என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராதே படத்தை ஓடிடி-யில் வெளியிட்டதால், அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருவதையடுத்து, சல்மான் கான் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், பரத், மேகா ஆகாஷ், திஷா பதானி ஆகியோர் நடித்த ராதே இந்தி படம் கொரோனாவால் தியேட்டர்களுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் ரம்ஜான் தினத்தன்று வெளியிடப்பட்டது. பணம் செலுத்தி படம் பார்க்கும் முறையில் இந்த படத்தை வெளியிட்டு இருந்தனர். 

    ஆனால், படமோ ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 249 ரூபாய் செலுத்தி படம் பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததால், ராதே படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. 

    ராதே படத்தின் போஸ்டர்
    ராதே படத்தின் போஸ்டர்

    இதனிடையே, ரசிகர்கள் பலர் திருட்டு இணையதளத்தில் படத்தை பார்த்தது குறித்தும் சல்மான் கோபமடைந்தார். படத்தைக் கிண்டலடித்து விமர்சனம் செய்தவர் மீது சல்மான் கான் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சல்மானின் இந்த நடவடிக்கை ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

    ராதே படத்தை ஓடிடி-யில் வெளியிட்டதால், அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருவதையடுத்து, சல்மான் கான் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். இனி, தன்னுடைய படங்களை ஓடிடியில் வெளியிடப் போவதில்லை, தியேட்டர்களில் மட்டுமே வெளியிடுவேன் என்று சொல்லிவிட்டாராம். 
    அதர்வா படத்துக்கு பின் மரகத நாணயம் படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக இயக்குனர் சரவன் தெரிவித்துள்ளார்.
    தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. அறிமுக இயக்குனர் சரவன் இயக்கி இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பின் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குனர் சரவன், அடுத்ததாக அதர்வா நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

    இயக்குனர சரவன், அதர்வா
    இயக்குனர சரவன், அதர்வா

    இந்நிலையில், அதர்வா படத்துக்கு பின் மரகத நாணயம் படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக இயக்குனர் சரவன் தெரிவித்துள்ளார். மரகத நாணயம் 2 படத்திற்கான கதைக்கருவை தயாரிப்பாளர் டில்லி பாபுவிடம் கூறியுள்ளதாகவும், அதற்கான கதையில் பணிபுரிந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம்  'மரகத நாணயம் 2' விரைவில் உருவாகும் எனத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ரசிகர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தி உள்ளார்.
    கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படி நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: “என்னுடைய ரசிகர்களான தம்பி, தங்கைகள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பத்திரமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து மிகவும் அவசியம் என்றால்தான் நீங்கள் வெளியே போக வேண்டும். எப்போதும் முககவசம் அணிந்து கொள்ளுங்கள். 

    இரட்டை முககவசம் போடச் சொல்கிறார்கள். அதையும் அணியுங்கள். முககவசத்தை சரியாக அணிந்து கொரோனாவிலிருந்து தப்பியவர்களை பார்த்திருக்கிறேன். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நான் போட்டுக்கொண்டேன். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.

    சிவகார்த்திகேயன்
    சிவகார்த்திகேயன்

    அவர்களையும் வெளியே போகவிடாமல் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான வேலை இருந்தால், அதற்கு மட்டும் வெளியே சென்றுவிட்டு, உடனே வீட்டிற்கு வந்து விடுங்கள் மிகவும் பத்திரமாக இருந்தால் கொரோனா சீக்கிரமாக முடிந்துவிடும். அவர்களுடைய வேலையை பார்க்க தொடங்கிவிடலாம். எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். 

    உடம்பை கவனித்து கொள்ளுங்கள். கொரோனா பாதிப்பு அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது என்று கேள்விப்படுகிறேன். நீங்கள் பத்திரமாக இருந்தீர்கள் என்றாலே, இது பெரிய பிரச்சினையே இல்லை. சீக்கிரமே அனைத்தும் சரியாகிவிடும்”. இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
    லூசிபர் தெலுங்கு ரீமேக்கிற்கு கடந்த ஜனவரி மாதமே பூஜை போடப்பட்ட நிலையிலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.
    மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் ராம்சரண், தன் தந்தை சிரஞ்சீவிக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என கருதி, அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றினார். 

    தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான மோகன்ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்க ஒப்பந்தமானார். இப்படத்திற்கு கடந்த ஜனவரி மாதமே பூஜை போடப்பட்ட நிலையிலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.

