என் மலர்
கிறித்தவம்
நெல்லையில் புத்தாண்டு நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
2019-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு பிறந்தது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பாளையங்கோட்டையில் உள்ள கத்தோலிக்க ஆலயங்கள், சி.எஸ்.ஐ. ஆலயங்களில் நள்ளிரவு 11 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை தொடங்கியது. 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஆலயங்கள் முன்பு பட்டாசு வெடித்து புத்தாண்டு பிறப்பை கொண்டாடினர்.
பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு அந்தோணியார் ஆலயத்தில் முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ் தலைமையில் புத்தாண்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் குருமட அதிபர் சேவியர் டெரன்ஸ், பங்கு தந்தை ராஜேஷ் ஆகியோர் தலைமையிலும், இலந்தைகுளம் அந்தோணியார் ஆலயத்தில் அந்தோணிகுரூஸ் அடிகளார் தலைமையிலும் புத்தாண்டு பிரார்த்தனை நடைபெற்றது.
புத்தாண்டை கொண்டா டும் வகையில் நெல்லை மாநகரில் சந்திப்பு, பாளையங்கோட்டை, டவுன் உள்ளிட்ட பெரும்பாலான பகுதியில் இளைஞர்கள் தயார் நிலையில் இருந்தனர். இரவு 12 மணிக்கு பட்டாசுகளை வெடித்து, கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதேபோல் குடியிருப்பு பகுதிகளில் குடும்பத்தினர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
புத்தாண்டு கொண்டாட் டம் முடிந்த பிறகு இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் களில் வலம் வந்து வாழ்த்துக்களை கூறியவாறு சென்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஒரு சில இளைஞர்கள் ரோட்டில் வாகனங்களில் அணிவகுத்து சென்றவாறு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதையொட்டி நெல்லை மாநகரம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நாகை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நாகை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படும் இந்த பேராலயம் அன்னை மரியின் புகழ்பரப்பும் புண்ணியதலமாக விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிடக்கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று.
பல்வேறு சிறப்புகள் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இன்று (செவ்வாய்க்கிழமை) புத்தாண்டு பிறப்பையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். அப்போது பேராலய வளாகத்தில் வானவேடிக்கை நடத்தப் படும்.
புத்தாண்டு பிறப்பையொட்டி நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களாக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பேராலயத்தை சுற்றியுள்ள செடிகளில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு பேராலயம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்கிறார்கள்.

மணலி புதுநகர் குழந்தை ஏசு ஆலய 39-வது ஆண்டு விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
மணலி புதுநகர் குழந்தை ஏசு ஆலய 39-வது ஆண்டு விழா நேற்று மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதற்காக புதியதாக ரூ.12 லட்சத்தில் முற்றிலும் பளிங்கு கற்கலால் ஆன 65 அடி உயரத்தில் கொடி மரமும், அதன் உச்சியில் குழந்தை ஏசு உருவ சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்காக பளிங்கு கற்களை வியட்நாமில் இருந்து கொண்டுவரப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் வைத்து செதுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக சென்னைக்கு கொண்டுவரப்பட்டு நேற்று ஆலயத்தில் நிறுவப்பட்டது.
கொடி மரத்தை தர்மபுரி மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயாஸ் பிரதிஷ்டை செய்து வைத்து, கொடியேற்றி வைத்தார். இதில் பங்கு தந்தை தாமஸ் இளங்கோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மண்ணுலகு சார்ந்தவற்றை மட்டுமே நாடாமல் விண்ணுலகு சார்ந்தவற்றையும் நாட இறை அருளை வேண்டி ‘‘வானகத்திலுள்ள எங்கள் தந்தாய் உமது அரசு வருக’’ என மன்றாடுவோம்.
இயேசு இறையாட்சி பணியைத் தொடங்கியபோது விண்ணரசின் மாட்சியைப்பற்றி பறைசாற்றத் தொடங்கினார். அக்கால யூத சமுதாயத்தில் செல்வாக்குடன் செயல்பட்டுக் கொண்டிருந்த வெளி வேடக்காரர்களான மறைநூல் அறிஞரும், பரிசேயரும் தங்கள் சுயநலம் தழுவிய போதனைகளால் அப்பாவி மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தனர். அந்த எளிய மக்களை இறையாட்சிக்குள் கொண்டுவர அவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் இயேசு விண்ணரசு பற்றிய பல உவமைகளை எடுத்துக் கூறினார். ஒரு உவமையில் இறைவன் விதை விதைப்பவராக உருவகப்படுத்தப்படுகிறார். பலதரப்பட்ட மக்கள் மனதில் இறை வார்த்தை விதைக்கப்படுகிறது.
பாதையோரத்தில், பாறை நிலத்தில், முட்செடிகள் நடுவில் விழுந்த விதைகள் பலன் தராமல் போவதுபோல் தடுமாறும் மனம் கொண்ட மக்கள் இறை வார்த்தைகளை கேட்டும் பயனற்று போகின்றனர். விண்ணரசை சார்ந்தவர் நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு சமமானவர்கள். இவர்கள் இறை வார்த்தைக்கு செவிமடுத்து அதை செயலாற்றுபவர்; அதனாலேயே இறை அரசுக்குள் வந்துவிடுபவர். இப்படித்தான் விண்ணரசு விரிவடைகிறது. கடவுளைத்தவிர உலகில் மற்றவை மனதை ஆதிக்கம் செலுத்துமேயானால் விண்ணரசுக்குள் நுழைய இயலாது. இன்னொரு உவமையில் கோதுமை பயிரிடப்பட்டது. இரவில் பகைவன் வந்து களைகளை விதைத்துவிட்டான்.
