொல்வதால் இந்த பெயர் இடப்பட்டது. ஆனால் கிரேக்க மொழிபெயர்ப்பு செய்தபோது அதன் தலைப்பை ‘அரித்மோய்’ என்று மொழிபெயர்த்தனர். இதற்கு ‘எண்ணிக்கை’ என்பது பொருள்.
இந்த நூலில் இரண்டு முறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது. தொடக்கத்தில் ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. பின்னர் ஒரு தலைமுறை கடந்தபின் மீண்டும் ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது.
இந்த நூலின் ஆசிரியரும் மோசே தான். விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களும் ‘தோரா’ என அழைக்கப்படுகின்றன. இந்த ஐந்து நூல்களையும் மோசே தான் எழுதியுள்ளார்.
எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட மக்கள், கடவுள் வாக்களித்த கானான் நாட்டிற்கு நுழையச் சென்றார்கள். ஒவ்வொரு குலத்தில் இருந்தும் ஒருவராக பன்னிரண்டு பேர் முதலில் ஒற்றர்களாக நாட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சென்று நாட்டை ‘வேவு’ பார்த்துத் திரும்பினர். நாடு வளத்தின் உச்சமாக இருந்தது. ஆனால் அங்குள்ள மக்கள் வலிமையாய் இருந்தனர்.
காலேபு, யோசுவா என்பவர்களைத் தவிர மற்ற எல்லாருமே உள்ளே செல்வது ஆபத்து, நமக்கு அழிவு நிச்சயம் என அஞ்சினர். கடவுள் தங்களோடு இருப்பதை மறந்தனர். இஸ்ரயேல் மக்களும் அந்த நாட்டுக்குள் செல்ல பயந்து கடவுளுக்கு எதிராகவும், மோசேக்கு எதிராகவும் முணு முணுத்தனர். கடவுள் அவர்கள் மீது கடும் கோபம் கொண்டார்.
‘இந்தத் தலைமுறையில் இருக்கும் எவனுமே இந்த நாட்டுக்குள் நுழைய மாட்டான்’ என கடவுள் சாபமிட்டார். மக்கள் அதிர்ந்து போய் நாட்டுக்குள் நுழைய முயன்றார்கள்.
மோசே அவர்களைத் தடுத்தார். ‘இதுவும் கடவுளின் கட்டளையை மீறிய செயலாகி விடும்’ எனச்சொல்லி, மக்களைத் தடுத்தார்.
இஸ்ரயேல் மக்கள் தங்கள் தவறினால் பாலை நிலத்தில் அலைந்து திரியத் தொடங்கினார்கள். இந்த நூல் மக்கள் சீனாய் மலையிலிருந்து மோவாபின் சமவெளிகளில் வந்து சேர்வது வரையான நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.
இந்த நூலிலும் குருக்கள் ஆற்றவேண்டிய பணிகள், லேவியரின் பணிகள், லேவியருக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஊதியம், தூய்மையாக்கும் சட்டங்கள் என பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.
‘கடவுளின் கோபம் இஸ்ரயேல் மக்கள் மேல் இருந்தாலும் அவர்களை கடவுள் பாலை நிலத்தில் பாதுகாத்தார். அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றினார்’ என இறைவனின் கரிசனையை இந்த நூல் படம்பிடித்துக் காட்டுகிறது.
இந்த நூலில் தான் பிரபலமான பிலயாம் தீர்க்கதரிசியின் கதை இடம்பெறுகிறது. இஸ்ரயேல் மக்களைச் சபிக்க வேண்டுமென பாலாக் மன்னன் பிலயாமை அழைக்கிறார். கழுதையில் பிலயாம் வருகையில் கடவுளின் தூதர் வழிமறிக்கிறார். பிலயாமின் கழுதை பேசுகிறது. மக்களைச் சபிப்பதற்காக வந்தவர் இறைவனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு இஸ்ரயேல் மக்களை மூன்று முறை வாழ்த்துகிறார்.
இந்த நூலிலும் இறைமகன் இயேசுவை மையப்படுத்தும் நிகழ்வுகளின் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. பாலை நிலத்தில் பாம்பு கடிபட்டு மக்கள் இறந்து போகின்றனர்.
‘பாம்பு கடிபட்டவர்கள் பிழைக்க வேண்டுமெனில் வெண்கலத்தில் ஒரு பாம்பைச் செய்து அதை மோசே உயர்த்திப் பிடிக்கவேண்டும்’ என்கிறார் கடவுள்.
