search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா 29-ந்தேதி தொடங்குகிறது
    X

    முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா 29-ந்தேதி தொடங்குகிறது

    வள்ளியூர் அருகே முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா இன்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய திருத்தலங்களில் முத்துலாபுரம் புனித செபஸ்தியார் திருத்தலமும் ஒன்றாகும். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் சைவத் திருத்தலம் என அழைக்கப்படும் இத்திருத்தலத் திருவிழா இன்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. புனித செபஸ்தியார் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை தூத்துக்குடி மறை மாவட்ட பி‌ஷப் இவான் அம்புரோஸ் ஜெபம் செய்து கொடியேற்றுகிறார்.

    அதனைத் தொடர்ந்து சிறப்பு மாலை ஆராதனை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. பிப்ரவரி 4-ந்தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு 9 மணிக்கு புனித செபஸ்தியாரின் தேர்ப்பவனி நடைபெறுகிறது.

    5-ந் தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் அமலிவனம் அமலதாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இத்திருப்பலியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. இரவு 6.30 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறுகிறது. வள்ளியூர் அன்புச்செல்வன் மறையுரை வழங்குகிறார்.

    6-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு கோட்டாறு மறைமாவட்ட மேதகு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கலர் வாணவேடிக்கையும், கேரள புகழ் ஜெண்டா மேளமும், இரவு 12 மணிக்கு புனித செபஸ்தியாரின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.

    இப்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள். 7- தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு அழகப்பபுரம் நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடைபெறும் ஆடம்பர கூட்டுத்திருப்பலியில் சொக்கன் குடியிருப்பு மைக்கேல் ஜெகதீஷ் மறையுரையாற்றுகிறார்.

    பின்னர் மாலை ஆராதனையும் அதனைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா டோனால்சன், கணக்கர் அருள் ஜெபஸ்தியான், பங்கு தந்தை மணி அந்தோணி மற்றும் முத்துலாபுரம் இறை மக்கள் செய்துவருகின்றனர்.
    Next Story
    ×