கூலியாட்கள் வந்து நிலக்கிழாரிடம் தெரிவித்தபோது அவர் அறுவடை காலம் வரை களைகளை வளர விட்டு அறுவடை காலத்தில் அவற்றைக் கட்டாக கட்டி நெருப்பில் போடலாம் என்றார். இறையாட்சியில் நல்லவர்களோடு தீயவரும் இருப்பர். நன்மையும், தீமையும் இணைந்தே இருக்கும். பொறுமையுடன் கடவுள் தீமைகளை சகித்துக் கொள்கிறார். ஆனால், இறுதி காலத்தில் தீமை அழியும் நன்மை வெல்லும் என்பதை இயேசு எடுத்துக் கூறுகிறார். விண்ணரசுக்கு ஒப்பிட்டுக்கூறிய மற்றுமொரு உவமையில் கடுகு விதை மிகச் சிறியதாயினும் முளைத்தபின் மற்ற செடிகளைவிட பெரிதாகும் என்றார். இறையாட்சி படிப்படியாக விரிந்து பரந்து அனைத்துலக மக்களையும் அரவணைத்துக் கொள்ளும் என்பதையே இது குறிக்கின்றது.
நிலத்தில் மறைந்திருந்த புதையலை கண்டவரும் விலை உயர்ந்த முத்தைக் கண்ட வணிகரும் தங்களுக்கு உள்ளதையெல்லாம் விற்று நிலத்தையும் முத்தையும் வாங்கிக்கொண்டதாக கூறப்படும் உவமையில் புதையலும், முத்தும் விண்ணரசுக்கு ஒப்பாகும் என்கிறார். நாம் பெறும் நல்ல வாய்ப்புகளை, இறை அனுபவங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நம்மிலும் பிறரிலும் இறையாட்சி வளர நாம் காரணமாக இருப்போம். மனம் மாறுங்கள் விண்ணரசு நெருங்கி விட்டது என்னும் இயேசுவின் குரலுக்கு செவிமடுப்போம். மண்ணுலகு சார்ந்தவற்றை மட்டுமே நாடாமல் விண்ணுலகு சார்ந்தவற்றையும் நாட இறை அருளை வேண்டி ‘‘வானகத்திலுள்ள எங்கள் தந்தாய் உமது அரசு வருக’’ என மன்றாடுவோம்.
- கூட்டப்புளி சல்வதோர் விக்டர்

நமது செயல்கள் பயனற்ற செயல்களாக இல்லாமல் இருக்க வேண்டும்எனில், நமது வாழ்க்கை இறைவனைப் பிரதிபலிக்கும் உயிருள்ள வாழ்க்கையாய் இருக்க வேண்டும்.
ஆதி மனிதர்கள் ஆதாமும், ஏவாளும் இறைவனின் வாக்கை மீறிய பாவத்துக்காக இறைவனின் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுக்கு காயீன், ஆபேல் என இரண்டு புதல்வர்கள் பிறக்கின்றனர்.
காலங்கள் கடந்தன. ஒரு நாள் இருவரும் காணிக்கை கொண்டு வந்தனர். அதை விவிலியம் இவ்வாறு சொல்கிறது:
“காயீன் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான். ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார். ஆனால் காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான்.” (ஆதியாகமம் 4:3-5)
இருவருமே காணிக்கை கொண்டு வந்தார்கள், ஒன்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒன்று நிராகரிக்கப்படுகிறது.
ஒரு செயல் எப்போது பயனற்ற செயலாக மாறுகிறது?, சிந்தனையும், செயலும் நேர்கோட்டில் இல்லாத போது செயல்கள், பயனற்ற செயல்களாகின்றன என சுருக்கமாய் சொல்லலாம்.
‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ என இயேசு போலித்தனத்தின் மீது படுத்துறங்கிய நபர்களைப் பார்த்துக் கூறினார். அதாவது வெளிப்பார்வையில் அழகு, உள்ளிலோ உயிரற்ற தன்மை.
காயீன், ஆபேல் காணிக்கை அளிக்கின்ற விஷயங்களிலும் இந்த சிந்தனையைப் பொருத்திப் பார்க்கலாம்.
1. காயீன் மூத்தவன், ஆபேல் இளையவன். எனினும் இருவரும் ஒரே நேரத்தில் காணிக்கை எடுத்துக் கொண்டு வருகின்றனர், என்கிறது பைபிள். வழக்கப்படி காயீன் தான் முதலில் பலி செலுத்தத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இருவருமே காணிக்கை செலுத்த ஒரே நேரத்தில் வருகின்றனர்.
ஒருவேளை காணிக்கை செலுத்த வேண்டும் எனும் ஆசை ஆபேலுக்கு தோன்றியிருக்கலாம். எனவே காயீனும் வேறுவழியின்றி காணிக்கை செலுத்த வந்திருக்கலாம்.
இன்னொருவர் செய்கிறார் என்பதற்காக அதை பிரதியெடுக்க முயல்கின்ற செயல்களெல்லாம் பயனற்ற செயல்களாகவே இருக்கும். அது மனிதர்களைப் பிரியப்படுத்தும் வீணான முயற்சியே.
2. காயீனின் காணிக்கை கடமைக்கானது. நிலத்தின் பயனிலிருந்து அவன் காணிக்கை கொண்டு வந்தான். செழிப்பானவற்றைக் கொண்டு வந்தான் என்றோ, பெரியவற்றைக் கொண்டு வந்தான் என்றோ பைபிள் குறிப்பிடவில்லை. “சிலவற்றை” என்கிறது.
ஆபேலோ கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வருகிறான். தன்னிடம் இருப்பதில் சிறந்ததைத் தரவேண்டும் எனும் இயல்பான எண்ணம் ஆபேலிடம் இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஏதோ ஒன்றைக் கடமைக்காகக் கொடுப்பது பயனற்ற செயல், இருப்பதில் சிறந்ததைக் கொடுப்பதே இறைவன் எதிர்பார்க்கிற செயல்.
3. காயீன் முதற்பலனைக் கொடுக்கவில்லை. ஆபேலோ தலையீற்றைக் கொடுக்கிறான். ‘தலையீறு’ என்பது விவிலியம் முழுவதும் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இன்றைய வாழ்வோடு ஒப்பிடுகையில் நமது வாழ்க்கையில் எவையெல்லாம் முதன்மையானவையாக இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
ஏதோ ஒன்றைக் கொடுப்பதும், ஏனோ தானோ எனக் கொடுப்பதும் பயனற்ற செயலின் சான்றுகள்.
