என் மலர்
பைக்
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விலையை மத்திய அரசின் திருத்தப்பட்ட பேம் 2 திட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து இருக்கிறது. அதன்படி ஆப்டிமா HX டூயல் பேட்டரி வேரியண்ட் புது விலை ரூ. 58,980, எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.

புதிய விலை விவரம்
ஹீரோ ஆப்டிமா HX டூயல் பேட்டரி ரூ. 58,980
ஹீரோ ஆப்டிமா HX சிங்கில் பேட்டரி ரூ. 53,600
ஆப்டிமா HX எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவை ஹீரோ வலைதளத்தில் மேற்கொள்ளலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 2999 ஆகும். ஹீரோ ஆப்டிமா HX மாடல் 550W BLDC எலெக்ட்ரிக் மோட்டார், 51.2V/30Ah லித்தியம் பேட்டரி கொண்டிருக்கிறது.
இதன் சிங்கில் பேட்டரி மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 82 கிலோமீட்டர், டூயல் பேட்டரி வேரியண்ட் 122 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 42 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
யமஹா நிறுவனத்தின் புதிய FZ-X மோட்டார்சைக்கிள் ரெட்ரோ-ரோட்ஸ்டர் டிசைன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
யமஹா நிறுவனத்தின் FZ-X இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய யமஹா FZ-X விலை ரூ. 1.16 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ரெட்ரோ-ரோட்ஸ்டர் டிசைன் கொண்டிருக்கிறது.
புதிய யமஹா FZ-X ப்ளூடூத் வேரியண்ட் விலை ரூ. 1.19 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடலின் வினியோகம் இம்மாதமே துவங்குகிறது. யமஹா FZ-X மேட் காப்பர், மேட் பிளாக் மற்றும் மெட்டாலிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

அம்சங்கள்:
- எல்.இ.டி. ஹெட்லேம்ப் இன்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல்.கள்
- எல்.இ.டி. டெயில் லேம்ப்
- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
- செயலி மூலம் பியூவல் கன்சம்ப்ஷன் செக் வசதி
- செயலி மூலம் மோட்டார்சைக்கிள் எங்கு இருக்கிறது என அறிந்து கொள்ளும் வசதி
- செயலி மூலம் ரைடு ஹிஸ்ட்ரி பார்க்கும் வசதி
- சைடு-ஸ்டான்ட் என்ஜின் கட்-ஆப்
- சிங்கில் சேனல் ஏபிஎஸ்
- பிளாக்-பேட்டன் டையர்கள்
யமஹா FZ-X மோட்டார்சைக்கிள் 149சிசி சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 12 பிஹெச்பி பவர், 13.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
ரெவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனத்தின் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் முன்பதிவு மீண்டும் துவங்கி உள்ளது.
இந்தியாவில் பேம் 2 திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 28,200 குறைந்துள்ளது. அதன்படி ரெவோல்ட் ஆர்வி400 புதிய விலை ரூ. 90,799 எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. ஆர்வி300 மாடலுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்படவில்லை.

விலை குறைப்பு மட்டுமின்றி ரெவோல்ட் ஆர்வி400 முன்பதிவு இன்று (ஜூன் 18) மதியம் 12 மணி முதல் மீண்டும் துவங்கி உள்ளது. இரு மாடல்களுக்கான முன்பதிவு கட்டணம் முறையே ரூ. 7,999 மற்றும் ரூ. 7,199 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக ரெவோல்ட் ஆர்வி400 ரூ. 1.19 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ரெவோல்ட் ஆர்வி400 மாடலில் 3.24kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 3kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 156 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
ஒகினவா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை ரூ. 17 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
ஒகினவா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலையை குறைத்து இருக்கிறது. இந்தியாவில் பேம் 2 திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் மாற்றங்கள் காரணமாக விலை குறைப்பு அமலாகி இருக்கிறது.
புது மாற்றங்களின் படி பேம் 2 திட்டத்தில் பலன்பெற வாகனம் குறைந்தபட்சம் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்திலும், அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்க வேண்டும். மாற்றப்பட்ட புது விலை பட்டியல் ஜூன் 11 ஆம் தேதி அமலுக்கு வந்தது.

