என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் உள்ள மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை ஆலயத்தில் மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை உயிர் தியாக விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் தூய வியாகுல அன்னை ஆலயம், மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை ஆலயம் என இரட்டை திருத்தலம் உள்ளது. இங்குள்ள மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை உயிர் தியாக விழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    இன்று காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு கொடிவலம், ஜெபமாலை, இரவு 7 மணிக்கு மறைமாவட்ட முதன்மை பணியாளர் பெர்பெச்சுவல் ஆன்டணி தலைமை தாங்கி மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை திருவிழா கொடியேற்றுகிறார்.

    13-ந்தேதி காலை திருப்பலி, மாலை ஆராதனை, 14-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, 11 மணிக்கு மலைவலம், நண்பகல் 12 மணிக்கு அன்பு விருந்து மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு ராஜாவூர் பங்குதந்தை தால்ப் கிராண்ட்மதன் தலைமை தாங்கி பெருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். ஆன்டனி மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு சப்பரபவனி நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் பங்குதந்தை, பங்கு பேரவையினர், பங்குமக்கள், அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
    வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளையில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம் ஆலயத்தின் திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    இன்று காலை 6 மணிக்கு நினைவு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.15 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தேர் கூடம், மாதா கெபி, புதுப்பிக்கப்பட்ட கொடிமரம் ஆகியவை அர்ச்சிப்பு நடக்கிறது. தொடர்ந்து மேல்பாலை பங்குத்தந்தை அந்தோணி எம்.முத்து தலைமைதாங்கி திருவிழா கொடியை ஏற்றிவைக்கிறார். இரவு 8.30 மணிக்கு அன்பியங்கள் வளர்ச்சி சங்க பொதுக்கூட்டம், 9 மணிக்கு புனித அந்தோணியார் வரலாற்று நாடகம் ஆகியவை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் இரவு பொதுக்கூட்டம், திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    3-ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு திருப்பலி, குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குதல் நடைபெறுகிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 4.30 மணிக்கு நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    7-ம் நாள் விழாவில் இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி, 9-ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் யேசு ரெத்தினம் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    அதைதொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு ஆராதனையில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் பவுலோஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி, வாணவேடிக்கை, 10-ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு புனித செபஸ்தியார் தின முதல் திருவிழா திருப்பலி, 8.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெறோம் தாஸ் தலைமைதாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். பகல் 1 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணை பங்குத்தந்தை சகாய அருள் தேவ், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள், அருட்பணி பேரவை துணைத்தலைவர் பயஸ் சேவியர், செயலாளர் மரிய நான்சி, துணை செயலாளர் பாபியோன் ராஜ், பொருளாளர் எட்வின் சேவியர் செல்வன் ஆகியோர் செய்து வருகின்றார்கள்.
    நாகர்கோவில், பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில், பொன்னப்பநாடார் காலனியில் அற்புத குழந்தை இயேசு ஆலயம் உள்ளது. நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய கொடியை கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஏற்றி வைத்தார்.

    இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை மாலையில் செபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    வருகிற 13-ந் தேதி காலை 6.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹில்லாரியுஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மறைமாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அலோசிஸ் பென்சிகர் மறையுரை நிகழ்த்துகிறார். மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு செபமாலை, திருவிழா திருப்பலி ஆகியவை நடக்கிறது. கோட்டார் வட்டார முதன்மை பணியாளர் மைக்கல் ஏஞ்சலஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜோசப் ஜெய்ல்சிங் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜான் பெல்லார்மின் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    நாகர்கோவில், பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
    நாகர்கோவில், பொன்னப்பநாடார் காலனியில் அற்புத குழந்தை இயேசு ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு செபமாலை, கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும். நிகழ்ச்சியில் கோட்டார் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்குகிறார். நாளை (வியாழக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை மாலையில் செபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    வருகிற 13-ந் தேதி காலை 6.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹில்லாரியுஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மறைமாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அலோசிஸ் பென்சிகர் மறையுரை நிகழ்த்துகிறார். மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு செபமாலை, திருவிழா திருப்பலி ஆகியவை நடக்கிறது. கோட்டார் வட்டார முதன்மை பணியாளர் மைக்கல் ஏஞ்சலஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜோசப் ஜெய்ல்சிங் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜான் பெல்லார்மின் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    பைபிள் என்பது பல நூல்களின் சங்கமம். பல ஆசிரியர்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சமூக, அரசியல் பின்னணியில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பே விவிலியம்.
    பைபிள் என்பது பல நூல்களின் சங்கமம். பல ஆசிரியர்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சமூக, அரசியல் பின்னணியில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பே விவிலியம். மீனவர்கள், மேய்ப்பர்கள் முதல் கவிஞர்கள், அரசர்கள் வரை இந்த நூல்களின் ஆசிரியர்களாக உள்ளனர்.

