என் மலர்
கிறித்தவம்
பிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.
வரலாறு
1628ல் இளவரசி பொலிக்சேனா (1566-1642) பிராகா நகர் கார்மேல் துறவிகளுக்கு 19 அங்குல உயரமுடைய குழந்தை இயேசுவின் மெழுகு சொரூபத்தை வழங்கியதிலிருந்து இந்த வரலாறு தொடங்குகிறது. இந்தச் சொரூபம், அவிலா புனித தெரேசாவால் எசுப்பானிய அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் குடும்பத்தின் விலையேறப் பெற்ற சொத்தாக மதிக்கப்பட்ட இந்தச் சொரூபம், இளவரசி பொலிக்சேனாவின் திருமணப் பரிசாக அவரது தாய் மரிய மான்ரிக்கால் 1603ல் வழங்கப்பட்டது.
குழந்தை இயேசு பக்தியால் பல்வேறு அற்புதங்களைப் பெற்றுக்கொண்ட இளவரசி பொலிக்சேனா, தன்னிடம் இருந்த குழந்தை இயேசு சொரூபத்துக்கு அரச உடைகளும், மணிமகுடமும் அணிவித்து அழகு பார்த்தார். அரசர் 2ம் பெர்டினான்ட், தனது தலைநகரை பிராகாவிலிருந்து வியன்னாவுக்கு மாற்றியபோது, பொலிக்சேனா இந்தக் குழந்தை இயேசு சொரூபத்தை கார்மேல் சபைத் துறவிகளிடம் ஒப்படைத்தார். அவர்கள் குழந்தை இயேசு பக்தியை மக்களிடையே பரப்பினர். போர் உள்ளிட்ட சில காரணங்களால், துறவிகள் வாழ்ந்த கார்மேல் மடம் சிறிது காலம் மூடப்பட்டது. அக்காலத்தில் இந்தச் சொரூபம் மறைவான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டது.
1637ஆம் ஆண்டு, கரங்கள் சேதமடைந்த குழந்தை இயேசுவின் இந்தச் சொரூபத்தை அருட்தந்தை சிரிலஸ் மீண்டும் கண்டெடுத்தார். அவர் குழந்தை இயேசு முன்பாகச் செபித்துக் கொண்டிருந்த வேளையில், "எனக்குக் கரங்களைக் கொடு; நீ என்னை மகிமைப்படுத்தினால், நான் உனக்கு அமைதியும் உயர்வும் தருவேன்" என்ற குரலைக் கேட்டார். அதன் பிறகு குழந்தை இயேசுவின் கரங்கள் சரிசெய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அந்நகரில் பரவிய கொள்ளை நோய் நீங்கியது. குழந்தை இயேசுவை நாடிச் சென்ற அனைவரும் அற்புதங்களைப் பெற்று மகிழ்ந்தனர். அதனால், குழந்தை இயேசுவின் பக்தி உலமெங்கும் விரிந்து பரவியது.
பக்திமுயற்சி
இயேசு கிறிஸ்துவின் குழந்தைப் பருவத்தைத் தியானிக்கும் பக்திமுயற்சியாக இது அமைந்துள்ளது.
இன்றளவும், பிராகா நகர் குழந்தை இயேசுவை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பிராகா குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழாவின் நிறைவில், குழந்தை இயேசுவின் திருப்பவனியும், குழந்தை இயேசுவுக்கு மகுடம் அணிவித்தலும் இக்காலம் வரை மரபாகத் தொடர்கின்றன.
முற்காலத்தில், அயர்லாந்து நாட்டுத் திருமண நிகழ்ச்சிகளின்போது காலநிலை சீராக இருக்க வேண்டும் என்பதற்காக, மணமக்கள் தங்கள் திருமணத்திற்கு முந்திய நாள் இரவில் தங்கள் இல்லத்தின் முன்பாகப் பிராகா நகர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பிரேகு நகர் குழந்தை இயேசுவின் இரண்டு மரச் சொரூபங்கள் செய்யப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூர் குழந்தை இயேசு ஆலயத்திலும், பெரம்பூர் புனித தெரேசா ஆலயத்திலும் இந்தச் சொரூபங்கள் உள்ளன.

இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்வதும், அதன்பின் அவர் சொன்ன புனித வாழ்க்கையை வாழ்வதும் எனும் இரட்டை ஆன்மிக நிலையை இது விளக்குகிறது.
‘லேவி’ எனும் குலத்தினர் இறைவனின் ஆலயப் பணிகளைச் செய்பவர்கள். இந்த நூல் பெரும்பாலும் இறைவனின் சட்டதிட்டங்களையும், இறைவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ என்னென்ன செய்யவேண்டும் என்பதையும் விளக்குகிறது.
இது லேவியர்களுக்கு மட்டுமானதல்ல, ஆனாலும் லேவியர் பணி சார்ந்த விஷயங்களைப் பேசுவதால் இது ‘லேவியர் ஆகமம்’ என அழைக்கப்படுகிறது.
எபிரேயத்தில் இந்த நூல் ‘வாயிக்ரா’ என அழைக்கப்பட்டது. அதற்கு ‘அவர் அழைத்தார்’ என்பது பொருள்.
இந்த நூல்களை கிரேக்கத்தில் மொழிபெயர்த்த எழுபதின்மர் குழு இதற்கு ‘லேவியர் தொடர்பானது’ எனும் பொருளுடைய பெயரை வைத்தனர்.
அன்றைய இஸ்ரயேல் மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது போன்ற சட்டங்களால் இந்த நூல் நிரம்பியிருக்கிறது. இந்த நூல் யூதர்களால் தவறாமல் படிக்கப்படும் ஒரு நூல்.
யூதக்குழந்தைகள் சிறுவயதிலேயே இந்த நூலைப் படித்தாக வேண்டும் என்பது எழுதப் படாத சட்டம்.
இந்த நூலை எழுதியவரும் மோசே தான். இறைவனை விட்டு மக்கள் விலகிச் செல்லக்கூடாது என்பதற்காக இதிலுள்ள சட்டங்கள் எழுதப்பட்டன. கி.மு. 1446 என்பது இதன் தோராய காலம் என கணிக்கப்படுகிறது.
