என் மலர்
சினிமா

பொங்கல் வெளியீடு - ரஜினியின் பேட்ட ரிலீஸ் தேதி உறுதியானது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் வெளிநாடுகளில் 9-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்கு அடுத்த நாளில் இந்தியாவில் படம் ரிலீசாகும். #Petta #Rajinikanth
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் வருகிற பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.
பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான பாடல் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
#PettaTrailerOn28th
— Sun Pictures (@sunpictures) December 25, 2018
@Rajinikanth@karthiksubbaraj@anirudhofficial@VijaySethuOffl@Nawazuddin_S@SimranbaggaOffc@trishtrashers@SasikumarDir@lyricist_Vivek@DOP_Tirru@sureshsrajan@PeterHeinOffl@vivekharshan#GetRajinified#PettaPongalParaakpic.twitter.com/szpYcFP9pq
இதற்கிடையே படத்தின் சர்வதேச திரையீட்டு உரிமையை டத்தோ மாலிக்கின் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பரேஷன் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு பிடிச்சவன்’, ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ’வி ஐ பி 2’, ’துப்பாக்கிமுனை’ உள்ளிட்ட படங்களை உலக நாடுகளில் வெளியிட்டது.
பேட்ட படத்தின் ரிலீஸ் 10-ம் தேதியா? 14-ம் தேதியா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் சொல்லும் விதமாக வெளிநாடுகளில் பிரீமியர் காட்சிகள் 9-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10-ம் தேதியே படம் வெளியாவது உறுதியாகி உள்ளது. #Petta #Rajinikanth
Next Story






