என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அடுத்த 5 நாட்களுக்கு விஜய் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து - சர்கார் படக்குழு அறிவிப்பு
Byமாலை மலர்25 Aug 2018 7:30 AM GMT (Updated: 25 Aug 2018 7:30 AM GMT)
விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகிய நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு சிறப்பு விருந்து அளிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Sarkar #Vijay #SarkarWorkingStills
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது.
இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு விஜய் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நாளை முதல் அடுத்த 5 நாளைக்கு ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். #Sarkar #Vijay #SarkarWorkingStills
SARKAR Thalapathy 62 Vijay 62 Varalakshmi Sarathkumar Keerthy Suresh AR Rahman Yogi Babu Vijay AR Murugadoss Sun pictures girish gangatharan Lyricist Vivek விஜய் விஜய் 62 ஏ.ஆர்.முருகதாஸ் சன் பிக்சர்ஸ் தளபதி 62 கிரீஸ் கங்காதரன் ஏ.ஆர்.ரஹ்மான் யோகி பாபு ஸ்ரீகர் பிரசாத் கீர்த்தி சுரேஷ் வரலட்சுமி தளபதி 62 சர்கார் பாடலாசிரியர் விவேக் தளபதி 62
Next Story
×