என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளாராம்.
நடிகர் அஜித் வாரணாசியில் உள்ள ரோட்டோர கடையில் உணவு அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. அவர் எதற்காக அங்கு சென்றார் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி நடிகர் அஜித், சிக்கிமிற்கு பைக் டிரிப் சென்றதாகவும், செல்லும் வழியில் வாரணாசியில் உணவு அருந்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது என்றும் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து சிக்கிமிற்கு சென்று வர சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்யவேண்டும்.

இதன்மூலம் நடிகர் அஜித் சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகர் அஜித் பைக் மற்றும் கார் ரேஸில் ஆர்வம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரி, 10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில், முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை ஜெயித்தார். இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவ்வும் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், விறுவிறுப்பாக நடந்த 4-வது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் ஆரி வெற்றி பெற்றார். குறிப்பாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு, 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருந்ததாகவும், இரண்டாம் இடம் பிடித்த பாலாவுக்கு 6 கோடியே 14 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாகவும் கமல் தெரிவித்தார்.

இதன்மூலம் சுமார் 10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரி வெற்றி பெற்றுள்ளார். பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை இவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் யாரும் வெற்றி பெற்றதில்லை என கூறப்படுகிறது. வெற்றி பெற்ற ஆரிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
காந்தி டாக்ஸ் என்கிற மவுனப் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து பாலிவுட் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடிக்கிறார். தற்போது காந்தி டாக்ஸ் என்ற பெயரில் உருவாகும் மவுனப் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987-ல் இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியான புஷ்பக விமானா படமே கடைசியாக வெளியான மவுனப் படம் ஆகும். இந்தப் படம் தமிழில் பேசும்படம் என்ற பெயரில் வந்தது.

சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தியில் காந்தி டாக்ஸ் என்கிற மவுனப் படம் உருவாகிறது. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர். இப்படத்தை கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, “காந்தி டாக்ஸ் உணர்ச்சிகள் நிறைந்த இதயத்துக்கு நெருக்கமான படம். இதில் ஹீரோவாக நடிக்க இந்தியில் நிறைய நடிகர்களை பரிசீலித்தேன். யாரும் அதற்கு பொருந்தவில்லை. அப்போதுதான் விஜய்சேதுபதியின் நடிப்புத் திறமை தெரிந்து அவரை ஒப்பந்தம் செய்தேன்'' என்றார்.
சினிமாவில் மறுபிரவேசம் செய்த லதாவுக்கு, சின்னத்திரை வாய்ப்பும் தேடி வந்தது. டைரக்டர் கே.சங்கர் இயக்கிய "ராமாயணம்'' தொடரில் நடித்து, சின்னத்திரையிலும் தனது நடிப்பைத் தொடங்கினார்.
சினிமாவில் மறுபிரவேசம் செய்த லதாவுக்கு, சின்னத்திரை வாய்ப்பும் தேடி வந்தது. டைரக்டர் கே.சங்கர் இயக்கிய "ராமாயணம்'' தொடரில் நடித்து, சின்னத்திரையிலும் தனது நடிப்பைத் தொடங்கினார்.
சின்னத்திரை அனுபவங்கள் குறித்து லதா கூறியதாவது:-
"சினிமாவில் இரண்டாவது இன்னிங்சிலும் பிசியாகவே இருந்தேன். டைரக்டர்கள் பி.வாசு, மணிவண்ணன், கஸ்தூரிராஜா, ராம.நாராயணன் போன்றோர் படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருந்தேன்.
இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் -சிவாஜியை பல படங்களில் இயக்கிய டைரக்டர் கே.சங்கரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. "ராமாயணம்'' என்ற பெயரில் ஒரு புராணத் தொடர் எடுக்க இருப்பதாகவும், அதில் ராதாரவி ராவணனாக நடிப்பதாகவும் சொன்னவர், நான் ராவணனின் மனைவி மண்டோதரியாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
`பிரபல டைரக்டர் என் மீது நம்பிக்கை வைத்து கேட்கிறார். எனவே மறுக்கக்கூடாது' என்று, அந்தத் தொடரில் நடித்தேன். 1997-ல் இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பானது.
தொடர்ந்து பாலாஜி டெலிபிலிம்சுக்காக "பவித்ர பந்தம்'' என்ற தெலுங்கு சீரியலிலும் நடிக்கலானேன்.
