என் மலர்tooltip icon

    காமன்வெல்த்-2022

    • 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
    • 61 கிலோ எடைப்பிரிவில் 269 எடையை தூக்கி மூன்றாவது இடத்தை இந்தியாவின் குருராஜா பிடித்துள்ளார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இன்றைய 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் இறுதிச் சுற்றில் மொத்தம் 248 கிலோ (113கி +135கி ) எடை தூக்கி 2ம் இடம்பிடித்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது.

    மலேசியாவின் முகமது அனிக் 249 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கமும், இலங்கையின் திலங்கா இசுரு குமார 225 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    இந்நிலையில், காமல்வெல்த் தொடரில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் குருராஜா வெண்கலப் பதக்கம் வெற்றுள்ளார்.

    61 கிலோ எடைப்பிரிவில் 269 எடையை தூக்கி மூன்றாவது இடத்தை இந்தியாவின் குருராஜா பிடித்துள்ளார்.

    இதன்மூலம், இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது.

    • 55 கிலோ எடைப்பிரிபு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார்
    • கடந்த சீசனில் இந்திய பளுதூக்கும் வீரர்கள் 6 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றனர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் இறுதிச் சுற்றில் மொத்தம் 248 கிலோ (113கி +135கி ) எடை தூக்கி 2ம் இடம்பிடித்தார்.

    மலேசியாவின் முகமது அனிக் 249 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கமும், இலங்கையின் திலங்கா இசுரு குமார 225 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    கடந்த சீசனில் இந்திய பளுதூக்கும் வீரர்கள் 6 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றனர். இந்த ஆண்டும் ஆதிக்கம் செலுத்துவார்கள என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இறுதி சுற்றுக்கு ஸ்ரீஹரி நடராஜ் தகுதி பெற்றதன் மூலம் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு.
    • டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்று 27வது இடம் பிடித்தார்.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகின்றன

    ஆண்களுக்கான100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டி அரை இறுதிச் சுற்றில் இந்திய இளம் வீரர் ஸ்ரீகரி நடராஜ் 54:55 வினாடிகளில் கடந்து 4 இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். மேலும் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    அரையிறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்கா வீரர் பீட்டர் கோட்ஸே, 53.67 வினாடிகளில் பயண தூரத்தை கடந்து, முதலிடம் பிடித்தார்.

    கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் ஏ ஹீட் பிரிவு நீச்சல் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீரரான நடராஜ், 100மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியில் 54:31 வினாடிகளில் இலக்கை கடந்து 27வது இடம் பிடித்திருந்தார்.

    முன்னதாக, காமன்வெல்த் ஆண்களுக்கான 400மீ ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில், இந்திய வீரர் குஷாக்ரா ராவத் 3:57.45 வினாடிகளில் இலக்கை 14வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பறிபோனது.

    • அனாஹத் சிங் 11-5 11-2 11-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
    • போட்டி தொடரும் போது எனக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டது என அனாஹத் சிங் கூறினார்.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.

    இதில் நேற்று நடைபெற்ற ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில். 64 வது சுற்றில் இந்தியாவின் இளம் வீராங்கனையான அனாஹத் சிங் (14 வயது), செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸின் வீராங்கனை ஜாடா ரோஸ் ஆகியோர் மோதினர்.

    இதில் சிறப்பாக விளையாடிய அனாஹத் சிங் 11-5 11-2 11-0 என்ற செட் கணக்கில்வெற்றி பெற்றார். இதனால் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இது மிகவும் உற்சாகமானது. போட்டி தொடரும் போது எனக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டது தனது வெற்றி தொடக்கத்திற்குப் பிறகு அனாஹத் சிங் கூறினார்.

    • சிங்கப்பூர் அணியை இந்தியா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
    • ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியா வெற்றி.

     பர்மிங்காம்:

    காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்- சத்தியன் ஞானசேகரன் ஜோடி சிங்கப்பூரை சேர்ந்த ஷாவோ ஃபெங் ஈதன் போ மற்றும் கிளாரன்ஸ் செவ் செ யூ ஜோடியை 11-5, 11-5 என்ற கணக்கில் வீழ்த்தியது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல், சிங்கப்பூர் வீரர் பாங்க் யெவ் என் கோயனை, 11-8, 11-9 11-9 என்ற செட்களில் வீழ்த்தி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன், சிங்கப்பூரின் கிளாரன்ஸ் செவ் சே யூவை 11-7, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்திய ஆண்கள் அணி சிங்கப்பூர் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா, கானா அணிகள் மோதின.
    • இதில் இந்தியா 5- 0 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தியது.

