என் மலர்tooltip icon

    காமன்வெல்த்-2022

    • கானாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி அபார வெற்றி பெற்றது.
    • இந்தியா சார்பில் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் ஹாட்ரிக் கோல் அடித்தார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்துவருகிறது.

    இத்தொடரின் ஆண்களுக்கான ஹாக்கியில் இந்திய அணி தனது முதல் போட்டியில் கானாவை சந்தித்தது. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இந்தியா சிறப்பாக விளையாடியது. தொடர்ந்து கோல் மழை அடித்து அசத்தியது.

    இறுதியில், இந்திய அணி 11 - 0 என்ற கணக்கில் கானாவை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் மொத்தம் எட்டு வீரர்கள் கோல் அடித்தனர். இந்தியா சார்பில் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் ஹாட்ரிக் கோல் அடித்தார். ஹர்மன்பிரீத் சிங் 3, ஜுக்ராஜ் சிங் 2, அபிஷேக், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங், நீலகண்ட் சர்மா, வருண் குமார், மன்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

    • காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் கலப்பு குழு போட்டி நடைபெற்றது.
    • இதில் தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா இதுவரை பளுதூக்குதலில் 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

    இந்நிலையில், பேட்மிண்டன் கலப்பு குழு ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா 3-0 என்ற புள்ளிக்கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    முதல் சுற்றில் ஆடிய சும்த் ரெட்டி - அஷ்வினி பொன்னப்பா ஜோடி 21-9, 21-11 என்ற கணக்கில் வென்றது.

    2வது சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-5, 21-6 என்ற கணக்கில் வென்றார்.

    இதையடுத்து, 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்ற பிறகு, பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 21-11, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார்.

    இதன்மூலம் பேட்மிண்டன் கலப்பு குழு போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    • பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப் பதக்கம் வென்றார்.
    • ஆண்களுக்கான பிரிவில் ஜெரேமி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார்.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் கிடைத்துள்ளது.

    காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் அச்சிந்தா ஷூலி முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

    ஏற்கனவே மீராபாய் சானு, ஜெரேமி தங்கம் வென்றுள்ள நிலையில், பளு தூக்குதலில் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றுள்ளார்.

    இதன்மூலம் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றுள்ளது.

    • இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றுள்ளது.
    • ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முன்னேறினார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நியூசிலாந்தின் கேட்லின் வாட்ஸை எதிர்கொண்டார்.

    இந்தப் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா 11-8, 9-11, 11-4, 11-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • இந்திய அணியின் பந்துவீச்சில் தடுமாறிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
    • இந்திய அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.

    இந்தநிலையில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதி வருகிறது. இந்த போட்டியின் தொடக்கத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக டாஸ் போடுவது தாமதமானது.

    வானம் தெளிவான பிறகு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. மழையின் காரணமாக போட்டியில் இரு ஓவர்கள் குறைக்கப்பட்டு 18 ஓவர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    தொடக்க வீராங்கணையாக களமிறங்கிய முனிபா அலி 32 ரன்கள் எடுத்தார். அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீராங்கணையான இரம் ஜாவத் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.

    அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் 17 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் தடுமாறிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீராங்கணையாக களமிறங்கிய ஷபாலி வர்மா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஸ்மிர்தி மந்தனா அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், இந்திய அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப் பதக்கம் வென்றார்.
    • ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஜெரிமி தங்கம் வென்றார்.

    ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவில் 300 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் ஜெரேமி லால்ரின்னுங்கா முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

    பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ள நிலையில், ஜெரிமி இரண்டாவது தங்கம் வென்றுள்ளார்.

    இந்நிலையில், காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், " நமது யுவசக்தி சரித்திரம் படைத்து வருகிறது! ஜெரேமி ல்ரினுங்காவுக்கு வாழ்த்துக்கள். அவர் தனது முதல் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் மற்றும் ஒரு அற்புதமான சாதனையையும் படைத்துள்ளார்.

    இளம் வயதிலேயே அவர் மகத்தான பெருமையையும், புகழையும் கொண்டு வந்துள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

    • பளுதூக்கும் பிரிவில் இந்தியா தங்கம் வெள்ளி உள்பட 4 பதக்கங்களை வென்றுள்ளது.
    • பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் மேலும் சாதனை படைக்க பிரதமர் வாழ்த்து.

    காமன்வெல்த் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை பிந்த்யாராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

    பர்மிங்காமில் காமல்வெல்த் போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக பிந்த்யாராணி தேவிக்கு வாழ்த்துகள். இந்த சாதனை அவரது விடாமுயற்சியின் வெளிப்பாடாகும், மேலும் இது ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல், 55 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சங்கேத் சர்காருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அபாரமான முயற்சியால் மதிப்புமிக்க வெள்ளியை வெல்வது காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு சிறந்த தொடக்கமாகும். அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

    இதேபோல் 61 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் பி. குருராஜாவிற்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது விளையாட்டுப் பயணத்தில் மேலும் பல மைல்கல் சாதனைகள் படைக்க வாழ்த்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம், இந்தியா தோல்வி
    • இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிக்கு போராடும் என எதிர்பார்ப்பு

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

    முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இன்றைய  ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனைகள் தீவிரமாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

    • குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா, வேல்ஸ் அணிகள் மோதின.
    • இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், இந்தியா- வேல்ஸ் அணிகளுக்கிடையே ஹாக்கி போட்டி நடைபெற்றது. அதில் மகளிர் ஹாக்கி ஏ பிரிவில் நடந்த போட்டியில் வேல்ஸ் அணியை 3-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ந்து 2-வது வெற்றியை இந்திய மகளிர் அணி பதிவு செய்துள்ளது.

    ஏற்கனவே 5-0 என்ற கோல் கணக்கில் கானா அணியை இந்திய மகளிர் அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    • காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிந்த்யாராணி வெள்ளி வென்றார்.
    • காமன்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு 2வது வெள்ளி ஆகும்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளில் பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.

    இந்நிலையில், பளு தூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் 202 கிலோ எடையை தூக்கி இரண்டாமிடம் பிடித்தார் பிந்த்யாராணி. இதையடுத்து, அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இதன்மூலம் காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரே நாளில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது. 

    • காமன்வெல்த் போட்டியில் இந்தியா 3 பதக்கங்களை பெற்றுள்ளது.
    • குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

    இந்நிலையில், 70 கிலோ குத்துச்சண்டை எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    நியூசிலாந்தின் ஏரியன் நிக்கல்சனை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    வரும் புதன்கிழமை காலிறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அரையிறுதிக்கு முன்னேறுவதன்மூலம் லவ்லினா போர்கோஹெய்னுக்கு காமன்வெல்த் போட்டியில் பதக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார்.
    • காமன்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு முதல் தங்கமாகும்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.

    இந்நிலையில், பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய் சானு. காமன்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானுவுக்கு இது 3வது (2014 - வெள்ளி, 2018 - தங்கம், 2022 - தங்கம்) பதக்கமாகும்.

    இதன்மூலம் காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரே நாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்றுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு முதல் தங்கமாகும்.

    ×