    இந்த நூல்களெல்லாம் தூய ஆவியானவரின் ஏவுதலால், வழிகாட்டுதலால் எழுதப்பட்டது என்பதே கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படை. விவிலியம் சொல்வதும் அது தான்.

    ‘பிப்லோஸ்’ என்னும் கிரேக்கச் சொல் மருவி ‘பிப்ளியோன்’ என்றானது. இதற்கு புத்தகம் என்பது பொருள். இது தான் ‘பைபிள்’ என்றானது.

    விவிலியம் தன்னை இரண்டாகப் பிரித்துக்கொள்கிறது. ஒன்று ‘பழைய ஏற்பாடு’. இன்னொன்று ‘புதிய ஏற்பாடு’.

    ‘ஏற்பாடு’ என்பது உடன்படிக்கை.

    ‘பழைய ஏற்பாடு’ ஆதி மனிதன் ஆதாமின் பிறப்பு முதல் இயேசு வின் பிறப்புக்கு முந்திய காலம் வரை உள்ள தலைமுறையின் வரலாற்றை, குறிப்பாக இறைவாக்கினர்களின் வரலாற்றை, இஸ்ரயேல் குல மக்களின் வாழ்க்கை முறையை விளக்குகிறது.

    ‘புதிய ஏற்பாடு’ இயேசுவின் பிறப்பு முதல் அவருடைய அப்போஸ்தலர்களின் ஆதி கால கிறிஸ்தவ மறை பரப்புதல் பணி வரை நீடிக்கிறது.

    பழைய ஏற்பாட்டில் 39 நூல்களும், புதிய ஏற்பாட்டில் மொத்தம் 27 நூல்களும், இணை திருமறையில் 7 நூல்களும் உள்ளன. இந்த எழுபத்து மூன்று நூல்களின் தொகுப்பே திருவிவிலியம்.

    கி.மு. 750-ல் எழுதப்பட்ட ஆமோஸ் இறைவாக்கினரின் நூலே விவிலியத்திலேயே முதலில் எழுதப்பட்ட நூல். மற்ற நூல்கள் எல்லாம் அதன் பின்னரே எழுதப்பட்டன.

    காலம் காலமாக வாய்வழிக் கதைகளாகவும், பரம்பரையினரின் சிறு சிறு குறிப்புகளாகவும், படங்களாகவும் இருந்த பழைய ஏற்பாட்டுக் கதைகள், பாடல்கள் எல்லாம் பிற்காலத்தில் தான் எழுத்து வடிவம் பெற்றன.

    கி.மு. 1300-ம் ஆண்டு முதல், கி.பி. 100-ம் ஆண்டு வரை உருவான படைப்புகள் திரு விவிலியத்தில் இடம்பெற்றுள்ளன என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கணக்கு.

    இப்போது காணப்படும் விவிலியத்தின் வடிவம் ஆரம்ப காலத்தில் இல்லை. கி.பி. 1440-ல் இராபி நாத்தான் என்பவர் பழைய ஏற்பாட்டு நூலை ஆராய்ந்து அவற்றை அதிகாரம், வசனங்களாகப் பிரித்தார். இது வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் கோடிடவும் மிகவும் வசதியாக இருந்தது.

    புதிய ஏற்பாட்டு வசனங்கள் கி.பி. 1550-ல் பிரிக்கப்பட்டன. ஏற்கனவே புதிய ஏற்பாட்டு அதிகாரங்களை பேராயர் ஸ்டீவ் லாங்டன் 1216-ல் பிரித்திருந்தார்.

    களிமண், ஓடுகள், பாப்பிரஸ் தாள்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்றவற்றில் மூல செய்திகள் எழுதப்பட்டிருந்தன.