புதிய விலை பட்டியல்
ஒகினவா ஐபிரெய்ஸ் பிளஸ் ரூ. 99,708
ஒகினவா பிரெய்ஸ் ப்ரோ ரூ. 76,848
ஒகினவா ரிட்ஜ் பிளஸ் ரூ. 61,791
ஒகினவா ரிட்ஜ் பிளஸ் மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 84 கிலோமீட்டர்கள் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. பிரெய்ஸ் ப்ரோ மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 88 கிலோமீட்டர்கள் செல்லும். இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களும் மூன்று ஆண்டுகள் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை திடீரென குறைத்து இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விலையை ரூ. 11,250 குறைத்து இருக்கிறது. புது விலை குறைப்பு மத்திய அரசின் பேம் 2 திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை தொடர்ந்து அமலாகி இருக்கிறது.

விலை குறைப்பின் படி டிவிஎஸ் ஐகியூப் புதிய விலை ரூ. 1.01 லட்சம் என மாறி இருக்கிறது. தற்போது டிவிஎஸ் ஐகியூப் மாடல் பெங்களூரு மற்றும் டெல்லி என இரு நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த கட்டணத்தில் மூன்று ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டியும் வழங்கப்படுகிறது.
டிவிஎஸ் ஐகியூப் மாடலில் 4.4kW எலெக்ட்ரிக் மோட்டார், லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 75 கிலோமீட்டர் வரை செல்லும். இது அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிள் நான்கு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி இந்த மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
கேஷ்பேக் மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான சேமிப்பை வழங்கும் நிதி சலுகையை டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிள் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி இந்திய விலை விவரம்
அபாச்சி ஆர்டிஆர் 200 4வி சிங்கில் சேனல் ஏபிஎஸ் - ரூ. 1,23,520
அபாச்சி ஆர்டிஆர் 200 4வி சிங்கில் சேனல் ஏபிஎஸ் மற்றும் மோட்கள் - ரூ. 1,28,000
அபாச்சி ஆர்டிஆர் 200 4வி டூயல் சேனல் ஏபிஎஸ் - ரூ. 1,28,520
அபாச்சி ஆர்டிஆர் 200 4வி டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் மோட்கள் - ரூ. 1,29,520
இந்தியாவில் டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிள் கிளாஸ் பிளாக் மற்றும் மேட் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் 197.75சிசி ஆயில் கூல்டு FI என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.54 பிஹெச்பி பவர், 17.25 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
சிஎப் மோட்டோ நிறுவனத்தின் பிஎஸ்6 ரக 300NK மோட்டார்சைக்கிளின் மெக்கானிக்கல் அம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
சிஎப் மோட்டோ நிறுவனம் தனது 300NK பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை வினியோகம் செய்ய துவங்கி இருக்கிறது. புதிய சிஎப் மோட்டோ 300NK பிஎஸ்6 மாடல் மார்ச் 2021 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 2.29 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

புதிய பிஎஸ்6 மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களை சிஎப் மோட்டோ இதுவரை அறிவிக்கவில்லை. முந்தைய மாடலில் 292.4சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டது. இந்த என்ஜின் 33.5 பிஹெச்பி பவர், 20.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது.
தோற்றத்தில் புது மாடல் முந்தைய வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது. 300NK பிஎஸ்6 மாடலில் லோ-ஸ்லங் புல் எல்இடி ஹெட்லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மஸ்குலர் பியூவல் டேன்க், ஸ்ப்லிட் ரக சீட்கள், 5 ஸ்போக் அலாய் வீல்கள் உள்ளன.
கவாசகி நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ஜூன் மாதத்திற்கான சலுகையை அறிவித்து இருக்கிறது.
கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் ஜூன் மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட கவாசகி மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகை மற்றும் பலன்கள் வழங்கப்படுகின்றன.

ஜூன் மாதத்தில் கவாசகி வெர்சிஸ் 650, வல்கன் எஸ், நின்ஜா 1000SX, W800, KLX110, KLX140 மற்றும் KX100 போன்ற மாடல்களுக்கு அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அனைத்து மாடல்களுக்கும் ஜூன் 30 வரை சலுகை வழங்கப்படுகிறது.
கவாசகி நிறுவனம் நியூ பிகினிங் வவுச்சர் ஒன்றை வழங்குகிறது. இவற்றை கொண்டு மோட்டார்சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலையை குறைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு மோட்டார்சைக்கிளுக்கும் ஏற்ப தள்ளுபடி வவுச்சர் மதிப்பு வேறுபடுகிறது. இந்த வவுச்சர் ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
டிரையம்ப் நிறுவன விற்பனையாகத்தில் போன்வில் டி100 மோட்டார்சைக்கிளுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கேரளா மாநிலத்தின் கொச்சியில் செயல்பட்டு வரும் டிரையம்ப் விற்பனையகத்தில் போன்வில் டி100 மோட்டார்சைக்கிள் மாடலுக்கு ரூ. 65 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. போன்வில் டி100 பிளாக் எடிஷன் மாடலுக்கு இந்த சலுகை ஜூன் 30 ஆம் தேதி, ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது.

