என் மலர்tooltip icon

    கிசுகிசு

    ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் நடித்த படம் தோல்வி அடைந்தால், மொத்த பழியும் தன்மீது விழும் என்று பயந்து பல படங்களில் நடிக்க மறுத்த
    ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் நடித்த படம் தோல்வி அடைந்தால், மொத்த பழியும் தன்மீது விழும் என்று பயந்து பல படங்களில் நடிக்க மறுத்த விண்ணைத்தாண்டிய நடிகை, இப்போது தடாலடியாக தன் கொள்கையை மாற்றிக் கொண்டிருக்கிறாராம். காரணம், சக போட்டியான நயனமானவர் என்கிறார்களாம். தற்போது நடிகை, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட நான்கைந்து படங்களில் நடித்து, அதிகமாக கல்லா கட்டி வருகிறாராம்.

    இதனால், தன் மார்க்கெட் சரிந்துவிழும் நிலைக்கு ஆளான விண்ணைத்தாண்டிய நடிகை, தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டுவது மட்டுமின்றி, அதுபோன்ற கதைகளைத்தான் தன்னிடம் கொண்டு வர வேண்டும் என்று இயக்குனர்களுக்கு கண்டிஷன் போடுகிறாராம் நடிகை.
    அஞ்சாத நடிகை, தெலுங்கு நடிகருடன் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறாராம். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு தராமல் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அழைப்பு கொடுத்து வருகிறாராம்.
    அஞ்சாத நடிகை, தெலுங்கு நடிகருடன் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறாராம். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு தராமல் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அழைப்பு கொடுத்து வருகிறாராம். ஆனால் நெருக்கமான நடிகர், நடிகைகளுக்கு தற்போது திருமண அழைப்பிதழ் தரப்படுகிறதாம். அவற்றை பெற்றுக்கொண்ட சில நடிகர்கள் நேரில் திருமண விழாவில் கலந்துகொள்வதாக கூறியிருக்கின்றனராம்.

    இதுபோல், தனது திருமண அழைப்பிதழை முன்னாள் காதலர் பாய்ஸ்க்கு அழைப்பிதழ் தருவாரா என்ற பேச்சுதான் தற்போதைக்கு சூடான டாப்பிக்காக திரையுலகில் பேசப்பட்டு வருகிறதாம். திருமண பத்திரிகை தருவதும் தராமலிருப்பதும் நடிகையின் விருப்பத்தை பொறுத்தது என்று அவரது தரப்பில் கூறப்படுகிறதாம்.
    தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் படத்தை தயாரித்து நடித்து வரும் முன்னணி நடிகர் ஒருவரின் படம் வெளியாகாததால் சிக்கித் தவித்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் துணை நடிகராக வலம் வந்து, பின்னர் நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் அந்த நடிகர் ஓவியமான நடிகையுடன் நடித்த படத்தின் மூலம் பிரபலமானார்.

    அதன்பின்னர் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததால் பிசியாக நடித்து வந்தார். இதில் அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் அனைத்துமே தோல்வியை சந்தித்திருக்கிறது. மேலும் அவரது நடிப்பில் ஒரு வருடத்திற்கு மேலாகியும் படம் ஏதும் வெளியாகவில்லை. நாயகன் தற்போது அவரது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மன்னர் என்ற தலைப்புடைய படத்தில் நடித்திருக்கிறார்.

    இந்த படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டில் எடுத்து முடிக்க முடியாததால் கடன்களை வாங்கி ஒருவழியாக படத்தை எடுத்து முடித்திருக்கிறாராம். எனினும் அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமலும், புதிய படத்தில் நடிக்க முடியாமலும் நாயகன் தவித்து வருகிறாராம்.
    தற்போது முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் கீர் நடிகை, சவாலான படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். அதற்கேற்ப பழம்பெரும் நடிகையின் வாழ்க்கை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.
    தற்போது முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் கீர் நடிகை, சவாலான படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். அதற்கேற்ப பழம்பெரும் நடிகையின் வாழ்க்கை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். நடிகையும் கதையை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

    அதற்காக பழம்பெரும் நடிகையின் பழைய படங்களை திரும்ப திரும்ப பார்த்து வந்தாராம். மேலும் நடை உடை பாவனை எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வருவதுடன் அதை பயிற்சி செய்தும் வருகிறாராம். என்னதான் பயிற்சி எடுத்தாலும் அசல் பழம்பெரும் நடிகை போல் மாற முடிய வில்லையாம். இருந்தாலும் மிகவும் கஷ்டப்பட்டு படத்தில் நடித்து வருகிறாராம்.
    தமிழ், மலையாளத்தில் முக்கிய இடம் பிடித்த பால் நடிகை, விவாகரத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ‘பிசி’ ஆகி இருக்கிறாராம். தற்போது விழாக்களுக்கு கவர்ச்சி உடைகளை அணிந்து வரும் நடிகையை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்களாம்.
    தமிழ், மலையாளத்தில் முக்கிய இடம் பிடித்த பால் நடிகை, விவாகரத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ‘பிசி’ ஆகி இருக்கிறாராம். தற்போது விழாக்களுக்கு கவர்ச்சி உடைகளை அணிந்து வரும் நடிகையை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்களாம்.

