என் மலர்tooltip icon

    பைக்

    கவாசகி நிறுவனத்தின் 2021 நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் ரூ. 3.18 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


    இந்தியா கவாசகி மோட்டார்ஸ் நிறுவனம் 2021 கவாசகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் விநியோகம் துவங்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் 2021 கவாசகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 3.18 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

     கவாசகி நின்ஜா 300

    புதிய நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் டிசைன் மற்றும் பவர்டிரெயின் அம்சங்களில் மாற்றம் செய்யப்படாமல், புதிய பிஎஸ்6 ரக என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய நின்ஜா 300 பிஎஸ்6 மாடலில் 296 சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு, 8 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 38.4 பிஹெச்பி பவர், 26.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது. இந்த மாடல் டைமண்ட் டைப் ஸ்டீல் பிரேம், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் 5 ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.
    சிஎப் மோட்டோ நிறுவனம் 650NK பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    சிஎப் மோட்டோ நிறுவனம் தனது பிஎஸ்6 ரக 650NK மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புது மாடலுக்கான முன்பதிவு விவரம் அந்நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது. புது 650சிசி மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    சிஎப் மோட்டோ 650NK மாடலுக்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறுகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். சிஎப் மோட்டோ வலைதளத்தில் பிஎஸ்4 மாடலுக்கான விலை பதிவிடப்பட்டு இருக்கிறது. புதிய பிஎஸ்6 மாடலுக்கான விலை முந்தைய மாடலை விட சற்று அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

     சிஎப் மோட்டோ 650NK

    புதிய சிஎப் மோட்டோ 650NK மாடலில் மேம்பட்ட பியூவல் டேன்க் மற்றும் முன்புற பென்டர் வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் டோன் ஹெட்லைட் மாஸ்க் மற்றும் ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட்கள் வழங்கப்படுகின்றன. இவை தவிர மற்ற அம்சங்கள் பிஎஸ்4 மாடலில் உள்ளசை போன்றே வழங்கப்படுகிறது.

    அதன்படி பிஎஸ்6 ரக 650NK மாடலில் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோ ஷாக் யூனிட், முன்புறம் இரட்டை ரோட்டார்கள், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலிலும் 649சிசி, லிக்விட் கூல்டு, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது.
    யமஹா நிறுவனம் நியோ-ரெட்ரோ பிரிவில் புது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    யமஹா நிறுவனம் சிறிய ரக XSR மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது நியோ-ரெட்ரோ ஸ்டைலிங் சார்ந்த மாடல் ஆகும். 

    தற்போது யமஹா நிறுவனம் MT-125 நேக்கட் மற்றும் R125 ஸ்போர்ட் பைக் மாடல்களை சில ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. எனினும், ஐரோப்பிய சந்தையில் ஹோண்டா CB125R மாடல் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. புதிய XSR125 படங்களை யமஹா இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

     யமஹா XSR700 - கோப்புப்படம்

    எனினும், இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய யமஹா XSR125 தோற்றத்தில் XSR155 போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் 125சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது 15 பிஹெச்பி பவர், 11.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    யமஹா XSR125 மாடல் 17 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் 292 எம்எம் டிஸ்க், பின்புறம் 220 எம்எம் டிஸ்க், டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய யமஹா XSR125 இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
    ஹோண்டா நிறுவனம் தனது ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது.


    ஹோண்டா பிங் விங் இந்தியா நிறுவனம் ஹைனெஸ் சிபி350 மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கம் முதல் இந்த மாடலின் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்ட போது ஹோண்டா ஹைனெஸ் சிபி350 விலை ரூ. 1.85 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     ஹோண்டா ஹைனெஸ் சிபி350

    இந்திய சந்தையில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மாடல் DLX மற்றும் DLX ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய விலை உயர்வில் ஹைனெஸ் சிபி350 ரூ. 4 ஆயிரம் அதிகமாகி இருக்கிறது. விலை உயர்வின் படி ஹோண்டா ஹைனெஸ் சிபி350 துவக்க விலை ரூ. 1.90 லட்சம் என மாறி இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.96 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மாடலில் 348சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.78 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ஹோண்டா நிறுவனம் தனது டியோ 110சிசி ஸ்கூட்டர் வாங்குவோருக்கு கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.


    ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் தனது டியோ 110சிசி ஸ்கூட்டருக்கு சிறப்பு தள்ளுபடி சலுகையை அறிவித்து இருக்கிறது. சிறப்பு சலுகையின்படி டியோ ஸ்கூட்டரை வாங்குவோருக்கு ரூ.3500 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    இந்த சலுகை மாத தவணை முறை சலுகையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மே 1 துவங்கி ஜூன் 30 வரை வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஹோண்டா டியோ ஸ்கூட்டர் ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     ஹோண்டா டியோ

    ஹோண்டா டியோ ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ. 63,273 என்றும் டீலக்ஸ் மாடல் விலை ரூ. 66,671 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    டியோ ஸ்டான்டர்டு மாடல் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் ஹாலோஜன் ஹெட்லைட், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பிளாக் நிற வீல்கள் உள்ளது. டீலக்ஸ் மாடலில் எல்இடி ஹெட்லைட், புல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்டெலிஜண்ட் டிஸ்ப்ளே, தங்க நிற அலாய் வீல்கள் உள்ளன.

    இரு மாடல்களிலும் 109.51சிசி, சிங்கில் சிலிண்டர், பேண் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.65 பிஹெச்பி பவர், 9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 
    ஹஸ்க்வர்னா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஹஸ்க்வர்னா நிறுவனம் தனது வாகனங்களை படிப்படியாக எலெக்ட்ரிக் மயமாக்க திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் இ பைலன் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இதுதவிர இ ஸ்கூட்டர் மாடல் புகைப்படத்தை கடந்த ஆண்டு வெளியிட்டு இருந்தது.

     ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் வாகனம்

    அந்த வரிசையில் புது எலெக்ட்ரிக் மாடல்கள் 2022 முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என பிரெர் மொபிலிட்டி ஏஜி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக கான்செப்ட் மாடல் மற்றும் இ ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருக்கிறது. 

    தற்போது இரு மாடல்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இ ஸ்கூட்டர் 4kW மோட்டார் கொண்டிருக்கும். எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 4kW மற்றும் 10kW மோட்டார் கொண்டிருக்கும். இரு எலெக்ட்ரிக் மாடல்களும் பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. 

    சுசுகி நிறுவனம் தனது வி ஸ்டாம் 1050 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்து இருக்கிறது.


    ஹயபுசா மற்றும் GSX-S1000 மாடல்களை தொடர்ந்து சுசுகி நிறுவனம் தனது வி ஸ்டாம் 1050 மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய 2021 வி ஸ்டாம் 1050XT மாடல் புது நிறங்களில் கிடைக்கிறது. அதன்படி இந்த மாடல் ஸ்டீலி கிரே மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

     2021 வி ஸ்டாம் 1050

    2021 சுசுகி வி ஸ்டாம் 1050 மாடல் கேண்டி டேரிங் ரெட் / கிளாஸ் ஸ்பார்கில் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. புதிய 2021 சுசுகி வி ஸ்டாம் முதற்கட்டமாக சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. லண்டனில் இதன் விலை முறையே 9,999 யூரோக்கள் மற்றும் 11,599 யூரோக்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    புது மாடல்கள் யூரோ 5 புகை விதிகளுக்கு உட்பட்டு உருவாகி இருக்கின்றன. அந்த வகையில் இரு மாடல்களும் எதிர்காலத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஏப்ரல் மாத வாகனங்கள் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 ஏப்ரல் மாதத்தில் இந்திய சந்தையில் 53,298 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 19 சதவீதம் குறைவு ஆகும். 53,298 யூனிட்களில் 48,789 யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4509 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

     ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்

    ஏப்ரல் 2020 காலக்கட்டத்தில் இந்தியாவில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக வாகனங்கள் விற்பனை முற்றிலும் தடைப்பட்டது. பின் வாகன விற்பனை இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகின. இந்த ஆண்டு துவக்கம் முதலே வாகனங்கள் விற்பனையில் கணிசமான வளர்ச்சியை நிறுவனங்கள் பதிவு செய்தன.

    தற்போது சில தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருவதால், வாகன விற்பனை சரிவடைய துவங்கி இருக்கிறது. இதே காரணத்தால் ராயல் என்பீல்டு வாகனங்கள் விற்பனையும் குறைந்து இருக்கிறது. 

