என் மலர்
சினிமா செய்திகள்
நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் ‘கடமையை செய்’ படத்தின் முன்னோட்டம்.
நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “கடமையை செய்“. பல வெற்றிப்படங்களை இயக்கியதோடு தற்போது பிரபல நடிகராகவும் உள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள்.
இயக்குனர் சுந்தர்.சி தயாரித்து, நாயகனாக நடித்த “முத்தின கத்திரிக்கா“ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தை இயகுகிறார். ஒளிப்பதிவு – வினோத் ரத்னசாமி, இசை - அருண்ராஜ், கலை – M.G.முருகன், எடிட்டிங் - N.B.ஸ்ரீகாந்த், ஸ்டண்ட் - பிரதீப் தினேஷ், நடனம் – தீனா, சாய் பாரதி, தயாரிப்பு மேற்பார்வை – R.P.வெங்கட், தயாரிப்பு - T.R.ரமேஷ், ஜாகிர் உசைன்
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்கள் குத்துவிளக்கேற்றி துவைக்கி வைத்தார். படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தனது ரசிகர்களை திடீரென்று நேரில் சந்தித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில், சென்னை அருகே பனையூரில் இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை செயலகத்திற்கு விஜய் சென்றிருக்கிறார். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருக்கும் நிலையில், நடிகர் விஜய் திடீரென இந்த கூட்டத்துக்கு வருகை தந்தார்.

விஜய்யின் திடீர் வருகையை எதிர்பாராத ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இது தொடர்பான போட்டோக்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எதற்காக பனையூரில் கூட்டம் நடைபெற்றது? என்ற தகவல் வெளியாகவில்லை.
ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் களத்தில் சந்திப்போம் படத்தின் விமர்சனம்.
ஜீவாவும் அருள்நிதியும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் ராதாரவி நடத்தி வரும் பைனாஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். ஜீவாவுக்கு திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை. அருள்நிதி திருமணத்தை வெறுப்பவர்.
ஒரு கட்டத்தில் அருள்நிதியை கட்டாயப்படுத்தி மாமா மகள் மஞ்சிமா மோகனை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள். ஆனால், ஜீவா விளையாட்டிற்கு ஒரு இடத்தில் சொன்ன பொய்யால் அருள்நிதி திருமணம் நடக்காமல் போகிறது. திருமணம் நின்றதற்கு நான்தான் காரணம் என்று வருந்தி, மஞ்சிமாவை ஏமாற்றி அருள்நிதிக்கு திருமணம் செய்ய முயற்சி செய்கிறார்.

ஆனால், அருள்நிதி திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் ஜீவா - அருள்நிதி இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் அருள்நிதி திருமணம் செய்ய மறுக்க காரணம் என்ன? மஞ்சிமாவின் வாழ்க்கை என்ன ஆனது? ஜீவா - அருள்நிதி இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நண்பர்களாக இருக்கும் ஜீவா, அருள்நிதி இருவருமே கதாபாத்திரத்திற்கு பொருந்தி இருக்கிறார்கள். குறும்பு, கிண்டல், நக்கல் என நடிப்பில் அசத்தி இருக்கிறார் ஜீவா. சண்டை, அடக்கம், அப்பாவி முகம் என அருள்நிதி அதகளப்படுத்தி இருக்கிறார். கபடி போட்டிகளில் இருவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

அருள்நிதியின் மாமா மகளாக வரும் மஞ்சிமா மோகன், ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன முகபாவனைகளில் கூட கவனிக்க வைத்திருக்கிறார். மற்றொரு நாயகி பிரியா பவானி சங்கர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். திரையில் குறைவாக வந்தாலும் நிறைவான நடிப்பு.
