search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரிங்கு சிங் எனக்கு ஒருவரை நினைவூட்டினார்: அவர் யார்? புன்னகையால் பதில் அளித்த SKY
    X

    ரிங்கு சிங் எனக்கு ஒருவரை நினைவூட்டினார்: அவர் யார்? புன்னகையால் பதில் அளித்த SKY

    • 2-வது போட்டியில் இந்தியா 235 ரன்கள் குவித்தது.
    • ரிங்கு சிங் 9 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் சேர்த்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியபோது ஒரே ஓவரில் நான்கு சிக்சர்கள் அடித்து அணியை வெற்றிபெற வைத்தபோது, அனைவருடைய கண்ணிலும் பட்டவர்தான் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிங்கு சிங்.

    தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரிங்கு சிங் இடம் பிடித்துள்ளார். ஐ.பி.எல். போட்டி வேறு, சர்வதேச போட்டி வேறு. இவரால் அதேபோல் சிறப்பாக விளையாட முடியுமா? இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் ரன் குவித்து கொடுப்பாரா? என்ற சந்தேகம் இருந்தது.

    ஆனால், முதல் போட்டியிலேயே இக்கட்டான நிலையில் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி அசத்தினார். இருந்தபோதிலும், அது நோ-பால் என்பதால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    ரன்கள் அடிக்க வேண்டுமே, விக்கெட்டுகள் விழுந்து கொண்டு இருக்கிறதே என்ற கவலை அவரது முகத்தில் கொஞ்சம் கூட இல்லை. ஆஹா... நமக்கு ஒரு பினிஷர் கிடைத்து விட்டார் என ரசிகர்கள் மனதில் நினைத்துக் கொண்டனர். விமர்சகர்களும் முணுமுணுக்க தொடங்கினர்.

    நேற்றைய 2-வது போட்டியிலும் 14 பந்துகள் இருக்கும்போது களம் இறங்கினார். 9 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்தார். 26 வயதேயாகும் ரிங்கு சிங்கை இனிமேல் ஒயிட்பால் கிரிக்கெட் இந்திய அணியில் தொடர்ந்து பார்க்கலாம். இவர்தான் இனிமேல் பினிஷர். தல தோனியை செய்த வேலையை இவர்தான் செய்வார் என ரசிகர்கள் வெளிப்படையாக நம்பிக்கை தெரிவிக்க ஆரம்பித்தனர்.

    ரசிகர்களின் கருத்தை தனது புன்னகையால் மறைமுகமாக தெரிவித்தார் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.

    போட்டி முடிவடைந்தபின் பரிசு வழங்கும் நிகழ்ச்சியின்போது சூர்யகுமார் யாதவ் பேசுகையில் "இளம் வீரர்கள் என் மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். அவர்களிடம் முன்னதாகவே, முதல் பேட்டிங்கிற்கு தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டேன். மைதானத்தில் பனி அதிகமாக இருந்தது. பின்னர், ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்துவது குறித்து பேசினோம்.

    ரிங்கு சிங் முதல் போட்டியில் பேட்டிங் செய்தபோது, அவர் வெளிப்படுத்திய நிதானம் அற்புதமானது. எனக்கு அவர் ஒருவரை நினைவூட்டினார் (புன்னகை). ஒவ்வொருவருக்கும் அதன் விடை தெரியும் (மீண்டும் புன்னகை)." என்றார்.

    இந்த அணியின் தலைசிறந்த பினிஷராக எம்.எஸ். டோனி திகழ்ந்தார். எந்தவொரு சூழ்நிலையிலும் தனது நிதானத்தை இழக்கமாட்டார். இறுதி கட்ட ஓவரை சிறப்பான வகையில் டார்கெட் செய்வார். தற்போது அதேவழியில் ரிங்கு சிங் செல்கிறார் என்பதை புன்னகை மூலம் சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்திருக்கலாம்.

    Next Story
    ×