search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரஜினியின் அடுத்த படத்தில் தனுஷ் பட நாயகி
    X

    ரஜினியின் அடுத்த படத்தில் தனுஷ் பட நாயகி

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் தனுஷ் பட நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Rajinikanth
    ரஜினி நடிப்பில் `காலா' படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. காலா படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினி, தனுஷ், ரஞ்சித் உள்ளிட்டோர் ஐதராபாத் சென்றிருந்தனர். 

    ஜுன் 2-வது வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுவரை வயதான தோற்றத்தில் வலம் வந்த ரஜினி நேற்று ஐதராபாத் நிகழ்ச்சியில் கருப்பு முடி, தாடியுடன் வந்தார். அடுத்த படத்திற்காக ரஜினி கருப்பு முடி, தாடிக்கு மாறியிருப்பதாக கூறப்படுகிறது. 

    சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக சிம்ரன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 



    இதுதவிர முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா, சனத் ரெட்டி உள்ளிட்டோரும் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rajinikanth #MeghaAkash

    Next Story
    ×