4. காணிக்கை கொடுக்கவேண்டும் எனும் கட்டாயம் காயீனுக்கு பயத்தின் விளைவாய்க் கூட வந்திருக்கலாம். பூமியில் ‘பிறந்த’ முதல் மனிதன் அவன். அவனுடைய காணிக்கை இறைவன் மீதான பயத்தின் காரணமாக வந்திருக்கலாம். ஆபேலுக்கு இறைவன் மீதான அன்பினால் காணிக்கை கொடுக்கும் மனம் உருவாகியிருக்கலாம்.
பயத்தின் விளைவாகவோ, பிறருடைய கட்டாயத்தின் விளைவாகவோ வெளிப்படும் செயல்களெல்லாம் பயனற்ற செயல்களே.
5. “இவ்வளவு கொடுத்தும் எனக்கு அங்கீகாரம் இல்லையா?” எனும் எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கியது காயீனின் காணிக்கை. தன்னை இறைவன் நிராகரித்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எவ்வளவோ செய்திருக்கிறேன் என கணக்கு பார்த்து செய்கின்ற செயல்கள் பயனற்ற செயல்களாகவே முடியும்.
6. காயீனும் ஆபேலும் ஒரே நாளில் பலி செலுத்த வருவது, காயீன் காணிக்கை கொடுக்க தாமதித்தான் எனபதையே காட்டுகிறது.
இறைவனுக்குக் கொடுக்க தாமதம் செய்வது என்பது உள்ளார்ந்த விருப்பத்தோடு செய்யவில்லை என்பதன் அடையாளம். தயக்கம் சுயநலத்தின் வெளிப்பாடு.
நமது செயல்கள் தயக்கத்தோடும், தாமதத்தோடும், முழு விருப்பமின்றியும் வரும் போது அது பயனற்ற செயல் ஆகிவிடுகிறது.
7. நமது வாழ்க்கை இறைவனுக்கு பிரியமான வாழ்க்கையாய் இருக்கும் போது தான் நமது காணிக்கைகளும் இறைவனுக்குப் பிரியமானதாய் மாறுகிறது. நமது காணிக்கைகளுக்காக நம்மை இறைவன் ஏற்பதில்லை. நம்மை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாகத் தான் காணிக்கையை ஏற்றுக் கொள்கிறார்.
“காணிக்கை செலுத்த வரும் முன் சகோதரனோடு ஒப்புரவாகச் சொல்கிறார் இயேசு”.
காரணம் இது தான். நமது வாழ்க்கை இறைவனை விட்டு விலகிச் சென்றால் எந்த ஒரு காணிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அது கொழுத்த தலையீறுகளானாலும் சரி.
நமது செயல்கள் பயனற்ற செயல்களாக இல்லாமல் இருக்க வேண்டும்எனில், நமது வாழ்க்கை இறைவனைப் பிரதிபலிக்கும் உயிருள்ள வாழ்க்கையாய் இருக்க வேண்டும்.
சேவியர், சென்னை.

இயேசு கிறிஸ்து மண்ணகத்தில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து மரித்தது எல்லாமே மானுட மீட்புக்குக்காகத்தான்.
‘மீட்பு’ என்பதற்கு உண்மையான பொருளே ‘முழுமையான விடுதலை’ என்பது தானே?
‘உறவுக்குக் கை கொடுத்தார், மக்கள் உரிமைக்குக் குரல் கொடுத்தார், அன்புக்கு ஒளி கொடுத்தார், உலக அமைதிக்கு வழி வகுத்தார், மீட்புக்கு உயிர் கொடுத்தார், இறை ஆட்சிக்கு விதை விதைத்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்’ என்கிறது யோவான் 3-வது அதிகாரம் 14-17 வசனங்கள்.
இறைத்தூதராக மண்ணில் பிறப்பெடுத்த இயேசு அரச குலத்திலேயே அவதரித்திருக்க முடியும். ஆனால், ஆடம்பர வாழ்க்கைச் சிந்தனையில் இருந்து மக்களை மீட்பதற்காகத்தான், ஏழைப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். எளிய மனிதர்களின் தோழனாகவும் வாழ்ந்து காட்டினார்.
அறியாமை இருளிலிருந்து மீண்டு, மனிதர்கள் ஞான ஒளி பெறவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டவே, குறுக்குப் புத்தியுடன் கேள்வி கேட்ட சதுசேயர்களுக்கும், பரிசேயர்களுக்கும் தனது 12-வது வயதிலேயே ஆலயத்தில் வைத்து பதிலடிகொடுத்தார்.

தான் யூதகுலம் என்ற உயர்குடியில் பிறந்தாலும் அடிமைத் தளையிலிருந்து, மனிதர்களை மீட்டெடுக்கவே ஒடுக்கப்பட்ட புறவினத்தாரோடும், ஒதுக்கி வைக்கப்பட்டத் தொழுநோயாளிகளோடும் நெருங்கிப் பழகி இயைந்த வாழ்க்கை நடத்தினார்.
இறைவன் உறையும் ஆலயத்தை வியாபாரிகளிடமிருந்து மீட்கவே அன்று கோவிலைச் சந்தையாக்கிய அந்த கொள்ளையர்களுக்கு சாட்டையடி கொடுத்து சரித்திரம் படைத்தார் இயேசு கிறிஸ்து.
பகைமை, வெறுப்பு வேற்றுமைகளில் இருந்தெல்லாம் மனித குலத்தை மீட்டு, அவர்களிடையே அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை தழைக்கச் செய்யத்தானே அன்று மலைப்பிரசங்கம் முழங்கினார்.
மலைப்பிரசங்கம் வழியாகப் பொதுவுடமைச் சிந்தாந்தத்தை முழங்கிய முதல் புரட்சியாளன் இயேசு கிறிஸ்து தான் என்பதை யாரும் மறுக்க முடியுமா?