    சீனாய்ச் சுவடி, வத்திக்கான் சுவடி இரண்டும் கி.பி. 350-ல் கண்டெடுக்கப்பட்டன.

    யூதேயா பாலை நிலப்பகுதியில் கி.பி 1947-ம் ஆண்டு பல ஏடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

    பழைய ஏற்பாட்டின் 180 ஏடுகளும், எசேயா இறைவாக்கினர் நூலின் முழு வடிவமும் இங்கே களிமண் ஜாடிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. இவை மும்ரான் குகைகளில் வாழ்ந்த எசேனியர் களால் பாதுகாத்து வைக்கப்பட்டவையாகும்.

    பழைய ஏற்பாடு பெரும்பாலும் எபிரேய மொழியிலும், சில பகுதிகள் அரமேய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. பின்னர் இந்த நூல்கள் கிரேக்கத்திலும் மொழி பெயர்க்கப்பட்டன. புதிய ஏற்பாடு நூல் முழுவதும் கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது.

    புனித ஜெரோம் முழு திரு விவிலியத்தையும் லத்தீனில் மொழிபெயர்த்தார். இது ஒரு மிகப்பெரிய பணி. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல் சுமார் பதினைந்து நூற்றாண்டுகள் திருச்சபையின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாக பயன்படுத்தப்பட்டு வந்தது. லத்தீன் மொழியிலிருந்தே திருவிவிலியம் பல மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

    1450-ம் ஆண்டு விவிலியம் முதன் முதலில் அச்சிடப்பட்டது. அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த கூடன்பர்க் முதலில் அச்சடித்த நூல் விவிலியம் தான்.

    சீகன்பால்கு 1715-ம் ஆண்டு திருவிவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்தார். அது தமிழ் மொழியில் அச்சிடப்பட்டது. ஆசியாவிலேயே முதலில் விவிலியம் மொழிபெயர்க்கப்பட்டது தமிழ் மொழியில் தான்.

    அதன் பின்னர் 1727-ல் முழு விவிலியம் மொழிபெயர்க்கப் பட்டது. தற்போது உலக மொழிகள் 1848-ல் திருவிவிலியம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன‌. ஆண்டுக்கு சுமார் 10 கோடி விவிலியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    விவிலியத்தின் மையமான இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை மத்தேயு, மார்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு பேரும் எழுதியிருக்கிறார்கள். இவர்களில் மத்தேயுவும், யோவானும் இயேசுவின் சீடர்கள். இயேசுவின் செயல்களை மையமாய் வைத்து மார்குவும், போதனைகளை மையமாய் வைத்து மத்தேயு லூக்கா ஆகியோரும், இயேசுவின் இறை தன்மையை மையமாய் வைத்து யோவானும் நூல்களை ஆக்கியுள்ளனர்.

    ‘ஆதியிலே தேவன்’ என ஆரம்பித்து ‘ஆமென்’ என முடிகிறது பைபிள்.

    சேவியர்
    நம் ஆண்டவர் இயேசுவால் உங்களை எப்பெரிய நோயினின்றும் நலம்பெறச்செய்ய முடியுமென்று விசுவாசியுங்கள். நிச்சயமாகவே நலம் பெறுவீர்கள்.
    இறைமைந்தன் இயேசு கிறிஸ்து தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கு விடுதலை அளித்து வந்தார். இத்தகைய வல்லசெயல்கள் மூலமாகவும் அநேக மக்கள் கடவுள் மீதும், தன் வார்த்தைகளிலும் நம்பிக்கைக் கொள்ளச் செய்தார்.

    குணமாக்கப்படுதலை குறிக்கின்ற ஆண்டவர் இயேசுவின் அற்புதங்களில் ஒன்று ‘ரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுகின்ற நிகழ்வு’ ஆகும்.

    இயேசுவின் வல்லமை

    மரணத்திலிருந்து மீட்கும் இயேசுவின் இரு வல்ல செயல்கள் தொடர்ச்சியாக தூய மாற்கு நற்செய்தி நூலில் (5:21-43) காணலாம். இந்த இரண்டு வல்லசெயல்களும் தொட்டு குணமாக்கப்படுதலைக் குறிக்கின்றது.

