search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி
    X

    டி20 போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி

    • முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு183 ரன்களை குவித்தது.
    • அதிகபட்சமாக கேப்டன் ஜாஸ் பட்லர் 84 ரன்களும் வில் ஜேக்ஸ் 37 ரன்களும் எடுத்தனர்.

    விரைவில் துவங்கவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று பர்மிங்காம் நகரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்றது.

    அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு183 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜாஸ் பட்லர் 84 ரன்களும் வில் ஜேக்ஸ் 37 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் சாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 0, ஆயுப் 2 ரன்களில் வந்த வேகத்தில் நடையை கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் - பக்கர் ஜமான் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    நிதானமாக விளையாடுய ஆசாம் 32 ரன்களிலும் மறுபுறம் அதிரடி காட்டிய பக்கார் ஜமான் 45 (21) ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 19.2 ஓவரில் பாகிஸ்தான் அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. அதன் காரணமாக 1 – 0* (4) என்ற கணக்கில் டி20 தொடரில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது.

    Next Story
    ×