என் மலர்tooltip icon

    சினிமா

    விஷ்ணுவர்தன், யுவன் சங்கர் ராஜா
    X
    விஷ்ணுவர்தன், யுவன் சங்கர் ராஜா

    முதன்முறையாக யுவன் இன்றி வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றும் விஷ்ணுவர்தன்

    இயக்குனர் விஷ்ணுவர்தன் இதுவரை இயக்கிய தமிழ் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ, அடுத்ததாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் நடிகர் ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இப்படத்தை இயக்க உள்ளார்.

    ஜிப்ரான்
    ஜிப்ரான்

    இயக்குனர் விஷ்ணுவர்தன் இதுவரை இயக்கிய தமிழ் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து உள்ளார். அதனால் இப்படத்திற்கும் அவர்தான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    அதர்வாவின் தம்பி ஆகாஷ், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவை கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×