என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராதாமோகன் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், ரியா சுமன், மயில்சாமி, சச்சு நடிப்பில் ஜீ5 தளத்தில் வெளியாகி இருக்கும் மலேசியா டூ அம்னீசியா படத்தின் விமர்சனம்.
    வைபவ்வும் வாணி போஜனும் கணவன் மனைவி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. வைபவ்வுக்கு பெங்களூருவில் ரகசிய காதலியாக ரியா சுமன் இருக்கிறார். மலேசியாவுக்கு அலுவலக வேலையாக செல்வதாக சொல்லி பெங்களூருக்கு ரியாவை பார்க்க வைபவ் செல்கிறார். அவர் செல்வதாக சொன்ன மலேசிய விமானம் மாயமானதாக செய்தி வருகிறது. பெங்களூருவில் இருந்து வரும் வைபவ் நண்பன் கருணாகரன் உதவியுடன் எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.

    வைபவ்வுக்கு அனைத்து உணர்வுகளையும் காட்ட வேண்டிய கதாபாத்திரம். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கரை பார்த்து டாங்லீ என்று சொல்லும்போது எல்லாம் கைதட்டி சிரிக்க வைக்கிறார். கருணாகரன் யோசனைப்படி அம்னீசியா வந்தவராக நடிக்கும் காட்சிகளில் எல்லாம் வைபவ் வெளுத்து வாங்குகிறார். வாணி போஜனின் அன்பை பார்த்து தன் தவறை உணரும் காட்சியில் நெகிழ்ச்சியான நடிப்பு.

    விமர்சனம்

    வைபவ்வுக்கு இணையான கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர். துப்பறியும் நிபுணராக வைபவ், கருணாகரன் கூட்டணி மீது சந்தேகபடும் காட்சிகளில் அனுபவ நடிப்பு. அந்த இறுதிக்காட்சி திருப்பத்தில் அபார நடிப்பு. அப்பாவி மனைவியாக வாணி போஜன் கணவருக்காக உருகும் இடங்களில் அசத்துகிறார். 

    எம்.எஸ்.பாஸ்கரிடம் கோபம் கொள்ளும் கடைசிக் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். கருணாகரன் வைபவ்வுக்கான மூளையாக செயல்பட்டு கதையை கலகலப்பாக நகர்த்துகிறார். ஆங்காங்கே இவர் அடிக்கும் ஒன்லைன் பஞ்ச் வசனங்கள் வெடி சிரிப்பு.

    விமர்சனம்

    மொழி, அபியும் நானும், காற்றின் மொழி உள்ளிட்ட படங்கள் மூலம் அனைவரும் ரசிக்கும் வகையில் நகைச்சுவை கலந்த உணர்வுபூர்வமான படங்களை இயக்கி புகழ்பெற்ற ராதாமோகன் இயக்கத்தில் மீண்டும் அப்படி ஒரு படைப்பு. இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

    பிரேம்ஜி அமரனின் இசையில் பாடலும் பிண்ணனி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவில் உயர்தர வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வருகிறார்.
    குடும்பத்துடன் பார்த்து ரசித்து சிரித்து மகிழும் வகையில் ஒரு பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கிறது. 

    மொத்தத்தில் 'மலேசியா டூ அம்னீசியா' காமெடி டூர்.
    ஜகமே தந்திரம் படத்தை இயக்கி இருக்கும் கார்த்திக் சுப்புராஜின் புதிய அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஜகமே தந்திரம்'. இந்த படத்தில் ஐஷ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    ஜகமே தந்திரம் படத்தின் அறிவிப்பு

    இந்த படத்தில் ரகிட ரகிட, புஜ்ஜி, நேத்து ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் ஜூன் 1 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார். இதை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
    'துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான 'நரகாசூரன்' படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
    'துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் 'நரகாசூரன்'. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

    பைனான்ஸ் சிக்கலால், இன்னும் இந்தப் படம் வெளியாகாமல் உள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து கெளதம் மேனன் விலகிவிட்டார். பல முறை இந்தப் படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியாக ஓடிடி வெளியீட்டுக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால், எதுவுமே சுமுகமாக முடியவில்லை.

