என் மலர்
சினிமா செய்திகள்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொன்னார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார், என்று தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த புகாரை மணிகண்டன் மறுத்து பேட்டி கொடுத்தார். நடிகை சாந்தினி யார், என்றே எனக்கு தெரியாது என்று கூறினார். பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்.... நடிகை சாந்தினி கருக்கலைப்பு செய்தது உண்மையா?- ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரணை
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் நடிகை சாந்தினி பணம் பறிக்கும் நோக்கத்தில் தன் மீது புகார் அளித்துள்ளதாகவும், அவர் மலேசியாவில் இதுபோல் மோசடி செய்ததாகவும், மருத்துவ உதவிக்காக தான் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டதால் தன்னை மிரட்டுவதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசைஞானியால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகிகளில் ஒருவர் சித்ரா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இளையராஜாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:

நீங்கள் எனக்கு ஒரு குருவாக, அப்பாவாக இருந்து அறிவுரை கூறி என்னை வழிநடத்தினீர்கள். உங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. இந்த கோவிட் பிரச்சனை காரணமாக ஒருத்தரை ஒருத்தர் பார்க்க முடியவில்லை. இந்த தருணத்தில் கடவுள் உங்களுக்கு நல்ல தீர்க்காயுசு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

சித்ரா - இளையராஜா
இன்னும் 100 வருஷம் உங்களுடைய இசை பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் இசையில் நான் பாடிய ஒரு பாடலை பாடுகிறேன் என்று கூறிய சித்ரா, ‘வந்ததே குங்குமம்’ என்ற பாடலையும் பாடி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Happy Birthday to our beloved RAJA sir. May God bless you with a long happy healthy and peaceful musical life. Enjoy your Birthday dear sir🙏🎂🎼🎧🎹#KSChithra#Isaignani#Maestro#Ilaiyaraaja#KrishnaDigiDesign#Audiotracspic.twitter.com/Kf9E8HTups
— K S Chithra (@KSChithra) June 2, 2021
புகைப்படத்திற்கு கமெண்ட் செய்வதை விடுத்து கல்வி போன்ற ஏராளமான விஷயங்களில் அக்கறை செலுத்துங்கள் என்று நடிகை ரைசா சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
பிக்பாஸ் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ரைசா. ‘வேலை இல்லாத பட்டதாரி’, ‘பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார். சமீபத்தில் முகப்பொலிவு சிகிச்சை எடுக்க சென்றிருந்தார் ரைசா. அப்போது மருத்துவர் பைரவி என்பவர் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி முகம் வீங்கிய நிலையில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதையடுத்து நீண்ட நாட்கள் சமூக வலைத்தள பக்கம் வராத ரைசா கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாடை அணியாமல் சட்டை பட்டன்களை திறந்துவிட்டபடி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதை பார்த்த ரசிகர்கள் கலாச்சாரத்துக்கு எதிரான இந்த மாதிரியான புகைப்படங்கள் சமூகத்திற்கே அழுக்கு என கண்டப்படி கமெண்ட் செய்திருந்தனர்.

இதனால் கோபமான ரைசா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், இந்த விஷயத்தில் நீங்கள் வெறுப்பை உமிழ்ந்தால் நீங்கள் எதிர்மறை எண்ணங்களால் கொண்டவர் என்று அர்த்தம். இதே எண்ணங்களுடன் வாழ்ந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ முடியாது. எதிர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் அதே சிந்தனையோடு எடுத்து செல்லும். பொதுவாக இதுபோன்ற கமெண்ட்களை படிப்பதில்லை. நடிகை ஒருவர் பிகினி அணிவது சாதாரண விஷயம். இதற்கு கமெண்ட் செய்வதை விடுத்து கல்வி போன்ற ஏராளமான விஷயங்களில் அக்கறை செலுத்துங்கள். எனக்கு விருப்பமானதை உடுத்துவதாகவும், மற்றவர்களை பற்றி எனக்கு கவலையில்லை என ரைசா பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய மொழி அனைத்திலும் பாடி மிகவும் பிரபலமாக இருக்கும் ஸ்ரேயா கோஷல், தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.
ஸ்ரேயா கோஷலுக்கு கடந்த மே மாதம் 22 ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு தேவ்யான் முகோபாத்யாயா என்று பெயர் வைத்து உலகிற்கு அறிமுகம் செய்து இருக்கிறார்.
மேலும் மகன் பிறந்த அந்த முதல் பார்வையில் ஒரு விதமான அன்பினால் எங்கள் இதயங்களை நிரப்பிவிட்டார். தாய் மற்றும் தந்தையால் மட்டுமே இதை உணர முடியும். இது இன்னும் ஒரு கனவு போலவே இருக்கிறது. கணவர் மற்றும் வாழ்க்கையின் இந்த அழகான பரிசுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என்று ஸ்ரேயா கோஷல் பதிவு செய்து இருக்கிறார்.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, மாளவிகா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் பேய் மாமா படத்தின் முன்னோட்டம்.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் பேய் மாமா. யோகிபாபுவுடன் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, நமோ நாராயணன், கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏலப்பன், விக்னேஷ் ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள். யோகிபாபுவுடன் வில்லனாக பொன் குமரன், வில்லியாக காவியா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: “பேய் மாமா, ஒரு திகில் படம். வில்லன் ஒரு வெளிநாட்டின் தீயசக்தியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு உயிரை கொல்லும் வைரஸ் கிருமியை உருவாக்கி, அதன் மூலம் பல கோடிகளை சம்பாதிக்க திட்டமிடுகிறான்.