"கிழக்கே போகும் ரெயில்'' படத்தில் நடிகை ராதிகா அறிமுகமாகியிருந்தார். அடுத்து "அன்னப்பறவை'' என்ற படத்தில் நானும் ராதிகாவும் நடித்தோம். அந்தப் படத்தில் ராதிகாவின் இளம் வயது அம்மா நான். இந்தப் படத்தில் நடிக்கும்போதே, ராதிகா எனக்கு நல்ல தோழியானார். அதோடு நடிகை ஸ்ரீபிரியா இவருக்கு நெருக்கமான தோழி. என் தம்பி ராஜ்குமார் ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொண்டபிறகு, ராதிகா இன்னும் எனக்கு நெருக்கமானார்.
இந்த நட்பின் அடிப்படையில், ராதிகா சின்னத்திரைக்கு வந்த நேரத்தில் "இதி கத காது'' என்ற மெகா தொடரில் என்னை நடிக்கும்படி கேட்டார். உயிர்த் தோழிகளாக இருக்கும் இருவர் காலச் சூழலில் ஜென்ம எதிரிகள் போல் மோதிக்கொள்ளும் கதை. தெலுங்கில் இந்த "மெகா'' சீரியலுக்கு மகா வரவேற்பு.
ராதிகாவுக்கு தமிழில் திருப்புமுனையாக அமைந்தது `சித்தி' தொடர். இந்த தொடரில் 250 எபிசோடு வரை நான் கிடையாது. கதைப்படி ஒரு பெற்றோர் 250 எபிசோடு தாண்டி அறிமுகமாகிறார்கள். அதில் `அம்மா' கேரக்டரில் ஏற்கனவே ரசிகர்களிடம் பிரபலமான ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் அபிப்ராயப்பட்டிருக்கிறார். இதை என்னிடம் சொன்ன ராதிகா, "நீங்களே நடித்தால் சிறப்பாக இருக்கும்'' என்றார். ஒப்புக்கொண்டு நடித்தேன்.
என் போர்ஷன் அதிகபட்சம் 30 எபிசோடு வரை வந்திருக்கும். எனக்கு ரொம்ப நல்ல பெயரை வாங்கிக்கொடுத்த கேரக்டராக அது அமைந்தது.
தொடர்ந்து பாலாஜி பிலிம்சுக்கு நாலைந்து தொடர்கள் நடித்தேன். இந்த நேரத்தில் ஏவி.எம்.மில் இருந்து "ஈ நாட்டு ராமாயணம் இல்லாலு'' என்ற தெலுங்கு தொடரில் நடிக்க கேட்டார்கள். அது ஒளிபரப்பாகி மிகப் பெரிய "ஹிட்.''
தொடர்ந்து ஹரிராஜனின் தொடர், பாலாஜி டெலிபிலிம்சின் "கேளுங்க கேளுங்க மாமியாரே'' என்று தொடர்ந்தேன். இதில் `கேளுங்க கேளுங்க மாமியாரே' தொடர், முற்றுப்பெறாமல் பாதியிலேயே நின்று போனது வருத்தம் தந்தது.
ராதிகாவின் "செல்வி'' தொடரில்தான் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனை. நான் தெலுங்கில் பிசியாக இருந்த நேரத்தில் ஒருநாள் ராதிகாவின் அம்மா எங்கள் வீட்டுக்கு வந்தார். `செல்வி' என்ற பெயரில் புதிய தொடர் தயாரிப்பதாக சொன்னவர், "இலங்கையில்தான் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இலங்கையில் `ஓஹோ'வென வாழ்ந்த ஒரு குடும்பம், அங்கே சொத்துக்களை இழந்து தமிழ்நாட்டில் தஞ்சமாகிற கதை. கோடீசுவரப் பெண், நடுத்தர வாழ்க்கைக்கு பழகி, அனுதினமும் பொருளாதாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய கேரக்டர் இருக்கிறது. நீ செய்தால் சரியாக இருக்கும் என்பது ராதிகாவின் எதிர்பார்ப்பு'' என்றார்.
இந்த கேரக்டரில் நடிக்க நடிகை ராதிகாவும், டைரக்டர் சுந்தர் கே.விஜயனும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள். இந்தத் தொடரில் நான் பேசிய வசனங்கள், "என்ன புள்ள!'' "உன்னைப் பார்த்தா எனக்கு படபடங்குது'', "ரொம்ப டூ மச்'' போன்றவை ரசிகர்களிடையே இப்போதும் பிரபலம்.