    லண்டன்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. குருப் ஏ பிரிவில் இந்தியா, கானா அணிகள் இடம்பிடித்துள்ளன.

    முதல் நாளில் நடந்த மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா, கானா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் குர்ஜித் கெளர் (3,39), நேகா (28), சங்கீதா குமாரி (36), சலிமா டேடே (56) ஆகியோர் கோல்களை அடித்தனர்.

    • 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
    • இந்திய அணியில் 215 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். 16 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.

    பர்யிங்காம்:

    ஒலிம்பிக் ஆசிய விளையாட்டு போட்டிக்கு அடுத்த படியாக உலகின் 3-வது பெரிய விளையாட்டு திருவிழாவாக காமன்வெல்த் விளையாட்டு போட்டி உள்ளது.

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து இந்திய ஆக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் ஏந்தி சென்றனர்.

    72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடக்கிறது. இந்திய அணியில் 215 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். 16 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.

    இன்று இந்தியா பங்கேற்கும் போட்டி விவரம் வருமாறு:-

    லாவ்ன் பவுல்ஸ் போட்டி, (இந்திய நேரப்படி மாலை 5.30) டேபிள் டென்னிசில் (மாலை 6.30 மணி) ஆண்கள் அணி தகுதிச்சுற்று, பெண்கள் அணி தகுதிச் சுற்றில் இந்தியா விளையாடுகிறது.

    பெண்கள் ஹாக்கியில் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்திய அணி கானாவுடன் மோதுகிறது. நீச்சல் போட்டி யில் இந்தியாவின் குஷாக்ரா ராவத், ரஹரி நடராஜ், ஆஷிஷ்குமார், சஜன் பிரகாஷ் பங்கேற்கிறார்கள்.

    பெண்கள் 20 ஓவர் கிரிக் கெட்டில் இந்தியா-ஆஸ்தி ரேலியா மோதுகின்றன. இப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஸ்குசாஷ் போட்டி மதியம் 2.30 மணிக்கு குத்துச்சண்டை போட்டி மாலை 4.30 மணிக்கும் தொடங்குகிறது. குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் ஷிவா தாபா, ரோகித் டோகாஸ், சுமித் குண்டு, ஆஷிஷ் குமார் களம் காணுகிறார்கள்.

    பேட்மிண்டனில் கலப்பு அணியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோது கிறது. இப்போட்டி இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. 20 ஓவர் போட்டித்தொடர் 1-1 என்ற களத்தில் சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி வருகிற 31-ந்தேதி நடக்கிறது.

    • இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.
    • 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நாளை முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது.

    இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள். இதில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியாவை (மாலை 3.30 மணி) எதிர்கொள்கிறது.

    இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

    • பெண்கள் ஹாக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கானாவை சந்திக்கிறது.
    • டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் போட்டிகளில் இந்திய அணிகள் களம் காணுகிறது.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதலாவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. பர்மிங்காம் 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது.

    இதில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியாவை (மாலை 3.30 மணி) எதிர்கொள்கிறது.

    அதே போல், பெண்கள் ஹாக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கானாவை (மாலை 6.30 மணி) சந்திக்கிறது. டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் போட்டிகளில் இந்திய அணிகள் களம் காணுகிறது. நீச்சல், ஸ்குவாஷ், குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீரர்கள் கால் பதிக்கிறார்கள்.

    • இந்த ஆண்டு டி20 பெண்கள் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
    • இந்த ஆண்டு போட்டிக்கான இந்திய அணியில் 215 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    பர்மிங்காம்:

    உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டுத் திருவிழாவான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் தொடங்கியது.

    இந்த 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

    இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, இங்கிலாந்து, வங்காளதேம், ஜமைக்கா, மலேசியா, நைஜீரியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, கென்யா, ஸ்காட்லாந்து உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்த ஆண்டு போட்டிக்கான இந்திய அணியில் 215 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். 16 விளையாட்டுகளில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணியினர் வழக்கம் போல் குத்துச்சண்டை, பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றில் அதிக பதக்கம் வெல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், முன்னாள் உலக சாம்பியனுமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர்தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.

    ×