என் மலர்
கிறித்தவம்
உவரி அந்தோணியார் ஆலய திருவிழாவில் மாலை ஆராதனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர்.
தென் தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க திருத்தலங்களில் நெல்லை மாவட்டம் உவரி அந்தோணியார் ஆலயம் பழமையும், பெருமையும் வாய்ந்தது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி கொடியேற்றினார். திருவிழா தொடர்ந்து நடைபெற்றது.
விழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், மாலையில் மறையுரையும் நடந்தது. 11-ம் திருநாளான கடந்த சனிக்கிழமை இரவு புனித அந்தோணியார் உருவ சப்பர பவனி நடந்தது. நேற்று முன்தினம் மாலை பெருவிழா மாலை ஆராதனையை, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக அந்தோணியாருக்கு உப்பு, மிளகு, மாலை, மெழுகுவர்த்தி ஆகியவற்றை நேர்ச்சை கடனாக செலுத்தினர்.
13-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பெருவிழா கூட்டு திருப்பலியை, மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் நடத்தி வைக்கிறார். தொடர்ந்து மலையாளத்தில் திருப்பலி, மாலையில் திவ்ய நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் தோமினிக் அருள்வளன், ஷபாகர், திருத்தொண்டர் வில்லியம், திருத்தல நிதிக்குழு, பணிக்குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும். (மார்க் 11:24)
இப்பூவுலகில் வாழ்கின்ற மாந்தர் கூட்டம் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு விதமான சூழ்நிலைகளை கடந்து செல்ல நேரிடுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் துக்கத்தின் நாட்களும் உண்டு, சந்தோஷத்தின் நாட்களும் உண்டு, கண்ணீரின் நாட்களும் உண்டு, களிப்பின் நாட்களும் உண்டு, வியாதிபட்ட நாட்களும் உண்டு, சுகமான நாட்களும் உண்டு. கடன் வாங்கும் நாட்களும் உண்டு, கடன் கொடுக்கும் நாட்களும் உண்டு. இப்படி கூறிக்கொண்டே போகலாம்.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே இப்படிப்பட்ட சூழல்களை ஒவ்வொரு மனிதனும் சந்திக்க நேரிடுகிறது. இதைத்தான் திருமறை கூறுகிறது, ‘ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலம் உண்டு. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு, நட ஒரு காலமுண்டு, நட்டதை பிடுங்க ஒரு காலமுண்டு. இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு. அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு. புலம்ப ஒரு காலமுண்டு, நடனமாடி மகிழ ஒரு காலமுண்டு’.
ஆம், நம் வாழ்க்கை பயணத்தில் இவைகள் நியமிக்கப்பட்டவைகள். ஆக ஒரு மனிதன் இருளின் காலம், வெளிச்சத்தின் காலம் இந்த இரண்டையும் சந்திக்க நேரிடுகிறது.
இருளின் காலத்தை உண்டு பண்ணி நம் வாழ்க்கையில் வியாதி, வறுமை, கடன், இழப்பு, வேதனை, உபத்திரவம், தனிமை, சோர்வு, பயம் இப்படிப்பட்ட காரியங்களை கொண்டு வருகிறவன் சாத்தான் அல்லது பிசாசு.
வெளிச்சத்தின் காலத்தை உண்டு பண்ணி செழிப்பு, சமாதானம், ஆரோக்கியம், ஜெயம், சந்தோஷம், ஐஸ்வர்யம் இவற்றைக் கொடுக்கிறவர் தேவன். அந்த தேவன் மனுக்குலத்தில் சுக வாழ்விற்காக இயேசு கிறிஸ்துவாக பெத்லேகேமில் பிறந்து கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தார். சிலுவையிலே சாத்தானுடைய தலையை நசுக்கினார்.
சாத்தானின் வல்லமையை சிலுவையிலே அழித்து அவன் அதிகாரத்தை ஒழித்தார். அவரை நம்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் புதிய வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தார். புது நம்பிக்கையை உருவாக்கினார். சமாதானமற்று கிடக்கும் மனுகுலத்திற்கு சமாதானம் கொடுக்கும் சமாதானப் பிரபு அவர். அவரை நோக்கி வேண்டிக்கொள்ளும் மானிடனின் நோயை போக்கும் பரிகாரி அவர். அவரை நோக்கி பார்க்கும் முகம் பிரகாசமடைகின்றன. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற மெய்யான ஒளி அவர் (யோவான் 1:9).
இன்றைக்கு நீங்கள் எப்படிப்பட்ட காலத்தில் ஜீவிக்கிறீர்கள். கண்ணீரோடும், துக்கத்தோடும், வேதனையோடும் காணப்படுகிறீர்களா? கவலைப்படாதிருங்கள். உங்களுக்கு உதவி செய்ய அருள்நாதர் இயேசு இருக்கிறார். ‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று இயேசு திருவுள்ளம் பற்றியிருக்கிறார். (மத்தேயு 11:28).