உயர்த்திப் பிடிக்கப்பட்ட வெண்கலப் பாம்பைப் பார்த்தவர்கள் பிழைத்துக் கொள்கின்றனர்.
புதிய ஏற்பாட்டில் ‘பாம்பு’ என்பது ‘பாவம்’ அல்லது ‘சாத்தான்’ என்பதன் குறியீடு.
‘பாவத்தில் வீழ்ந்தவர்கள் கண்களை ஏறெடுத்து சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கிப்பார்த்தால் மீட்பைப் பெற்றுக்கொள்வார்கள்’ என்பது இது சொல்கின்ற ஆன்மிகப் பாடம்.
‘பாலை நிலத்தில் மோசே பாம்பை உயர்த்தியது போல மனு மகனும் உயர்த்தப்பட வேண்டும்’ எனும் இயேசுவின் வார்த்தை இதை விளக்குகிறது.
லேவியர் நூலில் காணப்படும் பல சிந்தனைகள் இந்த நூலிலும் காணப்படுகின்றன. இரண்டு நூல்களையும் ஒரே நபர் எழுதினார் என்பதும், அவர் கடவுளிடமிருந்து கட்டளைகளை நேரடியாகப் பெற்றார் என்பதும், இது ஒரே ஒரு நீள் பயணத்தின் பதிவுகள் என்பதும் அதன் காரணமாக இருக்கலாம்.
விடுதலைப் பயண நூலில் கம்பீரமாகக் காட்டப்பட்ட மோசே இந்த நூலில் ஒரு பக்குவப்படுத்தப்பட்ட மக்கள் தலைவராக மாறுகிறார். இரக்கம், மன உருக்கம், தாழ்மை, பணிவு, எளிமை கொண்ட ஒரு அற்புதமான தலைவராக அவர் சித்தரிக்கப்படுகிறார்.
‘பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார்’ என்கிறது (எண் 12:3) இந்த நூல்.
கடவுளின் கோபம் வெளிப்படும் என்பதை இந்த நூல் ஊர்ஜிதப்படுத்துகிறது. ஒரு தந்தையாக வழிநடத்தும் அவர், தவறுகளைக் கண்டால் தண்டிப்பவராக மாறுகிறார். அவருடைய தண்டனைக்கு முன்னால் சிறியோர் பெரியோர் என்று இல்லை. தன் பிரியத்துக்குரியவர் மற்றவர் என்றில்லை. தலைவர் தொண்டர் என்றில்லை. கீழ்ப்படியாமை உடைய மக்களையும், பாவம் செய்யும் மக்களையும் கடவுள் பாகுபாடின்றி தண்டிக்கிறார். இந்த சிந்தனை இந்த நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
சேவியர்.

வள்ளியூர் அருகே முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா இன்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய திருத்தலங்களில் முத்துலாபுரம் புனித செபஸ்தியார் திருத்தலமும் ஒன்றாகும். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் சைவத் திருத்தலம் என அழைக்கப்படும் இத்திருத்தலத் திருவிழா இன்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. புனித செபஸ்தியார் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவான் அம்புரோஸ் ஜெபம் செய்து கொடியேற்றுகிறார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு மாலை ஆராதனை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. பிப்ரவரி 4-ந்தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு 9 மணிக்கு புனித செபஸ்தியாரின் தேர்ப்பவனி நடைபெறுகிறது.
5-ந் தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் அமலிவனம் அமலதாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இத்திருப்பலியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. இரவு 6.30 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறுகிறது. வள்ளியூர் அன்புச்செல்வன் மறையுரை வழங்குகிறார்.
6-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு கோட்டாறு மறைமாவட்ட மேதகு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கலர் வாணவேடிக்கையும், கேரள புகழ் ஜெண்டா மேளமும், இரவு 12 மணிக்கு புனித செபஸ்தியாரின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.
இப்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள். 7- தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு அழகப்பபுரம் நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடைபெறும் ஆடம்பர கூட்டுத்திருப்பலியில் சொக்கன் குடியிருப்பு மைக்கேல் ஜெகதீஷ் மறையுரையாற்றுகிறார்.
பின்னர் மாலை ஆராதனையும் அதனைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா டோனால்சன், கணக்கர் அருள் ஜெபஸ்தியான், பங்கு தந்தை மணி அந்தோணி மற்றும் முத்துலாபுரம் இறை மக்கள் செய்துவருகின்றனர்.