    இந்த நிலையில், நடிகை தம் அடித்து மூக்கு வழியாக புகைவிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனராம். அவரை கடுமையாக விமர்சனமும் செய்து இருக்கிறார்களாம். உண்மையாகவே அவருக்கு இந்த பழக்கம் உண்டா? என்று அனைவரும் பேசி வருகிறார்களாம்.
    விண்ணைத்தாண்டிய நடிகருக்கு சில வருடங்களாக நேரம் சரியில்லையாம். மூன்று வருடங்கள் கழித்து படம் வெளியானாலும், சரியாக படம் ஓடவில்லை என்ற வருத்தம்.
    விண்ணைத்தாண்டிய நடிகருக்கு சில வருடங்களாக நேரம் சரியில்லையாம். மூன்று வருடங்கள் கழித்து படம் வெளியானாலும், சரியாக படம் ஓடவில்லை என்ற வருத்தம். காதலித்த பெண்ணுடன் விரிசல். நடிகர் சங்கத்துடன் பிரச்சனை, சமீபத்தில் வெளியான படமும் ஓடவில்லை என்று பல கஷ்டங்கள் நடிகரை வாட்டி வருகிறதாம்.

    நடிகர் கஷ்டத்தில் இருந்து விட நடிகரின் தந்தை கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்திருக்கிறாராம். மேலும் நடிகருக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இந்த ஏற்பாடு நடந்ததாம்.
    திருமணமாகிவிட்ட நடிகைகள் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸை தொடங்குவதும் அதில் ஜெயிப்பதும் அரிது. ஆனால், பால் நடிகையின் இரண்டாவது இன்னிங்ஸ் ஓரளவிற்கு கைக்கொடுத்து வருகிறதாம்.
    திருமணமாகிவிட்ட நடிகைகள் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸை தொடங்குவதும் அதில் ஜெயிப்பதும் அரிது. ஆனால், பால் நடிகையின் இரண்டாவது இன்னிங்ஸ் ஓரளவிற்கு கைக்கொடுத்து வருகிறதாம். தமிழில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறாராம். சமீபத்தில் பட விழா ஒன்றில் நடிகை படுகவர்ச்சியாக உடை அணிந்து வந்தாராம்.

    இதைப் பார்த்த அனைவரும் வியந்து போனார்களாம். இனி கவர்ச்சியால் மட்டுமே வாய்ப்புகளை பெற முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம் நடிகை. அதற்காகத்தான் இப்படி ஆடை அணிந்து வந்ததாக கூறப்படுகிறதாம். மேலும் பாலிவுட்டில் நுழையவும் முயற்சி செய்து வருகிறாராம். இந்த முயற்சி கைக்கொடுக்குமா என்று பொருத்து இருந்தான் பார்க்கணும்...
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் யோகா நடிகை, அவரது உடல் எடையைக் குறைக்க அவரது வீட்டையே உடற்பயிற்சி கூடமாக மாற்றியிருக்கிறாராம்.
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் யோகா நடிகை, அவரது உடல் எடையைக் குறைக்க அவரது வீட்டையே உடற்பயிற்சி கூடமாக மாற்றியிருக்கிறாராம். ஒரு படத்துக்காக உடல் எடையை அதிகமாக்கி குண்டான இவர், சரித்திர படத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்தாராம். ஆனால் எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்தார். என்றாலும், உடல் மெலியவில்லையாம்.