பைனான்ஸ் கம்பெனி நடத்தும் ராதாரவி, வழக்கம் போல் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். காமெடியிலும் கலக்கி இருக்கிறார். இருவருக்கு மட்டுமில்லாமல் படத்திற்கும் பெரிய பலமாக ரோபோ சங்கர், பால சரவணன் நடிப்பு அமைந்திருக்கிறது. ஆடுகளம் நரேன், இளவரசு, ரேணுகா அகியோரின் நடிப்பு கச்சிதம்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இரண்டு பாடல்கள் மீண்டும் கேட்க வைக்கிறது. பின்னணி இசையில் ஓரளவிற்கு ஸ்கோர் செய்திருக்கிறார். அபினந்தன் ராமானுஜம் காரைக்குடியின் அழகை குறைவில்லாமல் காட்டியிருக்கிறார்.
நண்பர்கள், அவர்களின் காதல், திருமணம், கலாட்டா என குடும்பங்கள் ரசிக்கும் விதமாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். இரண்டு நாயகர்களுக்கும் சமமான வேடம், காட்சிகள் கொடுத்து சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். எதிர்பார்க்காத இடங்களில் கூட காமெடி வைத்து திரைக்கதையை சிறப்பாக நகர்த்தியதற்கு பாராட்டுகள்.
மொத்தத்தில் ‘களத்தில் சந்திப்போம்’ காமெடி களம்.
தனுஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்த நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீவஸ்தவ் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து யூ-டியூப்பில் ஒளிப்பரப்பாகி வரும் 'வல்லமை தாரோயா' என்கிற வலை தொடரிலும் நடித்து வந்தார்.
கடந்த புதன்கிழமை படப்பிடிப்புக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட அவர், அன்றைய நாள் முழுவதும் வீடு திரும்பவில்லை. ஷூட்டிங்கில் இருந்தால் ஸ்ரீவதஸ்வ் தனது போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிடுவது வழக்கம். இதனால் அவருடைய குடும்பத்தார் மகன் படப்பிடிப்பில் இருப்பதாக நினைத்துக்கொண்டனர்.
இந்நிலையில் ஸ்ரீவதஸ்வ் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் மற்றொரு வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனால் அவருடைய குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாகவே அவருக்கு மனநிலை சரியில்லை என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள்.
கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பல திரைப் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியானது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இதையடுத்து விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படத்தை இணையத்தில் வெளியிடக் கூடாது என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் மாஸ்டர் திரைப்படம் முதலில் திரையரங்கில் வெளியாகி பின்னர் ஓடிடியில் வெளியானது.

தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது . இந்நிலையில் தனுஷின் ரசிகர்கள் ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கும் வகையில் ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அதில் 'ஜகமே தந்திரம்' திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு அன்புத் தலைவர் தனுஷ் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்கை சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு தயாரிப்பாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவி தன்னுடைய ரசிகர் ஒருவரை வீட்டுக்கு அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பஜார் தெரு விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுதீர் ராயல் (வயது 27). இவர் நடிகர் சிரஞ்சீவியின் தீவிர ரசிகர். பள்ளிப்பட்டு பகுதியில் அவரது பெயரில் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார். இந்த மன்றத்தின் மூலம் நற்பணிகளை செய்து வருகிறார். இவர் இதுவரை 7 ரத்த தான முகாம்களை தனது சொந்த செலவில் நடத்தி 700 யூனிட் ரத்தத்தை சேகரித்து முக்கிய ஆஸ்பத்திரிகளுக்கு இலவசமாக வழங்கி உள்ளார். இந்த செயல் நடிகர் சிரஞ்சீவியின் கவனத்துக்கு சென்றது.


அவர் உடனடியாக சுதீர்ராயலை தொடர்பு கொண்டு அவரை தனது வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த ரசிகர் சுதீர் ராயல் ஐதராபாத் சென்று நடிகர் சிரஞ்சீவியை சந்தித்தார். சுதீர் ராயலுக்கு நடிகர் சிரஞ்சீவி தனது வீட்டிலேயே விருந்து கொடுத்தார். மேலும் அவரது சேவையை பாராட்டி அவருடன் பேசி மகிழ்ந்தார். மேலும் அவருடன் புகைப்படம் எடுத்து அவருக்கு நினைவு பரிசை வழங்கி மகிழ்வித்தார்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராய் லட்சுமி, உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று கூறி இருக்கிறார்.