பசியிலிருந்தும், பட்டினியிலிருந்தும் மனிதர்களை மீட்கவே அன்றொரு நாள் அப்பத்தையும், மீனையும் ஆசீர்வதித்து அதை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளிக்கச் சொன்னார்.
அவரது பிறப்பு இயற்கை அமைத்த ஒரு குகையில். இறப்பு இயற்கையினால் கிடைத்த சிலுவை மரத்தில். ஞானஸ்நானம் யோர்தான் நதியில். தனது சீடர்களைத் தேர்ந்தெடுத்தது கடற்கரையில் தான்.
கெத்சேமெனித் தோட்டத்தில் தான் ஜெபித்தார். கெடுதலான அலகையை மலையில் தான் சபித்தார். வானத்துப் பறவைகளைப் பார்க்கச் சொன்னார். வளர்ந்து நிற்கும் நெற்கதிரை நோக்கச் சொன்னார்.
இயற்கைப் பேரழிவிலிருந்து உலகை மீட்கவே, இயற்கையை நேசித்து அவற்றோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார் இயேசு.
அநீதிகள், அக்கிரமங்களின் பிடியிலிருந்து நீதியையும், நேர்மையையும், நியாயத்தையும் மீட்கத்தானே, அன்று அதிகாரத்தின் உச்சத்திலிருந்த பிலாத்து அரசன் கன்னத்தில் அறைந்தபோது, நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யவில்லையெனில் ஏன் என்னை அறைந்தாய் என்று போர்க்குரல் எழுப்பினார்?.
கயவர்களின் நயவஞ்சகங்களைச் சந்திக்கிறபோது, பொறுமை உணர்வை மீட்டெடுக்கவே கொடூரமான முள் முடியையும், அவமானகரமான சிலுவைச்சாவையும் ஏற்றுக்கொண்டார், நம்மைப் பாவங்களிலிருந்து மீட்க.
இதைத்தான் எசாயா 53:4-6 வசனங்களில் ‘அவர் நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
குறைந்த வயதிலேயே மரணத்தை எய்தினாலும், குறிக்கோள் மாறாத ஆன்மிக நாயகனாகவும், உயர்ந்த சமூகப்போராளியாகவும் குவலயத்தில் வாழ்ந்து காட்டி விட்டுப் போனவர் இயேசு கிறிஸ்து.
எனவே அவர் காட்டிய மீட்பின் வழி நடப்போம். அனைத்து ஆனந்தங்களையும் பெறுவோம்.
கவிஞர் எல்.பிரைட், தேவகோட்டை.

பெண் விடுதலையை மீட்டெடுக்கவே, ஓர் விபசாரப் பெண்ணை அவர் முன் நிறுத்தி, தண்டனை வழங்கக் கோரிய பரிசேயர்களுக்கு, ‘உங்களில் பாவம் செய்யாதவன், இவள் மீது கல் எறியட்டும்’ என்று கண்டனம் தெரிவித்தார்.

அருமனையில் கிறிஸ்துமஸ் கலாசார ஊர்வலம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.
அருமனையில் 21-வது கிறிஸ்துமஸ் விழா கடந்த 19-ந்தேதி தொடங்கி நேற்று வரை 5 நாட்கள் நடந்தது. 19-ந்தேதி மாநில அளவில் இறகு பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது. 22-ந்தேதி மாலையில் நடந்த விழாவில் திரைப்பட இயக்குனர் சந்திரசேகர் கலந்து கொண்டு பேசினார்.
கிறிஸ்துமஸ் கலாசார ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் சிங்காரி மேளம் உள்பட 60-க்கும் மேற்பட்ட கலைக்குழுக்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். புண்ணியம் சந்திப்பில் இருந்து புறப்பட்ட கலாசார ஊர்வலம், சிறப்பு விருந்தினர்களுடன் நெடியசாலை, பனிச்சவிளை, அருமனை சந்திப்பு, நெடுங்குளம் சந்திப்பு வழியாக மேலத்தெருவில் உள்ள விழா மேடையை அடைந்தது. முன்னதாக அங்கு பாடல் போட்டிகள் நடந்தது.
கிறிஸ்துமஸ் விழா மாநாடு இரவு நடைபெற்றது. இதற்கு அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். தலைவர் டென்னிஸ், பொருளாளர் கென்னத், துணை தலைவர் ஜோஸ் செல்வன், இணை செயலாளர் சி.டி.அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பென்சாம் வரவேற்றார்.
இதில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெங்கின்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அருமனை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக விழாவுக்கு வந்த டி.டி.வி. தினகரனுக்கு குமாரகோவில் சந்திப்பில் ஜெங்கின்ஸ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்.
லூக்கா 18: 9 முதல் 14 வரை
தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:
“இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.
பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’
ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.” இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
இயேசு இந்த உவமை எதற்கானது என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறார். “தாங்கள் நேர்மையானவர்கள் என நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும்” சிலரைப் பார்த்தே இயேசு இதைச் சொல்கிறார்.
இங்கே ஆலயத்துக்குச் செல்பவர்கள் இருவர். ஒருவர் பரிசேயர். பரிசேயர்கள் கடவுளின் சட்டத்தை அறிந்தவர்கள். அதைத் தவறாமல் பின்பற்றுகிறோம் எனும் மமதை உடையவர்கள். தாங்கள் இறைவனின் சொந்த பிள்ளைகள் எனும் கர்வம் உடையவர்கள். மத ரீதியான செயல்களைச் செய்தால் போதும் நிலை வாழ்வு நிச்சயம் என கருதிக் கொண்டவர்கள். தங்களுடைய செயல்களுக்கான பலனைத் தரும் கடமை இறைவனுக்கு உண்டு என இறைவனை வியாபாரியாக்குபவர்கள்.
இரண்டாமவர் வரிதண்டுபவர் அல்லது ஆயக்காரர். அவர் பாவி என மக்களால் இகழப்பட்டவர்கள். அவர்கள் ரோம அரசுக்காக தன் இன மக்களிடமே வரி வசூலிக்கும் சூழலில் தள்ளப்பட்டவர்கள். அவர்கள் நேர்மையற்றவர்களாகவும், சமூகத்தில் இழி நிலையில் உள்ளவர்களாகவும் கருதப்பட்டவர்கள்.