இந்த நூலில் ஐம்பது முறைக்கு மேல் வருகின்ற ‘ஆண்டவர் மோசேயிடம் கூறியது’ எனும் வாசகம்- ‘இவை கடவுளின் கட்டளைகள்’ என்பதை உறுதிப்படுத்துகின்றன. அதை மக்கள் தங்கள் மனங்களில் ஆழமாய் எழுதிக்கொள்ள வேண்டும் எனும் மோசேயின் எச்சரிக்கை உணர்வையும் இவை பிரதிபலிக்கின்றன.
கடவுளுக்கு என்னென்ன பலிகள் செலுத்தவேண்டும், எப்போது செலுத்தவேண்டும், யார் செலுத்த வேண்டும், பலிப்பொருட்கள் எப்படி இருக்க வேண்டும் என இந்த நூலில் பலிகள் குறித்து மிக விரிவான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கு முந்தைய நூலான விடு தலைப்பயணத்தில், பலி பீடம் எப்படி இருக்க வேண்டும் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலில், அந்த பலி பீடத்தில் செலுத்தப்பட வேண்டிய பலிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது.
இந்த நூல் உடல் சார்ந்த தூய்மையை அதிகம் பேசுகிறது. உதாரணமாக, இறந்த உடலை ஒருவர் தொட்டால் அவர் தீட்டுப்பட்டவர். அவர் எப்படி தன்னை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளன.
அத்துடன் ஓய்வு நாள் பற்றிய சட்டங்கள், ஓய்வு ஆண்டு குறித்த சட்டங்கள் போன்றவையும் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.
எப்படிச் சாப்பிடவேண்டும், பாலியல் தூய்மையைக் காத்துக்கொள்வது எப்படி என்பது தொடங்கி, எப்படி கழிவுகளை வெளியேற்றுவது என்பது வரையிலான நுணுக்கமான சட்டங்கள் இந்த நூலை செறிவாக்குகின்றன.
ஏழு எனும் எண்ணிக்கை முழுமையைக் குறிக்கிறது. ஏழாவது நாள் ஓய்வு நாள், ஏழாவது ஆண்டு ஓய்வு ஆண்டு, பாஸ்கா விழா ஏழு நாள் கொண்டாடப்படும் என தொடங்கி ஏராளமான ‘ஏழு’ களை இந்த நூலில் காணலாம்.
‘ரத்தம்’ எனும் குறியீடு இந்த நூலில் மிக அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. எரி பலிகள், தானிய பலிகள், சமாதான பலிகள், பாவ நிவாரண பலி, குற்ற நிவாரண பலி போன்ற பலிகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இறைவனின் அருகாமை அச்சம் தரக்கூடியது. அவரைத் தூய்மையுடன் மட்டுமே அணுக வேண்டும் எனும் சிந்தனை அழுத்தமாக விளக்கப்படுகிறது.
தெரியாமல் செய்யும் பாவங்களுக்கு மட்டுமே அன்றைய தினம் பாவ மன்னிப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தெரிந்தே செய்யும் பாவங் களுக்கு இறைவனின் தண்டனை நிச்சயம் எனும் போதனை நிலவியது.
இந்த நூலில் தான் விவிலிய விழாக்களான பாஸ்கா விழா, புளிப்பற்ற அப்பப் பண்டிகை, முதற்பலன் பண்டிகை, பெந்தேகோஸ்தே விழா, எக்காளப் பண்டிகை, பாவ நிவாரணப்பண்டிகை, கூடாரப் பண்டிகை ஆகியவை பற்றிய சட்ட திட்டங்களும், வரைமுறைகளும் விளக்கப்பட்டுள்ளன.
இந்த நூலின் அடிப்படை சிந்தனை தூய்மை என்பதாகும். இறைவன் மக்களோடு வந்து தங்கும் போது மக்கள் எப்படி தங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எப்படிப்பட்ட பலிகளைச் செலுத்த வேண்டும். சக மனிதரோடு எப்படி வாழ வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இயேசுவின் இரண்டாம் வருகையின் போது நாம் அகத்தூய்மையாய் இருக்கவேண்டும் என்பதன் நிழலாக இந்த நிகழ்வுகளை எடுத்துக் கொள்ளலாம்.
பலி பொருட்கள் பழுதற்றவையாக இருக்க வேண்டும் என்பதும், ரத்த பலி பாவங்களுக்காகச் செலுத்தப்பட வேண்டும் என்பதும் நேரடியாக இயேசுவின் மீட்புச் செய்தியோடு நெருங்கிய தொடர்புடையவை. இயேசு பாவமற்ற பலியாக ரத்தம் சிந்தியதன் மறை உண்மையே அது.
எகிப்திலிருந்து இஸ்ரயேலர்கள் வெளியேறி வந்தது ‘மீட்பு’ என்பதன் குறியீடு. அதன்பின் இறைவனின் சட்டங்களின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பது புனித வாழ்க்கையின் குறியீடு.

வாசிக்க சுவாரஸ்யமற்ற நூல் என்றாலும், புரிந்து கொள்ளவேண்டிய பல ஆன்மிக விஷயங்களின் புதையலே இந்த நூல்.
சேவியர்.
விவிலியம் எனும் நூலைபுரிந்து கொள்ள வேண்டுமெனில் நிச்சயம் ஆதியாகமத்திலிருந்து தான் துவங்கவேண்டும். ஆதியாகமத்தை நம்புவதில் அடங்கியிருக்கிறது கிறிஸ்தவ ஆன்மிகத்தின் உயர் நிலை.
எபிரேய ஏட்டுச்சுருள்களில் ஒரு வழக்கம் உண்டு. திறந்தவுடன் கண்ணில் படும் அதன் முதல் வார்த்தையையோ, முதல் சில வார்த்தை களையோ நூலின் பெயராக்கி விடுவார்கள்.