நடிகை ராய் லட்சுமி சமீபத்தில் கொரோனாவில் சிக்கி சிகிச்சைக்கு பின் குணம் அடைந்தார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“கொரோனா எல்லோருக்கும் நிறைய பாடம் கற்றுக்கொடுத்து இருக்கிறது. சமூகத்தில் யார் எதை செய்ய வேண்டும். எதை செய்ய கூடாது என்பதையும் உணர வைத்துள்ளது. மனிதாபிமானமும், அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதும் அதிகமாகி இருக்கிறது. சினிமா துறை மட்டுமன்றி எல்லா துறைகளில் இருப்பவர்களையும் தம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று உணர வைத்து இருக்கிறது.

கொரோனா கற்றுக்கொடுத்த பாடத்தை எப்போதும் மறக்கக்கூடாது. எல்லோருமே எதை மறந்தோமோ அதை கொரோனா ஞாபகப்படுத்தி விட்டுப் போய் இருக்கிறது. கொரோனாவை திட்டுவதை விட அது வந்து பல நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்துவிட்டு போய் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லோரும் ஏதோ மறுஜென்மம் எடுத்து இருக்கிற மாதிரியும் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று சந்தோஷப்படுகிற மாதிரியும் வைத்துவிட்டுப் போய் இருக்கிறது.''
இவ்வாறு ராய் லட்சுமி கூறினார்.
கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம் என்று முன்னணி நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கூறி இருக்கிறார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு நடிகர், நடிகைகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். போராட்டத்துக்கு வெளிநாட்டு நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் விவசாயிகளுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள பதிவில்,


“மக்களுக்கு போராடும் உரிமை இருக்கிறது. மக்கள் நலனை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்ளும்படி விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம். மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதும் ஜனநாயகம்தான். அவர்கள் ஏர்முனை கடவுள் என்றழைத்தால் மட்டுமே நம்மை படைத்தவனும் மகிழ்வான்'' என்று கூறியுள்ளார்.
தனக்குப் பிடித்தமான 10 திரைப்படங்கள் எவை என்பதற்கு கே.பாலசந்தர் பதில் அளித்தார்.
தனக்குப் பிடித்தமான 10 திரைப்படங்கள் எவை என்பதற்கு கே.பாலசந்தர் பதில் அளித்தார்.
கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று பல்வேறு துறைகளிலும் பாலசந்தர் பணியாற்றிய படங்கள் 125. (தமிழ் 87; தெலுங்கு 19; இந்தி 7; கன்னடம் 8; மலையாளம் 4)
டைரக்ட் செய்தவை: படங்கள், டெலிவிஷன் தொடர்கள் உள்படமொத்தம் 100.
"நீங்கள் இயக்கிய படங்களில், உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்களைச் சொல்லுங்கள்'' என்று பாலசந்தரிடம் கேட்கப்பட்டது.
அவர் சிரித்துக்கொண்டே, "பத்துக்குள் அடக்குவது சிரமம். எனினும் சிரமப்பட்டு சொல்கிறேன்.
1. அபூர்வ ராகங்கள், 2. பாமா விஜயம், 3. மரோசரித்ரா, 4. தண்ணீர் தண்ணீர், 5. சிந்து பைரவி, 6. வறுமையின் நிறம் சிவப்பு, 7. வானமே எல்லை, 8. புன்னகை மன்னன், 9. அச்சமில்லை அச்சமில்லை, 10. கல்கி.
மேற்கண்டவாறு கூறிய பாலசந்தர், "படங்களின் பெயர்களைத்தான் கூறியிருக்கிறேனே தவிர, தரத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்தவில்லை'' என்றார்.