பரிசேயர்கள் சமூகத்தில் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர்கள். அவர் மீது மக்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவர்கள் ஆன்மீகத்தில் பெரியவர், ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றெல்லாம் மக்கள் கருதிக் கொண்டிருந்தவர்கள்.
வரிதண்டுபவரோ சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர். புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருப்பவர். மக்களால் நிராகரிக்கப்பட்டவர். பாவி என மக்களால் நம்பப்பட்டவர்.

மனிதனின் நடத்தைக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய இயேசுவின் பிறந்த தினம், கிறிஸ்துமஸ் என்ற பெயரில் உலக அளவில் கொண்டாடப்படுகிறது.
உலகத்தின் தோற்றம் முதல் இதுவரை குறிப்பிட்ட காலகட்டங்களில் பல்வேறு வகைப்பட்ட தலைவர்கள், மேதைகள் உருவாகி வருவதை பார்த்து வருகிறோம். அரசியல், ஆன்மிகம், விஞ்ஞானம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் மிளிர்ந்து மக்களுக்கான கருத்துகளை இவர்கள் அளித்து வந்துள்ளனர். ஆனால் அவர்களின் பல கருத்துகள் காலம் மாறும்போது நாளடைவில் நிலைக்காமல் போய்விட்டன.
உலகத்தில் இதுபோன்ற தலைவர்களின் பிறப்பு இயல்பானதாகத்தான் இருந்தன. புத்திகூர்மை, அறிவுத்திறன் போன்றவற்றால் இடைக்கால வாழ்க்கையில் தான் அவர்கள் உயர்ந்தனர். மறையும்போது பல தலைவர்களின் பெயர் மங்கியும், குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டதாகவும் தான் இருக்கின்றன.
இதுபோன்ற தலைவர்களின் வரிசையில் ஆன்மிகக் கருத்துகளை வழங்கியவர் தான் இயேசு என்ற பரவலான தவறான கருத்து உலகம் முழுவதும் நிலவிக்கொண்டிருக்கிறது. சிறப்பு குணங்களால் மேம்பட்டு, மனிதர்கள் நடுவில் தலைவராக ஜொலிப்பவர்களின் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் அல்ல இயேசு.
ஏனென்றால், இறைவனின் மகனான அவர், மக்களுக்கு ஆன்மிகத்தை போதிப்பதற்காக மனிதர்களுக்குள் ஒரு மனிதனாக பூமியில் இறைவனால் அனுப்பப்பட்டவர். அதற்காக கன்னியின் வயிற்றில் கருவாகவே வைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பு, இடைப்பட்ட வாழ்க்கை, இறப்பு ஆகிய மூன்றுமே மொத்த உலகத்தையும் அதிரச் செய்வதாக இருந்தன, இருக்கின்றன.
இறைவனின் மகனாக இருப்பதால், பூமியில் பிறந்த மனிதர்கள், ஞானிகள், தலைவர்கள், பிரமுகர்களின் உபதேசங்கள் இயேசுவுக்குத் தேவையில்லாமல் இருந்தன. இறைவனின் சித்தத்தை அறிந்து இயேசு செயல்பட்டாரே தவிர, வேறு யாரிடமும் சென்று ஞானம் பெற அவருக்கு அவசியம் இருந்ததில்லை.
சரீரத்தில் இருந்து பிரிந்த பிறகு ஆத்மாவுக்கு கிடைக்கும் அடுத்த வாழ்க்கையை நல்லிடத்தில் சேர்ப்பதற்கு மனிதனுக்கு என்ன வழி இருக்கிறது? என்பதை மனித குலத்துக்கு போதிப்பது ஒன்றுதான் இறைசித்தமாயும், அது ஒன்றுதான் தனது வாழ்நாளின் நோக்கம் என்பதையும் உணர்ந்து இயேசு வாழ்க்கை நடத்தினார்.
எனவே செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை போன்ற உலக சம்பந்தப்பட்ட எதையும் அவர் நாடவில்லை. இவற்றின் மீது நாட்டம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தனது வாழ்க்கை சூழ்நிலைகளையும் அதற்கேற்றபடி திட்டமிட்டு அமைத்துக் கொண்டார்.
அதாவது, பூங்காக்கள், தோட்டங்கள், மலையோரங்கள் என மற்றவர்களின் பார்வைக்கு மறைக்கப்படாத இடங்களில் தங்கினார். மக்களுக்கு போதிப்பதில் அதிக நேரம் செலவிட்டார். எங்கு, எதைப்பேச வேண்டும் என்பதை அளந்து பேசினார். யார் மீதும் அரசியல் விமர்சனங்கள், அநியாய குற்றச்சாட்டுகளை அவர் வைக்கவில்லை. அதாவது, உலக இயல்பு நிலையில் இருந்து மாறி வாழ்ந்து காட்டினார்.
செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை போன்ற அம்சங்கள் அனைத்துமே மனிதனின் சரீரத்தை ஈர்ப்பவையாக உள்ளன. ஆனால் அவற்றில் வைக்கப்பட்ட சோதனைகளையும் சரீரத்தில் இருந்த நிலையிலும் இயேசு தடுமாறாமல் வென்றார். ஏனென்றால், அவரது நோக்கம் மனிதகுல மீட்பு என்ற ஒன்றில்தான் உறுதியாக இருந்தது. அந்த நோக்கத்துக்கு முரணான எதையும் அவர் விரும்பவில்லை.
ஒவ்வொரு மனிதனுக்கு ஆசை காட்டி, அதன் மூலம் சரீரத்தையும் நெருக்கி, பாவங்களுக்குள் விழச்செய்யும் செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை ஆகிய அம்சங்களுக்கு மனிதர்களும் தன்னைப்போல தப்ப முடியும் என்பதையும், தங்களின் ஆத்மாவை அடுத்த நல்வாழ்க்கைக்கு தன்னைப்போல தயார் செய்துகொள்ள முடியும் என்பதையும், நல்லொழுக்க செயல்பாட்டின் மூலம் செய்துகாட்டியவர் இயேசு.