அப்படித் தான் பைபிளின் முதல் நூலுக்கும் பெயர் வந்தது. எபிரேயத்தில் இந்தநூலின் முதல் வார்த்தை, ‘பெரிஷித்’ என்பது. அதன் பொருள் ‘தொடக்கத்தில் அல்லது ஆதியில்’ என்பதாகும். அதுவே நூலின் பெயராகி விட்டது.
அது, ‘தொடக்க நூல் அல்லது ஆதியாகமம்’ எனப்பட்டது. இந்த நூலை எழுதியவர் மோசே. எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை மீட்டுக் கொண்டு வந்த விடுதலை வீரர் மோசே தான் இதன் ஆசிரியர்.
‘டென் கமான்ட்மென்ட்’ எனும் திரைப்படம் பார்த்தவர்களுக்கு மோசே கதாபாத்திரம் பற்றி தெரிந்திருக்கும்.
பைபிளின் முதல் ஐந்து நூல்களையும் எழுதியவர் அவர் தான். இவற்றை ‘பென்டாடூச்’ என்பார்கள். அதற்கு ‘ஐந்து நூல்களின் தொகுப்பு’ என்பது பொருள்.
யூதர்களும் இந்த ஐந்து நூல்களையும் ‘மோசேயின் சட்டங்கள்’ எனும் அடிப்படையில் பயன்படுத்துகிறார்கள். ‘தோரா’ என்று இந்த தொகுப்பு அழைக்கப்படுகிறது. இது யூதர்களுக்கும் புனித நூல்.
கி.மு. 1406-க்கும் 1446-க்கும் இடைப்பட்ட நாற்பது ஆண்டுகள் தான் மோசே இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து மீட்டு பாலை நிலத்தில் வழிநடத்தினார் என்கிறது இறையியல் வரலாறு. அந்த காலகட்டத்தில் தான் இந்த ஐந்து நூல்களும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
மனித வரலாற்றின் முதல் 2000 ஆண்டு கால வாழ்க்கையை இந்த நூல் பதிவு செய்கிறது.
தொடக்க நூலுக்கு ஒரு சிறப்பு உண்டு. இது மோசேயின் காலத்துக்கு முன்னால் ஆரம்பிக்கிறது. சொல்லப்போனால் உலகத்தின் தொடக்கத்திலிருந்து இந்த நூல் தொடங்குகிறது.
உலகம் எப்படித் தொடங்கியது என்பதும், ஒளி, இருள், சூரியன், சந்திரன், நீர், நிலம், பறவைகள், விலங்குகள் என படைப்புகள் எப்படி உருவாகின எனும் அனைத்து செய்திகளும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
கடைசியில் ஆதி மனிதன் ஆதாம் படைக்கப்படுகிறார், பின்னர் ஏவாள் படைக்கப்படு கிறார்.
ஆதாமும், ஏவாளும் இறைவனின் கட்டளையை மீறி பாவம் செய்கின்றனர். இதனால் கடவுளின் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்படு கின்றனர்.
பின்னர் அவர்களுடைய சந்ததி வளர்கிறது. ‘மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப் புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்து கொண்டவர்களை எல்லாம் மனைவியர் ஆக்கிக்கொண்டனர் (ஆதி 6:2). மனுக்குலம் வளர்ந்தது, பூமியில் பாவமும் பெருகத் தொடங்கியது.
நோவாவின் காலம் வந்தது. கடவுள் பூமியை வெள்ளப்பெருக்கினால் அழிக்கத் திட்டமிட்டார். நோவா கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஒரு பேழையைச் செய்தார். அதில் அவரும் அவரது குடும்பமும், விலங்கின வகைகளும் தப்பின. மற்றவர்கள் எல்லாம் தண்ணீரால் அழிந்து போயினர். புதிதாய் உருவான அந்த சந்ததியும் பாவத்தில் விழுந்தது.
வானுயர கோபுரம் கட்டி தங்களை கடவுளாகக் காட்டிக் கொள்ள மனிதர்கள் நினைத்தனர். அவர்களுடைய கர்வத்தை கடவுள் அழித்தார். ஒரே மொழி பேசிவந்த அந்த மக்கள் வேறுவேறு மொழி பேசும்படி செய்தார். கூட்டம் பிரிந்தது.
அதன் பின் கடவுள் ஆபிரகாம் எனும் தனி மனிதனை அழைத்து, அவர் மூலம் தனக்கு ஏற்புடைய ஒரு சந்ததியை உருவாக்க விரும்பினார். அந்த சந்ததி மூலம் உலகைத் தனக்குரியதாக மாற்ற விரும்பினார்.
அப்படி ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு, யோசேப்பு என சந்ததிகள் இறைவனுக்குப் பிரியமான முற்பிதாக்களால் தலைமுறை தோறும் வளர்ந்தது. அந்த யோசேப்பின் மரணத்துடன் இந்த நூல் நிறைவடைகிறது.
இந்த நூல் மோசே பிறப்பதற்கும் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் நிறைவடைகிறது. இந்த நூலை மோசே இறைவனின் ஏவுதலால் எழுதினார், அல்லது முற்பிதாக்களின் வரலாறுகளைக் குறித்த பதிவுகளை யாரோ மோசேயிடம் கொடுத்துவிட அதை அடிப்படையாகக் கொண்டு இதை எழுதினார்.
ஆதியாகமம் விவிலியத்தின் மிக முக்கியமான நூல். இறைவனுக்கு மனிதனோடு உள்ள அன்பு, மனுக்குலத்தின் மீதுள்ள அன்பு, தனக்குரிய மக்களாக மனிதர்களை மாற்றவேண்டும் எனும் ஏக்கம், தன் மக்களுக்காக இறங்கி வரும் இரக்கம் என இறைவனின் இயல்பை இந்த நூல் படம் பிடித்துக் காட்டுகிறது.
ஒரே கடவுள் தான் உண்டு என்பதை இந்த நூல் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறது. அந்த இறைவனின் பிரமாண்டத்தையும், எளிமையையும் ஒரு சேர படம்பிடிக்கிறது. ‘ஏழு’ எனும் எண் சிறப்பானது என்பதை இந்த நூல் பல நிகழ்வுகளின் மூலம் விளக்குகிறது.