"உங்களுடன் தொடர்பு இல்லாத படங்களில் உங்களை மிகவும் கவர்ந்த 10 படங்கள் எவை?'' என்று கேட்டதற்கு, பாலசந்தர் கூறியதாவது:-
தமிழில் கல்யாணபரிசு, திரும்பிப்பார், 16 வயதினிலே, தில்லானா மோகனாம்பாள், கன்னத்தில் முத்தமிட்டால்... ஆகிய படங்கள் பிடிக்கும்.
ஆங்கிலத்தில் "ரோமன் ஹாலிடே'', "சைக்கோ'' ஆகிய படங்களும், இந்தியில் "தோ ஆங்கேன் பாராஹாத்'', "மொகல் ஏ ஆஜாம்'', "பிளாக்'' ஆகிய படங்களும் என்னைக் கவர்ந்தவை.
இவற்றையும் நான் தரத்தின்படி வரிசைப்படுத்தவில்லை.''
இவ்வாறு கூறினார், பாலசந்தர்.
பாலசந்தர் டைரக்ட் செய்யும் 101-வது படம் "பொய்.'' இதை நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் கேசட் வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. கேசட்டை கமலஹாசன் வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். சிவகுமார், சரிதா, சுகாசினி உள்பட, பாலசந்தர் படங்களில் நடித்த அனைத்து நடிகர்-நடிகைகளும் விழாவில் கலந்து கொண்டனர்.
திரை உலக மேதைகளில் ஏவி.மெய்யப்ப செட்டியார், ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆகியோரிடம் பாலசந்தர் பெருமதிப்பு வைத்திருந்தார்.
ஏவி.எம். பற்றி அவர் குறிப்பிட்டதாவது:-
"ஏவி.எம். அவர்களுடன் சேர்ந்து ஒரு படத்திற்கு பணிபுரியும்போது தெரிந்து கொள்ளும் விஷயங்கள் வெளியே பத்து படங்கள் செய்யும்போது கிடைக்கும் விஷயங்களுக்கு சமம் ஆகும்.
படத்தின் `ரஷ்' போட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, `இங்கு ஒரு பிரேமை வெட்டு' என்பார். அதனால் என்ன மாற்றம் நேரப்போகிறது என்று நம்மால் அப்போது கற்பனை பண்ண முடியாது. அவர் கூறியபடியே செய்த பிறகுதான் அதனுடைய மகத்துவம் தெரியும்.
"மேஜர் சந்திரகாந்த்'' படம் முடிந்தபின், நாங்கள் படம் முழுவதையும் பார்த்த பிறகு, படத்தைப்பற்றி என் கருத்தை ஏவி.எம். கேட்டார். "வசூலைப் பொறுத்தவரையில்தான் பயமாக இருக்கிறது'' என்றேன்.
"படம் எப்படி வேண்டுமானாலும் ஓடட்டும். ஆனால் ஏவி.எம். சார்பில் இப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்'' என்றார், ஏவி.எம்.
படம் வெளியானதும், ஒரு பத்திரிகை "இது காசுக்காக எடுத்த படம் அல்ல; ஆசைக்காக எடுத்த படம்'' என்று எழுதியது. ஆம்; ஏவி.எம்.கருத்தையே விமர்சனம் பிரதிபலித்தது. ஆம்; அவர் கணிப்பு வென்றது.''
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
சொந்த முயற்சியினாலும், திறமையினாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்ற முறையில் ஜெமினி எஸ்.எஸ்.வாசனிடம் பிரமிப்பு கலந்த மரியாதை கொண்டவர், பாலசந்தர்.
"எஸ்.எஸ்.வாசனை முன்னோடியாகக் கொண்டு உழைக்கும் எவரும் வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள்'' என்று அடிக்கடி பலரிடம் கூறுவார்.
நடிகர் ஜெமினிகணேசனுடன் பாலசந்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் விசித்திரமானவை.
அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-
"1949-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடும் படலத்தில் இறங்கினேன். முதலாவதாக வேலை கேட்டு, ஜெமினி ஸ்டூடியோவுக்கு மனு அனுப்பினேன்.