ஆம், உங்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும், நம்பிக்கை உண்டாகும். சோர்ந்து போகாதிருங்கள். உங்களுக்கு நன்மை செய்யும் தெய்வம் உண்டு, அவர்தான் இயேசு.
யவீரு என்னும் மனிதன் தன் மகளின் மரணப்படுக்கை மாற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினார். அவனுடைய மகள் பூரண சுகம் பெற்றாள். (என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள். (மத்தேயு 9:18)
அன்னாள் என்பவள் தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக்கொண்டாள். ஒரு அழகான ஆண் குழந்தையை கடவுள் ஈவாகக் கொடுத்தார். (மனநிறைவோடு செல், இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வார், 1 சாமுவேல் 1:17)
பேதுரு என்னும் பக்தன் கடலில் மூழ்கும் வேளையில் தன் ஆபத்து நேரத்தில் கடவுளை நோக்கி கதறிக்கூப்பிட்டான். அவன் ஆபத்திலிருந்து தேவன் அவரை கை தூக்கி விட்டார்.
(அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்றார் மத்தேயு 14:29)
உங்களையும் கை தூக்கிவிட உங்கள் தேவைகளை சந்திக்க, குறைகளை நிறைவாக்க, உங்களை நேசிக்கிற அன்பு தெய்வம் அருள்நாதர் இயேசு உண்டு. அவர் நிச்சயமாகவே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து உங்களுக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கட்டளையிடுவார். ஆம், கர்த்தரை நம்புங்கள் அப்பொழுது சித்தி பெறுவீர்கள்.
“உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும். (மார்க் 11:24)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
சகோ சி. சதீஷ், வால்பாறை.

பைபிளின் மிக முக்கியமான நூலான ‘யோசுவா’ நூலை எழுதியவர் யோசுவா என்பது மரபுச்செய்தி. அவரது மரணமும் அதற்குப் பின்பான நிகழ்வுகளும் மட்டும் பிறரால் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.
மோசேவின் மறைவுக்குப் பிறகு, இஸ்ரயேல் மக்களை யோசுவா தலைமையேற்று வழிநடத்தினார். எகிப்திலிருந்து கானானை நோக்கி நாற்பது ஆண்டுகள் மோசே வழிநடத்தினார். கானானுக்குள் நுழையும் முன் மோசே இறைவனால் எடுத்துக் கொள்ளப்பட்டார்.
இப்போது யோசுவா மக்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அப்போது அவருக்கு வயது 85. மக்கள் மோசேயை மதித்தது போலவே யோசுவாவையும் மதித்தார்கள்.
யோர்தான் ஆற்றைக் கடந்து கானானுக்குள் செல்ல வேண்டும். நதி கரைபுரண்டு ஓடுகிறது. கடவுளின் அருளினால் யோசுவா, யோர்தானை இரண்டாகப் பிரித்து நடுவில் வழி தோன்றச் செய்தார். அதைக் கடந்து மக்கள் கானான் நாட்டுக்குள் சென்றார்கள்.
பைபிளின் மிக முக்கியமான நூலான ‘யோசுவா’ நூலை எழுதியவர் யோசுவா என்பது மரபுச்செய்தி. அவரது மரணமும் அதற்குப் பின்பான நிகழ்வுகளும் மட்டும் பிறரால் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.
முதன்மைக் குரு எலியேசர், அல்லது அவரது மகன் பினகாசு இந்த நூலின் சில பகுதிகளை எழுதியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சில ஆய்வாளர்கள், இந்த நூல் யோசுவாவின் காலத்துக்கும், சுமார் 800 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டது என்கின்றனர்.
யோசுவா, மோசேயோடு இணைந்து பயணித்தவர். எகிப்தின் அடிமை நிலையை வாழ்ந்து அனுபவித்தவர். மோசேயின் இறைநம்பிக்கையையும், கடவுளை மகிமைப்படுத்தும் செயல்களையும் அருகில் இருந்து அறிந்தவர். செங்கடலை, இறைவன் மோசே மூலம் இரண்டாய் பிளந்ததை நேரில் பார்த்தவர். மோசேயின் நம்பிக்கைக்கும், பிரியத்துக்கும் உரிய நபராக இருந்தவர். அதனால் தான் மோசேக்குப் பின் யோசுவா தலைவர் என்பதை மக்கள் சட்டென ஒத்துக்கொண்டனர்.
‘நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான யுத்தம்’ என சுருக்கமாக இந்த நூலைப் பற்றிச் சொல்லி விடலாம். கடவுள் தன்னைவிட்டு விலகிச்சென்று, வேறு தெய்வங்களை வழிபட்ட மக்களை அழிக்கிறார். தன்னை நம்பியிருப்போரைக் காக்கிறார் எனும் செய்திகள் இதில் ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழையும் பாக்கியத்தை, ஆபிரகாமோ, மோசேயோ பெறவில்லை. ஆனால் அது யோசுவாவுக்குக் கிடைக்கிறது. யோசுவா இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்தார். அவருடைய வாழ்நாளில் இஸ்ரயேல் மக்கள் பல்வேறு வெற்றி களைப் பெற்றனர்.
