என் மலர்tooltip icon

    கிசுகிசு

    நடிகையின் புதிய ஆசையால், படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அதில் சிக்கி தவிர்த்து வருகிறாராம்
    தற்போது முன்னணி நடிகைகள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். ஒன்று கைவிட்டாலும் இன்னொரு படம் கைகொடுப்பதுடன் ஹீரோ நடிக்கும் படத்துக்கு சமமாக தங்களுக்கும் இதுபோன்ற படத்தில் முக்கியத்துவம் தரப்படுவதால் விரும்பி ஏற்கின்றனர். இதுநாள் வரை பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த வீர நடிகை, திடீரென்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள லீட் ரோல் நடிக்க ஆசை வந்திருக்கிறதாம்.

    வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு தெலுங்கு படம் ஒன்று கிடைத்திருக்கிறதாம். கதை முழுவதும் தன் தோள் மீது தாங்கவேண்டிய பொறுப்பு நடிகைக்கு ஏற்பட்டிருப்பதால் முழுகவனத்தையும் கதாபாத்திரம் பக்கம் திருப்பி இருக்கிறாராம். கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுவதால் மிகவும் கடினமாக இருக்கிறதாம். தெரியாமல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டோ என்று எண்ணுகிறாராம் நடிகை.
    நடிகை ஒருவர் படத்தில் நடிப்பதற்கு சம்பளம் கேட்காமல், கிடைக்கும் லாபத்தில் பங்கு வேண்டும் என்று கேட்கிறாராம்.
    வெள்ளாவியில் வெளுத்த நடிகை நடித்த தெலுங்கு படம் ஒன்று சமீபத்தில் வெளியானதாம். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டாகி இருக்கிறதாம். ஹீரோவுக்கு முக்கியத்துவம் இல்லாத கதைக்கு பட்ஜெட் குறைவாக இருக்கும் என்பதால் மேற்கொண்டு தயாரிப்பாளர்களுக்கு சிரமம் தர விரும்பாமல், சம்பளம் பெறாமலே நடித்துள்ளாராம் நடிகை. அதற்கு பதிலாக வரும் லாபத்தில் பங்கு தந்தால் போதும் என ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

    நடிகையின் துணிச்சலுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாம். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் நல்ல வசூலைப் பெற்றுள்ளதாம். நடிகையின் இந்த செயலால், பல நடிகைகளும் இதுபோன்ற பின்பற்ற முடிவு செய்திருக்கிறார்களாம்.
    இயக்குனர் ஒருவர் தன்னுடைய பிரம்மாண்டமான படத்திற்கு நடிகை கிடைக்காமல் தவித்து வருகிறாராம்.
    சுந்தரமான இயக்குனர் அதிக பொருட்செலவில் ஒரு சரித்திரப் படத்தை இயக்க முடிவு செய்தாராம். இதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் ஆகியோரை முன்பே தேர்வு செய்தாராம். ஆனால், சில காரணங்களால் ஏழு அறிவு கொண்ட நடிகை இப்படத்தில் இருந்து விலகினாராம். இயக்குனரும் பரவாயில்லை வேறு நடிகையை தேர்வு செய்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டாராம்.

    பின்னர் கொழுகொழு நடிகை தேர்வு செய்தாராம். நடிகைக்கு அந்த கதாபாத்திரத்தின் உடைகள், மேக்கப் போட்டு பார்த்தால், இயக்குனருக்கு திருப்தி அடையவில்லையாம். அதனால், கொழுகொழு நடிகையை வேண்டாம் என்று கூறிவிட்டாராம். நீண்ட நாட்களாக தேடியும் எந்த நடிகையும் கிடைக்காமல் தவிர்த்து வருகிறாராம்.