யோகிபாபு
அவனுடைய முகமூடியை கிழித்து உலக மக்களை காப்பாற்ற முயற்சிக்கிறார், உள்ளூர் சித்த வைத்தியர். அவரை வில்லன் கொன்று விடுகிறான். சித்த வைத்தியரின் ஆவி, கதாநாயகனுக்குள் புகுந்து அப்பாவி மக்களை காப்பாற்ற களம் இறங்குகிறது. இதுவே ‘பேய் மாமா’வின் கதை. இந்த கதை இப்போதைய காலகட்டத்துக்கு பொருத்தமாக அமைந்து விட்டது”. என்றார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார் மாளவிகா மோகனன்.
நடிகை மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் அறிமுகமான அவர், இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

கொரோனா தடுப்பூசி போட்ட பின் நடிகை மாளவிகா மோகனன் எடுத்த புகைப்படம்
இதையடுத்து ‘யுத்ரா’ எனும் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் மாளவிகா மோகனன், இப்படத்தின் படப்பிடிப்பை ஜூலை மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். அதற்குமுன் படக்குழுவினர் அனைவருக்கும் தடுப்பூசி போட திட்டமிட்ட படக்குழு, இன்று மும்பையில் படக்குழுவினருக்காக தடுப்பூசி முகாம் நடத்தியது. இதில் மாளவிகா மோகனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இயக்குனர் விஷ்ணுவர்தன் இதுவரை இயக்கிய தமிழ் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ, அடுத்ததாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் நடிகர் ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இப்படத்தை இயக்க உள்ளார்.

ஜிப்ரான்
இயக்குனர் விஷ்ணுவர்தன் இதுவரை இயக்கிய தமிழ் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து உள்ளார். அதனால் இப்படத்திற்கும் அவர்தான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதர்வாவின் தம்பி ஆகாஷ், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவை கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு யோகிபாபு பட தயாரிப்பாளர் ஒருவர் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. அதே சமயம்,
பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்திருப்பதோடு, கூலி தொழிலாளர்கள் மற்றும் சாலைகளில் வாழ்பவர்கள் போதிய உணவின்றி தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ், உணவின்றி தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் வெளியூரில் இருந்து சென்னையில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு இலவசமாக மூன்று வேலை உணவு வழங்கி வருகிறார். இசைத்துறையில் பல வருட அனுபவம் பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ், டிஸ்கவர் ஸ்டுடியோ பிலிம் கம்பெனி என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
அந்நிறுவனம் மூலம் பல படங்களை தயாரிக்கும் திட்டத்தில் இருப்பவர், முதலாவதாக யோகி பாபு மற்றும் நடன இயக்குநர் தினேஷ் ஆகியோரது நடிப்பில், பிரபல இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரித்து வருகிறார்.

வி.ஆர்.ராஜேஷ், பூவிலங்கு மோகன் ஆகியோர் ஏழை மக்களுக்கு உணவு வழங்கியபோது எடுத்த புகைப்படம்
திரைத்துறையில் பிஸியாக இருந்தாலும், பல்வேறு சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வரும் இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ், தனது டிஸ்கவர் ஸ்டுடியோ பிலிம் கம்பெனி மற்றும் குழுவினருடன் இணைந்து, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு இன்றி தவிக்கும் ஏழைகளுக்கு தினமும் மூன்று வேளை இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.
சுமார் 15 நாட்களுக்கு மேலாக இப்பணியை மேற்கொண்டு வரும் இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ், இன்று பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் பூவிலங்கு மோகன் முன்னிலையில், சென்னை கோயம்பேடில் உள்ள கூலி தொழிலாளர்கள் மற்றும் சாலைகளில் வாழ்பவர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்.
‘பேட்ட’ படத்திற்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இதனிடையே, பேட்ட பட ரஜினியின் கெட்டப் போன்று ஜகமே தந்திரம் படத்தில் தனுஷின் கெட்டப்பும் அமைந்துள்ளதால், இந்த இரண்டு படங்களுக்கும் தொடர்பு இருக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கலாம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

