search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆல் ஏரியாவிலும் பட்டையை கிளப்பும் கில்லி ரீ-ரிலிஸ்
    X

    ஆல் ஏரியாவிலும் பட்டையை கிளப்பும் கில்லி ரீ-ரிலிஸ்

    • படம் வேளியாகி இந்தாண்டோடு 20 வருடங்கள் கடந்த நிலையில் படம் இன்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது.
    • சென்னை முழுவதும் உள்ள திரையரங்குகள் முழுவதும் கில்லி திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரிப்பில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இத்திரைப்படம் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'ஒக்கடு' திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் இந்த படத்தில் கபடி வீரராக நடித்து இருப்பார். மதுரையில் கபடி போட்டிக்கு செல்லும் போது திரிஷாவை பிரச்சனையில் இருந்து காப்பாற்றி சென்னைக்கு தன்னுடன் அழைத்து வருகிறார். பின் யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டிலே பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார். அடுத்து என்ன நடந்தது? என்பதே கில்லி படத்தின் கதைக்களமாகும்.

    விஜயின் வெகுளித்தனமான கதாப்பாதிரமும், திரிஷாவின் அப்பாவித்தனமான முக பாவனையும் இப்படத்தின் கூடுதல் கவனத்தை பெற்றது. படத்தின் பாடல்களைப் பற்றி கூறியே ஆகவேண்டும் . வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இன்றும் காரில் பயணம் செய்யும் பொழுது அர்ஜூனர் வில்லு பாடல் கேட்காமல் பயணம் முடிவுக்கு வராது.

    படம் வேளியாகி இந்தாண்டோடு 20 வருடங்கள் கடந்த நிலையில் படம் இன்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. சென்னை முழுவதும் உள்ள திரையரங்குகள் முழுவதும் கில்லி திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டருக்கு சென்று படத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் பலப்பேர் கில்லி திரைப்படத்தை முதன் முதலில் தியேட்டருக்கு வந்து பார்க்கிறார்கள்.

    சமூக வலைத்தளங்களில் கில்லி படத்தின் காட்சிகளும், தியேட்டரின் ரெஸ்பான்ஸ்களையும், பாடலுக்கு நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். ரீ ரிலிஸ் செய்த படத்தில் கில்லி திரைப்படத்திற்கே அதிக அளவில் அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

    இதைக்குறித்து திரிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ததற்கு நன்றி. 20 வருடங்களுக்கு முன் எப்படி உணர்ந்தேனோ அதை மீண்டும் உணர்கிறேன்," என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×