என் மலர்
- சகோதரியின் பாசப் போராட்டம் வீணானது
- அந்தப் பெண்ணுடன் தான் வாழ்வேன் என தனது தாயாரிடம் உறுதியாக கூறினார்
நாகர்கோவில்,மே.17-
அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நாகர்கோவில் கோட்டார் பகுதியிலுள்ள பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர், பின்னர் வீடு திரும்ப வில்லை.
இதையடுத்து தாயார் மகனை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மகன் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கோட்டார் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்த வாலிபர் நேற்று மாலை இளம் பெண் ஒருவருடன், கோட்டார் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீசாரிடம் இந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே வாலிபர் மாயமானது குறித்து புகார் உள்ளதால், போலீசார் அவரது தாயாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வாலிபரின் தாயாரும், சகோதரியும், கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு மகனுடன் இருந்த பெண்ணைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வாலிபர், அந்தப் பெண்ணுடன் தான் வாழ்வேன் என தனது தாயாரிடம் உறுதியாக கூறினார். இதனைத் தொடர்ந்து அவரது தாயார், மகனிடம் மன்றாடினார்.
அவர்கள் இடையே சுமார் ஒரு மணி நேரமாக நீடித்த இந்த பாச போராட்டத்தில் மகன், தாயாரை உதறித் தள்ளினார். தனது முடிவில் அவர் உறுதியாக இருந்தார். இதனால் தாயாரும், சகோதரியும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்தை ஏற்க அவர்கள் மறுத்தனர்.
இதைத் தொடர்ந்து வாலிபரின் சகோதரி, தான் கொடுத்த நகையை திருப்பித் தருமாறு தம்பியிடம் கேட்டார். சில காலங்கள் கழித்து அதை திருப்பித் தருவதாக வாலிபர் கூறினார். இதனை சகோதரி ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் போலீசாரிடம் நகையை வாங்கித் தருமாறு கேட்டார். அதற்கு போலீசார், பிரச்சினை நடைபெற்றது அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் நகையை அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் கூறி பெற்றுக் கொள்ளுமாறு கூறினர்.
இதைத்தொடர்ந்து ஏமாற்றத்துடன் தாயும் மகளும் திரும்பி சென்றனர். 2 குழந்தைகளின் தாயாரை கரம் பிடித்த வாலிபர் போலீஸ் நிலையத்திலிருந்து அவரை அழைத்து சென்றார். இதனால் நேற்று இரவு போலீஸ நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- ஜூன் 1-ந் தேதி காலை 8-30மணிக்கு மேல் 9 மணிக்குள் தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது
கன்னியாகுமரி :
உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாஅடுத்தமாதம் (ஜூன்)2-ந் தேதி வரை 10நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை ௫ மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு பாட்டுக்கச்சேரியும் 8மணிக்கு பரத நாட்டியம் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பின்னர் 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது . வைகாசி விசாக திருவிழாவையொட்டி வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுபடி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரியைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர் கள் கொடிமர கயிறை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவி லில் ஒப்படைக்கி றார்கள்.
அதைத்தொடர்ந்து 1-ம் திருவிழாவான 24-ந்தேதி காலை 9-30மணிக்கு மேல்10-30மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 2-ம் திரு விழாவான 25-ந்தேதி காலை 7 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதலும் இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு கிளி வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதலும் நடக்கிறது. 3-ம்திருவிழாவான 26-ந்தேதி காலை 7 மணிக்கு அன்னவாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசையும் 9மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதலும் நடக்கிறது. 4-ம்திருவிழாவான 27-ந்தேதி காலை6 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் மாலை 5 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பக்தி நிகழ்ச்சியும் 9 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது. 5-ம் திருவிழாவான 28-ந்தேதி காலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. 6-ம் திருவிழாவான 29-ந்தேதி காலை 7 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு இந்திர வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது. 7-ம்திருவிழா வான 30-ந்தேதி அதிகாலை 5-30 மணிக்கு பல்லக்கில் அம்மன்வீதி உலாவருதலும் பிற்பகல் 3-30மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பரதநாட்டியமும் இரவு 9 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது. 8ம் திருவிழாவான 31-ந்தேதி மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் 8-30மணிக்கு அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சியும் 9 மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் வீதிஉலாவருதலும் நடக்கிறது.
