என் மலர்

  சினிமா

  தளபதியுடன் திரையில் தோன்றுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை - நடிகர் லல்லு
  X

  தளபதியுடன் திரையில் தோன்றுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை - நடிகர் லல்லு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தளபதியுடன் திரையில் தோன்றுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை, சர்கார் படத்தில் தன்னை நடிக்க வைத்த ஏ.ஆர்.முருகதாசுக்கு நன்றி என்று நடிகர் லல்லு தெரிவித்துள்ளார். #Sarkar #Vijay
  கவுதம் கார்த்திக்கின் `ரங்கூன்' மற்றும் `8 தோட்டாக்கள்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் லல்லு. இவர் தற்போது விஜய்யின் `சர்கார்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சர்கார் படத்தில் நடித்தது குறித்து லல்லு அவரது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது,

  `சர்கார் படத்தில் அற்புதமான வாய்ப்பை கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு மிகப்பெரிய நன்றிகள். தளபதியுடன் திரையில் இணைந்து நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது கனவு நிறைவேறிவிட்டது.' என்று தெரிவித்துள்ளார்.

  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் லாஸ் வேகாஸ் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் படமாக்கப்பட்டது. படத்தின் புரமோஷன் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியாக இருக்கிறது.  விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. #Sarkar #Vijay #Lallu

  Next Story
  ×