என் மலர்tooltip icon
    • ரோட்டோரம் ஒதுக்கி நிறுத்தப்பட்டிருந்த டெம்போ மீது மோதி விபத்தில் சிக்கினார்.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள பன்னிக்கோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் தற்போது ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் கார்த்திக் திங்கள்சந்தை சென்று விட்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். காஞ்சிரவிளை அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக ரோட்டோரம் ஒதுக்கி நிறுத்தப்பட்டிருந்த டெம்போ மீது மோதி விபத்தில் சிக்கினார்.

    இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த டாக்டர்கள் கார்த்திக் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி வனிதா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆண் பிள்ளை பெற்றுத் தரவில்லை என கூறி அவதூறாக பேச்சு
    • குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு புதூரை சேர்ந்தவர் அஸ்வின் (வயது 28). கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த சோனியாவை (24) கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.

    இதனால் அஷ்வின் சோனியாவிடம் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 13-ந்தேதி அஷ்வின், சோனியாவிடம் ஆண் பிள்ளை பெற்றுத் தரவில்லை என கூறி அவதூறாக பேசியதுடன் வாயில் துணியை வைத்து அழுத்தி டார்ச்சர் செய்துள்ளார். மேலும் உன் தாய் வீட்டிற்கு ஓடி விடு என மிரட்டியும் உள்ளார்.

    இதில் படுகாயமடைந்த சோனியா குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மண்டைக்காடு போலீசார் அஷ்வின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலுவா-அங்கமாலி பிரிவில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளது
    • இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

    நாகர்கோவில் :

    திருவனந்தபுரம் கோட்டத்தில் ஆலுவா-அங்கமாலி பிரிவில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில்வே பொறியியல் பணிகள் காரணமாக ரெயில் எண்: 16649 மங்களூரு சென்ட்ரல்-நாகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் மங்களூரு சென்ட்ரலில் இருந்து மே 20-ந்தேதி காலை 5.05 மணிக்கு புறப்படுவது முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

    ரெயில் எண்: 16650 நாகர்கோவில் ஜங்ஷன் - மங்களூர் சென்ட்ரல் பரசுராம் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து மே 21-ந்தேதி காலை 4.15 மணிக்கு புறப்படுவது முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

    ரெயில் எண்: 16382 கன்னியாகுமரி - புனே எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி யில் இருந்து மே 21-ந்தேதி காலை 8.40 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலி, திண்டுக்கல், ஈரோடு வழியாக இயக்கப்படும். இரணியல், குழித்துறை, பாறசாலை, நெய்யாற்றின்கரை, திருவனந்தபுரம் சென்ட்ரல், சிறையின் கீழ், கடைக்காவூர், வர்க்கல, பரவூர், கொல்லம், கருநா கப்பள்ளி, காயங்குளம், மாவேலிக்கரை, செங் கன்னூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, அங்கமாலி, சாலக்குடி, இரிஞாலக்குடா, திருச்சூர், வடக்கஞ்சேரி, ஒற்றப்பாலம், பாலக்காடு, கோயம்புத்தார், திருப்பூர் நிறுத்தங்கள் செல்லாது.

    மேலும் கூடுதலாக திருநெல்வேலி, மதுரை மற்றும் திண்டுக்கல் நிறுத்தங்கள் பயணிகள் வசதிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. ரெயில் எண்:16128 குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் குருவாயூரில் இருந்து மே 22-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படுவது குருவாயூர்-எர்ணாகுளம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து மே 23-  ந்தேதி அதிகாலை 1.20 மணிக்கு புறப்படும்.

    ரெயில் எண்: 16127 சென்னை எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து மே 21-ந்தேதி காலை 9 மணிக்கு புறப்படுவது எர்ணாகுளம் ஜங்ஷன்-குருவாயூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் எர்ணாகுளத்துடன் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பார்சல் ஏற்றி வந்த வாகனம் மோதியது
    • போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் இருந்து தோட்டியோடு நோக்கி வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தார்.

    பார்வதிபுரம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே பார்சல் ஏற்றி வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ரத்த வெள் ளத்தில் கிடந்த அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள் ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. பலியானவர் யார்? எந்த ஊரை சேர்ந்த வர்? என்ற விவரம் தெரிய வில்லை.

    மோட்டார் சைக்கிளிலும் பதிவு எண் இல்லாததால் பலியானவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது. போலீசார் பலியா னவர் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    விபத்து குறித்து போக்கு வரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண் டுள்ளனர்.

    • கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக வாட்ஸ் அப்பில் புகார் தெரிவிக்கலாம்
    • கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    கன்னியாகுமரி :

    விழுப்புரம், செங்கல் பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் ஆஸ்பத்திரி களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர். குமரி மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை எதுவும் நடைபெறுகிறதா என்பது குறித்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில், தக்கலை மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை மேற் கொண்டனர். குறிப்பாக மலையோர கிராமங்களில் ஏற்கனவே கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளது. அந்த பகுதிகளில் போலீசார் மீண்டும் சோதனை மேற் கொண்டனர். ஆனால் கள்ளச்சாராயம் எதுவும் சிக்கவில்லை.

    கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான தகவல் தெரிந்தால் பொது மக்கள் 70103 63173 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் தெரி விக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    • கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை
    • கையுறை அணிந்திருந்ததுடன் மிளகாய் பொடியையும் தூவி சென்றுள்ளனர்.

    ராஜாக்கமங்கலம், மே.16-

    ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பூதலிங்கம். இவரது மகன் முருகன் (வயது 43) தொழிலதிபர்.

    இவர் தனது வீட்டின் வளாகத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் மற்றும் வெளி நாட்டிற்கு பொருட்கள் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இவரது மனைவி மேரிபெல். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் சென்னை யில் படித்து வருகிறார்.

    இன்னொரு மகனும், மகளும் வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். முருகன் அவரது மனைவி யும் சென்னையில் உள்ள மகனை பார்ப்பதற்காக சென்றிருந்தனர். நேற்று காலை பூதலிங்கம் மகன் முருகன் வீட்டிற்கு வந்து மீன் தொட்டியில் உள்ள மீன்களுக்கு உணவளிக்க வந்திருந்தார். அப்போது நிதி நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் கதவுகளும் உடைக்கப் பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் இருந்த பீரோக்களும் உடைக்கப் பட்டு இருந்தது.

    இதுகுறித்து பூதலிங்கம் மகன் முருகனுக்கு தகவல் தெரிவித்தார். முருகன் ராஜாக்கமங்கலம் போலீ சுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். விசாரணையில் 53 பவுன் நகை மற்றும் ரூ. 6 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். அப்போது கைரேகைகள் எதுவும் சிக்கவில்லை.

    கொள்ளையர்கள் கையுறை அணிந்து கை வரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. மோப்ப நாயும் வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளை யர்கள் தடயங் கள் சிக்காமல் இருக்கும் வகையில் மிளகாய் பொடி யையும் வாசலில் தூவி சென்றுள்ளனர். மின் விளக்குகளை துண்டித்து கை வரிசையில் ஈடுபட்டி ருப்பதும் தெரியவந்துள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சி களை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டு வரு கிறார்கள். மேலும் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்க ளது செல்போன் அழைப்புகளையும் போலீசார் சோதனை செய்தனர். முருகன் ஊரில் இல்லாததை நோட்டமிட்டே கொள்ளை யர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

    எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கி றார்கள். மேலும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கையுறை அணிந்திருந்ததுடன் மிளகாய் பொடியையும் தூவி சென்றுள்ளனர்.

    மேலும் மின்விளக்கை துண்டித்து கைவரிசையில் ஈடுபட்டுள்ளதால் ஏற்கனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் இதில் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே பழைய கொள்ளையர்களின் விவரங்களை சேகரித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

    • குமரிமுனை திருக்குறள் திருவிழாவையொட்டி நடந்தது
    • அறக்கட்டளை பொறுப்பாளர் ராமன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட் டளை சார்பில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 1-ந்தேதி குமரிமுனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதேபோல வைகாசி மாத பிறப்பான நேற்று 17-வது ஆண்டு குமரி முனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியா குமரி முக்கடல் சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் அமைந்துள்ள திருக்குறள் ஒண்சுடர் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    தமிழ் அறிஞர் செந்தூர் பாரி சுடர் ஏற்றி வைத்தார். பின்னர் திருவள்ளுவர் அறக்கட்டளை செயல் பொறுப்பாளர் தாகூர் மற்றும் தமிழ் அறிஞர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் கதிர் முத்தையன் தலை மையில் தமிழ் அறிஞர்கள் படகில் புறப்பட்டு சென்று திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி வழிபட்டனர். மாலையில் லீபுரம் சந்திப்பில் இருந்து திருக்குறளூருக்கு தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் ராமன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

    இந்த ஊர்வலத்தை புனிதா கணேசன் தொடங்கி வைத்தார். பின்னர் இரவு திருக்குறளூரில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை ஆட்சி பொறுப்பாளர் தமிழ் முகிலன் தலைமை தாங்கி னார். லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன், துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை பொறுப்பாளர் பாண்டியராஜன் வரவேற்று பேசினார்.

    இதில் திருவள்ளுவர் அறக்கட்டளை பொருளாளர் இறையடிகன், பொறுப் பாளர் உதயகுமார் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். திருக்குறள் தொண்டர் கருப்பசாமியை பாராட்டி இணை செயற்பொறுப்பா ளர் நெடுஞ்சேர லாதன் நினைவு பரிசு வழங்கினார். பின்னர் அறக்கட்டளை பொறுப்பாளர் விமுனா மூர்த்தி, உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை நிறுவனர் குறளமிழ்தன் ஆகியோர் திருக்குறள் திறப்பாடு போட்டி நடத்தினார்கள். முடிவில் அறக்கட்டளை பொறுப்பாளர் நற்றேவன் நன்றி கூறினார்.

    ×