9-ம் திருவிழாவான ஜூன் 1-ந் தேதி காலை 8-30மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். இதில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், விஜய் வசந்த் எம்.பி., கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம். எல்.ஏ. தளவாய்சுந்தரம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலைபேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் கஞ்சிதர்மமும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7-30 மணிக்கு இன்னிசை கச்சேரியும் 8-45 மணிக்கு பக்தி பஜனையும் 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதலும் நடக்கிறது.
10-ம் திருவிழாவான 2-ந்தேதி காலை 9-30 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு நர்த்தன பஜனையும் நடக்கிறது. 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் கவிதா பிரியதர்ஷினி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
- மோட்டார் சைக்கிளை மீனாட்சிபுரம் பகுதியில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார்.
- போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது
நாகர்கோவில் :
திக்கணங்கோடு மாத்திர விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சேவியர் (வயது 42). இவர் தனது மோட்டார் சைக்கிளை மீனாட்சிபுரம் பகுதியில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து ஜஸ்டின் சேவியர் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பும் கோட்டார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது. இந்த மோட்டார் சைக்கிள் கொள்ளையிலும் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள்.
சமீபகாலமாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- கைரேகை சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் கிடைக்காததால் கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
- நிதி நிறுவனத்தில் இருந்த 3½ கிலோ நகைகள் தப்பியுள்ளது
நாகர்கோவில் :
ராஜாக்கமங்கலம் கணபதிபுரம் தெக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பூதலிங்கம். இவரது மகன் முருகன் தொழிலதிபர்.இவர் வீட்டில் வளாகத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது ஒரு மகன் சென்னையிலும் மற்றொரு மகனும் மகளும் வெளி நாட்டிலும் படித்து வரு கிறார்கள்.சென்னையில் படித்து வரும் மகனை பார்ப்பதற்காக முருகன் மனைவியுடன் சென்றி ருந்தார். அப்போது முருகனின் தந்தை பூதலிங்கம் மகனின் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு மற்றும் நிதி நிறுவனத்தின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து ராஜாக்க மங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள்.கொள்ளையர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி கைவரிசை காட்டி இருந்தனர். 53 பவுன் நகை மற்றும் ரூ. 6 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள். கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
முருகன் வீட்டில் இல்லா ததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அந்த பகுதியில் வேலை பார்க்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த வர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.
இது தொடர்பாக போலீசார் வட மாநில தொழி லாளர்கள் 20 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது கேமராவில் கொள்ளையர்கள் வந்த காட்சிகள் எதுவும் பதிவாக வில்லை. எனவே கொள்ளை யர்கள் முருகனின் வீட்டின் பின்பகுதி வழியாக புகுந்து இருக்கலாம் என்று கருது கிறார்கள். எனவே பின்ப குதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகள் எதுவும் சிக்காத நிலையில் கைரேகையும் கிடைக்காததால் போலீ சாருக்கு குற்ற வாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை கைது செய்ய அடுத்த கட்ட நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கொள்ளையர்கள் முருகனின் வீட்டில் இருந்த நகையை எடுத்துச் சென்ற நிலையில் அவரது நிதி நிறுவனத்தில் இருந்த 3½ கிலோ நகைகள் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- விஜய்வசந்த் எம்.பி. பார்வையிட்டார்
- நிதி ஒதுக்கி 4 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை பணி தொடங்கப்படவில்லை.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி வா வத்துறை புனித ஆரோக்கி யநாதர் ஆலயத்தின் கிழக்கு பக்கம் கடற்கரையில் அமைந்துள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர் கடல் சீற்றத்தினால் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடித்தொழிலை பாதுகாப்பான முறையில் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.
அது மட்டும் இன்றி இந்த கடல் அரிப்பு தடுப்பு சுவரில் நின்றபடி சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து வரும் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. எனவே கடல் அரிப்பினால் சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என்று அரசுக்கு கன்னியாகுமரி வாவத்துறை தூய ஆரோக்கியநாதர் ஆலய பங்குபேரவையினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் பயனாக வாவத்துறை கடற்கரையில் கடல் அரிப்பினால் சேதமடைந்த தடுப்பு சுவரை ரூ.91 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மறுசீரமைப்பு செய்ய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த சேதமடைந்த கடல் அரிப்பு தடுப்பு சுவரை மறுசீரமைப்பு செய்ய நிதி ஒதுக்கி 4 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை பணி தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் கடல் சீற்றத்தினால் சேதம் அடைந்த வாவத்துறை கடல் அரிப்பு தடுப்புச்சுவரை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வாவத்துறை புனித ஆரோக்கியநாதர் ஆலய பங்குத்தந்தை லிகோரியஸ், பங்குபேரவை துணை தலைவர் வர்கீஸ் மற்றும் பங்குப்பேரவை நிர்வாகிகள் வாவத்துறையில் கடல் அரிப்பினால் சேதம் அடைந்த தடுப்பு சுவரை உடனடியாக கட்டி தரும்படி விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவைப்பெற்று கொண்ட விஜய்வசந்த் எம்.பி. வாவத்துறையில் கடல் அரிப்பினால் சேதம் அடைந்த தடுப்பு சுவரை மறுசீரமைத்து கட்டித்தர உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் உறுதி அளித்தார்.