    இங்கு ஒரு பெண்ணின் நம்பிக்கை ‘ஆண்டவரைத் தொட்டால் நலம் கிடைக்கும்’. மற்றொரு ஆணின் நம்பிக்கை ‘ஆண்டவர் தொட்டால் நலம் கிடைக்கும்’. இந்த இரு நிகழ்வுகளும் நம் குறைவிசுவாசத்தை நிறைவாக்குகிறது.

    ஆண்டவர் இயேசு தம் சீடர்களுடன் சென்று கொண்டிருக்கின்ற பொழுது அவர் போதனை களைக் கேட்பதற்காக, பெருந்திரளான மக்கள் இயேசுவை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தபடி சென்றனர். அத்திரள் கூட்டத்தில் பன்னிரு ஆண்டுகளாய் ரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண்ணும் இருந்தார்.

    தனக்கிருந்த செல்வங்களையெல்லாம் செலவழித்துப் பார்த்தும், எந்த மருத்துவராலும் நலம் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். இயேசு ஆண்டவரைக் குறித்துக் கேள்விப்பட்டு, “அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்”; என்று எண்ணி, மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவருடைய மேலுடையைத் தொட்டார். தொட்டதும், அவருடைய ரத்தப்போக்கும் நின்றது. தாம் நலமானதை அப்பெண் உணர்ந்தார்.

    உடனே இயேசு வல்லமை வெளியேறியதை உணர்ந்து, மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.

    அதற்கு அவருடைய சீடர்கள், “இம்மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும் என்னைத் தொட்டவர் யார்? என்கிறீரே” என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்ட வரைச் சுற்றிலும் தேடினார்.

    அப்போது அப்பெண் அஞ்சி நடுங்கியபடி, ஆண்டவர் இயேசுவின் முன் வந்து விழுந்து, நிகழ்ந்த எல்லாவற்றையும் அவரிடம் சொன்னார்.

    அவர் அப்பெண்ணிடம் “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார்.

    பழங்கால முறை

    இடைவிடாத ரத்தப்போக்கு நோயை இது குறிக்கிறது. இது கடவுளின் சாபம் என்றும், இதைக் குணப்படுத்துதல் என்பது மனித தன்மைக்கு அப்பாற்பட்டது என்றும் யூதர்கள் கருதினர். லேவியர் நூலில் (15:19-33) ரத்தப்போக்குக் குறித்த சட்டங்களைக் காணலாம். ரத்தப்போக்கு ஏற்படுகிற பெண் தீட்டானவள். அவளைத் தொடுகிறவள் தீட்டானவன். அவள் படுக்கைத் தீட்டு. அவள் படுக்கையைத் தொடுகிறவன் தீட்டானவன். அவள் உட்காருமிடம் தீட்டு. அவள் வாழும் வீடு தீட்டு. இது பாவ நிவிர்த்தி செய்யப்படவேண்டியப் பாவமாகும்.

    ‘ஆடையின் ஓரத்தைத் தொடுதல்’ என்பது பழங்கால குணப்படுத்தல் முறைகளில் ஒன்றாகும். பொதுவாக, வல்லமைப் பெறுவோருக்கே அதன் உணர்வு தெரியும். ஆனால் இங்கு வல்லமை தன்னிடமிருந்து சென்றதை ஆண்டவர் உணர்கிறார். இப்பெண்மணிக்கு நலம் அளித்ததோடு, அவர் இப்பெண்ணின் மாபெரும் நம்பிக்கையைக் கண்டு வியப்படைகின்றார்.

    ‘குணமாக்கிற்று’ என்று ஆண்டவர் கூறிய வார்த்தையின் கிரேக்க மூல வார்த்தை “செஸோகன்” என்பதாகும். இது ‘நலம் பெறுதல், மீட்பு பெறுதல்’ என்ற இரு பொருள்களைத் தருகிறது. அப்படியானால், ஆண்டவர் இப்பெண்ணுக்கு உடலளவிலும், மனதளவிலும் விடுதலை அளித்ததாகக் கூறுகிறார்.

    உண்மையான இறைநம்பிக்கை இருந்தால், எப்பெரிய நோயுற்ற மனிதனாலும் நலம் பெற முடியும் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது. இப்பெண்ணுக்கு ஆண்டவர் இயேசுவைக் குறித்த அனுபவம் சார்ந்த அறிவு குறைவு. ஆனால் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையோ மிகவும் பெரிது.

    உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கும்

    பன்னிரு வருடங்களாக நோயினால் தன் செல்வங்கள் அனைத்தையும் தொலைத்தவர். பிறரால் தீட்டானவராக கருதப்பட்டு, வெறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட நிலையில் மிகவும் வருத்தத்தோடே வாழ்ந்து வந்தவர். ஆண்டவர் இயேசுவை தன் இறுதி நம்பிக்கையாகக் கருதி, அவரை நாடி வந்தார். “மகளே தைரியமாயிரு” என்று தைரியப்படுத்துகிறார். முழுமையான விடுதலைப் பெற்ற மகிழ்ச்சியுடன் கடந்து செல்கிறார்.

    நீங்களும் நெடுநாள் நோயினால் மிகுந்த வருத்தத்தோடே, பிறரால் ஒதுக்கப்பட்டவர்களாக, நேசத்துக்குரியவர்களின் வெறுப்புக்கு உள்ளானவர்களாக வாழ்ந்து வரலாம். உங்கள் நோயினிமித்தம் உங்கள் செல்வங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கலாம், கலங்காதீர்கள்! அவர் உன் நடுவினின்று நோயை அகற்றிவிடுவார் (விப 23:25) என்று நமக்கு வாக்களித்திருக்கிறார்.

    ஆதலால் நம் ஆண்டவர் இயேசுவால் உங்களை எப்பெரிய நோயினின்றும் நலம்பெறச்செய்ய முடியுமென்று விசுவாசியுங்கள். நிச்சயமாகவே நலம் பெறுவீர்கள்.

    ஆண்டவர் இயேசுவையே உங்கள் இறுதி நம்பிக்கையாக உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நான் எகிப்தியருக்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன் மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர் (விப 15:26).

    அருட்பணி. ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம்,

    உண்ணாமலைக்கடை.
    நாகர்கோவில், குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று மாலை கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தொடங்கியது.
    நாகர்கோவில், குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நேற்று மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை நடந்தது. 6.30 மணிக்கு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கொடி ஏற்றி வைத்தார். இதில் பங்கு பணியாளர் பிரான்சிஸ் போர்ஜியோ, ஊர்த்தலைவர் கென்னடி, பொருளாளர் ஆல்பிரட் ரெத்தினதாஸ், செயலாளர் டெய்சி, துணை செயலாளர் ஜான்சன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை, இரவு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    6-ந்தேதி காலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்துகொண்டு ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது.

    12-ந்தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. இதில் புன்னை நகர் பங்குத்தந்தை சாலமன் தலைமையில் அமெரிக்க அருட்பணியாளர் தாமஸ் ஜோன்ஸ் மறையுரையாற்றுகிறார். 10.30 மணிக்கு குழந்தைகளுக்கு திருமுழுக்கும், மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், ஆராதனையும் நடக்கிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட முதன்மை பணியாளர் மைக்கல் ஆஞ்சலுஸ் தலைமையில் நாகர்கோவில் பங்குத்தந்தை ஜாண்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

    13-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேரில் திருப்பலி, காலை 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் யேசு ரெத்தினம் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். 9 மணிக்கு சிறப்பு திருப்பலி, மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 8 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுளை பங்கு அருட்பணியாளர் பிரான்சிஸ் ம.போர்ஜியா தலைமையில் பங்குமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.
    நாகர்கோவில், குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தொடங்க உள்ளது.
    நாகர்கோவில், குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை நடக்கிறது. 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியேற்றி வைத்து மறையுரையாற்றுகிறார். இன்று இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை, இரவு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    6-ந்தேதி காலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்துகொண்டு ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது.

    12-ந்தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. இதில் புன்னை நகர் பங்குத்தந்தை சாலமன் தலைமையில் அமெரிக்க அருட்பணியாளர் தாமஸ் ஜோன்ஸ் மறையுரையாற்றுகிறார். 10.30 மணிக்கு குழந்தைகளுக்கு திருமுழுக்கும், மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், ஆராதனையும் நடக்கிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட முதன்மை பணியாளர் மைக்கல் ஆஞ்சலுஸ் தலைமையில் நாகர்கோவில் பங்குத்தந்தை ஜாண்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

    13-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேரில் திருப்பலி, காலை 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் யேசு ரெத்தினம் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். 9 மணிக்கு சிறப்பு திருப்பலி, மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 8 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுளை பங்கு அருட்பணியாளர் பிரான்சிஸ் ம.போர்ஜியா தலைமையில் பங்குமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்து வருகிறார்கள். 
    நாகர்கோவில், குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில், குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை நடக்கிறது. 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியேற்றி வைத்து மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை, இரவு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    6-ந்தேதி காலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்துகொண்டு ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது.