கயத்தாறு அருகே புனித செபஸ்தியார் ஆலய திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளாக கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வெள்ளாளன் கோட்டை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடந்த இந்த விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலி, நற்கருணை, சிறப்பு ஆராதனை நடந்து வந்தது.
9-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் ஆலய பங்குதந்தை வில்சன் தலைமை தாங்கி, ஆலய தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. பின்னர் இரவு 10.30 மணிக்கு தேர் ஆலயம் வந்தடைந்தது.
10-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு மீண்டும் தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. அப்போது பக்தர்கள் செபஸ்தியார் சொரூபத்துக்கு மாலை அணிவித்தனர். சிலர் நேர்ச்சையாக உப்பு, மிளகு கொடுத்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. பின்னர் கொடி இறக்கம் நடந் தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

மும்பை காட்கோபர் கிழக்கு காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 27-ம் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடந்தது.
மும்பை காட்கோபர் கிழக்கு காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 27-ம் ஆண்டு திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் 20-ந்தேதி புனித செபஸ்தியார் திருவிழா நடந்தது.
நேற்று முன்தினம் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது. உதவி பங்குதந்தை வெர்னன் அகுயார், ஏசுராஜ் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றினார்கள். தொடர்ந்து சமபந்தி விருந்து நடந்தது. இரவு புனித அந்தோணியாரின் மின் அலங்கார தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பெங்களூரு சுதாமநகரில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய 21-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது
பெங்களூரு எச்.ஏ.எல். சுதாமநகரில் புனித ஆரோக்கிய அன்னை ஜெப ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 21-ம் ஆண்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அதன் பிறகு திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருப்பலியும், புனித தோமையர் ஆலயத்தில் இருந்து அன்னையின் தேர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமும் நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு திருப்பலியும், காலை 11 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை ராஜரத்தினம் மற்றும் ஆலய கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.

கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
விருத்தாசலம் அருகே கோணான்குப்பத்தில் புகழ் பெற்ற புனித பெரியநாயகி அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆலய பெருவிழா ஜனவரி மாதம் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆலய பெருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் ஆலயத்தில் திருப்பலியும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பங்கு தந்தைகள் தலைமையில் சிலுவைப்பாதை மற்றும் திருப்பலியும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. இரவு 9 மணிக்கு பாரம்பரிய முறைப்படி பாளையக்காரரான பாலதண்டாயுதம் ஜமீன், அலங்கார உடையில் முகாசபரூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு வந்தார்.
அங்கு கோவில் முன்பு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, 3 தேர்கள் தயார் நிலையில் இருந்தன. முதல் தேரில் புனித அந்தோணியார் சொரூபமும், 2-வது தேரில் புனித சூசையப்பர் சொரூபமும், 3-வது தேரில் பெரியநாயகி அன்னை சொரூபமும் வைக்கப்பட்டிருந்தன. அந்த தேர்களை இழுத்து பாலதண்டாயுதம் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தேர் பவனி நடந்தது.
பின்னர் 3 ஆடம்பர தேர்களும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆடி, அசைந்தபடி ஆலயத்தை வலம் வந்தது. அந்த சமயத்தில் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ பாடல்களை பாடினர். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். தேர்பவனியையொட்டி ஆலயத்துக்கு கிறிஸ்தவர்கள் வந்து செல்லும் வகையில் உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம் ஆகிய இடங்களில் இருந்து கோணான்குப்பத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியநாயகி அன்னை ஆலய பங்குதந்தை அருள்தாஸ் மற்றும் கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர்.

அழகப்பபுரத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்குள்ள புனித காணிக்கை அன்னை திருவிழா நேற்று தொடங்கி அடுத்த மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.
அழகப்பபுரத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு புனித காணிக்கை அன்னை திருவிழா நேற்று தொடங்கியது. திருவிழா அடுத்த மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கும், காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.
அடுத்த மாதம் 1-ந் தேதி இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட செயலாளர் நார்பர்ட் தாமஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை, இரவு 10 மணிக்கு தேர்ப்பவனி, 2-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜாண் பிரிட்டோ தலைமையில் கூட்டுத்திருப்பலி, பகல் 2.30 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு தேரில் நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை மைக்கிள் ராயப்பன் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

செபஸ்தியாரே நான் மகா பலவீனனும், புண்ணியத்தில் திடனற்றவனுமாயிருப்பதால் தேவரீர் என்மேல் இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடாகிலும் நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும்.