யோசுவா மக்களை 25 ஆண்டுகள் வழிநடத்தி தனது 110-வது வயதில் இறைவனை அடைந்தார்.
யோசுவா நூலுக்கு, ‘வெற்றிகளின் நூல்’ என்றொரு பெயர் உண்டு. இயேசுவின் பெயருக்கு இணையான பெயர் இந்த யோசுவா என்பது.
மொத்தம் 24 அதிகாரங்கள் கொண்ட இந்த நூலில் 658 வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
“நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” (யோசுவா 24:15) எனும் வசனம் மிகப்பிரபலமான வசனம்.
யோசுவாவிடம் காணும் இறைநம்பிக்கையும், அசைக்க முடியாத விசுவாசமும் வியக்க வைக்கிறது. மாபெரும் எரிகோ கோட்டையை ஆர்ப்பரித்தே வீழ்த்தி விடலாம் என இறைவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டார் யோசுவா. ஆறு ஏக்கர் அளவுக்கு விரிந்து பரந்திருந்த கோட்டை இடிந்து விழுந்தது. இந்த நிகழ்வு பழைய ஏற்பாட்டின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
இந்த நூலில் யோசுவா 31 அரசர்களோடு போரிட்டு அவர்களை இறைவனின் அருளால் வென்ற நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. கடவுள், அழிக்கும் தேவன் என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், அவர் வாக்கு மாறாதவர், பாவங்களை வெறுப்பவர் என்பதே புரிந்துகொள்ள வேண்டிய பாடமாகும்.
எகிப்தில் அடிமைகளாய் இருந்த மக்கள் இப்போது கானானிலுள்ள மக்களை வென்று அந்த இடத்தை தங்களுடைய இடமாக மாற்றிக்கொள்கின்றனர்.
ஒரு யுத்தத்தின் போது சூரியன் மறையாமல் முழுநாளும் ஒளிகொடுத்துக் கொண்டிருந்த அதிசய நிகழ்வும் யோசுவாவின் நூலில் காணப்படுகிறது. யோசுவா நிகழ்த்திய பல்வேறு யுத்தங்களும் அதன் காலங்களும் பின்னர் வரலாற்று ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“விலைமகளான இராகாபு ஒற்றர்களை நன்கு வரவேற்று, கீழ்ப்படியாதவரோடு அழியாது தப்பித்துக்கொண்டதும் நம்பிக்கையினால்தான்” என் புதிய ஏற்பாடு குறிப்பிடும் இராகாப் யோசுவாவின் காலத்தைய பெண்மணி. இஸ்ரயேலருக்கு உதவி செய்தவர். அவருடைய இறை நம்பிக்கை இன்றளவும் வியப்புடன் பார்க்கப்படுகிறது.
கடவுளால் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டுக்குள் நுழைவதும், அங்கே போரிட்டு நாட்டை தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வதும், நாட்டைப் பகிர்ந்து அளிப்பதும், மக்களுக்கு யோசுவா போதனைகள் வழங்குவதும், பின்னர் அவர் விடைபெறுவதும் என நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளன.

அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில், புனித லூர்து அன்னை திருவிழா நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில், புனித லூர்து அன்னை திருவிழா நடந்தது. இதையொட்டி பங்குமக்கள் எரியும் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி ஜெபமாலை ஜெபித்து, பாடல்கள் பாடி பவனியாக வந்தனர்.
இந்த பவனி மேல்நிலைப்பள்ளி சாலை, மெயின் ரோடு, பார்க் தெரு, கோவில் தெரு வழியாக நடந்தது. பின்னர் பாளையங்கோட்டை மறைமாவட்டம் கே.டி.சி. நகர் பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில் திருப்பலி நடந்தது.
இதில் பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை மைக்கிள் ராயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடவுளோடு இணைந்த வாழ்வு வாழ முற்படுவோம். தன்னலம் துறந்தவர்களாய், எதையும் இழக்கத் துணிந்தவர்களாய், காரணங்கள் கூறி காலந்தாழ்த்தாமல் கடவுளைப் பின்பற்றுவோம்.
திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்ட பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்காக கலிலேயாவிற்கு வந்தார். அங்கு கலிலேயா கடலோரமாகச் சென்றபோது சீமோன் பேதுருவையும், அவர் சகோதரனான அந்திரேயாவையும் கண்டார்.
இருவரும் மீனவர்கள். இவர்கள் மீன்களைப் பிடிப்பதற்காக கடலில் வலைகளை வீசிக்கொண்டிருந்த பொழுது, இறைமகன் இயேசு அவர்களைப் பார்த்து, ‘என் பின்னே வாருங்கள் நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்’ என்றார்.
உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
பின்னர், சிறிது தூரம் போகவே யாக்கோபையும், அவர் சகோதரனான யோவானையும் கண்டார். இருவரும் செபதேயுவின் குமாரர்கள். இவர்களும் மீனவர்கள். இவர்கள் மீன்பிடிக்கப் போகிறதற்கு ஆயத்தமாக படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆண்டவர் இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தகப்பன் செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின்சென்றார்கள்.
முதல் சீடர்களை அழைத்தல்
நற்செய்தி மறைபரப்பு பணியின் வழியாக இறையரசின் வருகையைக் குறித்து இறைமகன் இயேசு மக்களுக்கு எடுத்துரைக்கிறார். இறையரசைப் பற்றிய அறைகூவலுக்குப் பின்பு, தன்னைப் பின்பற்ற அழைப்பு விடுவிக்கிறார். இது நற்செய்தியின் முக்கிய பாகம் சீடத்துவம் என்பதை வெளிப் படுத்துகிறது.
கலிலேயாக் கடல் என்பது சிலரால் ஏரி என அழைக்கப்படுகிறது. ஆனால், பாலஸ்தீன கிறிஸ்தவ மரபில் கடல் என உள்ளதால் மாற்கு நற்செய்தியாளரும் அதனையேப் பின்பற்றினார்.
இறைமகன் இயேசு சீடர்களை அழைத்த வரலாற்றைப் பார்க்கையில் அழைக்கப்பட்டவர்கள் ஆண்டவருக்கு முன்பின் அறிமுகமற்றவர்கள் போல் தோன்றுகிறது. இது இயேசுவுக்கு மனிதர் மேல் இருந்த அளவற்ற அதிகாரம் எவ்வித கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுவதே இப்பகுதியின் சிறப்பாகும்.
என் பின்னே வாருங்கள்
மீன் பிடிக்கிறவர்கள் மனிதரைப் பிடிக்கிறவர்களாகும்படி அழைக்கப்படுகின்றனர். ‘பின்னே வாருங்கள்’ என்பது சீடத்துவத்தின் முக்கியத் தொடர் ஆகும்.
யூத ரபிமார்கள் தங்களது சீடர்கள் பின்வர அழைப்பு விடுத்தனர். இது இந்திய சமயங்களிலுள்ள குரு, சீடர் உறவினைக் குறிக்கும். திருச்சபையின் ஆரம்பம் இதுவே.
‘மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன்’ (எரேமியா 16:16) என்ற தொடரை பழைய ஏற்பாட்டிலும் காணலாம். சீடர்களின் வாழ்வில் ஏற்படும் மனந் திரும்புதலை இப்பகுதி சித்தரிப்பதாகும்.
பேதுரு, அந்திரேயா இருவரும் தனது சொந்த வருமானம் தரும் பணியினை விட்டுவிட்டு குருவாகிய இயேசு தரும் பணியினை மேற்கொள்கின்றனர்.
யோவான், யாக்கோபு இருவரும் பேதுரு, அந்திரேயாவை விட அதிகமான செல்வம் உடையவர்கள் போல் தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் தங்கள் வலைகளையும், படகுகளையும் மட்டுமல்ல, கூலியாள்களோடு தங்களுடைய தந்தையையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றுகின்றனர் (மாற்கு1:20).
இதன் மூலம் சீடர்கள் வேறுபாடின்றி அனைவரும் இயேசுவைப் பின்பற்றுவதில் வெளிப்படுத்திய தியாகத்தைக் காணலாம்.
பின்பற்றுதலின் முறைகள்
1. சிலுவையை எடுத்துக்கொண்டு பின்பற்றுதல்: தம்மிடம் வந்த மக்களிடம் இயேசு, ‘என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்’ (லூக்கா 9:23) என்கிறார்.
2. உைடமைகளை பகிர்ந்துவிட்டு பின்பற்றுதல்: ஆண்டவர் இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வரான இளைஞரிடம் இயேசு, ‘நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்’ என்றார் (மத்தேயு 19:21).
3. உடனடியாகப் பின்பற்றுதல்: இறைமகன் இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்களிடம் இயேசு, ‘என்னைப் பின்பற்றி வாரும்’ என்கிறார். ‘என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன்’ என அனுமதி கேட்டவரிடம் இயேசு, ‘கலப்பையில் கை வைத்த பின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல’ என்கிறார் (லூக்கா 9:62).
பின்பற்றுதலின் ஆசிகள்
‘நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?’, என்று கேட்ட சீடர்களிடம் ஆண்டவர் இயேசு, ‘புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரவேல் மக்களின் பன்னிரு குலத்தவருக்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணையில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாய் உங்களுக்கு சொல்லுகிறேன்’ என்றார் (மத்தேயு 19:27,28).
