என் மலர்
சினிமா

விஸ்வாசம், தல மற்றும் ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் படம் - சிவா
அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் தல மற்றும் ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் படம் என்று படத்தின் இயக்குநர் சிவா கூறியிருக்கிறார். #Viswasam #AjithKumar #Nayanthara
அஜித் நடிப்பில் `விஸ்வாசம்' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
விஸ்வாசம் என்ன மாதிரியான கதை என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், படம் குறித்த புதுப்புது தகவல் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. படத்தில் அஜித் வயதான மற்றும் இளமை தோற்றங்களில் நடிக்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் படத்தின் இயக்குநர் சிவாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு, விஸ்வாசம் படம் குறித்து கேட்டனர். அவர்களிடம் “இது, தல மற்றும் ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் படம்” என்று சிவா பதில் அளித்தார். அதைக்கேட்டு அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள்.

இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அடுத்தகட்டமாக சென்னை மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. #Viswasam #AjithKumar #Nayanthara
Next Story