அஞ்ஞானிகளால் உபாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் ஆறுதல் செய்யவும் வேதசாட்சி முடிபெறவும் போர்ச்சேவகரான புனித செபஸ்தியாரே, என்பேரில் இரக்கமாயிரும். ஆகாதவனுடைய மரணத்தை விரும்பாமல், அவன் குணப்பட விரும்பும் சர்வேசுரன்; பாவிகள் மனந்திரும்பவும், நீதிமான்கள் பரிசுத்தப்படவும், வைசூரி, பேதி பெருவாரியான காய்ச்சல் முதலிய வியாதிகளை அனுப்பினாலும், சிலவிசை முன் பாடுபட்டுப் பேறடைந்த புனிதர்களுடைய வேண்டுதலாலே உபத்திரப் படுகிறவர்களுடைய துன்பநாளில் அவர்களுக்கு ஆறுதலை கட்டளையிடுகிறாரென்று நான் அறிந்திருக்கிறபடியால் இந்த வியாதியில் உமது சகாயத்தைக் கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபுரியில் உம்முடைய பேரால் பீடம் எழுப்பியபின் வி:க்காய்ச்சல் நீங்கினதென்று நான் அறிந்திருக்கிறேன்.
தியோக்கிளேசியான் அரசனுக்குப் பயப்படாமல் பெரிய வேதசாட்சியான புனித செபஸ்தியாரே! இந்த உபத்திரவமான வியாதியில் என்னைக் கைவிடாதேயும். ஏன் பாவங்களுக்காக வந்த நோயை நான் பொறுமையோடே பொறுக்க வேண்டியதுதான், சுவாமியின் கைப்பாரம் என்மேல் சுமத்தப்பட்டது நானோ வெகுபலவீனன், காற்றால் அடிக்கப்பட்ட சருகுபோலிருக்கிறேன். கடலில் கிடக்கும் துரும்புபோல் தத்தளிக்கிறேன். தேவனுடைய கோபத்தைத் தாங்க நான் வல்லவனல்லவே, நான் குடிக்க வேணுமென்று சர்வேசுரன் மனதாயிருக்கிற இந்த துன்பப்பாத்திரத்தை நான் வீரம் பொருந்திய பொறுமையோடு குடிக்க எனக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்ளும். என் கேட்டுக்காக அல்ல, என் நலத்திற்காகவே சர்வேசுரன் என்னைத் தண்டிக்கிறார். காயப்படுத்துகிறவரும், குணமாக்குகிறவரும் அவரேதான். நல்ல நாளில் சர்வேசுரனை நேசிக்கிறது போல துன்ப நாளிலும் அவரைச் சிநேகிக்கக் கடவேன். நான் இந்த வியாதியில் அலையுண்டு கலங்காதபடிக்கு, இந்த கசப்பான பாத்திரத்தை சந்தோசமாய் , அவர் திருக்கரத்திலிருந்து வாங்கிக் குடிக்க எனக்கு வேண்டிய தைரியத்தை பெற்றுத் தந்தருளும்.
ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மனுமக்களை மறவாத சர்வேசுரன் வைசூரி, பேதி, காய்ச்சல் முதலிய வியாதிகளையும், தந்திரம், போர், பஞ்சம் முதலிய பெரிய துன்பங்களையும் பட்சத்தினால் வரவிடுகிறார் என்று நாங்கள் அறிந்திருந்தும் ஏன் அவர் பேரில் முறைப்படுவேன்? ஆகையால் புனித செபஸ்தியாரே! இந்த வியாதி சீக்கிரம் குணமாகச் சர்வேசுரன் சித்தமாயிராவிட்டால், நான் அதை நல்ல மனதோடு பொறுக்க எனக்குத் தைரியத்தையாகிலும் தர மன்றாடும். என் பாவங்களின் பரிகாரத்துக்காக இன்னும் அதிக நோய்களும், துன்பங்களும் வரவேண்டுமென்று நான் ஆசிக்க வேண்டியதுதான். ஆர்ச்சிய:;டவர்களே துன்பதுரித நோய்களை ஆசித்திருக்கப் பாவியாகிய நான் நித்தய பாக்கியமடைய நோய் வருத்தங்களை ஆசிக்காமலிருக்கக் கூடுமோ? ஆனால் புனித செபஸ்தியாரே நான் மகா பலவீனனும், புண்ணியத்தில் திடனற்றவனுமாயிருப்பதால் தேவரீர் என்மேல் இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடாகிலும் நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும். – ஆமென்.