டிரையம்ப் நிறுவனம் போன்வில் டி100 பிளாக் எடிஷன் மாடலை ரூ. 8,87,400 எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்தது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு வந்தது. இந்த மாடலில் 900சிசி, லிக்விட் கூல்டு, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 54.3 பிஹெச்பி பவர், 80 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், டார்க் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் இந்த மாடல் முற்றிலும் பிளாக்டு-அவுட் தீம் கொண்டிருக்கிறது. தோற்றத்தில் இது ஸ்டான்டர்டு மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
யமஹா நிறுவனத்தின் புதிய FZ X மாடல் முன்பதிவு துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளளது.
யமஹா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் புதிய FZ X நியோ-ரெட்ரோ மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு விற்பனையாளருக்கும் ஏற்ப முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரத்தில் துவங்கி ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய யமஹா FZ X மாடல் ஜூன் 18 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த மாடல் FZ S FI மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது நவீன-ரெட்ரோ ஸ்டைலிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், ஒற்றை பாட் கன்சோல், உயர்த்தப்பட்ட ஹேன்டில்பார், வட்ட வடிவ பியூவல் டேன்க் வழங்கப்படுகிறது.
காஸ்மெடிக் அடிப்படையில் புதிய யமஹா FZ X இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதில் 149சிசி, ஏர் கூல்டு என்ஜின், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 12.2 பிஹெச்பி பவர், 13.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
டுகாட்டி நிறுவனத்தின் 2021 பேனிகேல் வி4 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் 2021 பேனிகேல் வி4 ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 23.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பேனிகேல் வி2 மாடலை விட விலை அதிகம் ஆகும்.
புதிய 2021 டுகாட்டி பேனிகேல் வி4 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ.23.50 லட்சம், டாப் எண்ட் எஸ் வேரியண்ட் விலை ரூ.28.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

டுகாட்டி பேனிகேல் வி4 மாடலில் அதிக அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. இதில் விங்லெட்கள், ரிடர்ன் சேசிஸ், சஸ்பென்ஷன் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. 2020 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போது அதிக வாடிக்கையாளர்கள் கோரிக்கையை ஏற்று இந்த மாடல் இந்திய சந்தையில் வெளியாகி இருக்கிறது.
2021 டுகாட்டி பேனிகேல் வி4 மாடலில் 1103சிசி, பிஎஸ் 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வி4 டெஸ்மோசெடிகி ஸ்டிரேடேல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 211 பிஹெச்பி பவர், 124 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.
கவாசகி நிறுவனத்தின் 2021 நின்ஜா H2R மாடல் மிரர் கோட் செய்யப்பட்ட மேட் ஸ்பார்க் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது.
கவாசகி இந்தியா வலைதளத்தில் 2021 நின்ஜா H2R மோட்டார்சைக்கிள் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த மாடல் விலை ரூ. 79.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பந்தய களத்தில் இயக்கக்கூடிய மாடல் ஆகும். இதன் முந்தைய மாடல் விலை ரூ. 75.80 லட்சம் ஆகும்.
முந்தைய வெர்ஷனை விட புது மாடலின் தோற்றத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. முன்பை போன்றே இது ஏரோடைனமிக் விங்லெட்கள், ஒற்றை புறத்தில் ஸ்விங் ஆர்ம் கொண்டுள்ளது. இத்துடன் இந்த மாடல் மிரர் கோட் செய்யப்பட்ட மேட் ஸ்பார்க் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள் 998சிசி, இன்லைன், 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் சூப்பர்சார்ஜர் உள்ளது. இது என்ஜின் செயல்திறனை மேலும் மேம்படுத்துகிறது. இவை என்ஜினை 305.7 பிஹெச்பி திறன், 165 என்எம் டார்க்கில் இயக்க வழி வகுக்கிறது.
இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச், பை-டைரெக்ஷனல் குவிக்ஷிப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மோட்டார்சைக்கிளை அதிவேகமாக இயக்கும் போது சிறப்பாக கட்டுப்படுத்த தேவையான அதிநவீன அம்சங்கள் இந்த மாடலில் உள்ளது.