ஆய்வின்போது குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் தாமஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ்,உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- மாணவர்கள் சிறந்த நிர்வாகியாக ஆளுமை பண்புகளை மேம்படுத்த வேண்டும்
- சி.எஸ்.ஐ.ஆர். விஞ்ஞானி ஸ்ரீ பிரவீன் ராஜ் பேச்சு
நாகர்கோவில் :
நாகர்கோவில் சுங்கான்கடை அருகே அமைந்துள்ள வின்ஸ் பொறியியல் கல்லூரியில் முதுநிலை வணிக மேலாண்மை துறையினரின் "வி- உற்ஸவம் 2K23" நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாணவி பெர்வின் மனோ வரவேற்று பேசினார். முதல்வர் டாக்டர் டயானா க்றிஸ்டில்ட்டா தொடக்க உரையாற்றினார்.
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் விஞ்ஞானி ஸ்ரீ பிரவீன் ராஜ் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசுகையில், மாணவர்கள் எல்லாம் தலைவர்கள் ஆக வேண்டும். அதற்கு அவர்கள் தங்களுடைய ஆளுமை பண்புகளை மேம்படுத்த வேண்டும். ஒரு சிறந்த நிர்வாகியாக ஒரு சிறந்த தலைவனாக விரும்புகிறவர் தம்முடைய ஆளுமை அதிகாரத்தை பயன்படுத்துவதை விட பிற மனங்களை வசீகரித்து செயல்படுபவராக, செயல்படுத்தும் ஆற்றல் படைத்தவராக இருப்பது அவசியம் என்றார்.
விழாவில் 15 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பொருட்களை விளம்பரப்படுத்துதல், புதிதாக ஒரு பொருளை அறிமுகம் செய்தல், கருத்து விளக்க காட்சி, நடனம் ஆகிய போட்டிகள் இடம்பெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் கலந்து கொண்டார்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டு பகுதியான வண்ணான்விளை பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் வீரசூர பெருமாள், பகுதி செயலாளர் ஜீவா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- காலை 9 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு மட்டும் ஆதார் திருத்தம், பெயர் சேர்த்தல் போன்ற பணிகள்
- போதிய இருக்கை வசதிகள் இல்லாத தால் தரையில் அமர வேண்டிய நிலை உள்ளது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியிலும் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலக வளாகத்திலும் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதார் மையத்தில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்டத் தின் பல்வேறு பகுதி களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.
இதனால் ஆதார் மையத்தில் தினமும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை 9 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு அந்த நபர்களுக்கு மட்டும் ஆதார் திருத்தம், பெயர் சேர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாமதமாக வரும் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படுவதில்லை. எனவே பொதுமக்கள் டோக்கன் எடுக்க காலை யிலேயே வரவேண்டிய சூழல் உள்ளது.
ஆதார் மையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு போதுமான வசதிகள் இல்லாததால் அவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். வெயிலையும் பொருட்ப டுத்தாமல் வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஆதார் மையத்திற்கு வருபவர்களுக்கு போதிய இருக்கை வசதிகள் இல்லாத தால் தரையில் அமர வேண்டிய நிலை உள்ளது.
இன்று காலையிலும் ஆதார் மையத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆதார் மையத்தின் முன் பகுதியில் தரையில் அமர்ந்து ஆதார் எடுக்க காத்திருந்த னர். கைக்குழந்தைகளுடன் வந்த பொதுமக்களும் பரிதவிப்பிற்கு ஆளா னார்கள். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆதார் மையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கை வசதிகளை ஏற்ப டுத்துவதுடன் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்ய வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த விஷயத்தில் கலெக்டர் ஸ்ரீதர் உடனடி நடவடிக்கையை மேற் கொண்டு ஆதார் மையத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு வசதியாக கலெக்டர் அலுவலகத்தின் ஒரு பகுதியில் இருக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பது அனை வரின் கோரிக்கையாக உள்ளது.