இலங்கையில் பங்களாவில் வாழ்ந்து பழக்கப்பட்ட பெண், சென்னையில் புறாக்கூண்டு போன்ற வீட்டில் வாழும்போது என் கேரக்டர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், ரசிகர்களை பாதித்திருக்கிறது. இதற்கு உதாரணமான விஷயமும் நடந்தது.
தி.நகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு போயிருந்தேன். என்னைப் பார்த்ததும் ஒரு பூக்காரப் பெண்மணி ஓடி வந்தாள். "அம்மா அம்மா! பூ வாங்கிக்கம்மா'' என்று நாலைந்து முழம் பூவை என் கையில் திணித்தாள். "காசு எவ்வளவு அம்மா?'' என்று நான் கேட்டு பணம் கொடுக்க முயன்றபோது, அந்தப் பெண் பணத்தை வாங்க மறுத்து விட்டாள். அதோடு, "போம்மா! உன் கிட்ட காசு வாங்கினா தப்பும்மா! தலைவரோட (எம்.ஜி.ஆர்) ஜோடியாக எல்லாம் நடிச்ச நீ, இப்ப எவ்வளவு கஷ்டப்படறேன்னுதான் `செல்வி' தொடரில் பார்த்தேனே!'' என்று கூறினாள்! அப்போதுதான் செல்வியில் என் கேரக்டர் எந்த அளவுக்கு மக்களிடம் ஊடுருவியிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
இப்போது கலைஞர் `டிவி'யில் ஒளிபரப்பாகி வரும் "மஞ்சள் மகிமை'' தொடரிலும் எனக்கு வித்தியாசமான கேரக்டர்.''
இவ்வாறு லதா கூறினார்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் அதிக வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் ஆரி டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த அக்டோபர் 4ந் தேதி தொடங்கியது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் இறுதிப்போட்டிக்கு ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் சோம் 5வது இடம் பெற்றிருந்தார். இவரை கடந்த சீசன் டைட்டில் வின்னரான முகின் வெளியே அழைத்து வந்தார். இதையடுத்து 4வது இடம் பிடித்த ரம்யா பாண்டியனை நடிகரும் கடந்த சீசன் போட்டியாளருமான கவின் வெளியே அழைத்து வந்தார்.

பின்னர் 3வது இடம் பிடித்த ரியோவை ஷெரின் வெளியே அழைத்து வந்தார். மீதமிருந்த பாலா, ஆரி ஆகியோரை கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று அழைத்து வந்தார். பின்னர் இவர்களில் அதிக வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆரிக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கான கோப்பையும், ஐம்பது லட்சத்திற்கான காசோலையும் கொடுக்கப்பட்டது. டைட்டில் ஜெயித்த ஆரிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் சூரி. இவர் தற்போது ஹீரோவாகவும் மாறி உள்ளார். வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடியுள்ளார். அப்போது அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார்.
மேலும் குழந்தைகளுக்கு தேவைப்படும் நோட், ஸ்கூல் பேக், உண்டியல் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேர வேண்டும் என்று குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கியதோடு அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். சூரியின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ரத்தன்லிங்கா இயக்கத்தில் ஜூனியர் எம்.ஜி.ஆர் வி. இராமச்சந்திரன் ஹீரோவாக நடிக்கும் ‘கேங்ஸ்டர் 21’ படத்தின் முன்னோட்டம்.
'அட்டு' படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா அடுத்ததாக இயக்கும் படம் 'கேங்ஸ்டர் 21'. ஏ.டி.ஆர். புரொடக்சன்ஸ் சார்பில் எம்.என். வீரப்பன் தயாரிக்கும் இப்படத்தில் ஜூனியர் எம்.ஜி.ஆர் வி. இராமச்சந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் சென்னையில் நிழல் உலக தாதாவாக இருந்த ஒருவரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.
இதற்கு ஒளிப்பதிவு - பாலாஜி, இசை - விக்ரம், ஸ்டண்ட் - ஸ்டன்னர் சாம், ஆர்ட் - ஆனந்த் என்று இதில் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஏற்கெனவே சில படங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள். திறமையுள்ள இளைஞர்களின் கூட்டு முயற்சியில் இப்படம் உருவாகிறது.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான ரச்சிதா, தனது தீவிர ரசிகர் ஒருவரின் இல்லத்துக்கு சர்ப்ரைஸாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சின்னத்திரை நடிகையான ரச்சிதா, பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதுதவிர உப்புக்கருவாடு என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், தன்னுடைய தீவிர ரசிகர் ஒருவரின் இல்லத்துக்கு சர்ப்ரைஸாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரச்சிதா. மாற்றுத்திறனாளி இளைஞரான அந்த ரசிகருக்கு தான் வாங்கி வந்த இனிப்புகளை ஊட்டி விட்ட ரச்சிதா, அவருக்கு புத்தாடையை பரிசாக வழங்கினார்.