    இதனால், அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டு, தன்னுடைய வழக்கமான பாணியை கொண்டு காமெடி படத்தை இயக்க இருப்பதாக முடிவு செய்திருக்கிறாராம்.
    பாலிவுட்டில் தீவிர கவனம் செலுத்தி வரும் தென்னிந்திய நடிகை ஒருவர் வாய்ப்புக்காக லிப்-லாக், பிகினிக்கு என மாறியிருக்கிறாராம்.
    ஒல்லி நடிகரின் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஐரின் நடிகைக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால், அவ்வப்போது தமிழில் தலைக்காட்டி வந்தார். தெலுங்கில் பிசியாக நடித்து வந்த போதிலும் அங்கும் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால், பாலிவுட்டுக்கு சென்றார். சமீபத்தில் கவர்ச்சி குறித்து பேசி சர்ச்சையிலும் சிக்கியிருந்தார்.

    பாலிவுட்டில் தற்போது சீரான அளவில் படங்கள் வருவதால் அங்கு மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள விரும்பும் நாயகி, அவரது பாலிசிகள் சிலவற்றை மாற்றியிருக்கிறாராம். நாயகி தற்போது இரண்டு என முடியும் ரீமேக் படம் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

    அந்த டிரைலரில் நாயகி படுகவர்ச்சியாக பிகினியிலும், லிப்-லாக் காட்சியிலும் நடித்து அனைவரையும் வாய்பிளக்க வைத்திருக்கிறாராம். அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறதாம். பாலிவுட்டை பொறுத்தவரை நடிகைகள் அவர்களது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு, சர்ச்சைகளில் சிக்கி வருவதை பார்த்திருக்கிறோம்.

    அந்த வகையில் இந்த நாயகி படத்திலேயே கவர்ச்சி காட்டியிருப்பது தென்னிந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். எனினும் பாலிவுட்டிலாவது நீடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று விமர்சிக்கவும் செய்கிறார்களாம்.
    படம் வெளிவருவதற்கு காரணமாக இருக்கும் நடிகையை நினைத்து படவிழாவில் கண் கலங்கிய தயாரிப்பாளர்
    தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தற்போது பிரபலமாகி இருக்கும் ஓவியமான நடிகை, பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தில் நடித்திருந்தாராம். ஆனால், அந்த படம் வெளியாகமல் முடங்கி இருந்ததாம். இதனால், தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டமாம். தற்போது நடிகை மிகவும் பிரபலமடைந்திருப்பதால், அந்தப் படத்தை வாங்கி வெளியிட பலர் முன் வந்திருக்கிறார்கள். இதனால், தயாரிப்பாளர் மிகவும் சந்தோஷத்தில் ஆழ்ந்திருக்கிறார். ஓவியமான நடிகை மூலமாகத்தான் இந்தப் படம் புத்துயிர் பெற்று வெளியாகிறது என்று பட விழாவில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் தயாரிப்பாளர்.
    இசை வெளியீட்டு விழாவில் நடிகரும் இயக்குனருமானவர் பேசிய ஏடாகூட பேச்சால், தளபதி ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.
    சமீபத்தில் தளபதியானவர் நடித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடந்ததாம். அதில், பல பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர்கள். எப்போதுமே வித்தியாசமாகப் பேசுகிறேன் என்று சொல்லி ஏடாகூடமாக எதையாவது பேசும் இயக்குனரும் நடிகருமானவர், வழக்கம் போல பேசினாராம்.

    இதேபோல், தளபதியாரின் முந்தைய படமான விலங்கு பெயர் கொண்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இப்படித்தான் ஒரு இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் தளபதியை ஓவராகப் புகழ்ந்தாராம். அந்தப் படம் ஊத்திக் கொண்டது. அதேபோல், இந்தப் படமும் ஆகிவிடக் கூடாது என கலக்கத்தில் இருக்கிறார்களாம் தளபதி ரசிகர்கள்.
    நடிகை நடித்த தமிழ்ப் படங்கள் வெளியாகாததால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம் மேகமான நடிகை
    தமிழில் பிரபல நடிகரின் மகன் காளியான நடிகர் அறிமுகமாகும் கதையான படத்தில் நடிப்பதற்காக 2 வருடங்களுக்கு முன்பு தமிழுக்கு வந்தவர் மேகமான நடிகை. இந்த படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து முடிந்தாலும், இன்னும் திரைக்கு வரவில்லை. மேலும் மேனன் இயக்கத்தில் ஒல்லி நடிகர் நடிப்பில் தயாராகியிருக்கும் தோட்டா படத்திலும் இவர்தான் நாயகியாம். இந்த படமும் திரைக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லையாம்.

