search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித செபஸ்தியாரை நோக்கி ஜெபம்
    X

    புனித செபஸ்தியாரை நோக்கி ஜெபம்

    செபஸ்தியாரே நான் மகா பலவீனனும், புண்ணியத்தில் திடனற்றவனுமாயிருப்பதால் தேவரீர் என்மேல் இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடாகிலும் நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும்.
    அஞ்ஞானிகளால் உபாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் ஆறுதல் செய்யவும் வேதசாட்சி முடிபெறவும் போர்ச்சேவகரான புனித செபஸ்தியாரே, என்பேரில் இரக்கமாயிரும். ஆகாதவனுடைய மரணத்தை விரும்பாமல், அவன் குணப்பட விரும்பும் சர்வேசுரன்; பாவிகள் மனந்திரும்பவும், நீதிமான்கள் பரிசுத்தப்படவும், வைசூரி, பேதி  பெருவாரியான காய்ச்சல் முதலிய வியாதிகளை அனுப்பினாலும், சிலவிசை முன் பாடுபட்டுப் பேறடைந்த புனிதர்களுடைய வேண்டுதலாலே உபத்திரப் படுகிறவர்களுடைய துன்பநாளில் அவர்களுக்கு ஆறுதலை கட்டளையிடுகிறாரென்று நான் அறிந்திருக்கிறபடியால் இந்த வியாதியில் உமது சகாயத்தைக் கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபுரியில் உம்முடைய பேரால் பீடம் எழுப்பியபின் வி:க்காய்ச்சல் நீங்கினதென்று நான் அறிந்திருக்கிறேன்.

    தியோக்கிளேசியான் அரசனுக்குப் பயப்படாமல் பெரிய வேதசாட்சியான புனித செபஸ்தியாரே! இந்த உபத்திரவமான வியாதியில் என்னைக் கைவிடாதேயும். ஏன் பாவங்களுக்காக வந்த நோயை நான் பொறுமையோடே பொறுக்க வேண்டியதுதான், சுவாமியின் கைப்பாரம் என்மேல் சுமத்தப்பட்டது நானோ வெகுபலவீனன், காற்றால் அடிக்கப்பட்ட சருகுபோலிருக்கிறேன். கடலில் கிடக்கும் துரும்புபோல் தத்தளிக்கிறேன். தேவனுடைய கோபத்தைத் தாங்க நான் வல்லவனல்லவே, நான் குடிக்க வேணுமென்று சர்வேசுரன் மனதாயிருக்கிற இந்த துன்பப்பாத்திரத்தை நான் வீரம் பொருந்திய பொறுமையோடு குடிக்க எனக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்ளும். என் கேட்டுக்காக அல்ல, என் நலத்திற்காகவே சர்வேசுரன் என்னைத் தண்டிக்கிறார். காயப்படுத்துகிறவரும், குணமாக்குகிறவரும் அவரேதான். நல்ல நாளில் சர்வேசுரனை நேசிக்கிறது போல துன்ப நாளிலும் அவரைச் சிநேகிக்கக் கடவேன். நான் இந்த வியாதியில் அலையுண்டு கலங்காதபடிக்கு, இந்த கசப்பான பாத்திரத்தை சந்தோசமாய் , அவர் திருக்கரத்திலிருந்து வாங்கிக் குடிக்க எனக்கு வேண்டிய தைரியத்தை பெற்றுத் தந்தருளும்.

    ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மனுமக்களை மறவாத சர்வேசுரன் வைசூரி, பேதி, காய்ச்சல் முதலிய வியாதிகளையும், தந்திரம், போர், பஞ்சம் முதலிய பெரிய துன்பங்களையும் பட்சத்தினால் வரவிடுகிறார் என்று நாங்கள் அறிந்திருந்தும் ஏன் அவர் பேரில் முறைப்படுவேன்? ஆகையால் புனித செபஸ்தியாரே! இந்த வியாதி சீக்கிரம் குணமாகச் சர்வேசுரன் சித்தமாயிராவிட்டால், நான் அதை நல்ல மனதோடு பொறுக்க எனக்குத் தைரியத்தையாகிலும் தர மன்றாடும். என் பாவங்களின் பரிகாரத்துக்காக இன்னும் அதிக நோய்களும், துன்பங்களும் வரவேண்டுமென்று நான் ஆசிக்க வேண்டியதுதான். ஆர்ச்சிய:;டவர்களே துன்பதுரித நோய்களை ஆசித்திருக்கப் பாவியாகிய நான் நித்தய பாக்கியமடைய நோய் வருத்தங்களை ஆசிக்காமலிருக்கக் கூடுமோ? ஆனால் புனித செபஸ்தியாரே நான் மகா பலவீனனும், புண்ணியத்தில் திடனற்றவனுமாயிருப்பதால் தேவரீர் என்மேல் இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடாகிலும் நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும். – ஆமென்.
    Next Story
    ×