மேலும் அந்த ரசிகரை ஒரு தாயைப் போல ரச்சிதா அரவணைத்த காட்சி காண்போரை நெகிழச் செய்தது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். பின்னர் காஷ்மோரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கிய கோகுல், அடுத்ததாக ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளியானாலும், இதில் யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்பதை படக்குழு அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முழுக்க முழுக்க காமெடி படம் என்பதால் இக்கதைக்கு சந்தானம் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு, மறைந்த யோகேஸ்வரன் நினைவாக தங்க காசு பரிசாக வழங்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சேலத்தைச் சேர்ந்த யோகேஷ்வரன் என்ற இளைஞர் ரெயிலில் ஏறி போராட்டம் செய்த போது எதிர்பாராத விதமாக மின்கம்பியைத் தொட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு மறைந்த யோகேஸ்வரன் நினைவாக தங்க காசு பரிசாக வழங்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “தமிழனின் வீர அடையாளமான இந்த ஜல்லிக்கட்டு காட்சிகளை பார்க்கும்பொழுது ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்காக உணர்வுரீதியாக போராடியதையும், பல அரசியல் தலைவர்கள் சட்ட ரீதியாக போராடி வெற்றி பெற்றதையும், இந்த மாபெரும் நிகழ்வில் என்னுடைய சிறு பங்கு இருந்ததையும் நினைத்து பார்க்கிறேன்.
போராட்டத்தின் போது ரெயில் மீது ஏறி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேலத்தை சேர்ந்த யோகேஸ்வரன் குடும்பத்தின் விருப்பத்திற்காக ஒரு மகன் என்ற நிலையில் இருந்து ஒரு நிலம் வாங்கி வீடு கட்டி தந்துள்ளேன்.
அதோடு இல்லாமல் யோகேஸ்வரனை என்றளவும் நினைவு கூறும் விதமாக இப்பொழுது ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் இனிவரும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும் இனிமேல் ஒவ்வொரு வருடமும் அவன் பெயர் பொறித்த தங்க காசுகளை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளேன்”. என லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஜல்லிகட்டு வீரர்களுக்கு “மறைந்த யோகேஸ்வரன்” நினைவாக தங்க காசு!!! #serviceisgodpic.twitter.com/wluqDPdlKo
— Raghava Lawrence (@offl_Lawrence) January 17, 2021
பா ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் வெளியான அட்டகத்தி படத்தை தவற விட்டேன் என்று பிரவீன் கூறியிருக்கிறார்.
பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அட்டகத்தி. இதில் தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அட்டகத்தி படத்தை தவற விட்டதாக நடிகர் பிரவீன் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நான் இதுவரை 25 குறும் படங்களில் நடித்திருக்கிறேன். பத்திற்கும் மேற்பட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். தற்போது ட்ரிப் படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறேன். இதற்கு முன் பல படங்களில் நேர்முக தேர்வுக்கு சென்றிருக்கிறேன்.

அப்படி சென்ற படம் தான் அட்டக்கத்தி. இதில் நான் தேர்வாகியும் ஒரு சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அட்டகத்தி படத்தை தவற விட்டது எனக்கு மிகுந்த வருத்தம். இருப்பினும் என்னுடைய விடாமுயற்சியால் தற்போது ட்ரிப் படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறேன்.
ட்ரிப் படத்தில் கதாநாயகியாக சுனேனா நடித்திருக்கிறார். டெனிஸ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் தைப்பூசத்தன்று (ஜனவரி 28) வெளியாகிறது. வழக்கமான படம் போல் இல்லாமல் நிச்சயம் ரசிகர்களுக்கு இந்த ட்ரிப் பிடிக்கும் என்றார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அஜித்குமாரின் வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹூமா குரேசி அஜித்துக்கு ஜோடியாக நடிக்க, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், வலிமை பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வலிமை படத்தின் ஷூட்டிங் முடிந்த பின்னரே பர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். வலிமை பட ஷூட்டிங் அடுத்த மாதத்திற்குள் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. ஆகையால் அடுத்த மாதம் வலிமை பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.