சில நாட்கள் கழித்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், "தங்களுக்கு தற்போது வேலை தரமுடியாத நிலையில் இருக்கிறோம். தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை இருக்கும்போது, தங்களுக்குத் தகவல் தரப்படும்'' என்று அதில் எழுதியிருந்தது. கீழே ஆர்.கணேஷ் என்று கையெழுத்து போடப்பட்டிருந்தது.
"சந்தர்ப்பம் இல்லை'' என்கிற அந்தக் கடிதத்திலாவது மதிப்பிற்குரிய எஸ்.எஸ்.வாசன் அவர்கள் கையெழுத்து இருக்கும் என்று நினைத்து ஏமாந்தேன். என்றாலும் எனது அபிமான ஸ்டூடியோவிலிருந்து வந்த கடிதம் ஆதலால், அதை பெரும் பொக்கிஷம் போலக் கருதி பல ஆண்டுகள் பாதுகாத்து வந்தேன்.
பல ஆண்டுகள் கழித்து அந்தக் கடிதத்தை நான் மீண்டும் எடுத்துப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, அதில் கையெழுத்திட்டு இருந்த ஆர்.கணேஷ்தான், பிற்காலத்தில் மிக புகழ் பெற்று விளங்கிய ஜெமினிகணேசன்!
கமலஹாசனுக்கு அடுத்தபடியாக எனது டைரக்ஷனில் அதிக படங்களில் நடித்தவர் ஜெமினிகணேசன். எனக்கு வேலை இல்லை என்று சொன்னவருக்குத்தான் என் படங்களில் அதிக வேலை கொடுத்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.''
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
பாலசந்தர் தொடர்ந்து கூறியதாவது:-
"கலாகேந்திரா'' பட நிறுவனம் எனது தாய் ஸ்தாபனம். துரை, கோவிந்தராஜன், கிருஷ்ணன், செல்வராஜ் நால்வரும் உரிமையாளர்கள்.
நான் அவர்களுக்கு இயக்கி கொடுத்திருக்கும் திரைப்படங்கள் 15-க்கும் மேல். இவர்களைப்போன்ற நண்பர்கள் கிடைப்பது மிகமிகக் கடினம். நண்பர்களுக்காக உயிரையே தருவார் துரை. எனது நாடக நாட்களிலிருந்தே பி.ஆர்.கோவிந்தராஜ் எனக்குப் பக்க பலம். அந்தக் காலங்களில் என் ஓரங்க நாடகங்களில் பெண் வேஷம் போடுவார். அழகான பெண்கள் தோற்றுப் போவார்கள்.
1991-ம் ஆண்டு எனக்கு மிகப்பெரிய இழப்பு துரை, கோவிந்தராஜ் இவர்களுடைய மரணம். ஓரிரு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணன் அகால மரணம் அடைந்தார்.
எனது இன்னொரு பேரிழப்பு எனது அருமை நண்பரும், தயாரிப்பாளருமான அரங்கண்ணல் அவர்கள் மறைவு.
என்னோடு தோளோடு தோள் நின்று என்னுடைய அலுவலக நாட்களிலிருந்தே ஏறத்தாழ நாற்பதாண்டு காலம் உற்ற நண்பனாக, சிறந்த உதவியாளராக, ஆலோசகராக மற்றும் இன்றைய தலைமுறை கலைஞர் பெருமக்களுக்கும், எனக்கும் ஒரு பாலமாக அமைந்த எனது அன்பு அனந்து அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானதுதான் தொழில் துறையில் எனக்கு ஏற்பட்ட ஒரு உச்சகட்ட இழப்பு.''
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டார்.
இருகோடுகள் (1970), அபூர்வ ராகங்கள் (1974), தண்ணீர் தண்ணீர் (1982), அச்சமில்லை அச்சமில்லை (1984) ஆகிய படங்கள், சிறந்த மாநில மொழிப் படங்களுக்கான மத்திய அரசின் விருதைப் பெற்றன.
பாமா விஜயம், தாமரை நெஞ்சம், எதிர்நீச்சல், அக்னிசாட்சி, வறுமையின் நிறம் சிவப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை ஆகிய படங்கள், திரைப்படத்துறையின் பல்வேறு பிரிவுகளில் மாநில அரசின் பரிசுகளை பெற்றன.