எனவேதான் மரணமும் அவரை மேற்கொள்ளவில்லை. அவரை நம்பி பின்பற்றுபவனின் சரீரமும் நல்வாழ்வை அடைவதற்காக மகிமையின் சரீரமாக உயிர்ப்பிக்கப்படும் என்பதும் அவர் உயிர்த்தெழுந்த பிறகு நடந்தது.
ஆனால், உலகுக்கு போதிப்பதை அப்படியே தனது வாழ்க்கையில் செய்து காட்டியவர்கள் எவரும் இல்லை. பல்வேறு போதனையாளர்கள், தத்துவ மேதைகள், ஞான சொற்பொழிவாளர்களின் சொந்த மற்றும் அந்தரங்க வாழ்க்கை சுத்தமாக இருந்ததில்லை.
மனிதனின் நடத்தைக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய இயேசுவின் பிறந்த தினம், கிறிஸ்துமஸ் என்ற பெயரில் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்தநாளை கொண்டாடும்போது, அவரது வாழ்க்கையோடு நமது வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியம். அவரது திட்டமிட்ட வாழ்க்கையை நாம் அமைத்திருக்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும்.
முதலில், இறைவன் சித்தத்தின்படி அவர் கொடுத்த அம்சங்களைத் தாண்டி வேறு எதையும் சம்பாதிக்க அவசியம் இல்லை என்பதை வாழ்க்கையின் உறுதியான தீர்மானமாக கொண்டிருந்தார். இரண்டாவதாக, அந்தத் தீர்மானத்திற்கேற்றபடியான வாழ்க்கை முறையை இயேசு அமைத்துக் கொண்டார். இந்த இரண்டும்தான், இந்த பூமிக்கு அவர் அனுப்பப்பட்டதற்கான இறைசித்தத்தை முழுமையாக நிறைவேற்ற அடிப்படையாக அமைந்திருந்தன.
இயேசுவுக்கு குடும்ப வாழ்க்கையை இறைவன் அனுமதிக்கவில்லை. எனவே அதை இறைவனிடம் அவர் கேட்கவும் இல்லை. அதை நாடி அவர் செல்லவும் இல்லை. பணக்கார வாழ்க்கையையும் இயேசுவுக்கு இறைவன் தரவில்லை. எனவே அதையும் இயேசு நாடிச் செல்லவில்லை. அதாவது, தனக்கென்று இல்லாததை அவர் திரும்பிக்கூட பார்த்ததில்லை.
நாமும் இதே பாதையில் செல்கிறோமா? ஊழியம் செய்துவிட்டு வேறெதையும் எதிர்பார்க்கிறோமா? இறைவன் அமைத்துத் தந்துள்ள வாழ்க்கைக்கு ஏற்ப நாம் வசதிகளை அமைத்துக்கொள்கிறோமா? மற்றவர்களைப் பார்த்தோ, ஆசைப்பட்டோ கூடுதல் வசதிகளை (ஆடம்பரம்) அடைய ஆசைப்படுகிறோமா? அதை அடைவதற்காக செய்த பாவங்கள் என்னென்ன? இதனால் ஆத்மாவின் எதிர்காலத்தை நாம் எந்த அளவில் தொலைத்திருக்கிறோம்? தொலைத்திருந்தால் அதை மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதையெல்லாம் கிறிஸ்துமஸ் பண்டிகை காலகட்டத்தில் அனைவருமே சிந்தித்து பார்க்க வேண்டும். இதில் சிந்தனை இல்லாமல் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையினால் ஆத்மாவுக்கு பலனில்லை.

இயேசுவை நம் வாழ்வில் நாம் அனுமதிக்கும் போது நிச்சயமாக அவர் போதுமான பலத்தை நமக்கு தருவார். னைத்து துயரங்களில் இருந்தும் நம்மை விடுவிப்பார்.
நற்செய்தியில் இயேசுவை அன்பு செய்து அவரை பின்பற்றியது, பெத்தானியாவில் இருந்த மரியா, மார்த்தா, லாசர் என்பவர்களின் குடும்பம். இவர்கள் இயேசுவின் சீடர்களாக, நண்பர்களாக விளங்கினார்கள். ஆண்டவரே, உன் நண்பர் லாசர் நோயுற்று இருக்கின்றார் என்று இயேசுவுக்கு செய்தி மட்டுமே அனுப்பப்பட்டது. இயேசு அவர்களை அன்பு செய்ததால், நட்போடு பெத்தானியாவுக்கு சென்றார். ஆனால் அதற்குள் லாசர் இறந்து நான்கு நாள் ஆயிற்று.
இயேசுவை கண்ட லாசரின் சகோதரிகள் அழுது புலம்பினார்கள். அவர்களின் துயரத்துக்கு செவி சாய்த்து, அவர்களோடு அழுது, துக்கத்தில் தோள் கொடுத்து, உள்ளம் குமுறி நொந்தார் இயேசு. இதுதான் அவருடைய அன்பு. இறைத்தந்தையால் நாம் வாழ்வு பெற அனுப்பப்பட்ட ஆண்டவர், நமக்கு செவிசாய்த்தார். நாம் விடுதலை பெற நமக்காக கண்ணீர் சிந்தினார். நம் பாவங்களுக்காக அவர் காயப்பட்டார்.
இயேசுவின் நண்பனாக இருக்க, லாசர்களாக, நெருக்கமானவர்களாக நம்முடைய செயல்பாடுகள் மாற வேண்டும். லாசரின் கல்லறை கல்லை அப்புறப்படுத்தி, அவரை உயிர்த்தெழ செய்தார் இயேசு. ஆனால் நாம் கோபம், ஆணவம், பொறாமை உள்பட பல்வேறு காரணங்களால் பலருக்கு கல்லறை கட்டி, அவர்கள் வாழ்வை இழக்க காரணமாக இருக்கின்றோம்.
