என் மலர்

  சினிமா

  தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன்?
  X

  தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் `தர்பார்' படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், படத்தில் ஒரு பாடலை விக்னேஷ் சிவன் எழுதுவதாக கூறப்படுகிறது. #Darbar #Rajinikanth
  ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் `தர்பார்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
  மும்பை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

  அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் - விக்னேஷ் சிவன் இடையே நல்ல நட்பு இருக்கிறது. இவர்களது கூட்டணியில் உருவாகிய பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கடைசியாக அனிருத் இசையில் வெளியான பேட்ட படத்தில் விக்னேஷ் சிவன் வரியில் பாடல்கள் இல்லை என்ற குறை இருந்தது. அது தர்பார் படத்தின் மூலம் நினைவாகலாம்.  தர்பார் படத்தில் அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் ஒரு பாடல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மும்பை சென்ற விக்னேஷ் சிவன், ரஜினியை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். டி.சந்தானம் கலை பணிகளையும், ராம் லக்‌ஷ்மன் சண்டைக்காட்சிகளையும் வடிவமைக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss #Anirudh #VigneshShivn

  Next Story
  ×