கார்த்திக் சுப்புராஜ்
இந்நிலையில், இது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: “பேட்ட படத்தில் பேட்ட வேலனாக நடித்திருந்த ரஜினியின் மகனாக ஜகமே தந்திரம் படத்தில் தனுஷின் சுருளி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதா அல்லது பேட்ட ரஜினியின் இளம் வயது கதையாக ஜகமே தந்திரம் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதா என்று என்னிடம் பலர் கேட்டனர்.
அவர்களுக்கு நான் சொன்ன பதில் ‘இல்லை’ என்பது தான். பேட்ட படத்திற்கும் ஜகமே தந்திரம் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது வேறு கதை” என தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாளான இன்று சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி பிறந்தார். காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாகக் கொண்டு செல்வது இவருடைய பாணி. இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமானை திரையிசைக்கு அறிமுகம் செய்து வைத்ததே மணிரத்னம் தான்.
ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை பள்ளியில் படித்துவிட்டு, சென்னையில் உள்ள டி.வி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றிவர். யாரிடமும் உதவி இயக்குனராக பணி செய்யாமல், தன் முதல் படமாகிய ‘பல்லவி அனுபல்லவி’ படத்தினை இயக்கினார். நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நந்தன் என்ற மகன் உள்ளார்.
இவருடைய படங்கள் சுருக்கமான வசனங்களுக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை. இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரின் இசையமைப்பில் வெளியாகியுள்ளன. இவரது முதல் படமான ‘பல்லவி அனுபல்லவி’ முதல் ‘தளபதி’ வரை இளையராஜா இசையிலும், ‘ரோஜா’ முதல் இன்றுவரை ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் வெளியாகியுள்ளன.

இன்றளவும் தமிழ் திரையுலகில் கோளோச்சி வருகிறார் மணிரத்னம். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’, இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். மணிரத்னத்தின் 65-வது பிறந்தநாளான இன்று சமூக வலைதளங்களில் ஒருபுறம் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தாலும், மறுபுறம் பொன்னியின் செல்வன் படத்தின் அப்டேட் கேட்டு அதனையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.
இன்று தனது 78-வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
1976-ம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி வெளிவந்த ‘அன்னக்கிளி’ படம் மூலம் ஆரம்பமான இளையராஜா என்ற இசை மேதையின் இசைப் பயணம் 44 ஆண்டுகளைக் கடந்தும் நம்மை இசையால் கட்டிப் போட்டு வைத்துக் கொண்டிருக்கிறது. திரைஇசையில் பல மாயாஜாலங்களை நிகழ்த்திய இளையராஜாவுக்கு இன்று 78-வது பிறந்த நாள்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், எத்தனையோ பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக்கலைஞர்கள், கோடிக்கணக்கான ரசிகர்கள் என அவர் பதித்த தடங்கள் ஏராளம்.
எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து, தன் இசையால் ஒவ்வொரு நொடியும் மக்களை தன்னிலை மறக்க வைப்பவர் இளையராஜா. உலகம் முழுவதிலும் இசைக்கு பல வடிவங்கள் உண்டு. அது போல இசையின் ஒரு வடிவம் என்று இளையராஜாவின் இசையையும் சொல்லலாம். சினிமா இசையிலும் பல புதுமைகளைப் புகுத்தியவர் இளையராஜா.

இன்று உலகமே கொரோனாவால் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இத்தகைய கடினமான சூழலில் வீட்டிலேயே முடங்கி இருப்பவர்களுக்கு நிச்சயம் இவரின் பாடல்களும், இசையும் ஆறுதலாக அமைந்திருக்கும். இசை தெரிந்தவர்களும், இசையை ரசிக்கத் தெரிந்தவர்களும் இன்று இளையராஜாவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சமூக வலைதளங்கள் வாயிலாக இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்கிற ஜி.ராமசந்திரன் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்கிற ஜி.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 73. அவர் தயாரிப்பில் மனுநீதி, சவுண்ட் பார்ட்டி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி, காதலி காணவில்லை போன்ற படங்கள் வெளிவந்துள்ளன.
சமீபத்தில் தான் அவரது மனைவியும் தயாரிப்பாளருமான ஆர்.பி. பூரணி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சிவகுமார், சாமி குமார் என்கிற இரு மகன்கள் உள்ளனர். நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






