என் மலர்tooltip icon

    சினிமா

    விஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
    X

    விஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

    சிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் வட இந்திய உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #Viswasam #AjithKumar
    சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன் சாதனைகளையும் படைத்துள்ளது. டிரைலரை இதுவரை சுமார் 1 கோடியே 90 லட்சம் பேர் பார்த்துள்ளனர். சுமார் 12 லட்சம் லைக்சும் கிடைத்துள்ளது.

    இந்த நிலையில், வட இந்தியாவில் விஸ்வாசம் படத்தை கணேஷ் பிலிம்ஸ் வெளியிடுவதாக சத்யஜோதி பிலிம்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.


    விஸ்வாசம் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கே.ஜே.ஆர்.ஸ்டூடியோசும், கர்நாடக திரையரங்க உரிமையை ஸ்டுடியோ ஹாரிசான் நிறுவனமும் கைப்பற்றியிருக்கிறது.

    படத்தின் திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளுக்கான விநியோக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி வாங்கியிருக்கிறது.

    அஜித் இந்த படத்தில் `தூக்கு துரை' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ரஜினி நடித்துள்ள பேட்ட படமும் அதே தேதியில் வெளியாக இருப்பதால் இரு படங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ViswasamTrailer #Viswasam #ViswasamThiruvizha #RoaringViswasamTrailer #AjithKumar #Nayanthara

    Next Story
    ×