என் மலர்
நீங்கள் தேடியது "புனே எக்ஸ்பிரஸ்"
- ஆலுவா-அங்கமாலி பிரிவில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளது
- இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
நாகர்கோவில் :
திருவனந்தபுரம் கோட்டத்தில் ஆலுவா-அங்கமாலி பிரிவில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரெயில்வே பொறியியல் பணிகள் காரணமாக ரெயில் எண்: 16649 மங்களூரு சென்ட்ரல்-நாகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் மங்களூரு சென்ட்ரலில் இருந்து மே 20-ந்தேதி காலை 5.05 மணிக்கு புறப்படுவது முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
ரெயில் எண்: 16650 நாகர்கோவில் ஜங்ஷன் - மங்களூர் சென்ட்ரல் பரசுராம் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து மே 21-ந்தேதி காலை 4.15 மணிக்கு புறப்படுவது முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
ரெயில் எண்: 16382 கன்னியாகுமரி - புனே எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி யில் இருந்து மே 21-ந்தேதி காலை 8.40 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலி, திண்டுக்கல், ஈரோடு வழியாக இயக்கப்படும். இரணியல், குழித்துறை, பாறசாலை, நெய்யாற்றின்கரை, திருவனந்தபுரம் சென்ட்ரல், சிறையின் கீழ், கடைக்காவூர், வர்க்கல, பரவூர், கொல்லம், கருநா கப்பள்ளி, காயங்குளம், மாவேலிக்கரை, செங் கன்னூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, அங்கமாலி, சாலக்குடி, இரிஞாலக்குடா, திருச்சூர், வடக்கஞ்சேரி, ஒற்றப்பாலம், பாலக்காடு, கோயம்புத்தார், திருப்பூர் நிறுத்தங்கள் செல்லாது.
மேலும் கூடுதலாக திருநெல்வேலி, மதுரை மற்றும் திண்டுக்கல் நிறுத்தங்கள் பயணிகள் வசதிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. ரெயில் எண்:16128 குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் குருவாயூரில் இருந்து மே 22-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படுவது குருவாயூர்-எர்ணாகுளம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து மே 23- ந்தேதி அதிகாலை 1.20 மணிக்கு புறப்படும்.
ரெயில் எண்: 16127 சென்னை எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து மே 21-ந்தேதி காலை 9 மணிக்கு புறப்படுவது எர்ணாகுளம் ஜங்ஷன்-குருவாயூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் எர்ணாகுளத்துடன் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






