என் மலர்
சினிமா

பேட்ட படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘பேட்ட’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Petta #PettaTrailer #Rajinikanth
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர்.
அனைத்து பணிகளும் முடிவுற்று, படத்தை தணிக்கை அதிகாரிகளுக்குத் திரையிட்டு காட்டினார்கள். அவர்கள் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க சந்தோஷம் அடைந்துள்ளது படக்குழு. இதனைத் தொடர்ந்து ‘பேட்ட பொங்கல் பராக்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் டிரெய்லர் புத்தாண்டுக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது டிசம்பர் 28ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
#PettaTrailerOn28th
— Sun Pictures (@sunpictures) December 25, 2018
@Rajinikanth@karthiksubbaraj@anirudhofficial@VijaySethuOffl@Nawazuddin_S@SimranbaggaOffc@trishtrashers@SasikumarDir@lyricist_Vivek@DOP_Tirru@sureshsrajan@PeterHeinOffl@vivekharshan#GetRajinified#PettaPongalParaakpic.twitter.com/szpYcFP9pq
’பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், திரிஷா, நவாசுதின் சித்திக், சசிகுமார், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராமதாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். #Petta #PettaTrailer #Rajinikanth
Next Story