    மோகன் ராஜா
    மோகன் ராஜா

    படத்தின் கதையில் மோகன் ராஜா செய்த மாற்றங்கள் சிரஞ்சீவிக்கு பிடிக்காததால், மோகன் ராஜா இப்படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல் பரவி வந்தன. 

    இந்நிலையில், சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மோகன் ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சிரஞ்சீவி. இதுதவிர லூசிபர் தெலுங்கு ரீமேக்கை தயாரிக்கும் நிறுவனமும் மோகன் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டது. கொரோனா பரவல் குறைந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரைசா, படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, 'மாடலிங்' துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    ரைசா வில்சனின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள்
    ரைசா வில்சனின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள்

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது உள்ளாடை அணியாமல், சட்டை பட்டன் போடாமல், படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், இந்த சமயத்தில் இத்தகைய புகைப்படங்கள் தேவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    பிரபல வாரிசு நடிகர் ஒருவர் தனது காதலியின் வீடருகே ரூ.20 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளாராம்.
    பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த தாரத்து மகனான அர்ஜுன் கபூர், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர், தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார். 

    நடிகை மலைக்கா அரோரா, கடந்த 1998-ம் ஆண்டு பிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்கான் என்ற மகனும் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு அர்பாஸ்கானை பிரிந்த மலைக்கா அரோரா, அதன்பின் அர்ஜூன் கபூர் மீது காதல் வயப்பட்டார். 

    மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூர்
    மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூர்

    இந்நிலையில், நடிகர் அர்ஜுன் கபூர் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் ரூ.20 கோடிக்கு சொகுசு வீடு ஒன்றை வாங்கி உள்ளார். இவரது காதலி மலைக்கா அரோராவும் அதே பகுதியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அர்ஜுன் கபூரின் தந்தை போனி கபூர் தற்போது தமிழில் அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார்.
    தனது பெயரிலிருந்து ஜாதி அடையாளத்தை நீக்கிய நடிகை ஜனனிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
    இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதைத் தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன், விதி மதி உல்டா உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை சென்றார். அந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

    இவர் நடிக்க வந்த புதிதிலிருந்தே, தனது பெயரை ஜனனி ஐயர் என்று தான் குறிப்பிட்டு வந்தார். சமூக வலைதளங்களிலும் அந்தப்பெயரையே பயன்படுத்தி வந்தார்.

    நடிகை ஜனனி டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்
    நடிகை ஜனனி டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்

    இந்நிலையில், ‘மாற்றம் ஒன்றே மாறாதது, என்றும் ஒற்றுமையுடன்’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் தனது பெயரிலிருந்த ஜாதி அடையாளத்தை நீக்கி உள்ளார் நடிகை ஜனனி. அவரின் இந்த மாற்றத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆனால் ஏன் இந்த திடீர் ஜாதி துறப்பு என்பதை நடிகை ஜனனி விளக்கவில்லை.
    சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள நடிகை வரலட்சுமி, ‘எனது மகனை அறிமுகம் செய்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார். இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது. 

    தற்போது வரலட்சுமியின் கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது. இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் வரலட்சுமி, தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

    தனது செல்ல நாய்க்குட்டியுடன் போஸ் கொடுத்த வரலட்சுமி
    தனது செல்ல நாய்க்குட்டியுடன் போஸ் கொடுத்த வரலட்சுமி

    இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள நடிகை வரலட்சுமி, ‘எனது மகனை அறிமுகம் செய்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். அவர் தனது நாய் குட்டியை தான் மகன் என குறிப்பிட்டுள்ளார். ‘தி லயன் கிங்’ படத்தில் முபாசா தனது குழந்தை சிம்பாவை அறிமுகப்படுத்துவது போலவே வரலட்சுமியும் அந்த வீடியோவில் தனது செல்ல நாய்க்குட்டியை அறிமுகம் செய்துள்ளார். இது தவிர அந்த நாய்க்குட்டிக்காக தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடங்கி உள்ளார்.


    அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் சிபிராஜ், நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ரங்கா படத்தின் முன்னோட்டம்.
    பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் படம் `ரங்கா'. சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ராம் ஜீவன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு அர்வி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

    படம் குறித்து தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா கூறியதாவது: சிபிராஜ் - நிகிலா விமல் நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துள்ளது.  இயக்குனர் வினோத்தின் யோசனைப்படி, படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி உள்ளனர்.  முக்கியமான காட்சிகளை, காஷ்மீரில் யாரும் கண்டிராத இடங்களில் படமாக்கி இருப்பதாகவும், உடல் ரீதியாகவும் மிக சிரமப்பட்டோம். 