    நரகாசூரன்

    தற்போது, 'நரகாசூரன்' திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்க இருக்கிறார்கள்.
    எஸ்.எம்.குமாரசிவம் பெருமையுடன் வழங்க, படிக்கட்டு பாய் புரொடக்சன்ஸ் சார்பில் எம்.பி.முகமது இப்ராகிம் தயாரிக்கும் அம்மா உணவகம் படத்தின் முன்னோட்டம்.
    அம்மா உணவகத்தின் பெருமையையும் அது சார்ந்த தாக்கங்களையும் அடிப்படையாக வைத்து 'அம்மா உணவகம்' என்கிற திரைப்படம் உருவாகியிருக்கிறது. 'அன்னமிட்ட தாய்க்கு சமர்ப்பணம்' என்ற மேற்கோளுடன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

    இப்படத்திற்குக் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் விவேகம் .கே.சுரேஷ். இப்படத்தில் நாயகர்களாக அஸ்வின் கார்த்திக், இந்திரன், சசி சரத், நாயகியாக ஶ்ரீநிதி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நாஞ்சில் சுவாமி, தமிழ்ச்செல்வன் இவர்களுடன், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், சுப்பிரமணிய சிவா, சரவண சக்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

    ஒரு வணிக சினிமாவுக்கான அத்தனை அம்சங்களுடனும் அம்மா உணவகத்தின் பெருமையையும் கூறும் வகையில் இப்படம் உருவாகி இருக்கிறது.

    அம்மா உணவகம் படக்குழுவினர்
    அம்மா உணவகம் படக்குழுவினர்

    ஒளிப்பதிவு -மோகன ராமன், இசை -எஸ் .ஷாந்தகுமார், படத்தொகுப்பு -உதயா கார்த்திக், வசனம் -நியூட்டன் , பாடல்கள் கிருதியா, தொல்காப்பியன், ஜான் தன்ராஜ், சண்டைப்பயிற்சி- ஸ்டண்ட் சரண், நடனம் சாய் சரவணா.

    படத்தை எஸ்.எம்.குமாரசிவம் பெருமையுடன் வழங்க, படிக்கட்டு பாய் புரொடக்சன்ஸ் சார்பில் எம்.பி.முகமது இப்ராகிம் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு அப்துல் அஜீஸ். தமிழகமெங்கும் ஆக்‌ஷன் - ரியாக்ஷன் ஜெனீஷ் வெளியிடுகிறார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான கேப்ரில்லா, தனது செல்ல நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா. இவர் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டு வெளியேறினார்.

    சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கேப்ரில்லா அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். இந்நிலையில் தனது செல்ல நாய் குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த வீடியோவை பதிவு செய்துள்ளார். செல்லமாக தான் வளர்த்து வரும் நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கேக் வெட்டி, அதை நாய்க்கு ஊட்டும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன் என்று வைரமுத்து அறிவித்துள்ளார்.
    மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. கவிஞர் வைரமுத்து, ஓ.என்.வி விருதுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    ஆனால் இதற்கு மலையாள சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்தது. இதனால், ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டது.

    இந்நிலையில் வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது; நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன்.

    ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன்.

    அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்.

    வைரமுத்து

    ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்; அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.
    ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

    மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2 லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன். 
    தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும்.

    இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்து இருக்கும் நிலையில் வைரமுத்து ஆதரவாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. கவிஞர் வைரமுத்து, ஓ.என்.வி விருதுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    ஆனால் இதற்கு மலையாள சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்தது. இதனால், ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டது.

    இந்நிலையில் பாரதிராஜா, வைரமுத்து ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கேரளச் சகோதரர்களின் பேரன்பினால், மலையாள இலக்கியத்தின் உயரிய விருதான ஓ.என்.வி, எங்கள் கவிப்பேரரசு அவர்களுக்கு அறிவித்தது அறிந்து மகிழ்வுற்றேன்.. ஆனால் அரசியல் நெருக்கடியால் மறுபரிசீலனை என தற்போது செய்திகள் வந்திருப்பதை கண்டு வருத்தம் சிறிதளவும் இல்லை.

    பாரதிராஜா - வைரமுத்து

    சமீபகாலமாக எம் இனத்தின் மீதும் மொழி மீதும் அரசியல் காழ்புணர்ச்சி கொண்டு எங்கிருந்தோ தனிமனித மாண்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக சில நபர்களை கொண்டு மதம், இனம், மொழியாக பிரிவினை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப் பட இயலாத போரினை தொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருந்து முறியடிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரசு என்கிற பட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே உன்னை அசைத்துப் பார்த்துவிடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும். தமிழர்களுக்கு என்றும் உறுதுணையாக மாண்புமிகு தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர். மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    'இந்த குளத்தில் கல்லெரிந்தவர்கள்" எறியட்டும் அவர்களின் தாகம் தீரட்டும். குளம் என்பது கானல் நீர், நீ சமுத்திரம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    நடிகர் விஷாலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பாலியல் புகார் கூறி இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர் காயத்ரி ரகுராம். இவர் தற்போது பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் நடிகர் விஷால் மீது பாலியல் புகார் கூறி இருக்கிறார்.

    இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில், நான் சினிமா துறையில் பாலியல் வேட்டையாடுபவர்களையும் துன்புறுத்தல்களையும் முதலில் கண்டிப்பது விஷால். புதியதாக சினிமாவில் நுழையும் பெண்களுக்கும் முன்னணி நடிகைகளுக்கும் பாலியல் துன்புறுத்தலை கொடுத்திருக்கிறார். நீங்களும் உங்கள் நண்பர்களும் பலரை பயன் படுத்தி தூக்கி வீசி விட்டீர்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    காயத்ரி ரகுராம் பதிவு
    காயத்ரி ரகுராம் பதிவு

    பெண்களுக்கு உதவி தேவைப்படும்போது நீங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும், ஆனால் அதற்கு பதிலாக வேறு வழியை கையாண்டு இருக்கிறீர்கள். உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையால் பல பெண்கள் உங்களிடமிருந்து ஓடுகின்றன என்று பதிவு செய்து இருக்கிறார்.
    மாடல் அழகி மற்றும் ஆபாச படங்களில் நடித்து பிரபலமான கிம்கர்தாஷியான் கம்மல் அணிந்து போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
    சர்வதேச மாடல் அழகியான கிம்கர்தாஷியான் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானார். ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். வலைத்தளங்களில் அடிக்கடி அறைகுறை உடையில் ஆபாச படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

    சமூக வலைத்தளத்தில் இவரை பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகம். இதன் மூலம் தனது வலைத்தள பக்கங்களிலும் வணிக பொருட்களை அறிமுகம் செய்து பணம் சம்பாதிக்கிறார். கிம்கர்தாஷியான் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.7 ஆயிரத்து 400 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

    கிம் கர்தாஷியான்

    இந்த நிலையில் கிம்கர்தாஷியான் காதில் வடமொழி ஓம் முத்திரை டிசைன் கம்மல் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்துக்கள் புனிதமாக கருதும் ஓம் முத்திரையை கொச்சைப்படுத்தி இருப்பதாகவும் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலைத்தளத்தில் பலரும் அவருக்கு கண்டனங்கள் எழுப்பி வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தன் மீது புகார் கொடுத்துள்ள நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பணம் பறிக்க இந்த பொய்யான புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
    நடிகை சாந்தினி கொடுத்த புகார் குறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் செல்போனில் பேசி நிருபர்கள் பேட்டி எடுத்தனர். மணிகண்டன் கூறியதாவது:-

    நடிகை சாந்தினி என்பவரை யார்? என்றே எனக்கு தெரியவில்லை. நான் அரசியல்வாதி. ராமநாதபுரம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக இருந்துள்ளேன். அப்போது எத்தனையோ பேர் என்னை சந்தித்தனர். அது போல சாந்தினியும் என்னை சந்தித்திருக்கலாம். அந்த புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். எனது அரசியல் எதிரிகள் பின்னணியில் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

    3 நாட்களுக்கு முன்பு வக்கீல் ஒருவரும், போலீஸ் அதிகாரி ஒருவரும் என்னிடம் பேசினார்கள். சாந்தினியுடன் நீங்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் எங்களிடம் உள்ளது. அதை வைத்து போலீசில் புகார் கொடுக்கப்போவதாக என்னிடம் போனில் மிரட்டினார்கள். 

    புகார் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.3 கோடி வேண்டும் என்றனர். நான் செய்யாத தவறுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்றேன். முதலில் ரூ.3 கோடி கேட்டவர்கள் பின்னர் படிப்படியாக இறங்கி ரூ.50 லட்சம் கடைசியாக கேட்டனர். நான் தர முடியாது என்று கூறி விட்டேன்.

    பணம் பறிக்கும் கும்பல் சாந்தினியை பயன்படுத்தி உள்ளனர். பொய்யான இந்த புகாரை சட்டப்படி சந்திப்பேன். எனது மனைவியுடனும் இது பற்றி போனில் பேசி மிரட்டி உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்றால் காலமானார்.
    சென்னை:

    நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், வெங்கட் சுபா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    வெங்கட் சுபா பல்வேறு டிவி தொடர்களில் நடித்துள்ளார். யூ டியூப் சேனலில் சினிமா விமர்சனம் செய்து வந்த அவர் மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
    பி.எஸ்.பி.பி. பள்ளி விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஒரு மாணவியை சினிமாவுக்கு அழைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகைகள் உள்ளிட்ட பலர் வற்புறுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், பி.எஸ்.பி.பி. பள்ளி விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தலைகுனிய வைப்பது மட்டுமின்றி அந்தப் பள்ளியை மூட வேண்டும் என்பதையும் உணர வைக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் யாரும் ஒருமுறைகூட மன்னிப்பு கேட்கவில்லை.

    இந்தக் குற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி எனது நண்பர் அமைச்சர் அன்பில் மகேஷை கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த விவகாரத்தை சாதி பிரச்சினையாக்குவது இழிவானது. மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தவரை தூக்கில் போட வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும் இது கடுமையான குற்றம் என்பது தெரியவரும். குறைந்தது இப்போதாவது மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேளுங்கள். இதனை சாதி பிரச்சினையாக மாற்றாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.
    ×