search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arokiya matha"

    வாடிப்பட்டியில் உள்ள தென்மாவட்டங்களின் வேளாங்கண்ணி என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, நற்கருணை பிரார்த்தனை நடந்தது.
    வாடிப்பட்டியில் உள்ள தென்மாவட்டங்களின் வேளாங்கண்ணி என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி, நற்கருணை பிரார்த்தனை நடந்தது.

    இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்பட தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு 2018-ம் ஆண்டிற்கு நன்றி திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள் இறைதுதி பாடல்கள் பாடினர்.

    ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், நிர்வாக தந்தை ஜோசப், நேசக்கரங்கள் காப்பக தந்தை சேசுசத்தியநாதன், தந்தை கிறிஸ்டி ஆகியோர் மறை உரையாற்றினர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல பங்குமக்கள், அன்பு குழுக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
    கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியில் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியில் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இதன் 33-ம் ஆண்டு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி சிறப்பு திருப்பலிகள், மறையுரைகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு திருப்பலியுடன் தங்கமகுடம் சூட்டும் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலையில் திருவிழா திருப்பலி நிறைவடைந்தவுடன் மின்அலங்கார தேர் பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நாயுடுபுரம் கன்னியர் இல்லத்தை அடைந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று பகல் சப்பர பவனி கன்னியர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு மாலையில் ஆலயத்தை அடைந்தது. அங்கு நன்றித் திருப்பலியுடன் கொடி இறக்கம் நடைபெற்றது.

    திருவிழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அடைக்கலராஜா, அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், பக்த சபையினர், அன்பியங்கள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்து இருந்தனர். 
    ×