என் மலர்
சினிமா

இயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை திரிஷாவின் நீண்ட நாள் கனவு விரைவில் நனவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Trisha
திரிஷா நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. தென் இந்தியாவின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்துவிட்ட திரிஷா இன்னும் ரஜினியுடன் மட்டும்தான் இணைந்து நடிக்கவில்லை.
எந்த பேட்டி என்றாலும் திரிஷா ஏக்கமாக இதனை குறிப்பிடுவார். அவரது ஏக்கம் தீரும் நேரம் வந்துவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் திரிஷாவும் நடிக்கிறாராம். ஏற்கனவே சிம்ரன் ஒரு கதாநாயகியாக நடிக்கும் நிலையில், திரிஷாவும் காதலியாக நடிக்கிறார். ரஜினியின் இளவயது தோற்றத்துக்கு திரிஷா ஜோடியாக இருக்கலாம் என்று செய்தி வருகிறது.

திரிஷா நடிப்பில் கடைசியான வெளியான மோகினி படம் போதிய வரவேற்பை பெறாத நிலையில், 96, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட படங்கள் திரிஷா கைவசம் உள்ளன. #Rajinikanth #Trisha
Next Story