என் மலர்

  சினிமா

  விஜய் நடிக்கும் சர்கார் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
  X

  விஜய் நடிக்கும் சர்கார் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. #Sarkar #Vijay
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

  சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

  இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். #Sarkar #Vijay #KeerthySuresh

  Next Story
  ×