    இந்த நிலையில் நடிகை சமீபத்தில் நடித்து வெளியான தெலுங்கு படம் ஒன்று வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளதாம். தெலுங்கு படம் மகிழ்ச்சி கொடுத்தாலும், தமிழ் படம் வெளியாகவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறாராம் நடிகை.
    தன்னை விட தனது நண்பர்கள் பல மடங்கு அதிகம் சம்பளம் வாங்ககுவதாக நடிகை ஒருவர் ஆதங்கம் தெரிவித்திருக்கிறாராம்.
    தொடக்கத்தில் இந்தி, பெங்காலி, மராத்தி என வட மொழிகளில் நடித்து வந்த அந்த நடிகை, செல்லம் நடிகருடன் இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் பெயரில் வெளியான படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சிறுத்தை நடிகருடன் ஒரு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

    மேலும் பல இந்தி படங்களிலும் நடித்து வந்தார். ஒரு சில படங்களில் அரை நிர்வாணம், முழு நிர்வாணமாக நடித்து சில சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து தமிழில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகிய மலேசியா டான் படத்தில் சூப்பர் நடிகருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து பல இந்திப் படங்களில் நடித்து விட்டாலும், நடிகையின் சம்பளம் மட்டும் உயரவில்லையாம். இதனால் நடிகை அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறாராம்.



    அதில், நடிகா்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்றும் கூறியிருக்கிறாராம்.

    இங்கு பல வேறுபாடுகள் இருக்கின்றன. தன் சம்பளத்தைவிட தனது நண்பா்களின் சம்பளம் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆண் நடிகர்களின் அளவுக்கு உயர்ந்து இடத்தை ஒரு சில நடிகைகளே பெற்றிருக்கின்றனர் என்று நடிகை ஆதங்கம் தெரிவித்திருக்கிறாராம்.
    அதுக்கு சரிப்பட்டு வராததால் நடிகை ஒருவரை தனது படத்தில் இருந்து இயக்குநர் ஒருவர் நீக்கிவிட்டாராம்.
    கலகலப்பான படங்களை இயக்குவதில் பிரபலமான அந்த இயக்குநர் தற்போது, பிரமாண்ட படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அந்த படத்தில் டிக் நடிகரும், பாஸ் நடிகரும் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். மேலும் படத்திற்காக தங்களை தயார்படுத்தியும் வருகின்றனர்.

    அதேநேரத்தில் அந்த படத்தில் ராணியாக நடிக்கவிருந்த புலி நடிகை சில காரணங்களால் படத்தில் இருந்து விலகியதால், அவர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகை ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது.

    அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகையை தேர்வு செய்ய நடத்தப்பட்ட போட்டோ ஷீட்டில் இயக்குநருக்கு பிடித்தமான நடிகையான பப்ளிமாஸ் நடிகையும் பங்கேற்றார். விதவிதமாக அவரை போட்டோ எடுத்து பார்த்தும் நடிகை தேறாததால், அதுக்கு அந்த நடிகை சரிப்பட்டு வரமாட்டார் என இயக்குநர் நடிகையை கலட்டிவிட்டாராம்.

    படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் நாயகிக்கான தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
    சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் போட்டியாளராக பங்கேற்று, பின்னர் வெளியேறிய நடிகை ஒருவர் அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மனசோர்வால் இமயமலைக்கு சென்றிருக்கிறாராம்.
    தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெரிய பாஸ் என்ற பெயரில் ஒரு வீட்டுக்குள் குறிப்பிட்ட நாட்கள் வரை இருக்க வேண்டும் என்று சில கட்டுப்பாடுகளுடன் சினிமா பிரபலங்கள் பலரை வைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. 