கடவுளைப் பின்பற்றுவோம்
மனிதனின் வாழ்க்கைத்தரமும், வசதி வாய்ப்புகளும் உயர உயர சுயநலமும், ஆடம்பரத்தின் மீதான மோகமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. பணம், பதவி, பொருள் அனைத்தும் மனித வாழ்விற்கு அவசியமானதே.
ஆனால், இவை யாவும் நம்மிடம் நிலைப்பதில்லை. இவைகளை கடவுளுக்கு மேலாகக் கருதுவதும், இந்த ஆசைகளை விட்டுவிட முடியாமல் இறுகப் பற்றிப்பிடித்துப் பின்பற்றுவதும் நமக்கு கடவுள் அருளிய ஆசீர்வாத வாழ்வை கேள்விக்குறியாக்கி விடும்.
கடவுளோடு இணைந்த வாழ்வு வாழ முற்படுவோம். தன்னலம் துறந்தவர்களாய், எதையும் இழக்கத் துணிந்தவர்களாய், காரணங்கள் கூறி காலந்தாழ்த்தாமல் கடவுளைப் பின்பற்றுவோம்.
‘நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப் போல் ஆகுங்கள்’ (எபேசியர் 5:1).
அருட்பணி.ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.

மதுரை புதூர் லூர்து அன்னை ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை புதூர் தூய லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கொடியேற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தினமும் காலையிலும், மாலையிலும் நவநாள் சிறப்பு திருப்பலி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நற்கருணை பவனி நடந்தது.
இந்தநிலையில், நேற்று தக்கலை மறை மாவட்ட ஆயர் ராஜேந்திரன் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. திருச்சி சலேசிய மாநில தலைவர் அந்தோணி ஜோசப் முன்னிலை வகித்தார்.
இதனை தொடர்ந்து அன்னையின் தேரானது பூக்களால், அலங்கரிக்கப்பட்டு தேர் பவனி நடந்தது. சந்தன மாதா கோவில் தெரு, சிங்காரவேல தெரு, மாரியம்மன் கோவில் தெரு, பாரதியார் மெயின்ரோடு, அழகர்கோவில் ரோடு வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாதாவிற்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தாஸ்கென்னடி, உதவி பங்கு தந்தையர் மார்சல் லிங்கன், பிரவின், சூசைஅடிமை, அஸ்வின் மற்றும் பலர் செய்துள்ளனர்.

கிறிஸ்துவில் அன்பானவர்களே, இந்த வருடம் முழுவதும் ஆசீர்வாதத்தின் வருடம். அவர் நடத்தும் வழிகள் யாவும் செழிப்புள்ளதாக அமையும். ஆசீர்வாதத்திற்கு தடையாக இருக்கும் காரியங்களை நீக்கிப்போடுவார்.
வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர். உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது (சங்.65:11)
கிறிஸ்துவில் அன்பானவர்களே, இந்த வருடம் முழுவதும் ஆசீர்வாதத்தின் வருடம். அவர் நடத்தும் வழிகள் யாவும் செழிப்புள்ளதாக அமையும். ஆசீர்வாதத்திற்கு தடையாக இருக்கும் காரியங்களை நீக்கிப்போடுவார். நமக்கு நடக்கும் பல காரியங்கள் தீமைபோன்று தோன்றலாம். இறுதியில் நன்மையாகவே முடியும்.
தேவனிடத்தில் உண்மையாய் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது. நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் சம்பூரணமாய்க் கொடுக்கிறார். வானத்திலிருந்து மழையையும், பனியையும், செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தருகிறார். பூமியின் ஆகாரத்தினாலும், தண்ணீரினாலும், காற்றினாலும் ஆசீர்வதித்து, வருடம் முழுவதும் எல்லா ஆசீர்வாதத்திலும் நம்மை நடத்துவார். அவர் நன்மை செய்கிறவராயும், அனைவரின் வியாதிகளை குணமாக்கும்படியாக கிருபை செய்தார்.
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார், அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (மத்.6:26)
ஆகையால் எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று உங்கள் சரீரத்தில் கவலைப்படாதிருங்கள். காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளர்ந்து மலரையும் வாசனையும் கொடுக்கிறது என்று கவனித்துப் பாருங்கள். ஆகாயத்து பட்சிகளை போஷிக்கும் தேவன் தினமும் உன்னைப் போஷியாமல் இருப்பாரோ? அவர் பார்வைக்கு ஆகாயத்து பட்சிகளை விட நீ விசேஷித்தவன் அல்லவா?
எல்லா ஜீவன்களின் கண்களும் இறைவனையே நோக்கிக் கொண்டு இருக்கிறது. பூமியில் உள்ள மிருக ஜீவன்களும், ஜீவராசிகள் அனைத்தையும் போஷிக்கும்விதம் அற்புதம். ஏற்ற வேளையிலே உணவு கொடுக்கிறார். அவர் ஆவியை அனுப்பும்போது அவைகள் அனைத்தும் சிருஷ்டிக்கப்படும். அவர் கொடுக்க, வாங்கிப் புசிக்கும். தம்முடைய கையைத் திறக்க, நன்மையால் திருப்தியாகும்.
பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர் வகைகளையும் முளைப்பிக்கிறார். (சங்.104:14)
கர்த்தர் பூமியை விசாரித்து அதற்கு மழைநீர் பாய்ச்சுகிறார். பூமியிலே தண்ணீரை நிறைத்து செழிப்பாக்குகிறார். மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்களை முளையச்செய்து, தானியத்தை விளைவிக்கிறார்.
பூமியிலே எல்லாருக்கும் எல்லா விதமான ஆகாரம் உண்டாகும் படி ஆசீர்வதிக்கிறார். எல்லா தானியத்திலிருந்தும் உணவு வகைகளை தருகிறார். உலகத்தில் உள்ள எல்லா ஜனங்களையும் போஷிக்கிறார்.
நாளைய தினம் போஜனத்திற்காய், உடைக்காய் ஏன் கவலைப்படுகிறாய்? அருள்நாதர் உன் தேவையை முன் கூட்டியே அறிந்திருக்கிறார். தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார். உன் நாவில் இருந்து சொல் பிறவாததற்கு முன்னே உன் தேவை எது என்று அறிந்திருக்கிறார்.
தகப்பனைப் போன்று அன்பு உள்ள பிதா நம்பேரில் கரிசனையுடையவராக இருக்கிறார். தம்மை முழுவதுமாக அர்ப்பணித்தவர்களின் காரியங்களை அவரே பார்த்துக்கொள்வார். எல்லா மனிதருடைய இருதயங்களையும் ஆராய்ந்து நமது நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறவர்.
பரம தேவனின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து எல்லோரையும் பார்க்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறது.
கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். (உபா.28:8)
நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார். உனக்கு பரிபூரண நன்மை உண்டாகத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தைத் திறப்பார். நீ குடியிருக்கும் இடத்தில் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மிருக ஜீவன்களின் பலனும் ஆசீர்வாதமாக இருக்கும்.
நீ போகின்ற இடத்தில் எல்லாம் அவர் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை. உச்சிதமான எல்லா ஆகாரத்தினாலும் உன்னை போஷித்து திருப்தியாக்குவார். நீ இந்த வருடம் முழுவதும் ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆமென்.
சி. பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50

நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் செபஸ்தியார் ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் ஜெபமாலை, திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு, புதுநன்மை, திருப்பலி, நற்கருணை பவனி ஆகியவை நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை ஆராதனை நடைபெற்றது. கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி, மறையுரை ஆற்றினார். நள்ளிரவு புனிதரின் தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நேற்று காலை திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி, மறையுரை ஆற்றினார். விழாவில் வாணவேடிக்கை, அசனவிருந்து, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்குதந்தைகள் நார்பர்ட் தாமஸ், ரெமிஜியுஸ் லியோன், விக்டர், சேகரன், விக்டர் சாலமோன், டென்சில் ராஜா, அந்தோணி ராஜ், சகாயராஜ், அல்போன்ஸ் வின்சென்ட், ரூபன், குழந்தை ராஜன், லாரன்ஸ், லடிஸ்லாஸ், பிரகாஷ், ஹெர்மன்ஸ், ராஜா, ஞானராஜ், மரிய அரசு, பென்சிகர், அமலன், பீட்டர் பாஸ்டியான், அமலதாஸ், சகாய ஜஸ்டின், அன்புச்செல்வன், கலைச்செல்வன், சந்தீஸ்ட்டன், பிரைட், ராபின்ஸ்டான்லி, செல்வரத்தினம், ஒய்.டி.ராஜன், பன்னீர்செல்வம், ரெக்ஸ், பீட்டர் பால், ஜாண்சன் ராஜ், சலேட் ஜெரால்டு, ஜஸ்டின், மைக்கிள் ஜெகதீஷ், வசந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நாங்குநேரி பங்குதந்தை மணி அந்தோணி, தர்மகர்த்தா டோனால்சன், கணக்கர் அருள்ஜெபஸ்தியான் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ள குழந்தை ஏசு ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது.
தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் குழந்தை ஏசு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்துக்கு தஞ்சை மாவட்ட தலைமை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமை தாங்கினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் குழந்தை ஏசுவை வைத்து தேர்பவனி நடைபெற்றது. பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜுடு பால்ராஜ் புனிதம் செய்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். முன்னதாக கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
விழாவில் குடந்தை ஆயர் அந்தோணிசாமி, ஆலய அதிபர் வென்சஸ்லாஸ் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

சட்டங்களின் நாயகன் மோசேயும், இறைவாக்குகளின் நாயகன் ஏசாயாவும், இறைவனின் மகனாகிய இயேசுவோடு கலந்துரையாடிய பிரமிப்பு நிகழ்வு அது.