ஆதியாகமத்தில் மனிதர்களுடைய வாழ்க்கை இறைமகன் இயேசுவின் வாழ்க்கைக்கு நிழலாக, பூடகமான இருப்பது கவனிக்கத்தக்கது. இறைமகன் இயேசுவிற்கு முன் அடையாளமான ‘மெல்கிசெதேக்’ ஆதியாகமத்தில் தான் வருகிறார்.
இலக்கிய ரீதியாக இனிமையான, செழுமையான நூல் ஆதியாகமம். விவிலியம் எனும் நூலைபுரிந்து கொள்ள வேண்டுமெனில் நிச்சயம் ஆதியாகமத்திலிருந்து தான் துவங்கவேண்டும். ஆதியாகமத்தை நம்புவதில் அடங்கியிருக்கிறது கிறிஸ்தவ ஆன்மிகத்தின் உயர் நிலை.

மாடத்தட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த பழமை வாய்ந்த ஆலயத்தின் சிறப்பை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்..
மாடத்தட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் குடும்ப விழா மற்றும் பங்கு நூற்றாண்டு நிறைவு விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பழமை வாய்ந்த ஆலயத்தின் சிறப்பை பற்றி காண்போம்.
புனித தோமையார் வழியாக திருமுழுக்கு பெற்ற சில கிறிஸ்தவ குடும்பங்கள் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கன்னியாகுமரி வில்லுக்குறி அருகில் உள்ள மாடத்தட்டுவிளை ஊரில் தங்கியதாகவும், இவர்கள் தான் மாடத்தட்டுவிளையில் குடியமர்த்தப்பட்ட முதல் கிறிஸ்தவ பூர்வீக குடிமக்கள் என்றும் மாடத்தட்டுவிளை ஆலயத்தில் உள்ள விளக்குத்தூண் அதன் தொன்மைக்கு சான்றாக கூறப்படுகிறது.
இந்த கல் விளக்குத்தூண் 15-2-1371-ல் கோவில் வகைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கல்த்தூண் இப்போதைய ஆலயத்தின் வடமேற்கு ஓரத்தில் நிற்கிறது. இந்த கல்வெட்டில் காணப்படும் எழுத்துகள் கல்வெட்டின் தொன்மையை உறுதி செய்கிறது. ஆகவே, இங்கு சுமார் 652 ஆண்டுகளுக்கு முன்பே புனித செபஸ்தியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித அந்தோணியார் ஆலயம் இருந்தது என்பதை உறுதியாக கூறலாம்.
கி.பி.1,603-ல் இயேசு சபை குருக்களால் போர்ச்சுக்கீசியர் ஆதரவில் களிமண்ணால் ஆன முதல் ஆலயம் நாகர்கோவில் அருகில் உள்ள கோட்டாறுக்கு அடுத்தபடியாக மாடத்தட்டுவிளையில் அமைக்கப்பட்டது. அன்று முதல் மாடத்தட்டுவிளை கோட்டாறு பங்கு தளத்தின் கீழ் கொல்லம் இயேசு சபை கல்லூரியின் கண்காணிப்பில் செயல்பட தொடங்கியது. கி.பி. 1,644-ல் உரோமை இயேசு சபை அதிபருக்கு அருட்தந்தை ஆந்திரேயாஸ் லோப்பன் கோட்டாறு பங்குதளத்தில் அடங்கியுள்ள கிளை பங்குகள் பற்றிய புள்ளி விவரம் அனுப்பியுள்ளார்.
அதில் மாடத்தட்டுவிளை மலைப்பகுதியில் உள்ளது என்றும், பாதுகாவலர் புனித செபஸ்தியார் என்றும், அப்போது 350 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்ற செய்தியை தருகிறார். வராப்புழை மறை மாவட்டத்தில் இருந்து கொல்லம் தனி மறை மாவட்டமாக செயல்பட தொடங்கியதும் மாடத்தட்டுவிளை கோட்டாறு பங்கில் இருந்து கி.பி.1853 மார்ச்-15 ம் நாள் முதல் காரங்காடு பங்கின் கிளை பங்கானது.
பின்னர் கி.பி. 1918 நவம்பர் 10-ம் நாள் காரங்காட்டில் இருந்து பிரிந்து மாடத்தட்டுவிளை தனி பங்கானது. இந்த ஆலயத்தின் உள் அமைந்திருக்கும் புனித செபஸ்தியார் திருவுருவ சிலை ரோமாபுரியிலிருந்து கொண்டு வரப்பட்டதாகும். இந்த சிலை உலகம் முழுவதும் காணப்படும் பொதுவான தோற்றத்திலிருந்து வேறுபட்டு இடது கை மார்பிலும், வலது கை உடலோடும் ஒட்டிய நிலையிலும் அமைந்துள்ளது,
இதன் சிறப்புக்குரியதாகும். கி.பி. 1923-ம் ஆண்டு ஜனவரி 2-ம் நாள் புனித செபஸ்தியாரின் உடலில் இருந்து சிறிய எலும்பு துண்டை கொல்லம் ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகர் அருளிக்கமாக மாடத்தட்டுவிளை ஆலயத்துக்கு வழங்கி பக்தர்களின் வணக்கத்திற்கு வைக்க உத்தரவிட்டார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியாரின் தேதிபடி திருநாளான ஜனவரி 20-ந் தேதியும், இவ்வாலயத்தின் 9-ம் திருவிழாவின் போதும் பக்தர்களின் பார்வைக்கும், வணக்கத்திற்கும் ஆலயத்தில் வைக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித செபஸ்தியாரின் திரு பண்டத்தை முத்தமிட்டு புனிதரின் ஆசி பெற்று வருகின்றனர்.

வேடசந்தூர் அருகே மாரம்பாடியில் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோணியார் தேவாலயத்தின் பெருவிழாவையொட்டி புனிதர்களின் பெரிய தேர் பவனி நடந்தது.