    நிகிலா விமல், சிபிராஜ்
    நிகிலா விமல், சிபிராஜ்

    அவலாஞ்சி எனப்படும் பனி புயல் எங்களை மிரட்டியது, துரத்தியது. சற்றும் சளைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு இடையே படப்பிடிப்பை முடித்ததாக கூறினார். காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்து உள்ளன. சண்டை இயக்குனர் திலீப் சுப்புராயன் மற்றும் அவருடைய குழுவினர் அந்த பனி பிரதேசத்தையே தங்கள் சண்டை காட்சி அமைப்புகளால் தீப்பிழம்பு ஆக்கினார்கள் என்றால் மிகை ஆகாது என்றார். 
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்த சிவகார்த்திகேயன் தயாரித்த படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பது மட்டுமின்றி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். 

    இவர் இதுவரை 2 படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘கனா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ரியோ நடிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை தயாரித்திருந்தார்.  

    தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 3-வது படம் ‘வாழ்’. இப்படத்தை அருவி பட இயக்குனர் அருண்பிரபு இயக்கி உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம், தணிக்கையில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது. இப்படத்தை கடந்தாண்டே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

    வாழ் படத்தின் போஸ்டர்
    வாழ் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். ‘வாழ்’ படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரஜினியுடன் காலா, அஜித்துடன் வலிமை போன்ற படங்களில் நடித்துள்ள ஹூமா குரேஷி, ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார்.
    பிரபல பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி, பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஆர்மி ஆப் தி டெத் படத்தின் போஸ்டர்
    ஆர்மி ஆப் தி டெட் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், நடிகை ஹூமா குரேஷி, ‘ஆர்மி ஆப் தி டெட்’ படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தை ஜாக் ஷிண்டர் இயக்கி உள்ளார். இது ஜாம்பி வகை படமாகும். ஏற்கனவே பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனா, டிம்பிள் கபாடியா, அமைரா தஸ்தூர், ஐஸ்வர்யா சோனார் ஆகியோர் ஹாலிவுட்டுக்கு சென்ற நிலையில், தற்போது ஹூமா குரேஷியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.
    கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

    ஆனால், பொதுமக்கள் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அலட்சியம் காட்டுகிறார்கள். இதனால் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் தடுப்பூசி தொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: “சமீப காலமாக சில வேதனையான விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். யாருமே சரியாக தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை. செல்போன் வந்த பிறகு, நமக்கு நாமே மருத்துவர் ஆகிவிட்டோம். அக்கம்பக்கத்தினர், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என அனைவருமே மருத்துவர்கள் ஆகிவிட்டார்கள். அது எப்படி?.

    சத்யராஜ்
    சத்யராஜ்

    மருத்துவத்துக்கு படித்தவர்கள் தான் மருத்துவராக இருக்க முடியும். அதனால் தடுப்பூசி பற்றி ஏதேனும் குழப்பம் இருந்தால், தெரிந்த மருத்துவரை அணுகுங்கள். அவர்கள் சரியான அறிவுரை வழங்குவார்கள். நம்ம உடம்புக்கு ஒன்றும் வராது என்று காலரை தூக்கிவிட்டுக் கொண்டு, இது சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட உடம்பு என்பது எல்லாம் இருந்துட்டு போகட்டும். 

    ஆனாலும், நமது உடம்பைப் பற்றி நம்மை விட மருத்துவர்களுக்கு தான் நன்றாகத் தெரியும். அதற்குத்தான் அவர்கள் மருத்துவத்துக்கு படித்துள்ளார்கள். நான் சொல்வதைக் கூட கேட்காதீர்கள். நான் என்ன மருத்துவரா?

    சமீபத்தில் கேட்கும் விஷயம் எல்லாம் மனவேதனையை தருகிறது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, கிருமி நாசினி மூலம் கையை சுத்தப்படுத்துவது எல்லாம் அனைவரும் செய்கிறார்கள். ஆனால், இந்த தடுப்பூசி விஷயத்தில் பெரிய குழப்பம் இருக்கிறது. தயவுசெய்து மருத்துவர்களை அணுகி அறிவுரையை பெற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்”. இவ்வாறு சத்யராஜ் தெரிவித்துள்ளார்.


    ×