search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    படம் வெளியாகாததால் சிக்கித் தவிக்கும் நடிகர்
    X

    படம் வெளியாகாததால் சிக்கித் தவிக்கும் நடிகர்

    தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் படத்தை தயாரித்து நடித்து வரும் முன்னணி நடிகர் ஒருவரின் படம் வெளியாகாததால் சிக்கித் தவித்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் துணை நடிகராக வலம் வந்து, பின்னர் நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் அந்த நடிகர் ஓவியமான நடிகையுடன் நடித்த படத்தின் மூலம் பிரபலமானார்.

    அதன்பின்னர் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததால் பிசியாக நடித்து வந்தார். இதில் அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் அனைத்துமே தோல்வியை சந்தித்திருக்கிறது. மேலும் அவரது நடிப்பில் ஒரு வருடத்திற்கு மேலாகியும் படம் ஏதும் வெளியாகவில்லை. நாயகன் தற்போது அவரது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மன்னர் என்ற தலைப்புடைய படத்தில் நடித்திருக்கிறார்.

    இந்த படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டில் எடுத்து முடிக்க முடியாததால் கடன்களை வாங்கி ஒருவழியாக படத்தை எடுத்து முடித்திருக்கிறாராம். எனினும் அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமலும், புதிய படத்தில் நடிக்க முடியாமலும் நாயகன் தவித்து வருகிறாராம்.
    Next Story
    ×