இயேசுவை நம் வாழ்வில் நாம் அனுமதிக்கும் போது நிச்சயமாக அவர் போதுமான பலத்தை நமக்கு தருவார். அத்துடன் பலருக்கு நாம் கட்டிய கல்லறைகளின் கல்லை அப்புறப்படுத்த துணை புரிவார். அனைத்து துயரங்களில் இருந்தும் நம்மை விடுவிப்பார். எனவே, இத்தவக்காலத்தில் மட்டுமல்ல என்றுமே இயேசுவின் நண்பனாக வாழ நாம் முற்படுவோம்.
அருட்பணி. அ.ஜோசப் செல்வராஜ், முதன்மை செயலாளர்,
திண்டுக்கல் மறைமாவட்டம்.

ஒவ்வொரு உயிர்ப்பு விழாவும் நம்மில் சில, பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாமும் இயேசுவோடு உயிர்ப்போம்.
இன்று இறைமகன் இயேசு மகிமையோடும் வல்லமையோடும் உயிர்த்தெழுந்த உயிரிப்புப் பெருவிழாவினை உலகனைத்தும் வாழ் கிறிஸ்தவ மக்கள் பெரு அக்களிப்போடு கொண்டாடுகின்றார்கள். சாவின் நின்று உயிர்த்து எழுதல் என்பது இறைவன் ஒருவரால் மட்டும் நிகழ்த்தக் கூடிய இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சி. மானிட இனமானது பாவத்தில் வீழ்ந்து, சாவு, மரணம் என்ற சாபத்திற்கு ஆளானதால் இறைமகன் இயேசு தமது அற்புதமான உயிர்ப்பினால் சாவை வென்று வெற்றி வாகை சூடி மீண்டும் நமக்கு நித்திய பேரின்ப வாழ்வின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்தார். இதன் மூலம் சாவை வென்ற சத்தியனானார்
இன்று இறைமகன் இயேசு மகிமையோடும் வல்லமையோடும் உயிர்த்தெழுந்த உயிரிப்புப் பெருவிழாவினை உலகனைத்தும் வாழ் கிறிஸ்தவ மக்கள் பெரு அக்களிப்போடு கொண்டாடுகின்றார்கள்.
உயிர்ப்புப் பெருவிழாவினைக் காணவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடவுமே கடந்த நாற்பது நாட்களாக நாம் நோன்பிலிருந்து மாபெரும் ஆயத்தம் செய்தோம்.
உயிர்ப்பு இல்லையென்றால் சிலுவைக்கு எவ்வித அர்த்தமும் இல்லாமல் போய்விட்டிருக்கும். இயேசு வல்லமையோடு உயிர்த்தெழுந்தார். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் தாங்கள் பறை சாற்றிய நற்செய்திகள் யாவுமே பொருளற்றதாய் போயிருக்கும் என்று புனித பவுல் கூறுகிறார். ஒழிந்திருக்கும்.
இன்று நம் திருமறையானது உயிர் வாழ்கின்றனதென்றால், அதற்கு இயேசுவின் உயிர்ப்பே மூலகாரணம்.
சாவின் நின்று உயிர்த்து எழுதல் என்பது இறைவன் ஒருவரால் மட்டும் நிகழ்த்தக் கூடிய இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சி. மானிட இனமானது பாவத்தில் வீழ்ந்து, சாவு, மரணம் என்ற சாபத்திற்கு ஆளானதால் இறைமகன் இயேசு தமது அற்புதமான உயிர்ப்பினால் சாவை வென்று வெற்றி வாகை சூடி மீண்டும் நமக்கு நித்திய பேரின்ப வாழ்வின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்தார். இதன் மூலம் சாவை வென்ற சத்தியனானார்.
மத, இன, மொழி, நிற வேறுபாடின்றி மனுக்குலம் மீட்படைய தம்மையே கல்வாரியில், சிலுவையில் தியாகப் பலியாக்கி முன்னர் அவர் உரைத்தபடியே மூன்றாம் நாள் உயிர்த்த அவரின் அற்புதச் செயல் நம் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.
இயேசுவின் உயிர்ப்பு அவராலேயே முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதொன்றாகும்.
“மானிட மகன் மக்களின் கையில் ஒப்படைக்கப்பட இருக்கிறார். அவர்கள் அவனைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்டு மூன்று நாட்களுக்கு பின் அவர் உயிர்த்தெழுவார். (மாக் 9 : 31)
கல்லறை மேட்டினின்று ‘உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே’ என்று கூறி தன் உயிர்த்தெழுதலின் அடையாளமாக இறந்த லாசாரை எழுப்பினார் இயேசு. “இத் தேவாலயத்தை இடித்துப் போடுங்கள். மூன்று நாட்களில் கட்டியெழுப்புவேன்” என்று கூறிய பொழுது தன் உடலாகிய பேராலயத்தையே அவர் குறிப்பிட்டிருந்தார்.
தெய்வத் திருமகனாலன்றி வேறெவராலும் இப்படிக் கூற முடியாது.
இயேசுவின் உயிர்ப்பு நமக்கெல்லாம் ஒரு முக்கியமான மறையுண்மையாகும். இயேசு உயிர்த்து விட்டார் என்ற செய்தியைக் கேட்ட அவர் கல்லறைக்கு வந்த பெண்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். தெய்வத் திருமகன் பிறந்தவுடன் வான தூதர் இடையர்களுக்குத் தோன்றி மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவித்தனர்.
இயேசுவின் பிறப்பைப் போலவே அவரது இறப்பும், உயிர்ப்பும் நமக்கு மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாகும்.
ஒவ்வொரு உயிர்ப்பு விழாவும் நம்மில் சில, பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாமும் இயேசுவோடு உயிர்ப்போம். அன்புள்ளம், தியாக உள்ளம், பிறருக்குத் தன்னையே அளிக்கும் உள்ளம் வளர வேண்டும்.

எனக்கன்பானவர்களே, கர்த்தருடைய கிருபையினால் உங்களுக்காக ஜெபத்தோடு எழுதுகிறேன். இதில் எழுதப்பட்டுள்ள அத்தனை வார்த்தைகளும் உங்களுக்காகவே என எடுத்துக்கொள்ளுங்கள்.