    எனவே சரித்திர படத்தில் உடல் தோற்றத்தை குறைத்து காட்ட கோடி கணக்கில் ‘கிராபிக்ஸ்’க்காக செலவு செய்தார்களாம். தற்போது உடல் எடை குறைத்த பிறகே படங்களில் நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். எனவே, தீவிர உடற்பயிற்சிக்காக தனது வீட்டில் அதிநவீன உடற்பயிற்சி கூடத்தை அமைத்திருக்கிறாராம். தினமும் இடைவிடாமல் பயிற்சி செய்த நடிகை நல்ல பலன் கிடைத்து வருகிறதாம். இதுவரை புதிய படங்களை ஏற்காமல் இருந்த நடிகை, இப்போது புதிய படங்களுக்கு கதைகேட்க தொடங்கி இருக்கிறாராம்.
    லண்டனில் பிறந்த படேலான நடிகை, தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளாராம். அந்த படங்கள் எல்லாம், நடிகைக்கு பெயர் சொல்லும் படமாக அமையவில்லையாம்.
    லண்டனில் பிறந்த படேலான நடிகை, தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளாராம். அந்த படங்கள் எல்லாம், நடிகைக்கு பெயர் சொல்லும் படமாக அமையவில்லையாம். தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்தும் பெரியதாக எடுபடவில்லையாம். அதனால், நடிகை சமீபத்தில் அரை நிர்வாணமான புகைப்படங்களை வெளியிட்டாராம். இது ஒரு மாதிரியான சலசலப்பை கோடம்பாக்கத்தில் ஏற்படுத்தியதாம். தற்போது நீச்சல் உடையில் இருக்கும் படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறாராம். வாய்ப்புக்காக இப்படி எல்லாமா புகைப்படத்தை வெளியிடுவது என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    உச்ச நடிகர்களுடன் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகைக்கு, நடிகர் ஒருவர் வீடு ஒன்றை வாங்கி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
    தமிழில் ஆரியமான நடிகருடன் ஜோடி போட்டு அறிமுகமான பட்டினம் நடிகை, தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறாராம். இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்கள் பலரும் நண்பர்களாக பழகி வந்தாலும், பாலிவுட்டில் கான் நடிகர் தான் மிகவும் நெருங்கிய நண்பராம்.

    படப்பிடிப்பு இல்லாத போது அடிக்கடி இருவரும் சந்தித்து பேசுவார்களாம். மும்பையில் இதுவரை வாடகை வீட்டில் குடியிருந்த நடிகை, தற்போது காஸ்ட்லியான அடுக்குமாடி வீடு ஒன்று வாங்கி இருக்கிறாராம். இந்த வீட்டை கான் நடிகர்தான் வாங்கிக் கொடுத்ததாக பாலிவுட் வட்டாரத்தில் பேசி வருகிறார்களாம்.
    அழகாக இருந்தும் அவ்வளவாக வாய்ப்பு இல்லாத மும்பை நடிகை அவர். அவரை நெருக்கமான நண்பர்கள், “ஷா” என்று செல்லமாக அழைப்பார்கள். இவர், சாமி நடிகரும், பால் நடிகையும் நடித்து வரும் தமிழ் படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.
    அழகாக இருந்தும் அவ்வளவாக வாய்ப்பு இல்லாத மும்பை நடிகை அவர். அவரை நெருக்கமான நண்பர்கள், “ஷா” என்று செல்லமாக அழைப்பார்கள். இவர், சாமி நடிகரும், பால் நடிகையும் நடித்து வரும் தமிழ் படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.

    திடீரென்று ஒருநாள், ‘ஷா’ நடிகை படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துக் கொண்டிருந்த போதே “உடனடியாக மும்பைக்கு போக வேண்டும். அங்கே ஒரு இந்தி படக்குழு எனக்காக காத்திருக்கிறது” என்றார். ஐந்து நடிகர்-நடிகைகளை வைத்து முக்கிய காட்சியை படமாக்கிக் கொண்டிருந்த டைரக்டருக்கு கோபம் தலைக்கு ஏறியது.

    அவர் கோபத்தை பற்றி, ‘ஷா’ கவலைப்படவில்லை. “நான் போகிறேன்” என்று படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறி விட்டார்!
    பாலிவுட்டில் வாய்ப்பு பெற வேண்டி, அடிக்கடி டாப்லெஸ் போட்டோ ஷூட் எடுத்து உலா விடுகிறாராம் ஒரு நடிகை.
    தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் எந்திரமான நடிகை, பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறாராம். பாலிவுட்டில் பல படங்களில் நடிக்க வேண்டும் என்பது நடிகையின் மிகப்பெரிய ஆசையாம். ஆனால், அது நடக்காமல் இருக்கிறதாம். பலர் மூலம் தூதுவிட்டும் அது நடக்காமல் இருக்கிறதாம். இதனால் டாப்லெஸ் போட்டோ சூட் ஒன்றை நடத்தி இருக்கிறாராம்.

    எப்படியும் பாலிவுட்டில் வாய்ப்பு பெற அடிக்கடி டாப்லெஸ் போட்டோ ஷூட் எடுத்து உலா விடுகிறாராம். ஆனால் இதுவரை அதற்கான பலன் கிடைக்கவில்லையாம் என்று வருத்தத்திலும் இருக்கிறாராம்.
    ×