என் மலர்
சினிமா

விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Sarkar #Vijay
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், முற்றிலும் வேறுபட்டதாக படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.#SarkarAudioFromOct2nd@actorvijay@ARMurugadoss@arrahman@KeerthyOfficial@varusarathpic.twitter.com/Dzel8bifCT
— Sun Pictures (@sunpictures) August 24, 2018
இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். #Sarkar #Vijay #SarkarAudioFromOct2nd
Next Story