தமிழக அரசின் "கலைமாமணி'' விருதை 1973''-லும், "அண்ணா விருதை'' 1992-லும் பாலசந்தர் பெற்றார்.
மத்திய அரசு 1987-ல் "பத்மஸ்ரீ'' விருது வழங்கியது.
அழகப்பா பல்கலைக்கழகமும், சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் "டாக்டர்'' பட்டம் வழங்கி கவுரவித்தன.
மற்றும் பிற மாநில அரசுகள், திரைப்பட அமைப்புகள், பத்திரிகைகள் வழங்கிய விருதுகளும், பரிசுகளும், பட்டங்களும் ஏராளம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், சக்ரா படத்தின் பாடலாசிரியரை நெகிழ வைத்து இருக்கிறார்.
தமிழில் வெளியான பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் பாடலாசிரியர் கருணாகரன். இவர் விஷால் நடித்து முடித்துள்ள சக்ரா என்ற திரைப்படத்திற்கும் பாடல் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் பாடலாசிரியர் கருணாகரன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். சக்ரா படக்குழுவினர் அவர் தனது பிறந்த நாளை கொண்டாடியதோடு அவர்கள் முன் பிறந்தநாள் கேக்கையும் வெட்டினார்.

இதனையடுத்து அடுத்து இயக்குனர் எம்.எஸ். ஆனந்தன் மற்றும் நடிகர் விஷால் ஆகிய இருவரும் கருணாகரனுக்கு கேக் ஊட்டினர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
புன்னகை பூ கீதா தயாரிப்பில், தினேஷ், தீப்தி சதி, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் நானும் சிங்கிள் தான் படத்தின் முன்னோட்டம்.
புன்னகை பூ கீதா மலேசியாவில் பண்பலை, தொலைக்காட்சி, சினிமா எனப் பலத் துறைகளில் பிரபலமானவர். இவர் அறிந்தும் அறியாலும், பட்டியல் படங்களை தயாரித்துள்ளார். தற்போது Three Is A Company Production சார்பில் அவர் தயாரித்துள்ள படம் 'நானும் சிங்கிள் தான்'.
கதாநாயகனாக தினேஷ் நடித்துள்ளார். நாயகியாக தீப்தி சதி நடித்துள்ளார். மற்றும் மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ரமா, ஆதித்யா, கதிர், செல்வா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - கே.ஆனந்தராஜ், இசை - ஹித்தேஷ் மஞ்சுநாத், பாடல்கள் - கபிலன் வைரமுத்து, எடிட்டிங் – ஆண்டனி, ஸ்டண்ட் - கனல்கண்ணன், ஆடம் ரிச்சட்ஸ், கலை இயக்குனர் – ஆண்டனி, நடனம் - சின்னி பிரகாஷ், ரேகா சின்னி பிரகாஷ், அபிப்.ஆர்.கே. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆர்.கோபி.
இப்படம் இம்மாதம் 12ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் கவுதம் மேனனை அடித்துக் கொள்ள முடியாது என்று பிரபல இயக்குனர் கூறியிருக்கிறார்.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி. இந்த படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குனர்கள் கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், வெங்கட் பிரபு பேசும்போது, முதலில் நாங்கள் நான்கு பேரும் இணைந்து இந்த ஆந்தாலஜி படத்தை உருவாக்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. காதல் என்று சொன்னவுடன், கவுதம் மேனன் இருக்கிறார். அவரை மிஞ்சி எடுக்க முடியுமா என்று நினைத்தேன். அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

என் கதை அனிமேஷன் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதில் காதலும் கலந்து சொல்லியுள்ளேன். ஒரு குறும்படத்திற்கு தேவையான எல்லா அம்சங்களும் இதில் உள்ளது. எனக்கும் இது ஒரு புது வித அனுபவத்தை தந்துள்ளது என்றார்.