    12-ந்தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. இதில் புன்னை நகர் பங்குத்தந்தை சாலமன் தலைமையில் அமெரிக்க அருட்பணியாளர் தாமஸ் ஜோன்ஸ் மறையுரையாற்றுகிறார். 10.30 மணிக்கு குழந்தைகளுக்கு திருமுழுக்கும், மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், ஆராதனையும் நடக்கிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட முதன்மை பணியாளர் மைக்கல் ஆஞ்சலுஸ் தலைமையில் நாகர்கோவில் பங்குத்தந்தை ஜாண்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

    13-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேரில் திருப்பலி, காலை 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் யேசு ரெத்தினம் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். 9 மணிக்கு சிறப்பு திருப்பலி, மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 8 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுளை பங்கு அருட்பணியாளர் பிரான்சிஸ் ம.போர்ஜியா தலைமையில் பங்குமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.
    வாடிப்பட்டியில் உள்ள தென்மாவட்டங்களின் வேளாங்கண்ணி என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, நற்கருணை பிரார்த்தனை நடந்தது.
    வாடிப்பட்டியில் உள்ள தென்மாவட்டங்களின் வேளாங்கண்ணி என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி, நற்கருணை பிரார்த்தனை நடந்தது.

    இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்பட தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு 2018-ம் ஆண்டிற்கு நன்றி திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள் இறைதுதி பாடல்கள் பாடினர்.

    ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், நிர்வாக தந்தை ஜோசப், நேசக்கரங்கள் காப்பக தந்தை சேசுசத்தியநாதன், தந்தை கிறிஸ்டி ஆகியோர் மறை உரையாற்றினர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல பங்குமக்கள், அன்பு குழுக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
    வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகையை அடுத்த வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படும் இந்த பேராலயத்துக்கு தினமும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து மாதாவை வழிபட்டு செல்கிறார்கள். கிறிஸ்தவ ஆலயங்களில் பசிலிக்கா என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது.

    வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் புத்தாண்டு வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நேற்று புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு பேராலயத்தின் விடியற்காலை விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.



    நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் பிரார்த்தனை கூட்டம் தொடங்கியது. இதில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். நள்ளிரவு 12 மணி அளவில் தேவதாஸ் அம்புரோஸ் திருப்பலி மேடையில் வைக்கப்பட்டிருந்த திருவிளக்கை ஏற்றி புத்தாண்டு பிறப்பை அறிவித்தார்.

    தொடர்ந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டது. இதில் பேராலய அதிபர் பிரபாகர், துணை அதிபர் சூசைமாணிக்கம் பொறுப்பாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    புத்தாண்டு திருப்பலியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். புத்தாண்டு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனையையொட்டி வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வேளாங்கண்ணிக்கு வந்த பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் கடற்கரை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நள்ளிரவு நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் புத்தாண்டு வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு புத்தாண்டையொட்டி பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நள்ளிரவு நடைபெற்றது.

    முன்னதாக பேராலய நுழைவு வாயிலில் இருந்து பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் அருட்தந்தையர்கள் வழக்கமான முறைப்படி பேராலயத்தில் குழுமியிருந்து பக்தர்களின் இடையே வந்தனர். பின்னர் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ் மற்றும் அருட்தந்தையர்கள் திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து புத்தாண்டில் அனைவரும் வளமாக நலமுடன் வாழ பேராலய அதிபர் பாக்கியசாமி வாழ்த்தினார்.

    நேற்று காலை, மதியம், மாலையிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. புத்தாண்டையொட்டி பூண்டி மாதா பேராலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. புத்தாண்டு வழிபாடு ஏற்பாடுகளை பேராலய அதிபர்பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். இதைப்போல முத்தாண்டிப்பட்டி, மைக்கேல்பட்டி, மணத்திடல், சுக்காம்பார், கோட்டரப்பட்டி, மேகளத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
    ×