வேடசந்தூர் அருகே மாரம்பாடியில் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று புனிதர்களின் பெரிய தேர் பவனி நடந்தது. முன்னதாக கடந்த 16-ந் தேதி மாலை மதுரை உயர் மறைவட்ட பேராயர் அந்தோணி பாப்புச்சாமி தலைமையில் வாண வேடிக்கையுடன் புனிதரின் ஆடம்பரக் கொடியேற்றத்துடன் ஆண்டு பெருவிழா தொடங்கியது.
மறுநாள் காலை திருவிருந்து திருப்பலியும், மாலை 6 மணிக்கு மேல் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் ஆடம்பர கூட்டுதிருப்பலி நடந்தது. பின்னர் இரவு 10 மணிக்கு கிராமிய தெம்மாங்கு கலைநிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலையில் திண்டுக்கல் பல்நோக்கு சமூக பணிமைய செயலர் சாம்சன் ஆரோக்கியதாஸ் தலைமையில் தேரடித்திருப்பலி நடந்தது.
அதைத்தொடர்ந்து 5 மின்ரத பவனி விசுவாச வளாகத்தில் இருந்து புறப்பட்டு தேவாலயத்தை சுற்றி வந்தது. பின்னர் மாலை புனித பெரிய அந்தோணியார், அன்னை வேளாங்கண்ணி, புனித ராயப்பர், சிறிய அந்தோணியார், புனித வானதூதர் ஆகிய புனிதர்களின் சிலைகளுடன் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.
இத்திருவிழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, சென்னை மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைவரும் தங்களின் வேண்டுதலுக்காக தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும், புனித பெரிய அந்தோணியாருக்கு மாலை அணிவித்தும் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை மறைவட்ட முதன்மை குரு மற்றும் திருத்தலப் பங்குத்தந்தை எஸ்.அமலதாஸ் தலைமையில் உதவி பங்குத்தந்தை எம்.ஜஸ்டின் திரவியம், பெரியதனக்காரர்கள், அமலவைக்கன்னியர்கள், இறைமக்கள் செய்திருந்தனர்.

பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்மாவைக் காப்பார். (சங்கீதம் 121)
இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் மீட்பிற்காக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெத்லகேமில் மனிதனாக பிறந்தார். இப்பூவுலக மாந்தர்கள் சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும் வாழ்வதற்காகவும் நித்திய ஜீவனை, அதாவது பரலோக வாழ்வை அளிப்பதற்காகவுமே அவர் வந்தார்.
அவருடைய இளமை பருவத்தை நாசரேத் என்னும் ஊரில் வாழ்ந்து, பின்னர் கலிலேயா, தீரு, சீதோன் போன்ற அநேக பட்டணங்களில் சொற்பொழிவு ஆற்றினார். ஜனங்களை நோயிலிருந்து சுகமாக்கி, பிசாசினால் பாதிக்கப்பட்டவரை விடுதலையாக்கி அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்.
எருசலேம் என்னும் பட்டணத்தில் பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் இருந்தது. இந்த குளத்தை சுற்றி குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் படுத்திருப்பார்கள். அவர்கள் எப்பொழுது தண்ணீர் கலங்கும் என்று பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
ஏனெனில் சில சமயங்களில் தேவ தூதன் ஒருவன் வந்து அந்த குளத்தில் இறங்கி தண்ணீரை கலக்குவான். தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் குணமடைவான்.
முப்பத்தெட்டு வருஷம் வியாதியஸ்தனாய் இருந்த ஒரு மனிதன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு கண்டு சொஸ்தமாக வேண்டும் என்று விரும்புகிறாயா? என்று கேட்டார். அதற்கு வியாதியஸ்தன், ‘ஆண்டவரே, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுவதற்கு ஒருவருமில்லை. நான் குளத்திற்குள் இறங்குவதற்கு முன் வேறொருவன் இறங்கி சுகமாகி விடுகிறான்’ என்றான்.
இயேசு அவனை நோக்கி, ‘எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்து கொண்டு போனான் என்று வேதாகமம் கூறுகிறது.
இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார். (திருவிவிலியம், யோவான்-5:8,9).
இவனை சுற்றிலும் வாழ்ந்த மனிதர்கள் சுயநலம் மிகுந்தவர்களாய் இருந்தனர். இவனுடைய கஷ்டத்தையும், கண்ணீரையும், வேதனையையும் கண்டும் ஒருவனுக்கும் உதவி செய்ய மனதில்லாதிருந்தது. ஆனால் இயேசு அவன் மேல் மனதுருகுகிறார். அவனை சொஸ்தமாக்க சித்தம் கொள்கிறார்.
இன்றைக்கும் சுயநலமான மனிதர்கள் தான் பெரும்பாலும் நம்மை சுற்றி வாழ்கின்றனர். உதவி செய்யும் மனப்பான்மை, இரக்கம் காட்டும் மனப்பான்மை மனுக்குலத்தில் குறைந்து வருகிறது என்றால் அது மிகையாகாது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்களும் ஜீவிக்கின்றீர்களா? ஐயோ எனக்கு உதவி செய்ய, என்னை கை தூக்கி விட, ஒருவருமே இல்லையென்று கலங்குகிறீர்களா?
கவலைப்படாதிருங்கள், உங்களுக்கு உதவி செய்ய, உங்கள் துயரம் நீக்க, உங்களைக் கை தூக்கி விட ஒருவர் இருக்கிறார். அவர் நாமம் இயேசு. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் (எபிரேயர் 13:8).
“பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில், “நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கடவுளே கூறியிருக்கிறார் (எபிரேயர் 13:5).
அன்று கேட்பாரற்று, விசாரிப்பாரற்று கிடந்த ஒரு மனிதனைத் தேடிப்போய் அவனை விசாரித்து அவனுக்கு நன்மை செய்தவர் இன்றைக்கும் உங்களுக்கு அப்படியே செய்வார்.