இந்த நூலின் ஒரிஜினல் எரேபியப் பெயர் ‘எல்லே ஹாடேபாரிம்’ என்பதாகும். ‘இவை தான் அந்த வார்த்தைகள்’ என்பது அதன் பொருள்.
இதை கிரேக்கத்தில் மொழிபெயர்த்த எழுபதின்மர் இதற்கு ‘டியூட்ரோனோமி’ என பெயர் கொடுத்தனர். அதற்கு ‘மீண்டும் கொடுக்கப்படும் சட்டங்கள்’ என்பது பொருள்.
கடவுள், மோசே வழியாக ‘விடுதலைப் பயணம்’ நூலில் கொடுத்த சட்டங்களை இந்த நூலில் மீண்டும் ஒரு முறை மோசே மக்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த நூலை மோசே எழுதியிருக்கிறார். ஆனால் முழுவதும் மோசே எழுதியிருக்க வாய்ப்பில்லை. காரணம் அவருடைய மரணம் சார்ந்த விஷயங்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இந்த நூலில் கடவுளின் சட்டங்களும், பத்து கட்டளைகளும் இரண்டாம் முறை வருவதற்கு ஒரு காரணம் உண்டு.
தொடக்கத்தில் கடவுள், மோசே வழியாக சட்டங்களைக் கொடுக்கிறார். ஆனால் வாக்களிக்கப்பட்ட நாடான கானானுக்குள் இஸ்ரயேல் மக்கள் அச்சத்தினால் நுழையவில்லை. இதனால் கடவுள் இஸ்ரயேல் மக்களை சபித்தார். ‘இந்தத் தலைமுறையிலுள்ள யாருமே அந்த நாட்டுக்குள் நுழையமாட்டீர்கள்’ என்றார். அது நடந்து இப்போது ஒரு தலைமுறை கடந்து விட்டது.
இதோ கானானுக்குள் நுழையும் காலம் நெருங்கிவிட்டது. பழைய தலை முறையில் உள்ளவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர். எஞ்சியிருப்போரும் இறக்கும் காலம் நெருங்கிவிட்டது.
மோசே இறக்கப் போகிறார். தலைமைப் பொறுப்பு யோசுவாவுக்கு அளிக்கப்படப் போகிறது. இப்போது இருப்பது புதிய தலைமுறை.
புதிய தலைமுறை நேரடியாக கடவுளின் கட்டளைகளை மோசேயிடம் இருந்து கேட்டதில்லை. இந்தத் தலைமுறைக்கு தன் வாயால் அனைத்து கட்டளைகளையும் ஒரு முறை முழுமையாய் சொல்லி விடுவது உசிதம் என யோசிக்கிறார் மோசே.
மோவாப் சமவெளியில் இஸ்ரயேல் மக்கள் வந்து விட்டனர். கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது வாக்களிக்கப்பட்ட நாடு. விடுதலை நாயகன் மோசே, விடை பெறும் கணம் இது.
அவர் நாற்பது நாட்கள் அங்கே அமர்ந்து அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை கடவுளின் இயல்பை விளக்குகிறார். கடவுள் கொடுத்த கட்டளைகளை விளக்குகிறார். கானான் நாட்டிற்குள் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார்.
தொடக்க நூலில் மனிதன் படைக்கப்படுகிறான், இறைவனுக்குப் பிரியமான ஒரு இனத்தைக் கடவுள் பிரித்தெடுக்கிறார். விடுதலைப்பயணத்தில் எகிப்தில் அடிமையாயிருக்கும் தனது மக்களை விடுவிக்கிறார்.
லேவியர் நூலில் மக்களின் புனிதமும் அவர்கள் கடவுளோடு கொண்டிருக்க வேண்டிய உறவும் விளக்கப்படுகிறது. எண்ணிக்கை நூல் மக்களின் பாலைநில வாழ்க்கையைப் பேசுகிறது.
இப்போது இணைச்சட்டம் எல்லா சட்டங்களையும் வாழ்க்கை முறைகளையும் மீண்டும் ஒரு முறை மக்களுக்கு வலியுறுத்திக் கூறுகிறது. இந்த ஐந்து நூல்களையுமே மோசே எழுதுகிறார்.
பாலை நிலத்தில் இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்த மக்கள் இனிமேல் தான் நிலப்பரப்பில் நிம்மதியாக வாழப் போகின்றனர். அங்கே எப்படி வாழவேண்டும், எப்படி இறைவனைப் பற்றிக் கொள்ளவேண்டும், எப்படி பிற மதங்களினால் தூய்மை இழந்துவிடக் கூடாது என்பதெல்லாம் இந்த போதனைகளில் வலியுறுத்தப்படுகின்றன.