- பெங்களூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று தடம் புரண்டது
- தாமதமாக ரெயில் வந்ததால் பயணிகள் தவிப்பிற்கு ஆளானார்கள்.
நாகர்கோவில் :
பெங்களூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று தடம் புரண்டது. இதையடுத்து பெங்களூரில் இருந்து நேற்று மாலை நாகர்கோவிலுக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட் டது. இன்று காலை 7.30 மணிக்கு நாகர்கோவில்ரெயில் நிலையத்திற்கு வந்து சேர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. 2 மணி நேரம் தாமதமாக ரெயில் வந்ததால் பயணிகள் தவிப்பிற்கு ஆளானார்கள்.
- மோட்டார் சைக்கிளை பக்கத்தில் ஒரு வீட்டருகே நிறுத்துவது வழக்கம்.
- சார்லஸ் மது அருந்துவதற்கு ஆன்றனி தாசனிடம் அடிக்கடி பணம் கேட்பாராம்.
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே கோணங்காடு அருகே வாரிவிளையை சேர்ந்தவர் ஆன்றனி தாசன் (வயது 40). இவர் குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மோட்டார் சைக்கிளை பக்கத்தில் ஒரு வீட்டருகே நிறுத்துவது வழக்கம். ஆன்றனி தாசனின் உறவினர் சார்லஸ் (43).வெளி நாட்டில் வேலை பார்த்து வந்த சார்லஸ் தற்போது ஊரில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.
சார்லஸ் மது அருந்துவதற்கு ஆன்றனி தாசனிடம் அடிக்கடி பணம் கேட்பாராம். ஆனால் ஆன்றனி தாசன் பணம் கொடுக்க மறுத்துள்ளார். அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆன்றனி தாசன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை சார்லஸ் கீழே தள்ளி விட்டாராம். இதையறிந்த ஆன்றனி தாசனின் மனைவி சகாய பிரபா (35), மகன் அஜேஸியுடன் (9) சென்று மோட்டார் சைக்கிளை தள்ளி விட்டாய்? என சார்லஸிடம் கேட்டார்.
இதில் ஆத்திரமடைந்த சார்லஸ் தகாத வார்த்தை யால் திட்டியதுடன் தாய்-மகனான சகாய பிரபா, அஜேஸ் ஆகியோரை தாக்கி மிரட்டல் விடுத்தார்.இதில் படுகாயமடைந்த 2 பேரும் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குளச்சல் போலீசார் சார்லஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 10-ந்தேதி வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை
- வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன நவநீத கிருஷ்ணனை தேடி வருகின்றனர்
கன்னியாகுமரி :
இரணியல் அருகே உள்ள செட்டியார்மடம் ஆதிதிராவி டர் காலனியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 43). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10-ந்தேதி வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது மனைவி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன நவநீத கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
- நகைக்கடையில் மதியம் 1 மணி அளவில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்
- 45 வயது மதிக்கத்த 2 டிப்-டாப் ஆசாமிகளின் உருவம் பதிந்துள்ளது.
கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் அருகே முளங்குழி, செம்பருத்தி விளையை சேர்ந்தவர் விஜூ (வயது 38). இவர் மார்த்தாண்டம் மற்றும் குனத்துக்கால் பகுதியில் 2 நகை கடைகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மார்த்தாண்டம் தாட்டாகுடி பகுதியில் மெயின் ரோட்டில் உள்ள நகைக்கடையில் மதியம் 1 மணி அளவில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். பின்னர் கடைக்குள் சென்ற மர்ம நபர்கள் கம்மல் விலைக்கு வாங்குவது போல் நடித்து கம்மல் மாடல்களை எடுத்து தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் இவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த பெண் பணியாளர் நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டுமென கேட்டுள்ளார். உடனே உஷாரான மர்ம நபர்கள் ஒரு ட்ரேயில் இருந்த 7 ஜோடி கம்மல்களை பறித்து சென்றுள்ளனர்.
அவர்கள் தயாராக வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து பார்த்துள்ளனர். அதில் 45 வயது மதிக்கத்த 2 டிப்-டாப் ஆசாமிகளின் உருவம் பதிந்துள்ளது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நெருக்கம் மிகுந்த மார்த்தாண்டம் பகுதியில் நகை கடையில் புகுந்து கம்மல்களை பறித்துச்சென்ற சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.