மனிதர்கள் கை விட்டு விட்ட கலக்கத்தில் துயரத்தில் ஜீவிக்கின்றீர்களோ இயேசு நிச்சயமாக கைவிட மாட்டார். அவர் உங்களுக்கு நன்மை செய்வார்.
எப்படி அந்த குளக்கரை வியாதியஸ்தன் தன் சூழ்நிலைகளை இயேசுவிடம் சொன்னானோ, அதுபோல நீங்களும் உங்கள் மனதின் கவலைகளை பாரங்களை இயேசுகிறிஸ்துவிடம் தெரிவியுங்கள். நிச்சயமாய் அவர் உங்களுக்கு உதவி செய்வார்.
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.
பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்மாவைக் காப்பார். (சங்கீதம் 121)
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
சகோ. சி. சதீஷ், வால்பாறை.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை புனித சின்னப்பர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையில் புனித சின்னப்பர் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
கொடியேற்று விழாவில் சிங்கம்பாறை பங்கு தந்தை செல்வராஜ், ஜான் பெல்லார்மின் ஆகியோர் கலந்து கொண்டு கொடியேற்றினர். பின்னர் சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன. தொட ர்ந்து வானவேடிக்கை, மதியம் அசன விருந்து ஆகியவை நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மின்னொளி கபடி போட்டி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

மும்பை காட்கோபர் கிழக்கு காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 27-ம் ஆண்டு திருவிழா இன்று (வியாழக்கிழமை) மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அருட்தந்தைகள் லியோன் மாஸ்கரேன்ஹஸ், ஏசுராஜ் ஆகியோர் திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார்கள். தொடர்ந்து திருவிழா வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதில் 20-ந் தேதி புனித செபஸ்தியார் திருவிழா நடக்கிறது. 24-ந் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை தியானம் நடக்கிறது. 26-ந் தேதி காலை 10.30 மணிக்கு திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்பவனி நடக்கிறது. 24-ந் தேதி தவிர விழாவின் மற்ற அனைத்து நாட்களிலும் மாலை 6.45 மணிக்கு ஜெபமாலையும், பின்னர் திருப்பலியும் நிறைவேற்றப்படும்.

கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் அருகே உள்ள கோணான்குப்பத்தில் புகழ்பெற்ற புனித பெரியநாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 23-ந் தேதி ஆடம்பர தேர்பவனி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து அன்று மாலை கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு, கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் பெருவிழா கொடியேற்றப்பட்டது. முன்னதாக ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த புனித மாதா கெபி முன்பு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று காலை திருப்பலி, சிலுவை பாதை, தேர்பவனி மற்றும் நற்கருணை ஆராதனை நடைபெற்றது. வருகிற 23-ந்தேதி (புதன் கிழமை) காலை 7.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற உள்ளது. பின்னர் அன்று இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெற இருக்கிறது.
விழாவில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். இங்கு வரும் மக்களுக்காக குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல பங்குதந்தை அருள்தாஸ் செய்து வருகிறார்.
அழகியபாண்டியபுரத்தை அடுத்த எட்டாமடை தூய திருக்குடும்ப தேவாலயத்தில் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
அழகியபாண்டியபுரத்தை அடுத்த எட்டாமடை தூய திருக்குடும்ப தேவாலயத்தில் கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலையில் செபமாலை மற்றும் புகழ் மாலையும், இரவு கலை நிகழ்ச்சியும் நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கண்ணை கவரும் வகையில் வாணவேடிக்கை நடந்தது. மாலையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள், பங்கு தந்தையினர் செய்திருந்தனர்.

‘விடுதலைப்பயணம்’ நூல் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையாகவும், இறையியல் சிந்தனைகளின் அடித்தளமாகவும் அமைகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
விவிலியத்தில் வருகின்ற இரண்டாவது நூல் ‘விடுதலைப் பயணம்’ அல்லது ‘யாத்திராகமம்’ என அழைக்கப்படுகிறது.
‘எக்ஸோடோஸ்’ எனும் கிரேக்க வார்த்தையில் இருந்து இது உருவானது. இதற்கு ‘வெளியேறுதல்’ என்று பொருள்.
இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாகி, எகிப்தை விட்டு ‘வெளியேறுதலே’ இந்த நூலின் அடிப்படைச்செய்தி என்பதால் இதற்கு அந்த பெயர் நிலைத்து விட்டது.
விவிலியத்தின் முதல் நூல் மனுக்குல வரலாற்றின் சுமார் 2000 வருடங்களைப் பதிவு செய்கிறது. அதன் பின் முன்னூறு ஆண்டுகள் இடைவெளி. அந்த காலகட்டத்தில் நடந்தது என்ன என்பதை விவிலியம் பதிவு செய்யவில்லை. அதன் பின்னர் மோசேயின் கதை வருகிறது, விடுதலைப்பயணத்தில்.
விடுதலைப் பயணத்தை எழுதியவரும் ‘மோசே’ தான். முதல் நூலில், அவர் பிறப்பதற்கு சுமார் 300 ஆண்டுகளோடு முன்பு முடிவு பெற்ற விஷயங்களை எழுதியிருந்தார். இந்த நூலிலும் அதற்குப் பின் அவர் எழுதிய மூன்று விவிலிய நூல்களிலும் நேரடி அனுபவ விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
கடவுளால் ‘இஸ்ரயேல்’ என பெயரிடப்பட்ட யாக்கோபு எகிப்தில் குடியேறுகிறார். சுமார் 70-75 பேராக முதலில் எகிப்தில் நுழைந்த அவர்கள் 430 ஆண்டுகளில் மிகப்பெரிய எண்ணிக்கையில் வளர்கிறார்கள்.
இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும் 6 லட்சம் பேர். பெண்கள், குழந்தைகள் எல்லோரையும் சேர்த்தால் சுமார் 20 லட்சம் வரை வரலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இதன் காலம் கி.மு. 1800-கி.மு. 1400 எனலாம்.