“ஆகையால் நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு கூருங்கள். அவருடைய நெறிகளையும், நியமங்களையும், முறைமைகளையும், கட்டளைகளையும் எந்நாளும் கடைப்பிடியுங்கள்” என மோசே திரும்பத் திரும்ப இந்த நூலில் கூறுவதை, இயேசுவும் தனது போதனைகளின் முதன்மையாகக் கொண்டிருந்தார். “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து” என இயேசு போதித்தார்.
நாற்பது ஆண்டுகள் பாலை நிலத்தில் உணவும், நீரும், பாதுகாப்பும் வழங்கிய இறைவனை நம்பி இனிவரும் வாழ்க்கையையும் நடத்தவேண்டும். பிற தெய்வங்களை நாடுவதோ, மற்ற இனத்தோடு கலந்து தங்களை கறைபடுத்திக் கொள்வதோ கூடாது, எதிர்ப்பவர்களை கடவுள் அழிப்பார் போன்ற சிந்தனைகள் மோசேயின் உரையின் மையமாக இருந்தன.
போதனைகளை எல்லாம் முடித்தபின் தனது நூற்று இருபதாவது வயதில் மோசே பிஸ்கா மலையில் ஏறினார். வலிமையும், கூர்மையும், தெளிவும் உடைய மனிதராக மலையேறினார். அங்கிருந்து வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டைப் பார்த்தார். அதற்குள் போகமுடியவில்லையே எனும் ஏக்கம் அவரிடம் இருந்தது.
இறைவன் அவரை எடுத்துக்கொண்டார். அவரது உடலை இறைவன் அடக்கம் செய்கிறார். அதனால் அவருடைய உடலைக் கூட யாரும் அதன் பின் கண்டுபிடிக்க முடியவில்லை.
பல நூற்றாண்டுகளுக்குப் பின் இயேசுவின் காலத்தில் கானான் நாட்டு எர்மோன் மலையின்மேல் மோசேயும், எலியாவும் இயேசுவின் முன்னால் தோன்றினர். இயேசுவின் சீடர்கள் மூன்று பேர் அவர்களோடு இருந்தனர்.
இயேசு உருமாறிய நிகழ்வாக அது விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டங்களின் நாயகன் மோசேயும், இறைவாக்குகளின் நாயகன் ஏசாயாவும், இறைவனின் மகனாகிய இயேசுவோடு கலந்துரையாடிய பிரமிப்பு நிகழ்வு அது.
வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் விடுதலை வீரர் மோசே நுழைந்த முதல் நிகழ்வாகவும் அது அமைந்தது.
சேவியர்

பிரசித்திபெற்ற உவரி அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 17-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
தென்மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ ஆலயங்களில் பிரசித்திபெற்றது நெல்லை மாவட்டம் உவரி அந்தோணியார் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். பின்னர் கோட்டார் பிரான்சிஸ் சேவியர் பேராலயகுணபால் ஆராச்சி மறையுரை நடத்தினார். இதில் இன்பதுரை எம்.எல்.ஏ., ராதாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவிழா வருகிற 17-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை 6.15 மணிக்கு நலநாள் திருப்பலியும், இரவு 7 மணிக்கு மறையுரையும் நடக்கிறது. 11-ம் திருவிழாவான வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு அந்தோணியார் திருவுருவ சப்பர பவனி நடக்கிறது. வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) பெருவிழா மாலை ஆராதனையும், வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15 மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலியையும், தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் நடத்தி வைக்கிறார்.
காலை 9 மணிக்கு மலையாளத்தில் பெருவிழா திருப்பலியை கேரள மாநிலம் அஞ்சன்கோ மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப்பாஸ்கரன் நடத்தி வைக்கிறார். தொடர்ந்து சப்பரபவனியும், திருப்பலியும் நடக்கிறது. மாலையில் திவ்யநற்கருணை ஆசீர் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தைகள் தோமினிக் அருள்வளன், ஷிபாகர், திருதொண்டர் வில்லியம், திருத்தல நிதிகுழு, பணிக்குழு மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றான நாங்குநேரி அருகே முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி நாளை நடக்கிறது.
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க ஆலயங்களில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயமும் ஒன்றாகும்.
இந்த ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் ஜெபமாலை, குணமளிக்கும் வழிபாடு, திருப்பலி நடைபெற்று வந்தது.
8-ந் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை புதுநன்மை திருப்பலியும், மாலையில் நற்கருணை பவனியும் நடக்கிறது. பிரதான திருவிழா மாலை ஆராதனை நாளை (புதன்கிழமை) நடக்கிறது. நள்ளிரவில் தேர் பவனி நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலையில் திருவிழா கூட்டு திருப்பலி நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வள்ளியூர், திசையன்விளை, நாங்குநேரி ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
திருவிழா ஏற்பாடுகளை நாங்குநேரி பங்குத்தந்தை மணி அந்தோணி, தர்மகர்த்தா டோனால்சன், கணக்கர் அருள் செபஸ்தியான் மற்றும் இறை மக்கள் செய்துள்ளனர்.