எனக்கன்பானவர்களே, கர்த்தருடைய கிருபையினால் உங்களுக்காக ஜெபத்தோடு எழுதுகிறேன். இதில் எழுதப்பட்டுள்ள அத்தனை வார்த்தைகளும் உங்களுக்காகவே என எடுத்துக்கொள்ளுங்கள். அந்த வகையில் ‘உங்களை அழைக்கும் தேவன்’ என்ற செய்தியை கர்த்தர் உங்களுக்கு தந்திருக்கிறார்.
இறைவனின் அழைப்பு
‘நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும் பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்.’ (II தெச.2:14)
தேவனுடைய பிள்ளையே, இந்த அழகிய உலகில் நீங்களும் நானும் ஒரே ஒரு முறைதான் பிறக்கிறோம். இவ்வுலகில் ஏராளமான மார்க்கங்களும், மதங்களும் உள்ளன. இருந்தாலும், வெற்றி, சமாதானம், நம்பிக்கை, விடுதலை, ஆரோக்கியம், எல்லாவற்றுக்கும் மேலாக நாம் மரித்த பிறகும் பரலோகத்தில் ஆண்டவரோடு நித்திய காலமாய் வாழ்கிற வாழ்க்கை என இத்தனை ஆசீர்வாதங்களையும் கொண்டது தான் கிறிஸ்தவ மார்க்கமாகும்.
இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 130 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இத்தனை பெரிய தேசத்தில், நீங்கள் ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவினால் அழைக்கப்படுவது மாபெரும் ஆசீர்வாதமாகும். அதே வேளையில் கடவுள் நம்மை அழைத்ததின் நோக்கத்தை நாம் அனைவரும் அறிய வேண்டும்.
பாவமன்னிப்பு
தெசலோனிக்கேயர்க்கு பவுல் எழுதும்போது ‘இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்’ என எழுதுகிறார். நீங்கள் தேவனிடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான அற்புதம் இரட்சிப்பு ஆகும். ‘இரட்சிப்பு’ என்ற வார்த்தை ‘மனந்திரும்புதல்’, ‘பாவமன்னிப்பின் நிச்சயம்’, ‘மறுபடியும் பிறப்பது’ என கூறலாம்.
இந்தச் செய்தியை நீங்கள் வாசிக்கும் இவ்வேளையில் உங்களுக்கு இரட்சிப்பின் அனுபவம் உண்டா? என்ற கேள்வியை நீங்களே கேட்டுப்பாருங்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு பெரிதான இரட்சிப்புக்காக இயேசு ரத்தம் சிந்தினார். அவருடைய ரத்தத்தால் நம்முடைய பாவங்கள் முற்றிலும் கழுவப்படுவதற்குப் பெயர்தான் இரட்சிப்பு அல்லது மனந் திரும்புதல்.
ஆண்டவர் உங்களோடு பேசுகிறார்
ஒரு வேளை நீங்கள் இயேசுவை அறியாத நபராக இருந்தால் இந்த கட்டுரையின் வழியாக ஆண்டவர் உங்களோடு பேசுகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அல்லது நீங்கள் ஒரு கிறிஸ்தவ நபராக இருந்தால் ‘நான் என் பாவங்களை எல்லாம் அறிக்கையிட்டு, இயேசுவின் ரத்தத்தினால் கழுவப்பட்டு, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனா?’ என்று கேள்வி கேட்டுப்பாருங்கள்.
நாம் கிறிஸ்தவர்களாகப் பிறந்தபடியினாலும், கிறிஸ்தவ ஆலயங்களுக்குச் செல்லுகிறபடியினாலும் பரலோக பாக்கியமடையலாம் என நினைத்துவிடக்கூடாது. நம் அருமை ஆண்டவர் சிந்திய விலையேறப்பெற்ற ரத்தத்தால் பாவங்களை அறிக்கையிட்டு கழுவப்பட அர்ப்பணிக்க வேண்டும்.
உலக இன்பங்கள்
சிலர் இவ்விதமாய் நினைக்கிறார்கள், அதாவது வேலை செய்கிறேன், பணம் சம்பாதிக்கிறேன், வீடு வசதிகளோடு வாழ்ந்து வருகிறேன். பிறருக்கு விரோதமாய் எந்த தவறான காரியங்களையும் செய்யவில்லை. அனுதினமும் சந்தோஷமாகத் தான் இருக்கிறேன்.
அன்பானவர்களே, இவ்வுலக இன்பங்களுக்கு பெயர் சிற்றின்பமாகும். உங்கள் நடத்தையைக்கெடுக்கும் அனைத்து போதைகளும் பெயர் சிற்றின்பமாகும். அதாவது இதனால் நீங்கள் பெறும் இன்பம் நிரந்தரமற்றதாகும்.
அதே வேளையில் நம் அருமை ஆண்டவர் கொடுக்கிற சந்தோஷம் நிரந்தரமாகும். அதற்குப் பெயர் பேரின்பம் என வேதம் கூறுகிறது.
பேரின்பம்
உங்களை ஆண்டவர் ஒரு நோக்கத்தோடு அழைத்திருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள். இப்படிப்பட்ட இரட்சிப்பு என்று சொல்லப்படுகிற பேரின்பத்தைப் பற்றி ஒரு முறை கூட கேள்விப்படாத பல கோடி மக்கள் இந்தியாவில் உலகத்தை விட்டே போய் விட்டார்கள்.
இன்னும் பல கோடி மக்கள் உண்மையுள்ள ஜீவிக்கிற இயேசுவை அறியாமல் வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே உங்களை அழைக்கிற தேவன் உங்களுக்குக் கூறும் அன்பான அழைப்பு உலக சிநேகத்திற்கும், சிற்றின்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து ஆண்டவராகிய இயேசுவை நம்புங்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பேரின்பத்துடன் வாழ்ந்து சுகமாயிருப்பீர்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
சகோ.ஜி.பி.எஸ்.ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்,
சென்னை-54.