    அந்தவகையில் ஒவ்வொரு வாரமும் அந்த வீட்டில் இருந்து ஒரு பிரபலம் வெளியேறி வருகிறார்கள். தமிழ் சினிமாவின் உலக நடிகர் என்ற அழைக்கப்படும் நடிகர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இவ்வாறாக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறியவர்களில் ஒருவர் தான் அந்த மச்சான்ஸ் நடிகை. தமிழில் அறிமுகமான நேரத்தில் மிகப் பிரபலமான அந்த நடிகை, அவரது உடற்கட்டு பிரச்சனையால் படங்களில் நடிக்காமல் இருந்தாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த நடிகை சமீபத்தில் வெளியேறினார். கிட்டத்தட்ட 30 நாட்கள் அந்த வீட்டில் எந்த தொடர்பும் இன்றி இருந்ததால் ஏற்பட்ட மனசோர்வை போக்க அந்த நடிகை இமயமலைக்கு சென்றிருக்கிறராம்.

    பொதுவாக மனஉளைச்சல், மனசோர்வு உள்ளிட்ட காரணங்களால் நடிகர்கள் தான் இமயமலைக்கு செல்வதாக பார்த்திருக்கிறோம். நடிகை ஒருவர் சென்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம்.
    தமிழின் முன்னணி நடிகை ஒருவர் பிரமாண்ட நாயகருடன் காதல் வலையில் சிக்கியிருப்பதாக வெளியான கிசுகிசுக்களுக்கு நாயகி விளக்கம் அளித்திருக்கிறாராம்.
    கண் மைக்கு வேறு பெயரையே தனது பெயராக கொண்ட அந்த நாயகி தமிழில் தற்போது முன்னணி நடிகையாக வலம்வருகிறார். தமிழின் உச்ச நடிகர்கள் இருவரது படங்களிலும் நடிகை தற்போது நடித்து வருகிறார். அந்த இரு படங்களுமே விரைவில் ரிலீசாக இருக்கிறது.

    மேலும் தெலுங்கில் பிரம்மாண்ட படத்தில் நடித்த உயர்ந்த வில்லன் நாயகனுடன் நாயகி நடித்திருக்கும் அரசியல் சாயல் கொண்ட படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த படத்தில் நடித்த போது நாயகன், நாயகி இருவருக்கும் இடையே காதல் வந்துவிட்டதாக தெலுங்கு திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.

    அதன் காரணமாகவே எந்தவொரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத அந்த நடிகை அவரது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாராம். இந்த தகவல் நாயகியின் காதுக்கு செல்ல, இதுகுறித்து விளக்கம் அளித்த அந்த நடிகை, தனக்கும் அந்த நாயகனுக்கும் இடையே நட்பை தவிர வேறு ஒன்றும் இல்லை, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று கூறியிருக்கிறாராம்.

    அதற்கு முன்னதாக நாயகி அளித்த பேட்டியொன்றில், காதலுக்கு அப்பறம் தான் திருமணம் செய்வேன் என்றும், தான் காதலிக்கும் நபர் சினிமாவிற்கு அப்பாற்பட்டவராய் இருந்தாலும் பரவாயில்லை. உயரமாக, நல்லவராக இருந்தால் போதும் உடனே திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
    தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் நடித்து வரும் நடிகை ஒருவர் அவரது காதலரின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிறாராம்.
    காதல் என்பதற்கு மாற்று பெயரில் மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களாலும் ரசித்து பார்க்கப்பட்ட படத்தில் நடித்த மூன்று நாயகிகளில் ஒருவரான அந்த நாயகி, அவ்வப்போது தமிழிலும் நடித்து வருகிறார்.

    தமிழில் ரவுடி நடிகருடனும் நாயகி நடித்த இரு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. அதேநேரத்தில் ஒல்லி நடிகர் இயக்கத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழ், மலையாளம் என எந்த மொழியிலும் போதிய வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

    எனினும் தற்போது, ஆங்கில படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதேநேரத்தில், நாயகி தற்போது, அவரது காதலரின் கட்டுப்பாட்டில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    நடிகை ஒருவரை காதலிப்பதாகவும், தற்போது அவரது கட்டுப்பாட்டில் தான் நாயகி இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. மேலும் அவரது சொல்படி தான் நடக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறாராம். இது ஒரு சில நேரத்தில் டார்ச்சர் என்று தோன்றினாலும், தனது நன்மைக்காக தான் காதலர் இவ்வாறு செய்கிறார் என்று நாயகி தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்கிறாராம்.
    ×