யோசேப்பு இறந்தபின், அரசுகள் மாறிய பின், இஸ்ரயேல் மக்களின் சுதந்திர வாழ்க்கை களவாடப்பட்டது. அவர்கள் அடிமைகளாக மாற்றப்பட்டார்கள். எனவே தான் அவர்களுக்கு அங்கிருந்து விடுதலை தேவைப்பட்டது.
‘கடவுளை வழிபடவேண்டும்’ எனும் கோரிக்கையோடு அவர்களை மீட்க கடவுளால் அனுப்பப்பட்டவர் தான் மோசே. அவரோடு துணைக்கு வந்தவர் ஆரோன்.
மோசே முதலில் எகிப்திய இளவரசி ஹெட்சிபாவால் தண்ணீரிலிருந்து கண்டெடுக்கப்பட்டவர். சுமார் நாற்பது ஆண்டுகள் அரசவையில் ஒரு அரசனைப் போல வளர்கிறார்.
‘தான் எகிப்தியர் அல்ல, எபிரேயர்’ எனும் உண்மை புரிந்ததும் தன் இன மக்களின் விடுதலைக்காக போராட நினைக்கிறார். ஆனால் அவரால் அது முடியவில்லை.
எனவே அரண்மனையை விட்டு வெளியேறுகிறார். அரண்மனையை விட்டு வெளியேறி நாற்பது ஆண்டுகள் மீதியான் எனும் இடத்தில் வாழ்கிறார்.
அதன் பின் கடவுளால் எகிப்துக்கு அனுப்பப்படுகிறார் மோசே, அப்போது அவருக்கு வயது 80.
மோசே சென்று தனது இன மக்களை விடுவிக்குமாறு அரசரிடம் விண்ணப்பிக்கிறார். மன்னன் நகைக்கிறான், மறுக்கிறான்.
அதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக பத்து வாதைகள் எகிப்திய நாட்டை சூறையாடுகின்றன. கடைசி வாதையில் எகிப்தியர்களின் தலைச்சன் பிள்ளைகள் இறந்துபோகின்றனர். வேறு வழியில்லாமல் மன்னன் அடிமைகளை வெளியே அனுப்பி விடுகிறான்.
மாபெரும் கூட்டமாக இஸ்ரேல் மக்கள் எகிப்தில் இருந்து கால்நடைகள், பொருட்கள், செல்வங்கள் எல்லாவற்றோடும் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.
சுமார் நாற்பது ஆண்டுகள் அவர்கள் பாலை நிலத்தில் நடக்கின்றனர். அவர்களை மோசே வழிநடத்துகிறார். பாலை நிலத்தில் கடவுள் பல்வேறு அதிசயச் செயல்களைச் செய்து மக்களைக் காக்கின்றார்.
நாற்பது ஆண்டுகள் அவர்களுக்கு ‘மன்னா’ எனும் உணவை வழங்கினார், இறைச்சிக்கு காடைகளை வழங்கினார். ஏன் நாற்பது ஆண்டுகளும் அவர்களுடைய காலணிகள் கூட அறுந்து போகாமல் பாதுகாத்தார்.
மனித வாழ்க்கையை நெறிப்படுத்த இறைவனிடமிருந்து நேரடியாக பத்து கட்டளைகளைப் பெற்று மக்களுக்கு வழங்குகிறார் மோசே. அதைத் தவிரவும் மோசே ஏகப்பட்ட சட்டதிட்டங்களை இறையருளால் வகுத்து மக்களுக்கு வழங்குகிறார்.
இந்த நூலில் கடவுள் தனது பெயரையும், தனது இயல்புகளையும், அவரது சட்டங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். தன்னை மக்கள் எப்படி வணங்கவேண்டும் எனும் வழிமுறைகளையும் இந்த நூலில் தான் இறைவன் வெளிப்படுத்துகிறார். எனவே இந்த நூல் இறையியல் ஆய்வுக்கு அடிப்படையான நூலாக அமைந்து விடுகிறது.
விடுதலைப் பயண நூலின் நிகழ்ச்சிகள் இயேசுவின் வாழ்க்கையின் நிழலாக இருக்கின்றன. ‘பாஸ்கா’ எனும் விழாவில் ஒரு வயது நிரம்பிய ஆட்டுக்கடா பலி கொடுக்கப்பட்டது. அது முப்பது வயதான இயேசுவின் மரண பலியை குறிக்கிறது. ஆடானது பிற்பகல் மூன்று மணியளவில் வெட்டப்பட வேண்டும். அது இயேசுவின் மரண நேரத்தைக் குறிக்கிறது.
எகிப்தை விட்டு வெளியேறிய மூன்றாம் நாள் செங்கடலைக் கடந்து முழு விடுதலை பெறுகின்றனர். அது இறைமகன் இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கிறது.
ஐம்பதாவது நாளில் மலையில் சட்டங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். அது இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் ஐம்பதாவது நாளில் பெற்றுக்கொண்ட தூய ஆவியின் பெந்தேகோஸ்தே நாளை குறிக்கிறது.
‘விடுதலைப்பயணம்’ நூல் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையாகவும், இறையியல் சிந்தனைகளின் அடித்தளமாகவும் அமைகிறது.

தன் சகோதரனாகிய மோசேயின் வாயாக இருந்து இஸ்ரயேலரை வழிநடத்திய இந்த ஆரோனின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு.
ஒரு தாய் பிள்ளைகளாய்ப் பிறந்து, ஒரே வீட்டில் வளர்ந்து, பின்னர் பகைவர்களாய் மாறி நிற்கும் சகோதரர்களை நாம் பார்த்திருக்கிறோம். இது ஏதோ தனிக்குடித்தனங்களாய் மாறிப்போன இன்றைய காலக்கட்டத்திலேயோ, கூட்டுக்குடும்பங்களாய் வாழ்ந்த நேற்றைய காலக்கட்டத்திலேயோ நடந்தது மட்டுமல்ல.
திருமறையின் முதல் குடும்பமாகிய ஆதாம், ஏவாள் தம்பதியின் மக்களான காயீன், ஆபேல் தொடங்கி, முற்பிதாக்களில் ஒருவராகிய யாக்கோபு மற்றும் அவர் சகோதரர் ஏசா தொடர்ந்து தாவீதின் பிள்ளைகள் என காலம் காலமாக சகோதரர்களுக்கு இடையே பகைமையும் சண்டைகளும் இருந்தே வந்திருக்கிறது.