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவன இந்திய சந்தையில் மார்ச் மாத வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் மார்ச் 2021 மாத வாகன விற்பனையில் 115 சதவீத வளரச்சியை பதிவு செய்துள்ளது. மார்ச் 2020 மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 2.02 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

     டிவிஎஸ் ஸ்கூட்டர்

    இதே காலக்கட்டத்தில் வாகன ஏற்றுமதி 164 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மார்ச் 2021 வாக்கில் டிவிஎஸ் நிறுவனம் 1.05 லட்சம் யூனிட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. 2020 மார்ச் மாதத்தில் இது 50,197 யூனிட்களாகவே இருந்தது. 2020 மார்ச் மாதத்தில் உள்நாட்டில் 94,103 யூனிட்களை விற்பனை செய்தது.

    ஸ்கூட்டர்களை பொருத்தவரை டிவிஎஸ் நிறுவனம் 206 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. 2021 மார்ச் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் 1.04 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. டிவிஎஸ் நிறுவனம் விரைவில் மேம்பட்ட அபாச்சி ஆர்ஆர்310 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.
    சுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா மாடல் சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    2021 சுசுகி ஹயபுசா மாடலின் முதற்கட்ட யூனிட்கள் விற்று தீர்ந்துள்ளன. விற்பனைக்கு வந்த ஒரே வாரத்தில் 101 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முதற்கட்ட யூனிட்களுடன் பின்புற சீட் கவுல் வழங்கப்பட்டது. இதே சலுகை அடுத்தக்கட்ட யூனிட்களுடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     2021 சுசுகி ஹயபுசா

    இந்தியாவில் புதிய ஹயபுசா மோட்டார்சைக்கிள் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன் விலை ரூ. 16.40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல் விலையை விட ரூ. 2.65 லட்சம் அதிகம் ஆகும். புது மாடலில் புல் எல்இடி லைட்டிங், எல்சிடி ஸ்கிரீன் மற்றும் மேம்பட்ட டிசைன் கொண்டுள்ளது.

    2021 சுசுகி ஹயபுசா மாடலில் 1340சிசி இன்-லைன் 4 மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புது சுசுகி ஹயபுசா மாடல் கவாசகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது பேன் அமெரிக்கா சீரிஸ் மாடலை இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது.


    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பேன் அமெரிக்கா 1250 மற்றும் 1250 ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா 1250 துவக்க விலை ரூ. 16.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். பேன் அமெரிக்கா 1250 ஸ்பெஷல் மாடலின் விலை ரூ. 19.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். 

     ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா 1250

    இதன் ஸ்டான்டர்டு வேரியண்ட் ஆன்-ரோடு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் ஸ்பெஷல் வேரியண்ட் ஆப்-ரோடு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. இதில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், ஸ்போக் வீல்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. பேன் அமெரிக்கா 1250 ஆல்-அரவுண்ட் எல்இடி லைட்டிங், டிஆர்எல்கள், உயரமான விண்ட்-ஸ்கிரீன், அப்-ஸ்வெப்ட் எக்சாஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

    புதிய பேன் அமெரிக்கா 1250 இரு வேரியண்ட்களிலும் 1250சிசி, வி ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 149 பிஹெச்பி பவர், 127 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் அசிஸ்ட், ஸ்லிப் கிளட்ச் வழங்கப்படுகிறது.
    பியாஜியோ நிறுவனத்தின் புதிய மேக்சி ஸ்கூட்டர் விலை வெளியீட்டிற்கு முன் அதன் வலைதளத்தில் பதிவிடப்பட்டது.


    பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா SXR 125 விரைவில் இந்திய சந்தையில் வெளியாக இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் புது மேக்சி ஸ்கூட்டர் மாடல் ஆகும். வெளியீட்டிற்கு முன் இந்த ஸ்கூட்டர் விலை அதன் வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி புதிய அப்ரிலியா SXR 125 விலை ரூ. 1.16 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது SXR 160 மாடலை விட ரூ. 9 ஆயிரம் குறைவு ஆகும். விலை அறிவிப்பை தொடர்ந்து அப்ரிலியா SXR 125 மாடலுக்கான முன்பதிவும் துவங்கி இருக்கிறது.

     அப்ரிலியா SXR 125

    புதிய அப்ரிலியா SXR 125 முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். இந்த ஸ்கூட்டர் வைட், மேட் புளூ, ரெட் மற்றும் நெரோ கிரே என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. அப்ரிலியா SXR 125 வடிவமைப்பு SXR 160 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    SXR 125 மாடலில் 125சிசி  சிங்கில் சிலிண்டர் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.3 பிஹெச்பி பவர், 9.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் வெளியானதும் இந்த ஸ்கூட்டர் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. அதன்படி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலை விட SXR 125 விலை ரூ. 27 ஆயிரம் அதிகம் ஆகும்.

    ×