இப்படிப்பட்டவர்களுக்கு நடுவிலே சகோதரர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டியவர், ஆரோன்.
தன் சகோதரனாகிய மோசேயின் வாயாக இருந்து இஸ்ரயேலரை வழிநடத்திய இந்த ஆரோனின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு. அவற்றில் சில...
மகிழ்ந்த சகோதரன்
இஸ்ரயேலர்கள் எகிப்தில் அடிமைகளாய் வாழ்ந்து வருகிறார்கள். அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வேண்டுமென இறைவனை நோக்கி முறையிடுகிறார்கள். கர்த்தர் முட்செடியின் நடுவிலிருந்து மோசேக்கு தரிசனமாகி இஸ்ரயேலரை விடுவித்து நடத்தி செல்லும் பெரும்பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார். அவரோ “நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன்” என்று சொல்லி மறுக்கிறார்.
“நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்கு போதிப்பேன்” என்று கர்த்தர் சொன்னபோதும் மோசே சமாதானம் அடையவில்லை. இதனால் கோபமடைந்த கர்த்தர், “உன் சகோதரனாகிய ஆரோன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும் போது அவன் இருதயம் மகிழும்” என்று கூறுகிறார். (யாத்திராகமம் 4:12-14).
அப்படியே இருவரும் சந்திக்கிறார்கள். ஆரோன், மோசேயை முத்தமிடுகிறார் (யாத்திராகமம் 4:27). இங்கே, இந்த சகோதரர்கள் முத்தஞ்செய்து கொண்டது, ஏதோ வெளிவேடமானதல்ல. மாறாக, ஆத்மார்த்த அன்பினால் ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. “அவன் இருதயம் மகிழும்” என்று கர்த்தரே சொல்லுமளவுக்கு அப்பழுக்கற்றது.
தாங்கிய சகோதரன்
மோசேயின் தலைமையில் இஸ்ரயேலர்கள் கடவுள் வாக்களித்த கானான் நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். வழியிலே அமலேக்கியர் இஸ்ரயேலர்களுடன் போரிடுகின்றனர். இஸ்ரயேலர்கள் சந்திக்கும் முதல் யுத்தம் இது. யோசுவாவிடம் யுத்தத்தை முன்னின்று நடத்த சொல்லிவிட்டு, ஆரோன் மற்றும் ஊர் என்பவருடன் அருகிலிருக்கும் மலையுச்சிக்கு சென்று கையில் உயர்த்திப் பிடித்த கோலுடன் நிற்கிறார் மோசே.
மோசேயின் கைகள் உயர்ந்திருக்கும் போது இஸ்ரயேலர்கள் வெற்றியடைந்தார்கள். மோசேயின் கைகள் தளரும் போது, அமலேக்கியர் வெற்றியடைந்தார்கள். உடனே ஆரோனும், ஊரும் ஒரு கல்லைக் கொண்டுவந்து, அதிலே மோசேயை உட்காரச்செய்து, இருவரும் ஆளுக்கொரு கையை தாங்கிக்கொண்டிருந்தார்கள். இதனால் மாலை சூரியன் மறையும் மட்டும் மோசேயின் கைகள் ஒரே நிலையாயிருந்தது (யாத்திராகமம் 17:8-13).
ஆம், தளர்ந்த தன் சகோதரனின் கையை தாங்கிய பொறுப்பான சகோதரன் இந்த ஆரோன்.
அழுத சகோதரன்
மோசேயின் மனைவி பிற இனத்தவராகிய ஒரு எத்தியோப்பிய பெண். விடுதலைப் பயணத்தின் ஒரு கட்டத்தில், ஆரோனும், மோசேயின் சகோதரி மிரியாமும் மோசேயின் மனைவியை முன்னிட்டு மோசேக்கு எதிராக பேசினார்கள். கர்த்தர் அதைக்கேட்டார். உடனே, கர்த்தர் மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் ஆசாரிப்பு கூடாரத்திற்கு வரச் சொன்னார். மேகத்தூணில் நின்று, தனக்கும் மோசேக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தையும், தான் மோசேயை எந்தளவுக்கு நேசிக்கிறேன் என்பதையும் ஆரோனுக்கும், மிரியாமுக்கும் சொல்லி, அவர்கள் மேல் கோபம் கொண்டார்.
மேகம் விலகியதும், ஆரோன் தன் சகோதரியாகிய மிரியாமின் முகத்தை பார்க்கிறார், அவளை தொழுநோய் பிடித்திருந்தது. உடனே ஆரோன் மோசேயை நோக்கி, “என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்த பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும். தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப் போல் அவள் ஆகாதிருப்பாளாக” (எண்ணாகமம் 12:11,12) என்று அழுதார்.
மோசேயும் கர்த்தரிடத்தில் கெஞ்சினார். கர்த்தர் ஏழு நாட்களுக்குப் பிறகு அவள் நலமடைவாள் என்று சொன்னார். இங்கே ஆரோன் தன் சகோதரிக்காக தன் சகோதரனிடத்தில், அழுது வேண்டவும் வெட்கப்படவில்லை.
இந்த காரணங்களால் தான், “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது” (சங்கீதம் 133: 1) என்று சொன்ன தாவீது, அடுத்த வசனத்திலேயே, “அது ஆரோனுடைய சிரசின் மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கு... ஒப்பாயிருக்கிறது” என்று பாடுகிறார்.
நாமும் பேதங்கள் கடந்து, பிறருடன் சகோதரர்களாய்ப் பழகி, அவர்களோடு மகிழ்ந்து, அவர்கள் துயரங்களில் பங்கெடுத்து கர்த்தர் கட்டளையிடும் ஆசீர்வாதத்தையும், ஜீவனையும் பெற்று கொள்வோம்.
சகோ. ஹெசட் காட்சன், சென்னை.